அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

4 வயது மேயர்!
அமெரிக்காவில் நான்கு வயதேயான சிறுவன் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு திறமையாக செயல்பட்டு அசத்துகிறான்.
அவனது பெயர் ராபர்ட் துப்ட்ஸ். மினி சோட்டா நகருக்கு அருகேயுள்ள டோர்செட் என்ற ஊர் தான் அவனுக்கு இந்த பதவியை கொடுத்து கவுரவித்துள்ளது.
மேயர் ராபர்ட் இன்னும் மழலையர் பள்ளிப் படிப்பை கூட நிறைவு செய்ய வில்லை. பிறகு எப்படி அவன் மேயர் ஆனான்? என்றால் குலுக்கல் முறை தேர்வு அதிர்ஷ்டத்தில் இந்த பதவி கிடைத்திருக்கிறது. இதில் மற்றொரு விசேஷ தகவல், இந்த ஊரின் மொத்த மக்கள் தொகை 22 பேர் மட்டுமே. மேயர் ராபர்ட் பேச்சாற்றல் மிக்கவன்; அவனிடம் கேள்வி கேட்டு யாரும் மீள முடியாது. பதில் சரளமாக வரும். கையில் ஸ்டிரிக் (கைத்தடி) பிடித்துக்கொண்டு ஊரின் வீதிகளில் நடந்து சென்று குறைபாடுகளை அறிகிறான்.
தூண்டிலில் இரையை எப்படி வைத்து மீன் பிடிக்க வேண்டும் என்றும் யோசனை கூறுகிறான். அவன் திறமையை ஊர்மக்கள் பாராட்டுகின்றனர்.

ஐ லவ் யூ ஹாட் வாட்டர்!
எளிதாகக் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவ தில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான் வெந்நீர். தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரிய மில்லை. ஆனால், வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம். அவை இதோ...
காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
ஏதாவது எண்ணெய் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சுகரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள் சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய் விடும். தொடர்ந்து வெந்நீர் குடித்தால், உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.
மூக்கு அடைப்பால் அவதிப்படுகிறீர் களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர் தாஞ்சன் போட்டு, ஆவி பிடித்தால் மூக்கு அடைப்பு தலைப்பாரம் அகன்று விடும்.
உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும். மேலும், உடல் வலிக்கும் போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போது வெந்நீர் தான் கை கொடுக்கும் மருந்து.
பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள்.
காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு பாதமும் சுத்தமாகி விடும்.
வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள், வாரத்துக்கு ஒருமுறை யாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று கைகள் ஆரோக்கியமாக இருக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே ஜில்லென்று ஐஸ் வாட்டர் பருகுவதை விட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.
ஈஸ்னோபீலியா, ஆஸ்துமா போன்ற வற்றால் அவதிப்படுபவர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது.
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர் களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும்.
இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சுகமாக வாழுங்க!

தொப்பியின் வரலாறு!
தொப்பியை மனிதன் 600 ஆண்டு களுக்கு முன்பே அணிந்திருந்தான். எகிப்து, கிரேக்கம், ரோம் நகரங்களில் தொப்பி அணிவது அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது.
கி.பி.1300 முதல் மனிதன் தொப்பிகளை அலங்காரம் செய்து அணிந்தான். மதம், அரசியல் கட்சிக்கு அடையாளமாக பல்வேறு விதமான மாதிரிகளில் தொப்பிகள் தயாரிக்கப்பட்டன.
கி.பி.1300 முதல் 1400 வரை மேற்கு ஐரோப்பிய பெண்கள், டர்பன் போன்ற தொப்பிகளை அணிந்திருந்தனர்.
அரேபியர்கள் தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ப அணிந்த டர்பனில் சில உயர்ந்த நகை களையும் பொருத்திக் கொண்டனர். சீனாவில் சூரியன், சந்திரன் போன்ற சின்னங்களை தொப்பிகளில் பொருத்திக் கொள்ளலாம்.
உலகில் முதல் தொப்பித் தொழிற்சாலை 1851ம் ஆண்டு அமெரிக்காவில் டான்பர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
பெண்களுக்கான தொப்பிகள் மட்டும் தயாரிக்கும் தொழிற்சாலை 1851ல் நியூயார்க் நகரில் தொடங்கப்பட்டது. பெண்களுக்கான மணிவடிவில் தொங்கும் தொப்பிகள் 1920ல் தயாரிக்கப்பட்டு பிரபலமாயின. மேலே விளிம்புள்ள கவ்பாய் தொப்பி 1930ல் அறிமுகமானது.
அதற்கடுத்த 30 வருடங்களில் தொப்பிகளை அழகு செய்து விதவிதமாக அணியும் பழக்கம் ஆரம்பமானது.
பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளை விட அமெரிக்காவில் தான் ஆண்களும், பெண்களும் அதிகமாக 1960ல் தொப்பி அணிய ஆரம்பித்தனர். 17ம் நூற்றாண்டு முதல் ராணுவத்தில் தொப்பி அணியும் முறை ஆரம்பமானது.
வைக்கோல், ஓலை ஆகியவற்றால் பின்னிய தொப்பிகளுக்கு எப்போதும் கிராக்கி உண்டு. இந்த வகையான தொப்பி கள் அந்த காலத்தில் ஏற்றுமதியாகி உள்ளன.
ஜப்பானில் விருந்தினரை பார்க்க அவரது வீட்டுக்குள் ஒருவர் நுழைந்ததும், தொப்பியை எடுத்து தலையை குனிந்து வணங்குவர்.
அதற்கு காரணம், தொப்பிக்குள்ளோ, கைகளுக்குள்ளோ ஆயுதங்கள் ஏதுமில்லை. நான் உங்கள் நண்பன் என்பதை உணர்த்துவதற்குத்தான் இப்படி செய்தனர்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X