இளம்புயல் நிகாரிகா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2013
00:00

அந்த நாளில், சாதாரணமாகவே ஒரு பெண் என்பவள் வித்தியாசமான ஒரு படிப்பை எடுத்து கொண்டாலோ, அல்லது வேலையை தேடி கொண்டாலோ வீட்டில் உள்ளவர்கள் அதெல்லாம் உனக்கு எதுக்கு? எனச் சொல்லி குறுக்கே விழுந்து தடுப்பார்கள்.
ஆனால் இன்றைக்கோ குழந்தைகளின் ஆர்வத்தை புரிந்து கொண்டு, அவர்களுக்கு தூண்டுகோலாய் இருப்பதோடு அந்த பொறியை விசிறிவிட்டு ஒளிர்விடும் சுடர் ஆக்குவதில் அவர்களது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக நிற்கிறார்கள். அதனால் தானே என்னவோ உலகில் உள்ள அத்தனை துறைகளிலும் பெண்ணின் புறாப் பாதங்கள் அழுத்தமாய் தடம் பதித்தாகிவிட்டன.

அன்றைய சித்தர்கள், யோதியர், ஞானியர், ரிஷிகள் மேற்கொண்ட யோகாவை இன்றைய வாட்ஸ் அப் யுகத்து சின்னப்பெண் தேர்ந்தெடுத்து வெற்றி வாகை சூட்டுகிறாள் என்பதை கேட்கும்போதே ஜிவ்வென்று பறப்பது போன்ற உணர்வு நமக்குள்.
இந்த இளம் யோகா புயல் பெண் நிகாரிகா மையம் கொண்டிருக்கும் இடம் நங்கநல்லூர், செதுக்கிளை முகம், மெல்லிய மின்னலை ஒளித்து வைத்திருக்கும் உதடுகள் சிரிக்கும்போதெல்லாம் வெளிச்சம் படபடக்கும் கண்களில் எட்டிப்பார்க்கும் தன்னம்பிக்கை, மூங்கில் போன்ற உடல்வாகு. உடம்பு பற்றிய அக்கறை, குழந்தை தனம் மாறாத குரலினிமை, பல பதக்கங்கள் வென்றாலும் படிப்படியாக தனது தனித்தன்மையை நிரூபிக்க பம்பரமாய் இயங்கி கொண்டிருப்பதை நேரில் பார்த்தால் யாருக்குமே ரப்பர் பெண்ணே நீ தானோ? என்று தான் பாடத் தோன்றும்.
சதா பேஸ் புக்கே கதியென மூழ்கி கிடக்கும் பெரும்பாலான இளைய தலைமுறையினர் மத்தியில் அபார படிப்பு, அசாத்திய நீச்சல், அற்புதமான ஜிம்னாஸ்டிக், அழகான பாலே நடனம், அமைதியான யோகா என்று அன்றாடம் சுறுசுறுப்பாய் சுழன்று வரும் நிகாரிகாவுக்கு நிஜமாகவே ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்.
நிகாரிகா என்றால் நட்சத்திரக்குவியல் என்று அர்த்தமாம். இவரது மூத்த சகோதரி ரிஷிகா மாநில அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்ற புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனை. தகப்பனார் ரவிக்குமாரோ பிரபல குதிரையேற்ற வீரர். இப்படியொரு குடும்ப சூழல் தான் நிகாரிகாவையும், வித்தியாசமான ஒரு துறையை தேர்ந்தெடுக்க செய்திருக்கிறது போல...
மூன்று வயதிலேயே நீச்சல் களத்தில் இறங்கியாயிற்று. நீச்சல் கற்றதோடு நிற்காமல் மாநில அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றிருகு“கிறார். நீச்சல் பயிற்சி உடம்பு வளைய நெளிய பெரிதும் உதவியதால் ஜிம்னாசியம் பயில ரொம்பவுமே அது அவரக்கு கை கொடுத்திருக்கிறது.
வருடக்கணக்கில் தினமும் காலை 5.30 மணிக்கு எ ழுந்து சூரிய நமஸ்õரம் மற்றும் ஆசானங்கள் முடித்த கையோடு பள்ளிக்கு விரைந்து, அங்கிருந்து தினசரி மாலை 3 மணி முதல் 8 மணி வரை கிருஷ்ணமூர்õத்தி யோகா சென்டரில் யோகா பயிற்சியை மேற்கொண்டு வீது திரும்பி, ஹோம் ஒர்க்ஸ் முடித்த, பின் தூங்கி முன் எழுந்து மீண்டும் சிம்பிள் யோகா, பேக் யோகா, யோக டான்ஸ், ஆசனாஸ் என வளைய வந்திருக்கிறார்.
யோகாவை முதலில் விளையாட்டாக ஸ்கூல் அளவில் போதட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற உற்சாகத்தில் மாவட்ட அளவில், மாநில அளவில் , பின்னர் நேஷனல் யோகா, சேம்பியன்ஷிப் என தேசிய அளவில் அதை தொடர்ந்து ஆசிய அளவிலான 9 நாடுகள் கலந்து கொண்ட தாய்லாந்தில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பாக சாம்பியன்ஷிப் வென்று, அதன் பின் தென்அமெரிக்காவில் உள்ள உருகுவேயில் சர்வதேச யோகா கோப்பை சேம்பியன்ஷிப் போட்டிகளில் 7 நாடுகளை சார்ந்த 15 யோகா வீரர்களை எதிரö காண்டு பதக்கம் வென்ற முதல் தமிழ் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.
இந்தியா சார்பாக என் பெயரை அறிவித்தபோதெல்லாம் அரங்கத்தில் ஒருவித அமைதியை ஒவ்வொரு முறையும் என்னால் உணர முடிந்தது.ங காரணம் உலகத்துக்கே யோகா வை அறிமுகப்படுத்திய நாடு நம் நாடு என்பது மட்டுமல்ல, உலகப்புகழ் பெற்றி யோகா குருக்கள் பலரை உலகத்துக்கு தந்த நாடு இந்தியா என்பதால் தான்.
தங்கமங்கை நிகாரிகாவின் ஆழ்ந்த நம்பிக்கை, விடாமுயற்சி, மனிதாபிமானம் மற்றும் கலைமகளின் அருள் அவரது கனவை நினைவாக்கும் என்தென்னவோ நிஜம்.

- சர்ச்சில் பாண்டியன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X