கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2013
00:00

கேள்வி: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பாதுகாப்பிற்கெனத் தரப்பட்டிருக்கும், விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) புரோகிராம், கம்ப்யூட்டரை அனைத்து வகையான மால்வேர் மற்றும் வைரஸ்களிலிருந்து காப்பாற்றுமா?
நி. சேர்மக்கனி, விருதுநகர்.
பதில்:
சரியான கேள்வி. சந்தேகம் தான் என்பதுவே என் பதில். பல நிறுவனங்கள் நடத்திய சோதனையில், விண்டோஸ் டிபண்டர், அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு தர இயலவில்லை. ஆனால், கம்ப்யூட்டர் விற்பனை செய்திடும் நிறுவனங்கள், இப்போதெல்லாம், சில இலவச அல்லது குறிப்பிட்ட காலம் மட்டுமே இலவசமாக இயங்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பதிந்தே தருகின்றனர். இவற்றைக் காட்டிலும் விண்டோஸ் டிபண்டர் சிறப்பாகவே செயல்படுகிறது. இவற்றைக் காட்டிலும், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் அவாஸ்ட் அல்லது ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில், பி.டி.எப். பைல்கள், அடோப் ரீடரில் மட்டுமே திறக்கும்படி, அதனை மாறா நிலையில் வைத்திட எப்படி செட் செய்திட வேண்டும்? என் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 2007.
ஆ. தனசிங், பாளையங் கோட்டை.
பதில்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பைல்களை குறிப்பிட்ட புரோகிராமுடன் மட்டுமே திறக்கும் வகையில் அமைத்திடப் பல வழிகள் உள்ளன. உங்களுடைய கம்ப்யூட்டரில், அடோப் ரீடரை அமைக்க முடியவில்லை எனில், அதனை அன் இன்ஸ்டால் செய்து, நீக்கிப் பின்னர் மீண்டும் இன்ஸ்டால் செய்வதே நல்லது. நீங்கள் ஏற்கனவே இதனை மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது என்று பார்ப்போம்.
Start மெனு திறந்து, அதில் கிடைக்கும் மெனுவில் வலது பக்கம் உள்ள “Default Programs” என்பதில் கிளிக் செய்திடவும்.அங்கு “Associate a File Type or Protocol with a Program” என்று இருக்கும் லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் பைல் பெயர் பட்டியலில், “pdf” என்று இருப்பதைத் தேர்ந்தெடுத்து ஹைலைட் செய்திடவும். தொடர்ந்து விண்டோவின் மெல் வலது மூலையில் உள்ள “Change Program” என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Browse என்பதில் கிளிக் செய்து, “Adobe Reader” என்று உள்ள புரோகிராமின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து பைல் தொடர்புக்கு “pdfxml” என்பதனையும் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “Close” பட்டனைக் கிளிக் செய்திடவும். இனி, எந்த பிடிஎப் பைல் பெயர் மீது கிளிக் செய்தாலும், அது அடோப் ரீடரால் திறக்கப்படும்.
இது நீங்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பி.டி.எப். பைலின் மீதாவது, ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், “Open With” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். மீண்டும் “Browse” என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் புரோகிராம்பட்டியலில் Adobe Reader என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் கீழாக, “Always use the selected program to open this file” என்று இருப்பதற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருப்பதனை உறுதிப்படுத்தவும். அல்லது, ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்தால், நீங்கள் பி.டி.எப். பைல்களைத் திறக்க, அடோப் ரீடர் புரோகிராமினை மட்டும் திறக்கும்படி, கம்ப்யூட்டருக்கு கட்டளை கொடுத்துள்ளீர்கள் என்றாகிறது. இனி, பி.டி.எப். பைல்களை, அடோப் ரீடர், தானாகவே திறக்கும்.
இதற்கும் திறக்கவில்லை என்றால், நீங்கள் கம்ப்யூட்டரில் பதிந்த அடோப் ரீடர் புரோகிராமில் ஏதேனும் பிழை இருக்கலாம். பி.டி.எப். பைல்களைத் திறந்து படிக்க உதவும், மற்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடலாம். இந்த வகையில் உங்களுக்கு PDF XChange Viewer PDF XChange Viewer (http://www.trackersoftware.com/product/ pdfxchangeviewer), Fox It (http://www.foxitsoftware.com/), அல்லது Sumatra PDF (http://blog. kowalczyk.info/software/sumatrapdf/downloadfreepdfviewer.html), ஆகிய புரோகிராம்கள் உதவிடலாம்.

கேள்வி: என் மவுஸ் பாய்ண்ட்டரை மாற்றி, வேறு ஒரு வகை மவுஸ் பாய்ண்ட்டரை அமைக்க விரும்புகிறேன். என் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அதற்கான வழி இருப்பதாகத் தெரியவில்லை. கூகுள் மூலம் இணையத்தில் தேடி எடுத்தால், அவை மவுஸ் பாய்ண்ட்டரைப் போல் இல்லை. இதற்கென்ன வழி உள்ளது?
என். மெர்சி கிருபா ராணி, புதுச்சேரி.
பதில்
: மெர்சி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கு எளிய வழி ஒன்று உள்ளது. ஸ்டார்ட் பட்டன் அழுத்திக் கிடைக்கும் தேடல் கட்டத்தில், Mouse Pointer என டைப் செய்திடவும். கிடைக்கும் முடிவுகளில் Change how mouse pointer looks என ஒன்று இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். இதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கு சிறிய, பெரிய அளவில் நிறைய மவுஸ் பாய்ண்ட்டர்கள் இருக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். தேர்ந்தெடுத்தபின், முடிக்கையில் Apply என்பதில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில், டைல்ஸ் மற்றும் சார்ம்ஸ்க்குப் (Tiles and Charms) பதிலாக, கிளாசிக் ஸ்கிரீன் கிடைக்குமா?
என். முகமது உசேன், காரைக்கால்.
பதில்:
கிடைக்கும். மிக எளிதும் கூட. மெட்ரோ/மாடர்ன் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் (Desktop) டைலில் தட்டவும். அல்லது விண்டோஸ் கீயுடன் D கீயை அழுத்தவும். உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் டைலை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், சர்ச் பாக்ஸில், desktop என டைப் செய்து தேடவும். டெஸ்க்டாப் ஐகான், இடது பக்கம் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். திரையின் கீழாக, pin that program to the Start Screen என்று இருக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஸ்டார்ட் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் டைல் கிடைக்கும்.

கேள்வி: வயர்லெஸ் சார்ஜிங் என்பது மொபைல் போன்களுக்கு நல்லதா? இது எப்படி செயல்படுகிறது? இதற்கென தனியே பேட்டரி பயன்படுத்தப்படுகிறதா?
சி.என். கமல்நாதன், சென்னை.
பதில்:
வயர்லெஸ் சார்ஜிங் என்பது தற்போதைய மொபைல் போன்கள் சிலவற்றில், சிறப்பு தொழில் நுட்பமாக அமைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. இது Inductive Charging என்னும் வழியில் செயல்படுகிறது. பேஸ் ஸ்டேஷன் அல்லது பவர் மேட் இதற்கு அடிப்படையாகச் செயல்படும். இதிலிருந்து மிக வலுவான மின் காந்த அலைகள் உற்பத்தியாகி வெளிவரும். இதனை ஏற்கும் சாதனத்தில், இன்டக்ஷன் காயில் ஒன்று இருக்கும். இது, மின் காந்த அலைகளை, மின்சக்தியாக மாற்றி, பேட்டரியை சார்ஜ் செய்திடும். இந்த முறையை நிக்கோலா டெஸ்லா (Nikola Tesla) என்பவர் உருவாக்கினார். முன்பு கிறிஸ்டல் ரேடியோக்களில் இது பயன்பட்டது. இதில் பயன்படுத்த ஸ்பெஷல் பேட்டரிகள் தேவையில்லை. ஆனால், சாதனத்தின் உள்ளாகவே, இன்டக்ஷன் காயில் மற்றும் மாற்றித் தரும் தொழில் நுட்ப வசதியினை அமைக்க வேண்டியிருப்பதால், பேட்டரி இதற்கு வழி விடும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். மேலும், இந்த வகையில் சார்ஜ் செய்யப்படும் மின்சக்தி, நாம் வழக்கமான முறையில் சார்ஜ் செய்திடுவதைக் காட்டிலும் திறன் குறைவானதாகவே இருக்கும். இதில் ஆபத்து எதுவும் இருக்காது. ஏனென்றால், வழக்கமான மின்சாரத்துடன் எந்த இணைப்பும் மேற்கொள்ளப்படுவதில்லை.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து மாறி, விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். டெஸ்க்டாப்பிற்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்பியில், ஐகான் ஒன்றை வைத்துக் கொடுத்தனர். ஆனால்,விண்டோஸ் 7 தொகுப்பில், இந்த ஐகானை எப்படி, எங்கு அமைத்து, டாஸ்க்பாரில் கொண்டுவந்துவிடுவது எனத் தெரியவில்லை. வழி சொல்லவும்.
ஆர்.ஜாஸ்லின் மேரி, கம்பம்.
பதில்:
நல்ல கேள்வி. முதன் முதலில், நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகையில், இந்த குழப்பத்தினைச் சந்தித்தேன். இதற்குத் தனியாக ஐகான் ஒன்றை நாம் செட் செய்து, டாஸ்க் பாரில் கொண்டு வந்து விடவேண்டியதில்லை. சிஸ்டமே, டாஸ்க் பாரில் அதனை வைத்துள்ளது. திரையில், டாஸ்க் பாரில் வலது ஓரமாக இதனைக் காணலாம். சிறிய ஷேடட் கட்டமாக இது காணப்படும்.இதில் உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றாலே, Show Desktop என்று காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் கிடைக்கும். எவ்வளவு எளிதான வழி பார்த்தீர்களா!

கேள்வி: நாம் பல்வேறு வகை புரோகிராம்களைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொன்றும் அதற்கென ஷார்ட் கட் கீகளைக் கொண்டுள்ளன. அதிகம் பயன்படுத்தப்படும் புரோகிராம்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை நீங்கள் வழங்கி வருகிறீர்கள். ஒவ்வொன்றுக்கும் தேடிச் செல்லாமல், அனைத்து புரோகிராம்களின் ஷார்ட் கட் கீகளைத் தரும் தளம் ஏதேனும் உள்ளதா? அல்லது வேறு வழி உள்ளதா?
என்.நித்யவள்ளி, புதுச்சேரி.
பதில்
: நல்ல கேள்வி.அப்படி ஒரு தளம் இருந்தால், அனைவருக்கும் வசதிதான். நானும் ஒவ்வொரு புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை, கம்ப்யூட்டர் மலரில் எழுத வேண்டியதில்லை. (கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து இவைதரப்படும்.) இருப்பினும் இந்த எண்ணத்துடன், இணையத்தை உலா வந்த போது, உங்களின் வேண்டுகோள் நிறைவேறும் வகையில், இணையதளம் ஒன்றைக் காண நேர்ந்தது.இதில் அனைத்து புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தின் பெயர் keyxl. இதன் இணைய முகவரி http://www.keyxl.com/. இந்த தளத்தில் நுழைந்து, நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்பு பெற விரும்பும் புரோகிராமின் பெயரைத் தரவும். கீ பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். எம்.எஸ். ஆபீஸ் போன்ற கூட்டுத் தொகுப்பின் பெயர் கொடுத்தால், அனைத்து பதிப்புகள், அதில் இணைந்துள்ள அனைத்து வகை புரோகிராம்கள் எனப் பட்டியல் காட்டப்படும். தேவைப்பட்டதைக் கிளிக் செய்து, எடுத்துக் கொள்ளலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sentrayan - Theni,இந்தியா
14-செப்-201315:45:38 IST Report Abuse
sentrayan மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக பி ஜே பி புதிய பலத்தினை பெற்றுள்ளது.இந்தியா புதிய பாதையில் பயணிக்கும் என நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X