அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

புலி பாப்பாவை கொஞ்சினால்...
நமது தேசிய விலங்கு "புலி'. ஆனால், புலிகளின் எண்ணிக்கை நமது நாட்டில் குறைந்து கொண்டே வருவது வனவிலங்கு ஆர்வலர்களுக்கு கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டு களில் மட்டும் நமது நாட்டில் 337 புலிகள் உயிரிழந்துள்ளன. வேட்டையாடப்படுதல், வயோதிகம், தங்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொள்ளுதல், விபத்து, பட்டினி, பலவீனம் போன்றவற்றால் இந்த புலிகள் இறந்துள்ளன.
உலகில் உள்ள புலிகளில் பாதிக்கு மேல் இந்தியாவில் வசிக்கின்றன. அவற்றை காப்பதற்கு களப்பாதுகாப்பு மிகவும் முக்கியம். புலிகளை பாது காப்பதில் உள்ளூர் பணியாளர்களை அமர்த்துவதற்கு மத்திய அரசு 100 சதவீதம் உதவி செய்தும் கூட, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சிறப்பு அதிரடி படைகள் அமர்த்தப்படவில்லை. அந்த வகையில் சிறப்பு அதிரடி படைகளை உருவாக்கி, அமர்த்திய முதல் மாநிலமாக கர்நாடகம் உள்ளது. புலிகள் பாதுகாப்பில் மத்திய அரசு, மாநில அரசு, மக்கள், சமூகம் என அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு. இன்றைக்கு, புலிகளுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவைப்படுகிறது.

மத்திய அரசு கவனம் செலுத்துகிறது!
கடந்த ஓராண்டாக புலிகளை காப்பதில் மத்திய அரசு தனது கவனத்தை செலுத்தி வந்துள்ளது. புலிகளை பாதுகாப்போம் என்னும் மத்தியஅரசு உதவியுடன் கூடிய திட்டம் 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான, நிதி ரூபாய் ஆயிரத்து 216 கோடியே 86 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புலிகளுக்கு உரிய பாதுகாப்பிடங்களை வழங்கும் விதத்தில் மத்திய அரசு உதவி இருக்கிறது. புலிகள் ஓய்விடம், விழிப்புணர்வு மையங்கள் அமைக்கவும், மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

புலிகளையும் கொஞ்சலாம்!
தாய்லாந்து உயிரியல் பூங்காவில் மிகுந்த பாதுகாப்புடன் நாம் புலிகளிடம் கொஞ்சலாம்.
இந்தியாவில் உள்ள ரான்தம்பூர் புலி சரணாலயத்தில் ஜீப்பில் காட்டுப்புலிகளின் அருகில் சென்று (பாதுகாப்பான) தூரத்தில் இருந்து படமெடுத்து கொள்ளலாம்.
அபாயகரமான புலியின் கழுத்தில் கையை போட்டு, அதன் முகத்தோடு முகம் சேர்த்து கொஞ்சினால் எப்படி இருக்கும்?
நம் கன்னத்தில் அதன் காது மடல் பதியும் போது சொரசொரப்பும், மென்மையும் கலந்த புது உணர்வு தோன்றுகிறது.
போட்டோவில் பார்க்கும்போது, கோலிக் குண்டு அளவே தெரியும் அதன் கண்களை அருகில் பார்க்கும்போது எலுமிச்சை பழம் அளவு உருண்டு திரண்டு உருட்டுகிறது.
தலையை வருடிக்கொடுத்து, நாம் அதன் தோள் மீது கை போட்டால் அதன் உடம்பில் பரவியிருக்கும் இதமான சூடு, நாம் அணிந் திருக்கும் உடையையும் தாண்டி, நம் சருமத்தை தொடுகிறது.
அதன் காலை தொட்டுப்பார்க்கும்போது, "இந்த காலால் யானையின் தலையை எல்லாம் அடித்து சிதறடித்துவிடுவாயாமே' என்று கேட்கத் தோன்றுகிறது.
அப்படி ஒன்றும் அதன் கால்கள் கனமாக இல்லை. மொத்தத்தில் அதன் தோள்மீது நாம் சாய்ந்து, அனைத்து கொள்ளும்போது மெது மெது ஸோபாவில் சாய்ந்து கொள்வது போலிருக்கிறது.

புலி எங்கு இருக்கிறது!
ஒரு ஏரியாவில் அதாவது, கிட்டத்தட்ட 30 கி.மீ., சுற்றளவில் புலி இருந்தால், குரங்கு களுக்கு தெரிந்துவிடும். உடனே வித்தியாசமாக ஆபத்து குரலை எழுப்பும். மான்கள் உடனடியாக அடையாளம் கண்டு பாய்ந்தோடிவிடும். மற்ற பிராணிகளும், குரங்குகளின் இந்த சத்தத்தை கேட்டு அலட்சியப் படுத்தாமல், பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துவிடும். நாம் காட்டுக்குள் செல்லும் போது வழக்கமான கிரீச் சத்தங்கள், சலசலப்புகள் இல்லாமல் காடே நிசப்தமாகி கிடந்தால், அங்கே புலி இருக்கக்கூடும் என்று தெரிந்துகொள்ளலாம்.
மேலே வல்லூறு வட்ட மிட்டு கொண்டிருந்தால், அந்த இடத்தின் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் புலி இருக்கும்.

எல்லையும் வாசனையும்!
புலிகளுக்கும் எல்லை பிரச்னை உண்டு. கிட்டத்தட்ட 30 கி.மீ., எல்லையை அது வகுத்து கொண்டு அந்த பகுதியை சுற்ற தனது உடலில் இருந்து ஒரு வித எச்சத்தை வெளியேற்றி பீச்சியடிக்கிறது.
அந்த எல்லைக்குள் அதன் இணை மற்றும் குட்டியை தவிர வேறு புலி வராது. வந்தால் சண்டையிடும்.
எதாவது ஒன்று சாகும் வரை அந்த போர் தொடரும். பொதுவாக அந்த, "வாசனையை' நுகர்ந்த மற்ற புலிகள், அந்த எல்லைக்குள் செல்வதில்லை.

யானையை விட புலி ஜாஸ்தி விலை!
மனிதர்கள் மதிப்பீடுபடி யானையைவிட புலிக்கு விலை மதிப்பு அதிகம். அதன் தோல், எலும்பு, நகம், பல் எல்லாவற்றிற்கும் 50 லட்சம் ரூபாய் வரை மதிப்பு போடுகின்றனர்.

அம்மா ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது "முள்ளங்கி சப்ஜி' செய்முறை நேரம்.
முள்ளங்கி உடலுக்கு நல்லது. வாயு உபத்திரவத்தை நீக்கும். எளிதில் ஜீரணமாகி பசியைத் தூண்டும். கல்லீரலுக்கு நல்லது. முள்ளங்கியைக் கூட்டு, சாம்பாருக்கு உபயோகிக்கும் முறை எல்லாருக்கும் தெரிந்ததே. இதை சப்ஜியாகவும் செய்யலாம். சப்பாத்தி, பூரி இவைகளுக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: நல்ல வெள்ளை முள்ளங்கி - 1/2 கிலோ, தக்காளிப் பழம்-2 பெரியது, வெந்த உருளைக் கிழங்கு -1, பச்சை மிளகாய் -4, தனியா விதை - 2 டீஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன், பூண்டு - 4 பல், மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன், இஞ்சி-சிறிய துண்டு, ரிபைன்ட் ஆயில் - 50 கிராம்.
செய்முறை: முள்ளங்கியைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், தனியா, இஞ்சி, சீரகம், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பெரிய வாணலியில் எண்ணெயை ஊற்றி, அரைத்த விழுதை அதில் போட்டுக் கை விடாமல் அடி பிடிக்காமல் 5 நிமிடங்களுக்கு கிளறவும். பிறகு, முள்ளங்கித் துண்டுகளை அத்துடன் சேர்த்து, ருசிக்கு ஏற்ப உப்பைச் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். முள்ளங்கி வெந்ததும் வெந்த உருளைக் கிழங்கை மசித்து அத்துடன் சேர்த்து நன்றாகக் கிளறி கீழே இறக்கி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை மேலே தூவவும்.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X