கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2013
00:00

கேள்வி: பயர்வால் என்பது ஒரு ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் என நான் எண்ணுகிறேன். என் தோழி, அதனை இண்டர்நெட் இணைப்பினை வடிகட்டி அனுப்பும் ஒரு டூல் என்கிறார்.இதில் எது சரி?
எஸ்.ரேவதி, மதுரை.

பதில்: பயர்வால், வைரஸுக்கு எதிரான புரோகிராம் என சொல்ல முடியாது. உங்கள் தோழி சொல்வது போல அது ஒரு வடிகட்டிதான். இணைய இணைப்பின் வழியே வரும் டேட்டா பாக்கெட்களை வடிகட்டி, குறிப்பிட்ட டேட்டா பாக்கெட்களை நிறுத்தும். சிலவற்றை நிறுத்தி, இந்த எண் முகவரி உள்ள இணைய தளத்திலிருந்து தகவல்கள் வருகின்றன. அனுமதிக்கவா? என்று உங்களைக் கேட்கும். எனவே, உங்கள் தோழி சொல்வதே சரி என இதில் நீங்கள் ஒத்துக் கொள்ளுங்களேன்.

கேள்வி: பிங் (Ping) என்ற சொல் இணைய இணைப்பில் எந்த சாதனைத்தைக் குறிக்கிறது? சில வேளைகளில் பிங் டெஸ்ட் என்றும் படிக்கிறேன். ஆனால் என்ன வகை சோதனை என அறியமுடியவில்லை. விளக்கம் தரவும்.
சி.கே. நரேஷ் குமார், கோவை.
பதில்:
பிங் என்பது, கம்ப்யூட்டர் நெட்வொர்க் இணைப்பில் ஒரு பொதுவான டூல். இணைய இணைப்பு வழிமுறையில் (Internet Protocol IP), நம்மால் நாம் இலக்கு வைக்கும் ஹோஸ்ட் கம்ப்யூட்டரை அணுக முடிகிறதா இல்லையா என்ற சோதனை மேற்கொள்ள இந்த டூல் பயன்படுகிறது. இணைப்பு வேண்டும் சர்வரில் இருந்து பதில் கிடைக்கிறதா என்பதையும் நாம் இந்த டூல் மூலம் அறிய முடியும். இந்த டூல், இலக்கு வைத்திடும் சர்வருக்கு அனுப்பும் செய்தியை எதிரொலி வேண்டுகோள் (Echo Request) என அழைப்பார்கள். அந்த சர்வருக்கு வேண்டுகோள் சென்று, என்ன பதில் கிடைக்கிறது என்பதை இந்த டூல் காத்திருந்து பெறும். அவ்வாறு பெறுவதற்கான நேரம் எவ்வளவு ஆகிறது என்பதையும் கணக்கிடும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என அடிக்கடி நீங்கள் எழுதுகிறீர்கள். ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பாதுகாப்பிற்கான சப்போர்ட் தரும் பேட்ச் பைல்களைத் தராது என அறிவிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் புரோகிராம்களை மேம்படுத்தித் தந்து கொண்டிருக்கையில், ஏன் எக்ஸ்பியினை பயன்படுத்தக் கூடாது? எனக்கு எக்ஸ்பி தான் மிகவும் பிடித்த ஓ.எஸ். ஆக உள்ளது.
ஆர்.கே. பவானி சங்கர், திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இலவசமாகவே நம் உதவிக்குத் தொடர்ந்து வருகையில், நாம் ஏன் மைக்ரோசாப்ட் சப்போர்ட் தராத நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது உங்களின் வாதம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஏற்படும், அல்லது பின் நாளில் அறியப்படும், ஏற்கனவே உள்ள பிழை உள்ள குறியீடுகளுக்கு மாற்றாக, பேட்ச் பைல்களை தர்ட் பார்ட்டி நிறுவனங்கள் தர முடியாது. கொசு கடிக்காமல் இருக்க வலை கட்டலாம், காயில் எரிக்கலாம், ஆயிண்ட்மெண்ட் தடவலாம். ஆனால், கொசு உள்ளே எளிதாக நுழையும் வகையில் சுவர்களில் விரிசல் இருந்தால், கொசு விரட்டி மருந்து என்ன செய்திட முடியும். எனவே தான், நாங்களே ஒதுக்க நினைக்கும் எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பயனாளர்களும் ஒதுக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கேட்டுக் கொள்கிறது.
உங்களுக்கு எக்ஸ்பி சிஸ்டம் பிடிக்கும் என்பதனை, உங்கள் நீண்ட கடிதத்தில் பல வரிகளில் விளக்கியுள்ளீர்கள். நல்லது. இணைய இணைப்பில்லாமல் எக்ஸ்பியை பயன்படுத்தலாம். வேறு எந்த ப்ளாஷ் ட்ரைவ் சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது. இந்த வசதிகளோடுதான், எக்ஸ்பி சிஸ்டம் வசதியும் தேவை எனில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டு, அதில் உள்ள எக்ஸ்பி மோட் என்னும் நிலையைப் பயன்படுத்துங்கள்.

கேள்வி: விண்டோஸ் 8 பயன்படுத்தி வருகிறேன். இதில் சில பைல்களைத் திறப்பதற்கு, இந்த ஓ.எஸ்.அமைத்துள்ள மாறா நிலையில் உள்ள புரோகிராம்களுக்குப் பதிலாக, நான் விரும்பும் புரோகிராமினை மாறா நிலைக்கு மாற்ற விரும்புகிறேன். எடுத்துக் காட்டாக, படங்கள் போட்டோக்களைத் திறந்து பார்க்க, விண்டோஸ் போட்டோ வியூவர் புரோகிராமினையே பயன்படுத்த விரும்புகிறேன். இதனை எப்படி அமைப்பது எனத் தெரியவில்லை. வழி காட்டவும்.
ச. பாஸ்கரன், புதுச்சேரி.
பதில்:
நல்ல கேள்வி. விண்டோஸ் 8 ஓ.எஸ். இது போன்ற பல விஷயங்களை நமக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. டிபால்ட் புரோகிராம் எனப்படும், மாறா நிலையில் உள்ள புரோகிராம்களை, இந்த சிஸ்டம் ஏற்கனவே செட் செய்துள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால், நாம் டெஸ்க்டாப் நிலையில் ஒரு பைலைத் திறக்க முயற்சிக்கையில், அது அந்த பைலை மெட்ரோ அப்ளிகேஷன் ஒன்றில் திறக்கும். இதனைத் தொடர்ந்து நாம் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்த இயலாது. நீங்கள் குறிப்பிடும் போட்டோ மற்றும் பட பைல் இது போலத்தான். இதில் கிளிக் செய்தால், போட்டோ அப்ளிகேஷனில் பைல் திறக்கப்படும். ஆனால், நீங்கள், விண்டோஸ் போட்டோ வியூவரில் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். இதற்காக, ஒவ்வொரு பட பைலையும், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Open With என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் நாம் விரும்பும் புரோகிராமினை ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்க முடியாது. இதனை டிபால்ட் எனப்படும் மாறா நிலை புரோகிராமாக எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் ஸ்டார்ட் ஸ்கிரீனில், default programs என்று டைப் செய்திடவும். தரப்படும் முடிவுகளில் Default Programs என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது, டிபால்ட் புரோகிராம்ஸ் விண்டோ, டெஸ்க் டாப்பில் திறக்கப்படும். இதில் நீங்கள் குறிப்பிடும் பைலுக்கான டிபால்ட் புரோகிராமினைத் திறக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் கிடைக்கும். எளிய வழி “Set your default programs” என்பதைத் தேர்ந்தெடுத்து அமைப்பதுதான். இப்போது நீங்கள் குறிப்பிடும் பைல் வகைக்கான புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அதனையே மாறா நிலை புரோகிராமாக அமைக்கவும்.
குறிப்பிட்ட புரோகிராம், எந்த எந்த வகை பைல்களைத் திறக்க மாறா நிலையில் உள்ள புரோகிராமாக அமைக்கப்பட வேண்டும் என விரும்பினால், இரண்டாவது ஆப்ஷனாக உள்ள “Choose defaults for this program” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், நீங்கள் ஒவ்வொரு வகை பைலையும் திறந்து இதனுடன் திறக்கப்பட வேண்டிய பைலாக அமைக்கலாம்.
இந்த மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், சேவ் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பிய வகையில், டிபால்ட் புரோகிராம் இயங்கும்.

கேள்வி: அடிக்கடி ஏதேனும் எர்ரர் மெசேஜ்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் காட்டப்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் சுட்டிக் காட்டி தீர்வுகள் தரும் இணைய தளம் ஏதேனும் உள்ளதா?
கே.எல்.ராமச் சந்திரன், பல்லடம்.
பதில்:
கவலையே வேண்டாம். அந்த எர்ரர் மெசேஜினை அப்படியே காப்பி செய்து, இணையத்தில் கூகுள் அல்லது வேறு ஒரு தேடல் சாதனத்தில் பேஸ்ட் செய்து, தேடச் சொன்னால், இந்தப் பிரச்னை குறித்து தீர்வு தரும், ஒரு தளம் அல்ல, பல தளங்கள் பட்டியலில் கிடைக்கும். பதிலில் உள்ள சில வாக்கியங்களைப் படித்தால், எந்த தளத்தில் விரிவாக இந்தப் பிரச்னை ஆய்வு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிய வரும். இதன் அடிப்படையில், இணைய தளத்தினைத் தேர்ந்தெடுத்து தீர்வினைக் காணலாம்.

கேள்வி: குழந்தைகளை, சிறுவர்களைப் பாலியல் மற்றும் வன்முறை தளங்களிலிருந்து காப்பாற்ற அடிக்கடி வழி காட்டும் கட்டுரைகளைத் தருகிறீர்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வளர்க்கும் வழிகள் குறித்த இணைய தளம் ஏதேனும் ஒன்றைப் பரிந்துரை செய்திடலாமே. சிறு குழந்தைகளின் தாய்மார்களுக்கும், குழந்தைப் பேற்றினைப் பெற இருக்கும் இளம் பெண்களுக்கும் இது உபயோகமாக இருக்கும்.
எஸ்.ஆதிலட்சுமி, ஆசிரியை, சிவகாசி.
பதில்:
நல்ல கேள்வி, ஆதிலட்சுமி. இதோ உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் தகவல்கள். குழந்தை வளர்ப்பில் தனித் தனியாகத் தகவல் தரும் தளங்கள் இணையத்தில் பல உள்ளன. கூகுள் தேடுதளம் மூலம் இவற்றை நீங்கள் காணலாம். இருப்பினும் நீங்கள் கேட்டதற்காக, நான் கண்டவற்றில் சிறந்த ஒன்றைப் பற்றிக் கூறுகிறேன்.
அதன் முகவரி http://kidshealth.org இந்த தளம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர், குழந்தை மற்றும் இளம் வயது.
முதல் பிரிவில் குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்து பல பிரிவுகள் உள்ளன. பொதுவான உடல்நலம், நோய் பற்றுதல், உணர்ச்சிகளும் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முன் னேற்றமும், சத்தான உணவு மற்றும் நலம், கர்ப்ப காலம் மற்றும் புதிய பிறப்பு, மருத்துவ பிரச்னைகள், நல்ல பெற்றோர்கள், முதல் உதவி மற்றும் பாதுகாப்பு, மற்றும் செய்தி மற்றும் தகவல்கள். இதில் தினந்தோறும் கேள்வி பதில் பிரிவுகளும் உள்ளன.
அடுத்ததாக சிறு குழந்தைகள் பிரிவில், அவர்கள் வளரும் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப பல பிரிவுகள் தரப்பட்டுள்ளன. உடல்நலத்தைப் பேணுவது, உணவு வகை, ஒவ்வொரு நாளும் வரக்கூடிய உடல் நலப் பிரச்னைகள், மருத்துவ துறைக்கான சொற்கள், வளரும் நிலையில் வரக் கூடிய நோய்கள் என்ற பிரிவுகளில் நிறைய தகவல்கள் தரப்பட்டுள்ளன. இளம் வயது என்ற பிரிவில் எண்ணங்கள், உடல் போக்கு, நலமான பாலியியல், சரியான உணவு, மருந்து மற்றும் ஆல்கஹால், நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சரியான பள்ளிகள் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன. பல தலைப்புகளில் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. குழந்தை வளர்ப்பு பற்றி அறிய விரும்புவோருக்கான அருமையான தளம் இது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X