கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2013
00:00

கேள்வி: தகவல் தொடர்பு சாதனங்களில், ஹாப் ட்யூப்லெக்ஸ் (Halfduplex) என்று எதனைக் குறிப்பிடுகின்றனர். ஏன் இந்தப் பெயர் வந்தது?
சி.கிருஷ்ண குமார், சென்னை.
பதில்:
ஏதேனும் ஒரு மீடியா சாதனம், ஒரே நேரத்தில் இரு பக்கமும் தகவல்களை அனுப்ப முடியாமல் வடிவமைக்கப் பட்டிருந்தால், அவை ஹாப் ட்யூப்லெக்ஸ் என அழைக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, வாக்கி டாக்கி (Walkietalkie) புஷ் டு டாக் (pushtotalk) சாதனங்களைக் கூறலாம். இவற்றில் ஒருவர் பேசுகையில், அவர் முடிக்கும் வரை அடுத்தவர் காத்திருக்க வேண்டும். முடித்த பின்னரே, இன்னொரு முனையிலிருந்து அடுத்தவர் பேச முடியும்.

கேள்வி: என் பழைய கம்ப்யூட்டரில், என் பேத்தியின் படத்தினை ஸ்கிரீன் சேவராகப் பயன்படுத்தினேன். புதியதாக நான் வாங்கியுள்ள, எச்.பி. விண்டோஸ் 8 கம்ப்யூட்டர், இந்த போட்டோ ஸ்கிரீன் சேவரை அனுமதிக்குமா? எனத் தெரியவில்லை. கூகுள் தளத் தேடலிலும் இதற்கான விடை தெரியவில்லை. விளக்கம் தரவும்.
கா. சுரேஷ் தம்பி, திருப்பூர்.
பதில்:
உங்கள் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில், போட்டோ ஸ்கிரீன் சேவரை அமைக்கும் வழி குறித்துப் பார்க்கலாம்.
1.உங்களுடைய டெஸ்க்டாப் திரையில், காலி இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில் “Personalize” என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது Personalization என்ற விண்டோ கிடைக்கும். இதன் கீழாக வலது புறத்தில், “Screen Saver” என்பதில் கிளிக் செய்திடவும்.
3. ஸ்கிரீன் சேவர் விண்டோவில், கீழ் விரி மெனு மீது கிளிக் செய்திடவும். இதில் “Photos” என்று இருப்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து, விண்டோவின் கீழாக உள்ள ஓகே பட்டனில் கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். இனி, போட்டோவினை ஸ்கிரீன் சேவராக அமைக்கலாம்.

கேள்வி: என்னுடைய புதிய விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில், ஆபீஸ் 2007 அல்லது ஆபீஸ் 2010 , இவற்றில் எதனை நிறுவலாம்? எனக்கு ஆபீஸ் 2013 இன்ஸ்டால் செய்திட ஆசை. ஆனால், இதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்று தெரியவில்லை. விரிவான ஆலோசனையும் அறிவுரையும் தரவும்.
என். கிருஷ்ணகாந்த், மதுரை.
பதில்:
ஆலோசனை மற்றும் அறிவுரை எல்லாம் இல்லை. தகவல்களைத் தருகிறேன். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 நன்றாக செயல்படும். எந்தவிதப் பிரச்னையுமின்றி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். நீங்கள் விருப்பப்படும், புதியதாக வந்திருக்கும் ஆபீஸ் 2013 குறித்து சில தகவல்களைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
ஆபீஸ் 2013 சாப்ட்வேர் புரோகிராம், இரண்டு வகைகளில் கிடைக்கிறது. முதலாவதாக, சப்ஸ்கிரிப்ஷன் (சந்தா) கட்டி வாங்குவது. ஓராண்டிற்கு சப்ஸ்கிரிப்ஷன் செலுத்தி, இந்த தொகுப்பினை, ஐந்து சிஸ்டங்களில் (மேக் மற்றும் டேப்ளட் பிசி உட்பட) பயன்படுத்தலாம். நீங்கள் இதில் உருவாக்கும் பைல்கள் அனைத்தும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்யப்படும். எனவே, நீங்கள் எந்த ஊரில், எந்த கம்ப்யூட்டரில் வேலை செய்தாலும், உங்கள் டாகுமெண்ட்களைப் பெற்று, எடிட் செய்திடலாம். மாற்றி அமைக்கலாம். புதியதாக உருவாக்கலாம். ஓரிடத்தில் டாகுமெண்ட் ஒன்றைப் பாதி அளவில் உருவாக்கிவிட்டு, இன்னொரு ஊரில் சென்று, அதனை நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பெற்று, முழுமையாக்கலாம். பின்னர், இன்னொரு ஊரில் சென்று, முழுமையான டாகுமெண்ட்டினைப் பெற்று வழங்கலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்னொரு வகையிலும், ஆபீஸ் 2013 ஐ விற்பனை செய்கிறது. தனிப்பட்ட கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்து இயக்கும் வகையில் இதனைப் பெறலாம். ஆனால், ஓராண்டு முடிந்தவுடன், இதற்கான உரிமம் காலாவதியாகிவிடும். இதனை ஒரே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். தொடர்ந்து இதனை அப்டேட் செய்திட முடியாது. இதற்கான கட்டணம் எவ்வளவு என்பதனை, உங்கள் ஊரில், அல்லது ஊருக்கு அருகே உள்ள ஊரில் இதனை விற்பனை செய்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
இந்த இரண்டு வகைகளிலும், ஆபீஸ் தொகுப்பின் விலை உங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது Open Office. இதனை என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும். ஓப்பன் சோர்ஸ் வகை புரோகிராம் இது. ஓப்பன் சோர்ஸ் என்பது, தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட புரோகிராம் ஆகும். எந்த ஒரு தனிமனிதரும் இதற்கு உரிமையாளர் இல்லை. ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில், மைக்ரோசாப்ட் உட்பட, பிற ஆபீஸ் தொகுப்பில் உருவான பைல்களைப் படிக்க முடியும். அதே போல, ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் உருவான டாகுமெண்ட்களை, மைக்ரோசாப்ட் ஆபீஸ் புரோகிராமில் படிக்க இயலும்.

கேள்வி: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கியுள்ளேன். இதில் டச் ஸ்கிரீன் இல்லை. ஆனல், பிரச்னை என்னவென்றால், கம்ப்யூட்டரை எப்படி ஷட் டவுண் அல்லது ஆப் செய்வதெனத் தெரியவில்லை. தயவு கூர்ந்து வழி காட்டவும். முன்பு பயன்படுத்திய விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனுவில், சிஸ்டம் ஷட் டவுண் செய்திட ஆப்ஷன் தரப்பட்டது. அதே போல, இதில் செட் செய்திட முடியுமா?
- என். கிஷோர், கோவை.
பதில்
: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Power options பட்டன் சார்ம்ஸ் பாரில் (Charms Bar) உள்ள செட்டிங்ஸ் (Settings) உள்ளாக அமைந்துள்ளது. இதனை உங்கள் மவுஸினை, திரையின் மேல் அல்லது கீழ் வலது மூலையில் கொண்டு சென்று பெறலாம். செட்டிங்ஸ் பிரிவினைத் திறக்க, விண்டோஸ் லோகோ “i” கீயினை கீயுடன் இணைத்து இயக்கலாம். இங்கு உங்களுக்கு சிஸ்டம் முடித்து வைக்க ஆப்ஷன்கள் தரப்படும்.
அடுத்து, உங்கள் விண்டோஸ் 7 விருப்பத்திற்கு வருவோம். அதில் கிடைத்தது போல, ஸ்டார்ட் மெனு வேண்டும் எனில், இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம். www.classicshell.net என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் Classic Shell என்ற புரோகிராம் அல்லது www.areaguard.com என்ற முகவரியில் உள்ள StartW8 என்ற புரோகிராம் ஸ்டார்ட் மெனுவினைத் தரும்.
இன்னொரு வழியும் உள்ளது. கம்ப்யூட்டரில் உள்ள பவர் பட்டனைச் சிறிது நேரம் , ஐந்து விநாடிகள், அழுத்தியவாறு இருந்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆப் ஆகும். ஆனால், அதற்கு முன்னால், விண்டோஸ் எக்ஸ்புளோரர் உட்பட, அனைத்து புரோகிராம்களையும் சேவ் செய்து மூடி முடித்து வைத்திருக்க வேண்டும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில், ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் போட்டோ பைல்கள் சேர்ந்துவிட்டன. இவற்றில் பல, சில போட்டோக்களின் நகல்களே. இவற்றை எளிய முறையில், விரைவாக எப்படிக் கண்டறிந்து நீக்குவது?
என்.கே. கலாதரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்:
பொதுவாக டூப்ளிகேட் பைல்களை நீக்க, இணையத்தில் இலவசமாகப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. நான் பயன்படுத்திய வகையில், CloneSpy மற்றும் Duplicate Commander ஆகிய புரோகிராம்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், இவை பைல்களின் பெயர்கள், ஒரே மாதிரியாக இருந்தால், அவற்றின் அடிப்படையில், நகல்களைக் கண்டறிந்து காட்டுகின்றன. டூப்ளிகேட் போட்டோக்களைக் கண்டறிய VisiPics என்று ஒரு புரோகிராம் கிடைக்கிறது. இது பைல் பெயர்களை மட்டும் வைத்து, நகல்களைக் கண்டறிவதில்லை. பைல்களில் உள்ள போட்டோக்களின் தன்மையைக் கொண்டும் கண்டறிகிறது.

கேள்வி: பேஸ்புக்கில் என் தோழிகள் சிலர் எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை. இது எதனால்? அனுப்பப்பட்ட மெசேஜ்கள் எங்கு சென்று தங்கும்?
கா. ரேவதி சிதம்பரம், பள்ளத்தூர்.
பதில்:
பேஸ்புக், “secret” inbox என்ற ஒன்றை இணைத்துள்ளது. அழைப்புகள் (invite) மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றைக் கையாள்வதற்காக இது ஏற்படுத்தப்பட்டது. ஆனால், வழக்கமான மெசேஜ்களும், இதில் சென்று அடைகின்றன என்று சொல்லப்படுகிறது. ஒரு வாசகர், தனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த மெசேஜ் ஒன்று இது போன்று இருந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருந்தார். உங்களுடைய பேஸ்புக் ப்ரபைல் பக்கத்தில், மேலாக உள்ள நீளக் கட்டத்தில், மெசேஜஸ் ஐகான் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்திடுங்கள். இது சித்திரக் கதைகளில் உள்ள, வசனங்கள் அடங்கிய குமிழி போல இருக்கும். இன்பாக்ஸ் அடுத்து, “Other” என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் வரவில்லை என்று நினைக்கும், உங்களுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ்கள், அங்கு தங்கியிருக்கலாம். இந்த மெசேஜ்களுக்குப் பதில் அனுப்பினால், அடுத்த அவரிடமிருந்து வரும் மெசேஜ்கள், வழக்கமான பெட்டியில் வந்து இடம் கொள்ளும்.

கேள்வி: நான் என் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடில் (Sleep Mode) போட்டுவிட்டுச் செல்கையில், வேறு யாரேனும் அதனைப் பயன்படுத்த முடியுமா?
ஆ. சுகதேவன், திருவண்ணாமலை.
பதில்
: நிச்சயமாக. அவர் கம்ப்யூட்டரைத் தானே நேரடியாகச் சென்று இயக்கினால், கம்ப்யூட்டர் அவர் வசதிப்படி இயங்கத்தான் செய்யும். அதனால் தான், கம்ப்யூட்டரி ஸ்லீப் மோடில் விட்டுவிட்டுச் செல்கையில், அதனை டிஜிட்டல் லாக் செய்திடும்படி கூறப்படுகிறது. Start>>Control Panel எனச் செல்லவும். இந்த சிஸ்டம் லாக் “System and Security” அல்லது “System and Maintenance”ல் கிடைக்கும். இதில் சிஸ்டம் மீண்டும் செயல்படத் தொடங்குகையில், பாஸ்வேர்ட் கொடுப்பதனைக் கட்டாயமாக்கும் ஆப்ஷன் ஒன்று கிடைக்கும். அதனை இயக்கி வைக்க வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vandavasi Raja De Singu - Vandavasi,இந்தியா
03-செப்-201323:15:04 IST Report Abuse
Vandavasi Raja De Singu விண்டோஸ் 8 ல் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஸ்டார்ட் மெனு கேட்கும் நண்பர்களே உங்களுக்கு இலவச ஸ்டார்ட் மெனு... Classic Start 8 கிடைக்கும் தளம் ://www.classicstart8.com/ மேலும் ஒரு மென்பொருள் Classic Start Menu கிடைக்கும் தளம் ://www.classicstartmenu.com/ ஒரே குறைபாடு சிலசமயம் காணாமல் போயி விடும். எனவே பேக் அப் காப்பி வைத்திருங்கள் மீண்டும் நிறுவ வேண்டும் என்றால் உதவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X