கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2013
00:00

கேள்வி: என் பிரவுசரில் பைல் உள்ள மெனு பார் காணப்படவில்லை. இதற்கு ஒரு ஷார்ட் கட் உள்ளதாக முன்பு படித்ததாக ஞாபகம். நினைவில் இல்லை. இதற்கான டிப்ஸ் தரவும்.
எஸ். உத்தம்குமார், மதுரை.
பதில்:
எந்த பிரவுசரை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதனைத் தெரிவிக்கவில்லை. இதே போன்று பல வாசகர்கள் சந்தேகத்தினை கேள்விகளாக அனுப்பியுள்ளதால், அனைத்து பிரவுசர்களுக்குமான குறிப்புகளைத் தருகிறேன்.
தற்போது வரும் திருத்தப்பட்ட பதிப்புகளில், அனைத்து பிரவுசர்களும் பைல் (“File”) மெனுவினை எடுத்துவிட்டன. இணையப் பக்கத்தில் தேவையற்ற விபரங்களைக் காட்டும் பட்டைகளை நீக்கி, அவை தேவை எனில், பெறக்கூடிய ஷார்ட் கட் வழிகளையும் தந்துள்ளனர்.
பயர்பாக்ஸ் பிரவுசரில், பைல் மெனு இடது மேல் புறம், ஆரஞ்சு வண்ணத்தில், பயர்பாக்ஸ் பட்டனாக இடம் கொண்டுள்ளது. இதில் கிளிக் செய்தால், வழக்கமான பைல் மெனு கிடைக்கும். இதில் கீழாக “Options” என்னும் பிரிவு உங்களுக்குக் கூடுதலாக சில செட்டிங்ஸ் மேற்கொள்ள இடம் அளிக்கும். Menu Bar என்பதில் கிளிக் செய்தால், “File,” “Edit,” மற்றும் “View” போன்ற பட்டன்கள் கிடைக்கும். இதெல்லாம் தேவை இல்லை எனக் கருதி, பயர்பாக்ஸ் ஆரஞ்ச் நிற பட்டனே போதும் என எண்ணினால்,மெனு பாரில், “View” பட்டன் அழுத்தி, “Toolbars” என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “Menu Bar” என்ற ஆப்ஷனில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
கூகுள் குரோம் வெப் பிரவுசரில், வழக்கமான மெனு பாரினை நிலையாகப் பெற எந்த வழியும் தரப்படவில்லை. இதற்குப் பதிலாக “Bookmarks” டூல்பாரினைப் பெற வழி தருகிறது. இதில் உங்களுக்குப் பிடித்த இணைய தளங்கள் வழியே சென்று, தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். பிரவுசரின் மேலாக, டூல்பாரினை இணைக்க, ரென்ச் (“Wrench”) ஐகானில் முதலில் கிளிக் செய்திடவும். இது, திரையின் மேல் வலது மூலையில், சிகப்பு வண்ணத்தில் உள்ள எக்ஸ் (“X”) பட்டன் கீழாகக் கிடைக்கும். இதில் “Bookmarks” என்றுள்ள துணை மெனுவினைத் திறக்கவும். புக்மார்க்ஸ் மெனு, திரையில் மேலாகக் காட்டப்பட “Show Bookmarks Bar” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இது தேவை இல்லை எனக் கருதினால், இந்த ஆப்ஷனிலேயே மீண்டும் கிளிக் செய்திடவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் பதிப்பு 9ல், “toolbar” தரும் வழக்கமான ஆப்ஷன்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. பழைய மெனு பாரினைப் பெற வழியே இல்லாதது போல் தோன்றினாலும், மைக்ரோசாப்ட், ஒரு எளிய ஷார்ட் கட் வழியைத் தந்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் லோட் ஆகும் போது, அல்லது ஆன பின்னர், ஆல்ட் கீ (“Alt”) யினை அழுத்தவும். மெனுபார் கிடைக்கும். இந்த மெனு வேண்டாம் என்றால், மீண்டும் அதே ஆல்ட் கீயை அழுத்த, இந்த மெனு பார் மறைந்துவிடும்.

கேள்வி: என்னுடைய விண்டோஸ் 7 பெர்சனல் கம்ப்யூட்டரில் கிடைக்கும் வாட்டர் மார்க் அடையாளத்தினை எப்படி நீக்குவது? எங்கும் அதற்கான வழி கிடைக்கவில்லை. தயவுச் செய்து செட்டிங்ஸ் வழி கூறவும்.
கே. சுஹாசினி, கோவை.
பதில்:
வாட்டர் மார்க் அடையாளம் தெளிவாக ஒரு தகவலைத் தருகிறது. நீங்கள் எஸ்.பி.1 பேட்ச் பைலின் சோதனைப் பதிப்பினை இயக்கி வருகிறீர்கள். அப்படித்தான் என்றால், அதனை அன் இன்ஸ்டால் செய்து, சிஸ்டத்திலிருந்து நீக்கிவிட்டு, எஸ்.பி. 1 பேக்கின் முழுமையான இறுதியான பைலை இன்ஸ்டால் செய்திட வேண்டும். மேலும், நீங்கள் இயக்கும் தர்ட் பார்ட்டி புரோகிராம்களின் டிஜிட்டல் சான்றிதழுக்கு, மைக்ரோசாப்ட் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றாலும் இது போல் ஏற்படலாம். இது போன்ற நிகழ்வுகளுக்கு, மைக்ரோசாப்ட் இரண்டு வகை தீர்வுகளை வழங்கியுள்ளது.
வழி 1: ஸ்டார்ட் கிளிக் செய்து, கட்டத்தில் cmd என டைப் செய்திடவும்.
2. புரோகிராம்ஸ் (Programs) என்பதன் கீழாக உள்ள cmd.exe என்ற பைலில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், Run as administrator என்பதில் கிளிக் செய்திடவும்.
3. கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில், கீழே குறிப்பிட்டுள்ளதனை டைப் செய்து எண்டர் தட்டவும்.
bcdedit /set TESTSIGNING OFF கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மூடி, மீண்டும் விண்டோஸ் இயக்கத்தைத் தொடங்குங்கள். இந்த செட்டிங்ஸ், பிரச்னைக்குத் தீர்வினைத் தரவில்லை என்றால், இரண்டாவது வழியைப் பின்பற்றவும்.
மேலே தரப்பட்டுள்ள முதல் இரண்டு செயல்பாடுகளை மேற்கொள்ளவும். பின்னர், கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில் கீழே உள்ளதை டைப் செய்திடவும்.
bcdedit.exe set loadoptions ENABLE_INTEGRITY_CHECKS
bcdedit.exe set TESTSIGNING OFF
இனி, கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மூடி வெளியேறவும். தொடர்ந்து விண்டோஸ் இயக்கத்தினை ரீபூட் செய்திடவும். இதில் உங்களுக்கான தீர்வு கிடைக்கும்.

கேள்வி: File Allocation Table (FAT) என்பது என்ன? இதனை கம்ப்யூட்டர் சார்ந்த கட்டுரைகளில் அடிக்கடி படிக்க நேரிடுகிறது. சற்று விளக்கவும்.
என். சுந்தரி சேகர், திருப்பூர்.
பதில்:
File Allocation Table (FAT) என்பது, கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பைல் சிஸ்டம்.மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் பைல் வடிவமைப்பும் இதுதான். முதலில் பிளாப்பி டிஸ்க்குகளுக்கென இந்த பைல் சிஸ்டம் வடிவமைக் கப்பட்டு, பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹார்ட் ட்ரைவ்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. முதலில் டாஸ் சிஸ்டம் பைலாகவும், பின்னர், விண்டோஸ் சிஸ்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1980 முதல் 1990 இதுவே, பைல் பார்மட்டாக இருந்தது.
FAT பைல் சிஸ்டம், தற்போதைய நவீன பைல் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாகத்தான் மதிக்கப்படும். இருப்பினும், புதிய கம்ப்யூட்டர் சிஸ்டங்களும் இதனைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, ப்ளாஷ் ட்ரைவ் போன்ற, இணைத்து நீக்கப்படும் மீடியா வகை சாதனங்களுக்கு இந்த பைல் முறை பயன்படுத்தப்படுகிறது.

கேள்வி: ஆன் ஸ்கிரீன் கீ போர்டுக்கென ஷார்ட் கட் கீ ஒன்றை எப்படி தயாரிப்பது?
என். சிவபாலன், புதுச்சேரி.
பதில்:
நல்ல கேள்வி. நன்றி. பலருக்கு ஆன் ஸ்கிரீன் கீ போர்ட் ஒன்றை மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்தில் கொடுத்துள்ளது என்றே தெரியாது. இதன் பெயர் சொல்கிறபடி, இது திரையில் காட்டப்படும் ஒரு கீ போர்ட். இதில், மவுஸின் கர்சரைக் கொண்டு, இயக்கினால், தேவைப்பட்ட எழுத்துகள் அமைந்த டாகுமெண்ட் கிடைக்கும். இனி இதற்கான ஷார்ட் கட் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
திரையில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New மற்றும் Shortcut ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் Create Shortcut டயலாக் பாக்ஸில், கீழே தரப்பட்டுள்ளதை, டைப் செய்திடுக. C:\Windows\System32\osk.exe தொடர்ந்து கிளிக் செய்த பின்னர், Next என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் ஷார்ட் கட் கீக்கு, பெயரிடச் சொல்லி விண்டோஸ் கேட்கும். பெயர் கொடுத்தவுடன், ஷார்ட் கட் கீ திரையில் இருக்கும். இதனை எளிமையாகவும், விரைவாகவும் பயன்படுத்த, இந்த ஷார்ட் கட் கீயினை டாஸ்க்பாருக்கு அனுப்பலாம்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள டாஸ்க் பார், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு பெரியதாக அமைந்துள்ளது. இதனை எப்படி சிறியதாக மாற்றுவது?
என். இராம ராஜன், செங்கல்பட்டு.
பதில்:
எளிதாக சில விநாடிகளில் மாற்றிவிடலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock taskbar என்பதில் டிக் அடையாளம் இல்லை என்பதனை உறுதிப்படுத்தவும். இருந்தால், மவுஸ் கர்சரால் கிளிக் செய்து எடுத்துவிடவும். இனி, டாஸ்க்பாரின் மேலாக உள்ள கோட்டின் அருகே மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். கர்சர் இரு அம்புக் குறி கொண்ட அடையாளமாக மாறும் வரை கோட்டின் மீதாக சுழற்றிச் செல்லவும். மாறிய பின்னர், அதனைக் கீழாக அல்லது மேலாக இழுத்து, டாஸ்க்பாரின் அகலத்தைத் தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம். தேவையான அளவில் வைத்தவுடன், மீண்டும் டாஸ்க்பாரின் மீது ரைட் கிளிக் செய்து, Lock taskbar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

கேள்வி: விண்டோஸ் 8 பயன்படுத்தி வருகிறேன். என் மானிட்டர் டச் ஸ்கிரீன் மானிட்டர் இல்லை. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இரண்டு பதிப்புகளாகக் கிடைக்கிறது என்று முன்பு ஒரு தகவல் கொடுத்தீர்கள். நான் அதன் மெட்ரோ பதிப்பை, என் சிஸ்டத்தில் பயன்படுத்த முடியுமா?
எஸ். நிரஞ்சனா, சென்னை.
பதில்:
இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் மெட்ரோ பதிப்பு, விண்டோஸ் 8 சிஸ்டத்தினை தொடு திரையில் இயக்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் உள்ள பட்டன்கள் சற்றுப் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான், நம் விரலால் சரியாகத் தொட்டு இயக்க முடியும். இந்த கட்டங்களும் வேறு வகையில் அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதனை தொடு உணர் திரை இல்லாத மானிட்டர்களிலும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தியவர்கள், மவுஸின் கர்சருக்கு இது சரியாகவும் விரைவாகவும் இயங்கவில்லை எனக் குறை கூறினார்கள். எனவே தான் மைக்ரோசாப்ட், மவுஸ் கொண்டு துல்லியமாக இயக்கும் வகையில், இன்னொரு பதிப்பினைக் கொண்டு வந்துள்ளது. உங்களுடைய மானிட்டருக்கேற்ற வகையில், அதனையே நீங்கள் பயன்படுத்தலாமே.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X