புல்லரிக்கச் செய்யும் மாவீரன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
00:00

ரோமானிய உலகம்!
ஜுலியஸ் சீசரின் கொலைக்குப்பின், கி.மு.44 காலகட்டத்தில் சீசரின் நண்பர் மார்க் ஆன்டனி ரோமானிய பேரரசை ஆள தலைப்பட்டார். சீசரின் வளர்ப்பு மகனும் வாரிசுமான ஆக்டேவியனுக்கு அப்போது 18 வயது தான். அதனால், பெரும்பாலான மக்கள் அவனுக்கு அரசாகும் வல்லமை இருக்காது என கருதினர். ஆனால், சீசரின் மறைவை பற்றி கேட்ட ஆக்டேவியன் உடனடியாக ரோமிற்கு விரைந்தான். அங்கே சீசரை ஆதரித்த மக்களால், அவன் வரவேற்கப்பட்டான். உடனேயே அங்கே ஆளுமைக்கான போராட்டம், இரண்டு பிரிவினரிடையே உருவானது.

ஆரம்பக்கட்ட போர்கள்!
அதே வேளையில் ஆக்டேவியனை ஒப்பிடுகையில், மார்க் ஆன்டனிக்கு ரோமாபுரியின் ஆட்சி பேரவையில் பல எதிரிகள் இருந்தனர். அந்த பேரவையில் இருந்த ஆன்டனிக்கு எதிரான உறுப்பினர்கள், மற்ற உறுப்பினர்களை சம்மதிக்க இனங்கச் செய்து, ஆன்டனியை ஆளவிடாமல் செய்ய, அவரை நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்க வைத்தனர். பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆக்டேவியன் ஒரு படைக்கு தலைமை தாங்கி வடக்கு இத்தாலிய பகுதியான முடினாவில் மார்க் ஆன்டனியை தோற்கடித்தான்.
ஆக்டேவியன் தன்னை அயல் நாட்டு தூதராக நியமிக்கும்படி கேட்டான். ஆனால், ஆட்சி பேரவை அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, தன் எண்ணத்தை மாற்றி கொண்டான். அதனால், ஆக்டேவியன் தன் படைகளோடு, ஆன்டனி மற்றும் ஆன்டனியின் ஆதரவாளர் லெபிடஸ் ஆகியோரின் படை களோடு சேர்ந்து முப்பெரும் கூட்டணியை ஏற்படுத்தினான். மூவரும் பெரும் படையுடன் ரோமை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் ஆட்சி பேரவை உறுப்பினர்களை தங்களை அரசர்களாக ஏற்கும்படி நிர்பந்தித்தனர். அதோடு தங்களுக்கு எதிராய் செயல்பட்ட ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றினர். லெபிடஸ் விரைவில் அதிகார போட்டியில் இருந்து விலகி கொள்ள, ரோமானியமும் அதன் எல்லை பகுதிகளும் ஆக்டேவியன் மற்றும் ஆன்டனி ஆகிய இருவரின் ஆளுமைக்கு ஆளானது.

இரு அரசர்கள்!
கி.மு.42 காலகட்டத்தில் தங்கள் எதிரிகளை எல்லாம் துவம்சம் செய்து விட்டு ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க ஆன்டனியும் ஆக்டேவியனும் தயாராயினர். ஒருவரையொருவர் மிக வெறுப்பதனால், இருவராலும் இணைந்து செயல்பட முடியவில்லை. அதனால் ரோமை பிரித்து ஆள்வது என முடிவெடுத் தனர். ஆக்டேவியன் மேற்கு பகுதியையும், ஆன்டனி கிழக்கு பகுதியையும் ஆள்வது என முடிவானது.
ஆன்டனி எகிப்திய ராணியான கிளியோபாத்ராவுடன் பத்தாண்டு காலம் எகிப்தில் வாழ்ந்தான். அதே வேளை ஆக்டேவியன் ரோமிலேயே தங்கினார். அதோடு, தன்னை மக்களிடமும் ஆட்சி பேரவை உறுப்பினர்களிடையேயும் பிரபலப்படுத்தி கொண்டார் ஆக்டேவியன். இரண்டு அரசர்களும் நாளாக நாளாக ஒருவர் மேல் ஒருவர் சந்தேகப்படுவது அதிகரித்து கொண்டே போனது. அதனால் சூழ்நிலை மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டது.
கி.மு.31 காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் முடிவு கட்டும்படி போர் வெடித்தது.
கிரேக்கத்தின் மேற்கு கரை -ஆக்டேவியன் கடல் போரில், ஆக்டேவியன் அரசரிடம் ஆன்டனியை விட கப்பல்கள் அதிகம் இருந்ததால், ஆக்டேவியனின் கப்பல்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றன. ஆக்டேவியன் -ஆன்டனி மற்றும் கிளியோபாத்ராவை தோற்கடித்தார். அந்த ஜோடி எகிப்திற்கு திரும்பியது. ஆக்டேவியன் அங்கேயும் நெருங்க, அந்த ஜோடி அழிந்தது.

வாழ்க அகஸ்டஸ்!
ஆக்டேவியன் எகிப்தையும் வென்று ரோமானிய பகுதிகள் முழுமைக்கும் அரசரானார். கி.மு.27 காலகட்டத்தில் ஆட்சி பேரவையை ஆளுமாறு ஆக்டேவியன் கேட்டு கொண்டார். ஆனால், இது சும்மா போக்கு காட்டத்தான்.
ஆக்டேவியனுக்கு ராணுவத்தின் முழு ஆதரவும் இருந்தது. அதோடு ரோமானிய மக்களை ஒன்றிணைக்க கூடியவர் ஆக்டேவியன் மட்டுமே என அனைவரும் உணர்ந்து இருந்தனர். ஆட்சி பேரவையான செனட் ஆக்டேவியனுக்கு, "அகஸ்டஸ்' என்ற புதிய பட்டப் பெயரை வழங்கியது. அதற்கு அர்த்தம், மிகவும் மரியாதைக்குரிய ஒருவர் என்பதாகும். அவர் படிப்படியாக முழு ரோமானிய உலகத்தையும் தன் ஆளுகைக்குள் கொணர்ந்தார்.
ரோமானியர்கள் அகஸ்டஸ்-ஐ, ராணுவ பட்டமான "இம்பரேட்டர்' என்று அழைத்தனர். இந்த வார்த்தையில் இருந்துதான் "எம்பரர்' என்ற வார்த்தை உலகிற்கு கிடைத்தது. இவர் தான் ரோமின் முதல் பேரரசராக பொதுவாக குறிப்பிடப்படுகிறார். இவருடைய ஆட்சியுடன் ஆரம்பமாகிய ரோமானிய சரித்திரம் "எம்பயர்' (வல்லரசு) என வழங்கப் பட்டது.
பல ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்து மிகவும் புத்திசாலித்தனம் மற்றும் திறமையுடனும் அகஸ்டஸ் ஆண்டார். கி.பி.14ம் ஆண்டில் அவர் மறைந்தபோது குடியரசை விட வலுவான ஒரே அரசன் கீழ் வாழ்வது நல்லது என மக்கள் முடிவுக்கு வந்திருக்க, முடியாட்சி காலம் ஆரம்பமானது.
சல்யூட் மாவீரரே!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X