கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
00:00

கேள்வி: ட்ரேஸ் ரூட் (Traceroute) என்பது இணைய இணைப்பில் எந்த சாதனத்தைக் குறிக்கிறது? ரௌட்டரையா அல்லது அதன் இணைப்பில் இயங்கும் வேறு டிஜிட்டல் சாதனைத்தையா?
ஏ. ஆகாஷ் குமார், சென்னை.
பதில்:
Traceroute ஒரு சாதனம் அல்ல. இணைய இணைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு டூல். நெட்வொர்க் இயங்கும் தன்மை, அது குறித்த தகவல்களை, இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். இதன் பெயர் சொல்வது போல, இணைய இணைப்பில் டேட்டா பாக்கெட்கள் மேற்கொள்ளும் பயணம் குறித்து இது கண்டறிந்து நமக்கு தகவல்களாகக் கொடுக்கும். இந்த கட்டளை எந்த கம்ப்யூட்டரிலிருந்து கொடுக்கப்படுகிறதோ, அதிலிருந்து இணைப்பிற்கு அது இலக்கு வைக்கும் கம்ப்யூட்டர் வரையிலான டிஜிட்டல் பாதையில் ஏற்படும் பயண விபரங்களை இது தரும். தகவல் பாக்கெட்கள் பயணிக்கையில், ஒவ்வொரு நிலையிலும் அது செல்லும் தூரம், நெட்வொர்க் பயணத்தில் சந்திக்கும் வெவ்வேறு சாதனங்கள் ஆகியன இதன் மூலம் அறியப்படும். Ping கட்டளை மூலம் பயன்படுத்தப்படும் டூல், இதே போன்ற தகவல்களைத் தந்தாலும், இணைய இணைப்பின் மொத்த தூரத்தினை அறிவிக்கும் பணியோடு அது நின்றுவிடுகிறது. இரண்டு டூல்களும், நெட்வொர்க்கில் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் அணுகப்படுகிறதா அல்லது இணைப்பில் வருமா என்பதனை அறிவித்தாலும், ட்ரேஸ் ரூட் டூல், இணைப்பு கேட்கும் கம்ப்யூட்டரிலிருந்து, இணைப்பு நாடும் கம்ப்யூட்டர் வரையிலான பாதையில், எந்த இடத்தில் இணைப்பு வேகம் குறைவாக உள்ளது அல்லது இணைப்பு ஏற்படுத்த முடியாமல் உள்ளது என்று காட்டும்.

கேள்வி: நான் பயன்படுத்தும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் ஆன் ஸ்கிரீன் கீ போர்டில், நியுமெரிக் கீ போர்டு தனியே இல்லை. எண்களை அதிகம் பயன்படுத்துவதால், எண்களுக்கான நியூமெரிக் கீ போர்டு கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
சா. வெண்மதி, புதுச்சேரி.
பதில்:
நீங்கள் கூறுவது சரியே. விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் விர்ச்சுவல் ஆன் ஸ்கிரீன் கீ போர்டில் எழுத்துக்களுக்கு மேலே ஸ்பெஷல் கேரக்டருடன் இணைந்த எண்கள் கீ போர்டு மட்டுமே தரப்படுகிறது. இதற்குக் காரணம், குறைவான பிக்ஸெல்களுடன் கீ போர்டு காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி 28, 30 , 10 போன்ற எண்கள் அமைப்பது சற்று நேரம் எடுக்கும் செயல்பாடாக அமைகிறது.
நீங்கள் விரும்பும் வகையில், தனியாக கீ போர்ட் கொண்ட ஆன் ஸ்கிரீன் கீ போர்டினை நாம் அமைக்கலாம். கீழே தரப்பட்டுள்ளபடி செயல்படவும்.
1. “OnScreen Keyboard”ல், வலது பக்கம் உள்ள “Options” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இது “PrtScn” என்ற கீக்குக் கீழாக இருக்கும்.
2. இங்கு ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Turn on numeric key pad” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர், ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். அடுத்து கிடைக்கும் விர்ச்சுவல் கீ போர்டில், “NumLock” பட்டனை அழுத்தி, எண்களுக்கான கீ பேடினைப் பெறலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டம் பதிந்தவர், கேப்ஸ் லாக், நம் லாக் அழுத்துகையில் ஒலி ஏற்படும் வகையில் அமைத்துவிட்டார். இது வசதியாக இருந்தாலும், இந்த ஒலி முன்பு போல் இல்லாமல், மிகவும் சத்தமாக இருப்பதால், இதனை நீக்க விரும்புகிறேன். எப்படி செட் செய்வது?
என். ஸ்ரீராம் ஜெகதீஷ், மதுரை.
பதில்:
நீங்கள் குறிப்பிடுவது சரியே. இந்த கீகளை அழுத்துகையில் ஒலி ஒலிக்கும் படி செய்தால், கிடைக்கும் ஒலி, ஏற்கனவே இருந்த சிஸ்டங்கள் தந்த ஒலியைக் காட்டிலும் சற்று வித்தியாசமாகவும் உரக்கவும் உள்ளது. இவற்றைத் தேவை இல்லை எனில், நீக்கிவிடலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட்டிங்ஸ் ஏற்படுத்தவும்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் “Accessories”, “Ease of Access”, “Ease of Access Center” எனச் சென்று தேர்ந்தெடுக்கவும்.
2. “Ease of Access Center” என்ற விண்டோ காட்சி அளிக்கையில், கீழாகச் சென்று, “Make it easier to focus on tasks” என்பதில் கிளிக் செய்திடவும்.
3.இதில் கீழாகச் சென்று, “Turn on Toggle Keys” என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. அடுத்து மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும்.
இனி டாகிள் கீகளை (நம் லாக், கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக்) அழுத்தும் வேளைகளில் சத்தம் எதுவும் ஏற்படாது.

கேள்வி: எனக்கு அடிக்கடி சில ஆங்கிலச் சொற்களுக்கு பொருள் தேவைப்படுகிறது. நல்ல ஆன்லைன் டிக்ஷனரி ஒன்றைச் சொல்லவும். அதில் அனைத்து சொற்களுக்கும் பொருள் இருக்க வேண்டும்.
கா.கலைச் செல்வி, விருதுநகர்.
பதில்:
அடிக்கடி சொல்லுக்குப் பொருள் தேடும் நீங்கள் ஒவ்வொரு இணைய தள அகராதியாகச் செல்ல வேண்டாம். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் அனைத்து டிக்ஷனரிகளும் தரும் பொருள் வேண்டும் என்றால், கூகுள் செல்லலாம். கூகுள் சர்ச் பாக்ஸில் define:WORD என்ற பார்மட்டில் அந்த சொல்லை டைப் செய்திடவும். இதில் WORD என்ற இடத்தில் நீங்கள் பொருள் தேடும் சொல்லை டைப் செய்திட வேண்டும். உடன் கூகுள் ஆன்லைனில் உள்ள அனைத்து டிக்ஷனரிகளிலும் இந்த சொல்லுக்குப் பொருள் தேடி வரிசையாகத் தரும். இதனால், உங்கள் அலைச்சல் மிச்சமாகும்.

கேள்வி: இன்டர்நெட் இணைப்பு தரும் பல நிறுவனங்கள், தாங்கள் மிக வேகமான இணைப்பைத் தருவதாக உறுதி மொழி தருகின்றனர். உண்மையான வேகம் என்னவென்று நமக்குச் சொல்லும் தர்ட் பார்ட்டி புரோகிராம் ஏதேனும் உள்ளதா?
சி.ஆர். ஜெயமோகன், கம்பம்.
பதில்:
புரோகிராம் வேண்டாம் ஜெயமோகன். இணைய இணைப்பினைப் பெற்றவுடன், நீங்கள் கேட்டபடி இணைய இணைப்பினைத் துல்லியமாக அறிவிக்கும் தளம் ஒன்றுக்குச் சென்று, நீங்கள் விரும்பிய தகவலைப் பெறலாம். http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்து காட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.

கேள்வி: இணையத்திலிருந்து எப்போதும், தேவையான தளங்களிலிருந்து, டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்து, வேர்ட் பைலில் காப்பி செய்கிறேன். காப்பி செய்யப்படும் டெக்ஸ்ட், ஏற்கனவே உள்ள வரிகளின் ஸ்டைலைப் பின்பற்றாமல், மிகவும் சிறியதாக அமைகிறது. இதனை எப்படி மாற்றி அமைக்கலாம்?
- சி.ஆர். மௌலி, கோவை.
பதில்:
நல்ல கேள்வி. டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்தவுடன், டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தைக் கவனித்தால், மிகச் சிறிய அளவில் ஒரு ஐகான் கிடைக்கும். டெக்ஸ்ட் வேர்ட் பைலில் ஒட்டியவுடனேயே இதனைக் காண வேண்டும். இதில் கிளிக் செய்தால், சிறிய பாப் அப் கட்டம் கிடைக்கும். அதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவை Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only ஆகியவை ஆகும். உங்கள் விருப்பம் நிறைவேற இரண்டாவது ஆப்ஷனான Match destination Formatting என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட் உடனே, ஏற்கனவே இருக்கும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும்.

கேள்வி: சில நாட்களாக என் கம்ப்யூட்டரில் “A script on this page is causing IE to run slowly. If it continues to run, your computer might become unresponsive” என்று ஒரு மெசேஜ் கிடைக்கிறது. இதனை எப்படி நான் சரி செய்திட முடியும்?
என்.செல்வம், திருப்பூர்.
பதில்:
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் ஆகிய ஒன்றில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவை இயங்கு வதில் தாமதம் ஏற்பட்டாலோ இந்த எர்ரர் மெசேஜ் கிடைக்கும். ஸ்கிரிப்ட் இயங்க அதிக நேரம் எடுத்துக் கொள்கையில், உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், “என்ன நீங்கள் காத்திருக்கிறீர்களா? அல்லது இதனை நிறுத்தி விடலாமா?” எனக் கேட்கிறது. இதற்கான தீர்வினை மைக்ரோசாப்ட் நிறுவனம் http://support.microsoft.com/kb/175500 என்ற முகவரியில் உள்ள தளத்தில் தருகிறது. இந்த தளம் சென்று Microsoft Fix it 50403 என்ற ஐகானில் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸ் தரும் வழிகள் படி சென்றால், இந்த பிரச்னையைத் தீர்க்கலாம். பிரச்னை உள்ள கம்ப்யூட்டரில் இந்த தீர்வினைப் பார்க்கவில்லை என்றால், தீர்வினை ஒரு சிடி அல்லது ப்ளாஷ் ட்ரைவில் பதிந்து, பின்னர், அதனை பிரச்னைக்குரிய கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Balasubramanian - Karaikudi,இந்தியா
23-ஆக-201309:26:58 IST Report Abuse
Muthu Balasubramanian நான் இப்பொழுது ஆப்பிள் மாக்புக் ப்ரோ பயன்படுத்தி வருகிறான்.இது பற்றிய செய்திகளை தங்கள் பக்கிதுகொள்ளலாம்.கம்ப்யூட்டர் மலரில் விண்டோஸ் பற்றிய செய்திகள் மட்டும் பகிர்துகொள்ளபடுகிறது,ஆப்பிள் லேப்டாப் பற்றிய பயன்பாடுகள் மற்றும் தகவல்களை தரலாம் என நினைக்கிறேன். இதை எனது நண்பர்களும் ஆசைபடுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Ravikumar Solaiappan - Sankarankovil,இந்தியா
22-ஆக-201319:42:41 IST Report Abuse
Ravikumar Solaiappan எனது லேப்டாப் வாங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்தன. தற்போது பேட்டரி மாற்றி அமைக்க வார்னிங் தருகிறது. லேப்டாப் செட்டிங் தவறுதலாக இருக்குமோ என எண்ணுகிறேன். செட்டிங் சரி செய்து பார்த்தும் மாற்றி அமைக்க முடியவில்லை. என்ன செய்வது தயவு செய்து விளக்கம் தரவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X