துப்பறியும் புலிகள் 007
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
00:00

பிறவிக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கான ஓர் இல்லம் அமைக்க நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்னிவல் அது. வேடிக்கைகள், விளையாட்டுக்கள், திறமையை வெளிப்படுத்தும் சாதனங்களைக் கொண்ட ஸ்டால்கள், தின்பண்டங்கள் இப்படி நிறையக் கேளிக்கைகள் இடம் பெற்றிருந்தன. நுழைவுக் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், நல்ல காரியத்துக்கு நிதியாகப் போகிறது என்ற நினைப்பில் தினமும் கணிசமான கூட்டம் வந்தது. குழந்தைகள் குதூகலப்பட நிறைய அயிட்டங்கள். பெற்றோர் பார்த்து வாங்கப் பலகடைகள். கார்னிவல் ஏற்பாடு செய்தவர்களுக்குத் திருப்தியாக இருந்தது.
அன்று விடுமுறை தினம். எதிர்பார்த்த படி கூட்டம் எக்கச்சக்கம். கேட் கலெக்ஷனை எண்ணி கை வலித்தது. முதல் இரண்டு நாள் கலெக்ஷன் வேறு பாங்கில் கட்டப்படாமல் இரும்புப் பெட்டியிலேயே இருந்தது. பொறுப்பாளருக்கு ஏதோ அலுவல். மற்றவர் சற்றே அசட்டையாயிருந்ததினால் பணம் பாங்குக்குப் போகவில்லை. அப்போது தான் அது நடந்தது.
இரவு ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. கார்னிவல் மைதானம் களைப்புற ஆரம்பிக்கும் வேளை. திடீரென்று அலுவலகத்தில் மூன்று பேர் புகுந்தனர். வசூலை எண்ணி வரிசையாக மேஜை மீது அடுக்கிக் கொண்டிருந்த இருவரையும் துப்பாக்கி முனையினால் பேச்சற்றுப் போகச் செய்தான் ஒருவன். இரண்டாமவன், மேஜை மீதிருந்த ரூபாய் நோட்டுக்களையும், நாணய அடுக்குகளையும் அப்படியே தன் முன் கையினால் திரட்டி ஒதுக்கித் தன் பிளாஸ்டிக் பையினுள் சேகரித்துக் கொண்டான். மூன்றாமவனின் பளபளக்கும் கத்திமுனை இரும்புப் பெட்டியின் சாவியை வரவழைத்தது. அடுத்த விநாடி சேப் காலியாயிற்று. மின்னல் போல மூவரும் கொள்ளைப் பொருட்களுடன் வெளியேறி கூட்டத்தில் கலந்து இருளில் மறைந்தனர்.
பீதி கலைந்து, உலர்ந்து போன தொண்டையைச் சரி செய்து கொண்டு பணத்தைப் பறி கொடுத்தவர்கள் கூச்சல் போடுவதற்குள் கொள்ளையர்கள் மாயமாக மறைந்து போயினர்.
போலீஸ் வலை வீசித் தேடியது. ஊரில் உள்ள கேடிகளையும், ரவுடிகளையும் மற்றும் சந்தேகப் பட்டியலில் உள்ள பலரையும் வளைத்தது. பணத்தைப் பறி கொடுத்த காஷியர்கள் கூறிய அடையாளப்படி மூன்று பேர்தான் தேறினர். ஆனால், அந்த மூவருமே, "அலிபி'. அதாவது அன்று தாங்கள் ஊரிலேயே இல்லை என்று சாதித்தனர்.
ஆனாலும் அம்மூவரை மட்டும் விசாரணைக்காக லாக் கப்பில் வைத்திருந்தனர். ஓடல், தேடல் விசாரணை எல்லாமாக இதற்குள் ஒரு மாதமாகி விட்டது. சந்தேகப்படும் லாக் கப்பில் உள்ள மூவரையும் அன்று இன்ஸ்பெக்டர் தீவிர விசாரணை செய்வதாக இருந்தார். சாமின் அப்பா தான் அந்த இன்ஸ்பெக்டர். விசாரணை ஆரம்பமான சிறிது நேரத்தில் அப்பாவைக் காண சாம் ஸ்டேஷனுக்கு வந்தான்.
பள்ளிக்கூடச் சுற்றுலா கோஷ்டியில் சேர பணம் வாங்கிப் போக மறந்து விட்டான். அன்று தான் கடைசி நாள். அதற்காகத் தான் தந்தையைத் தேடி வந்திருந்தான்.
இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருந்தார். ஆகவே, அதில் குறுக்கிடாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் சாம்.
""அன்று இரவு நீ எங்கிருந்தாய்? என்ன செய்து கொண்டிருந்தாய்?'' முதல் கைதி சோலையிடம் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
""ஞாபகமில்லீங்க... ஒரு மாசத்துக்கு மேலே ஆவுதே. ஒரு வேளை ஏதாவது சினிமா பார்த்திட்டிருந்திருக்கலாம்,'' என்றான்.
அடுத்த கைதி தீர்க்கமாகக் கூறினான்.
""அன்று இரவு நான் சந்தனமலையிலே இருந்தேன். ஏன்னா அன்று கிருத்திகை. ஒவ்வொரு கிருத்திகையும் நான் முருகனை அங்கு போய் தரிசிப்பது வழக்கம்!''
மூன்றாவது நபர், ""அன்று மாலை 6.30க்கு பீமவிலாஸில் டிபன் சாப்பிட்டேன். என் வீட்டுத் தெருக்கோடியில் இருக்கு அது. ஒரே கூட்டம். பில் கொடுத்து வெளியே வரும் போது 7.15 ஆயிட்டுது. பிறகு சபாவிலே ஒரு டான்ஸ் புரோகிராம் அன்னிக்கு. ஒரு ஆட்டோ பிடிச்சு, அதை அட்டெண்ட் பண்ணினேன். பர்பாமன்ஸ் முடிஞ்சு வீடு திரும்பும் போது பத்து இருபது ... போதுமா?'' என்று அலட்சியமாக சொன்னான் கார்த்திக் என்ற அந்தக் கைதி.
மவுனமாக அம்மூவரையும் அப்புறப்படுத்தும்படி கான்ஸ்டபிளிடம் சமிக்ஞை செய்து விட்டு, தன்னைக் காண வந்திருந்த சாமைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். அப்பாவின் குழப்பத்தைப் புரிந்துக் கொண்டான் சாம்.
'"அந்த கார்னிவல் கொள்ளை விஷயமா அப்பா?'' என்று கேட்டான்.
""ஆமாம்... ஒரு மாசத்துக்கு மேலாகப் போறது. இன்னும் குற்றவாளி சிக்கல்லே...'' என்றார் அலுப்புடன்.
""கவலைப்படாதீங்கப்பா குற்றாவளி உங்க கஸ்டடியிலே தான் இருக்கான்...'' என்றான் சாம் புன்முறுவலுடன்.
""என்ன சொல்றே நீ...?'' என்றான் இன்ஸ்பெக்டர்.
சாம், தன் அப்பாவிடம் தன் அனுமானத்தை விளக்கிய போது, அவர் முகத்தில் நம்பிக்கை ஒளி தோன்றியது.
""பலே! நான் இப்போதே என் விசாரணையை அவன் மீது தீவிரப்படுத்துகிறேன்,'' என்று கூறி எக்ஸ்கர்ஷனுக்கான பணத்தை அவனுக்கு கொடுத்தனுப்பினார்.

விடைகள்:
சோலைக்கு குறிப்பிட்ட நாளின் ஒரு மாதத்துக்கு முந்தைய தன் செயல்களை நினைவுபடுத்திக் கூற முடியவில்லை. இரண்டாவது நபருக்கு குறிப்பிட்ட தினத்தன்று தான் என்ன செய்தோம் என்று நினைவிருந்தது. காரணம், அன்று கிருத்திகை. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் அந்த தினத்தில் முருக தரிசனம் செய்யும் பழக்கமுடையவர் அவர். கார்த்திக் விவரமாக மணி, நிமிடம் உட்படக் குறிப்பிட்டு விளக்கினான். ஆகவே தான், "அலிபி' என்பதைத் திட்டமிட்டுக் கூறியுள்ளான். அவனே குற்றவாளி கொள்ளையில் தொடர்புடையவன் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விட்டனர்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X