கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2013
00:00

கேள்வி: இன்டர்நெட் பற்றிய தகவல்களைப் படிக்கையில், ஐ.எஸ்.பி. எனக் குறிப்பிடுகின்றனர். இது எந்த அமைப்பினைக் குறிக்கிறது? அல்லது இது ஒரு இணைய இணைப்பு தரும் சாதனமா?
சி.உமா, மேலூர்.
பதில்:
ஐ.எஸ்.பி. என்பது, உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் நிறுவனமாகும். ஆங்கிலத்தில், இதனை ISP Internet Service Provider எனக் குறிப்பிடுவார்கள். இன்டர்நெட் என்பது ஒரு பெரிய தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பு. இதில், இறுதியாக நம்மைப் போன்ற பயனாளர்கள் உள்ளனர். நமக்கு முந்தைய இடத்தில் ஐ.எஸ்.பி. என அழைக்கப்படும் நிறுவனங்கள் உள்ளன. இவை தான், தொலை தொடர்பில், இறுதிக்கட்ட நிலையில் இயங்கி, உங்கள் இல்லம் அல்லது அலுவலகத்திற்கு இணைய இணைப்பை வழங்குகிறது. இவ்வாறு வழங்கப்படும் இணைப்பினை என கூஇக/ஐக அழைப்பார்கள். இந்த இணைப்பு மட்டுமின்றி, ஐ.எஸ்.பி. நிறுவனங்கள், சில கூடுதல் சேவைகளையும் வழங்குவார்கள். அவற் றில், மின் அஞ்சல் சேவை, சிறிய அளவில் ஒவ்வொருவருக்கும் இணைய தளம் அமைப்பது ஆகியவற்றைக் கூறலாம். கூடுதலாகக் கட்டணம் செலுத்தினால், நம் நிறுவனத்திற்கான தனி கட்டமைப்பு, சில சிறப்பு தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தருவது போன்ற சேவைகளையும் அமைத்துத் தருவார்கள்.

கேள்வி: நான் புதிய லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இதில் விண்டோஸ் 8.1 சிஸ்டம் கிடைக்குமா? விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இடையே அவ்வளவாக வேறுபாடு இல்லை என்று கூறப்படுகிறதே. இது உண்மையா?
என்.கிருஷ்ணன், கோவை.
பதில்:
விண்டோஸ் 8.1 சிஸ்டம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வரும் நாள் குறித்து இன்னும் தெரியவில்லை. விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விண்டோஸ் 8.1, பழைய டெஸ்க்டாப் சிஸ்டம் போல செயல்பட உதவிடுகிறது. நவீன டேப்ளட் பிசியைப் போல இயங்கும் தன்மையை விட்டுவிட்டு, டெஸ்க்டாப் போல இயங்கும் நிலையை மேற்கொள்ளலாம். அனைவரும் விரும்பும் ஸ்டார்ட் பட்டன் மீண்டும் கிடைக்கிறது. எனவே, லைவ் டைல்ஸ் என்ற சதுர கட்டங்களைத் தவிர்க்க விரும்பினால், தவிர்த்துவிடலாம்.
ஆனால், புதிய டைல்ஸ் வழியினை விரும்பினால், ஸ்டார்ட் ஸ்கிரீனோடு, அதனையும் மேற்கொள்ளலாம். விண்டோஸ் 8.1ல் மிக முக்கியமான ஒரு சிறப்பம்சம், அது தரும் முப்பரிமாண (3D) பிரிண்டிங். போட்டோ அப்ளிகேஷனில், புதிய சில வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மெயில், ஸ்கை ட்ரைவ் மற்றும் கேமரா அப்ளிகேஷன்களில், நம் படங்களைத் திறந்தாலும், அவற்றை எடிட் செய்திடும் வசதி கிடைக்கிறது. இப்படியே இன்னும் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

கேள்வி: வெப் கேஷ் மற்றும் பிரவுசர் கேஷ் டேட்டா என்று சொல்லப்படும் இரண்டும் ஒன்றா? இல்லை என நான் எண்ணுகிறேன். சரியா?
எஸ். மஹா லட்சுமி, சென்னை.
பதில்
: நீங்கள் எண்ணுவது தவறு, மஹா லட்சுமி. இரண்டும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன. web cache, அல்லது Browser Cache என அழைக்கப்படுவது, இன்டர்நெட் இணைப்புக்கான அலைக் கற்றைப் பயன்பாட்டினைச் சீரமைக்கும் ஒரு விஷயமாகும். நாம் ஓர் இணைய தளம் சென்று, டாகுமெண்ட் ஒன்றைப் பார்க்கும்போது, அதில் டெக்ஸ்ட், படங்கள், கிராபிக்ஸ் என எது இருந்தாலும், நம் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர், அதனைத் தன் கேஷ் மெமரியில் பதிந்து வைத்துக் கொள்கிறது. அடுத்த முறை, அது 10 நிமிடத்தில் இருந்தாலும், ஒரு வாரம் கழித்து இருந்தாலும், அதே இணைய தளத்திற்க்கு நீங்கள் மீண்டும் செல்கையில், உங்கள் பிரவுசர், தன்னிடம் மெமரியில் உள்ளதை, அந்த இணைய தளத்தில் அப்போது உள்ளவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து, புதியதாக மாற்றம் ஏற்பட்டுள்ளதை மட்டும், பழைய சேவ் செய்த டேட்டாவுடன் இணைத்துத் தரும். இதனால், முந்தைய டேட்டாவினை மீண்டும் தளத்திலிருந்து இறக்கும் வேலை மிச்சமாகிறது. பேண்ட்வித் பயன்பாடு வெப் கேஷ் மூலம் குறைகிறது. இணையப் பக்கம் கம்ப்யூட்டருக்குள் இறங்கும் நேரம் மிச்சமாகிறது. இதனால், நம் இணைய உலா ஒரு மகிழ்ச்சி தரும் விஷயமாக மாறுகிறது.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பியில், Desktop Icon Cleanup Wizard கிடைத்தது. இதற்கு இணையாக, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த புரோகிராமும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் புதியவன். எனவே எனக்கு இதனை விபரமாகக் கூறவும்.
சி.எஸ். ராஜாசிங், திருநெல்வேலி.
பதில்:
விண்டோஸ் எக்ஸ்பியில், நீங்கள் குறிப்பிடும், டெஸ்க்டாப் ஐகான் கிளீன் அப் விஸார்ட் ஒரு தனி பயன்பாட்டு புரோகிராமாக, விண்டோஸ் எக்ஸ்பியில் கொடுக்கப்பட்டது. விண்டோஸ் 7ல் இது இல்லை. அதாவது, எக்ஸ்பியில் இருந்தது போல இல்லை. System Maintenance wizard என்ற ஒரு பெரிய தொகுதிக்குள் இது தரப்பட்டுள்ளது. பொதுவாக, இவை தாமாகவே இயங்கி வேலையை மேற்கொள்ளும். நீங்கள் இதனை இயக்க விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. Troubleshooting மெனுவினைத் திறக்கவும். இதற்கு ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து, கிடைக்கும் தேடல் கட்டத்தில் "Troubleshooting" என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் தேடல் முடிவுகளில், முதல் லிங்க்கினைத் தேர்ந்தெடுத்துத் திறக்கவும்.
2. அடுத்து கிடைக்கும் விண்டோவில், System and Security என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Run Maintenance Tasks என்பதில் கிளிக் செய்திடவும்.
3.அடுத்து, வரிசையாக சில சோதனைகள் நடத்தப்பட்டு, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குவதில் பிரச்னைகள் உள்ளதா எனக் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வுகளை வழங்கும். இதில் ஒன்று டெஸ்க்டாப் ஷார்ட்கட் சுத்தம் செய்வதாகும்.
இது பயன்படுத்தாத, பழைய ஷார்ட்கட் ஐகான்களின் பிரச்னையைத் தீர்க்கவில்லை என்றால், நீங்கள் சிகிளீனரைப் (CCleaner) பயன்படுத்தலாம். நிறுவனத்தின் இணைய தளத்தி லிருந்து இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்து இயக்கலாம். இந்த புரோகிராம் தரும் சிஸ்டம் மெனுவில், என்று உள்ளதன் அருகே டிக் அடையாளத்தினை ஏற்படுத்த மறக்க வேண்டாம்.

கேள்வி: முன்பு ஜிமெயில் அஞ்சல்களில் ரைட் கிளிக் செய்து, அதனை முன்னோட்டமாகப் (Preview) பார்க்க முடிந்தது. இப்போது அந்த வசதி கிடைப்பதில்லையே, ஏன்?
என். சிவராஜ சேகரன், திருவண்ணாமலை.
பதில்:
ஜிமெயில் தளத்தில், அதன் சேவையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இதில் பழையனவற்றில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. புதிய வசதிகள் தரப்படுகின்றன. துரதிருஷ்டவசமாக, முன்பு தரப்பட்ட சில வசதிகள் நீக்கப்படுகின்றன. நீங்கள் குறிப்பிடும் அஞ்சல் முன்னோட்டமும் இதில் ஒன்று. ஆனால், உங்களுக்கு அஞ்சல் முன்னோட்டம் தேவை எனில், அதற்கான சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். பயர்பாக்ஸ் பிரவுசரின் எக்ஸ்டன்ஷன்கள் (“extensions”), இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆட் இன்ஸ் (“addins”) போல, ஜிமெயிலிலும் தர்ட் பார்ட்டி டூல்ஸ்கள் கிடைக்கின்றன. இவற்றை “labs” என்ற பிரிவில் கூகுள் தருகிறது. இங்கு அஞ்சல் முன்னோட்டத்திற்கென ஒரு பிரிவு உள்ளது. இதனை இயக்கினால், உங்களுக்கு முன்னோட்ட வசதி கிடைக்கும். இதனைப் பெற, ஜிமெயில் தளப் பக்கத்தில், மேலாக, வலதுபுறம் உள்ள சிறிய கருப்பு சக்கரத்தில் கிளிக் செய்திடவும். பின்னர், கிடைக்கும் பக்கத்தில், “Settings” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த தலைப்பின் கீழ் labs என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இனி, சற்றுப் பொறுமையாகக் கீழாக வந்தால், அங்கு Preview Pane என்று ஒரு தலைப்பு இருப்பதைப் பார்க்கலாம். அதன் கீழாகவே, இந்த புரோகிராமினை வடிவமைத்துத் தந்தவர்களின் பெயர்களையும் பார்க்கலாம். இதன் எதிராக “Enable” என்று இருப்பதன் அருகே உள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். இனி, அஞ்சல் முன்னோட்ட வசதி உங்களுக்குக் கிடைக்கும். இந்த வசதி தேவை இல்லை என உணர்ந்தால், இதே இடத்திற்குச் சென்று “Disable” என்பதனைக் கிளிக் செய்திடலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக் முடிக்கும்போது, அந்த பைல் கம்ப்யூட்டரில் எந்த டைரக்டரி மற்றும் போல்டரில் உள்ளது என்ற பாதையினைத் தானாகக் கிடைக்கும்படி அமைக்க முடியுமா?
ச. உஷா ராணி, கோவை.
பதில்:
எக்ஸெல் தொகுப்பில் இது மிக எளிது. பைல் ஒன்றின் பாதையை, செல் ஒன்றில் அமைக்க, =CELL(“filename”) என்றபடி ஒரு பங்ஷனை செல்லில் அமைக்கவும். இது எடுத்துக்காட்டாக, E:\My Data\Excel\[Budget.xls] Sheet1 என்றபடி அமையும். இதன் மூலம் ஏற்படும் பெயர்களில், அடைப்புக் குறிகள் மற்றும் ஷீட் பெயர் வேண்டாம் எனக் கருதினால், அந்த பார்முலாவினை =SUBSTITUTE(LEFT(CELL (“filename”),FIND(“]”,CELL(“filename”))1),”[“,””) என மாற்றவும். LEFT என்னும் கட்டளை வலது புற அடைப்புக் குறியிலிருந்து, தொடரின் இறுதிவரை அனைத்தையும் நீக்குகிறது. SUBSTITUTE என்ற கட்டளைச் சொல் இடது அடைப்புக் குறியினை நீக்குகிறது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh Avc - trichy ,இந்தியா
26-ஜூலை-201314:14:37 IST Report Abuse
Venkatesh Avc ஐ.டி துறையில் database (like oracle DBA,data mining ) தொடர்பான வேலை வாய்புகள் பற்றி கூறவும்.எதிர்பார்ப்புடன் நன்றி
Rate this:
Share this comment
Cancel
jainulabudeen - pudukkottai,இந்தியா
26-ஜூலை-201307:07:34 IST Report Abuse
jainulabudeen நான் விண்டோஸ் 8 ப்ரோ லேப்டாப் டெல்லில் பயன்படுத்துகிறேன் விண்டோஸ் 8.1 எப்படி அப்டேட் செய்வது பற்றி விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh Avc - trichy ,இந்தியா
25-ஜூலை-201321:27:48 IST Report Abuse
Venkatesh Avc இந்த பகுதியில் கணினி தொடர்பான கேள்வி கேட்க விரும்புகிறேன், எங்கே எனது கேள்வியை பதிவு செய்ய வேண்டும் ? ( இதே இடத்தில் பதிவு செய்ய வேண்டும் - இணை ஆசிரியர், தினமலர்.காம் )
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X