கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
00:00

கேள்வி: என் எம்.எஸ். அவுட்லுக் காண்டாக்ட்களை, அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு எப்படி மாற்றுவது?
எம். சசிரேகா, ஹோசூர்.
பதில்:
எம்.எஸ். அவுட்லுக் காண்டாக்ட்ஸ்களை அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்ற, நீங்கள் அவுட்லுக்கில் உள்ள காண்டாக்ட்ஸ்களை அங்கிருந்து எக்ஸ்போர்ட் செய்திட வேண்டும். நீங்கள் ஆபீஸ் 2007 அல்லது 2010 வைத்திருந்தால், எப்படி இகுங (இணிட்ட்ச் குஞுணீச்ணூச்tஞுஞீ ஙச்டூதஞுண்) ஒரு பைலை எக்ஸ்போர்ட் செய்வது என்பதற்கு http://office.microsoft.com/ enus/outlookhelp/exportcontactsHA101870639.aspx?CTT=1 என்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் காணவும். நீங்கள் ஆபீஸ் 2013 பயன்படுத்துபவராக இருந்தால், http://office.microsoft. com/enus/outlookhelp/exportcontactsHA102919759.aspx?CTT=1 என்ற முகவரியில் கிடைக்கும் தகவல்களைக் காணவும். இங்கே கிடைக்கும் தகவல்களின்படி, சி.எஸ்.வி. பைலை எக்ஸ்போர்ட் செய்த பின்னர், அதனை டெஸ்க்டாப்பில் சேவ் செய்திடவும்.
அடுத்து அவுட்லுக் டாட் காம் திறக்கவும். அடுத்து மேலாக இடதுபுறம் உள்ள Outlook என்பதற்கு அடுத்து உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். அடுத்து, People இன்டர்பேஸில் உள்ள, People என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Manage என்பதனை அடுத்து உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். தொடர்ந்து Add people என்பதில் கிளிக் செய்திடவும்.
அடுத்து கிடைக்கும் விண்டோவில், சி.எஸ்.வி. பைலைப் பயன்படுத்தி, Microsoft Outlook தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்து, டெஸ்க்டாப்பில் எக்ஸ்போர்ட் செய்து வைத்திருக்கும் பைலில் டபுள் கிளிக் செய்திடவும். அடுத்து Import contacts என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, அவுட்லுக் டாட் காம் தளத்தில் உங்கள் காண்டாக்ட்ஸ் அனைத்தும் பதியப்பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: என் போனில், சில அப்ளிகேஷன்கள் கிடைக்கவில்லை. என் மகனிடம் தொலைபேசியில் இதனைக் கூறிய போது, என் போன் ஜெல்லி பீன் போன் இல்லை என்று கூறினான். இது எதனைக் குறிக்கிறது?
க. சமுத்திரம், தென்காசி.
பதில்:
உங்களுடைய போனில் உள்ள ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், புதிதாய் வந்த ஜெல்லி பீன் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.1. அல்ல. ஜெல்லி பீன் என்பது, ஆண்ட்ரய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அண்மைக் கால பதிப்பினைக் குறிக்கிறது. பொதுவாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேம்பாடு அடைகையில் அவற்றை, version 2.0 அல்லது 4.1 எனக் குறிப்பிடுவார்கள். ஆனால், கூகுள் தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு உணவுப் பதார்த்தங்களின் பெயரை வைத்து அழைத்து வருகிறது. இதோ, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பல்வேறு பதிப்புகளின் பெயர்கள்.
Android 1.5 – Cupcake (கப்கேக்)
Android 1.6 – Donut (டோநட்)
Andorid 2.0 – Eclair (எக்ளேர்)
Android 2.2 Froyo (ப்ரையோ)
Android 2.3 – Gingerbread (ஜிஞ்சர் ப்ரெட்)
Android 3.0 – Honeycomb (ஹனி ஹோம்ப்)
Android 4.0 – Ice Cream Sandwich (ஐஸ்கிரீம் சாண்ட்விச்)
Android 4.1 – Jelly Bean (ஜெல்லிபீன்)

கேள்வி: எனக்கு வரும் எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் சில செல்களில் அடிக்கோடு, டெக்ஸ்ட் அல்லது எண்களை ஒட்டியே இருக்கிறது. சிலவற்றில் கீழாக விலகி இருக்கிறது. நான் கோடு அமைத்தால், அது ஒட்டியே அமைகிறது. இதற்கான காரணம் என்ன? ஒரே மாதிரியாக அமைப்பது எப்படி?
சி. ஏகாம்பரம், காஞ்சிபுரம்.
பதில்:
எக்ஸெல் ஒர்க்புக்குகளில், பலவகையான அடிக்கோடுகளை அமைக்கலாம். இதனை அறிய, ரிப்பனில், ஹோம் டேப் அழுத்தவும் இதில் Cells குரூப்பில் உள்ள Format என்ற பிரிவில் உள்ள கீழ் விரி அம்புக் குறியை அழுத்தினால் கிடைக்கும் மெனுவில், கீழாக Format Cells என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனைக் கிளிக் செய்தால், ஐந்து டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று காட்டப்படும். இதில் Font என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் கட்டத்தில், இடதுபுறம் கீழாக, Underline என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் None என்று காட்டப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்தால், அடிக்கோடு எந்த வகைகளிலெல்லாம் அமைக்கலாம் என்பதற்கான ஆப்ஷன்கள் கிடைக்கும்.
இவற்றில் None என்பது செல்லில் எங்கு அடிக்கோடு இருந்தாலும், அதனை நீக்கிவிடும். Single என்பது செல்லில் உள்ளவற்றில் ஒற்றை அடிக்கோடினை அமைக்கும். அதே போல Double என்பது,செல்லில் உள்ளவற்றில், இரண்டு அடிக்கோடுகளை அமைக்கும். அடுத்ததாக உள்ள Single Accounting என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதே ஒற்றைக் கோடு செல்லில் உள்ளவற்றின் கீழாகச் சற்று இடம் விட்டு அமைக்கப்படும். இறுதியாக உள்ள Double Accounting என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதே இரட்டைக் கோடு செல்லில் உள்ளவற்றின் கீழாகச் சற்று இடம் விட்டு அமைக்கப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். பைல்களை இயக்க இதுவரை நான் சிங்கிள் கிளிக் பயன்படுத்தி வந்தேன். அதனை இந்த சிஸ்டத்தில் அமைப்பது எப்படி?
டி.ரத்னமாலா, கோவை.
பதில்:
மிக எளிது. ஸ்டார்ட் மெனு சென்று, அதன் தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select singleclick to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.

கேள்வி: ரிமோட் மவுஸ் ஒன்றினை வெகுநாட்களாகப் பயன்படுத்தி வருகிறேன். திடீரென இதனை ஒரு முறை கிளிக் செய்தால், அது டபுள் கிளிக்கினைச் செயல்படுத்துகிறது. இதனால், பைல் தேர்வு செய்திட இயலவில்லை. இதனை எப்படி சரி செய்வது?
சி. நாகேஸ்வரன், திருப்பூர்.
பதில்:
உங்களுடைய மவுஸ் ஓய்வு கேட்கிறது. அதன் பயன்பாட்டுக் காலம் முடிந்துவிட்டது. சரி செய்திட இயலாத நிலையை எட்டிவிட்டது. இதனைத் தூக்கிப் போட்டுவிட்டு, இன்னொன்றை வாங்கும் முன், இறுதியாக ஒரு சிறிய சரி செய்திடும் முயற்சியை மேற்கொள்ளலாம். ஸ்டார்ட் மெனு சென்று, அதன் தேடல் கட்டத்தில், “mouse” என டைப் செய்து என்டர் தட்டவும். தொடர்ந்து Mouse Properties என்ற விண்டோ கிடைக்கும். இதில் Double Click Speed என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்கள் மவுஸின் டபுள் கிளிக் செயல்பாட்டின் வேகத்தைச் சரி செய்திடலாம். இப்போது இருக்கும் நிலையில், அதன் வேக அளவு கோலில், வலது முனையில் செட் செய்யப்பட்டிருக்கலாம். இதனை நடுவில் அல்லது இடது புறமாக நகர்த்தி, மீண்டும் மவுஸ் சரியாகச் செயல்படுகிறதா எனச் சோதனை செய்திடவும். இல்லை எனில், புதியதாக ஒன்றை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X