பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி | கலைமகள் | Kalaimagal | tamil weekly supplements
பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 செப்
2013
00:00

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்க்கை முழுதும் போராடிய பாரதியும் சத்தியமூர்த்தியும் நாடு விடுதலை பெறுவதை காணாமலே காலமாகிவிட்டார்கள். பாரதியார் மறைவுக்கு பின் அவரது தொண்டின் மகத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதில் சத்தியமூர்த்தி முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். அவருடைய சட்டசபை பேச்சுகள் இதற்கு சான்றாகின்றன.
சென்னை சட்டசபையில் 1923 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி ஆற்றிய முதல் சொற்பொழிவிலேயே பாரதியின் பெருமை பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதி என்ற ஒரு மனிதர் இருந்தார். அந்த மனிதர் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் அரசு கவிஞராக நியமனம் பெற்றிருப்பார். அவருடைய கவிதைகள் அற்புதமானவை. தேசிய உணர்ச்சியை தூண்டுபவை. திருநெல்வேலி தாலுகா போர்டு அந்த மனிதரின் பாடல்களை பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு கற்பிக்க முனைந்தபோது கனம் முதன்மந்திரி அவர்களுக்கு கடும்கோபம் வந்து விட்டது. இந்த பாடல்களின் மூலம் புரட்சி தோன்றிவிடும் என்று முதன்மந்தி ரிக்கு அச்சம் என்றார் சத்தியமூர்த்தி.

பின்னர் ஐந்தாண்டுகள் கழித்து போலீசார் பாரதியார் கவிதை நூல்களை தடை செய்து கைப்பற்றிய போது சட்டசபையில் நிகழ்ந்த ஒத்திவைப்பு பிரேரணை விவாதம் ஒன்றில் அவுர் பேசுகையில் காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியின் நாவில் கலைமகள் நாட்டுப்பற்று நடனம். அடிக்கொண்டிருந்தாளண். இந்தியாவை தவிர வேறு எந்த சுதந்திர நாட்டில் பிறந்திருந்தாலும் பாரதி அந்த நாட்டின் அரசாங்க கவியாகியிருந்திருப்பார். ஆனால் அடிமை நாடாகிய இந்தியாவில் பிறந்ததால் அவர் புதுச்சேரியில் நாடு கடத்தப்பட்டவர்போல் வாழ்ந்து மனம் நொந்து மறைய வேண்டி துர்பாக்கியம் ஏற்ப்ட்டது. இந்த மாதிரி தான் அவருக்கு முன்பும் தியாகிகளும் தேச பக்தர்களும் வாழ்ந்து மறைந்தார்கள்.
சுப்பிரமணிய பாரதியாருக்கும் அஏத கதிதான் நேர்ந்தது. சபாநாயகர் அவர்களே நான் ஒரு விஷயத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாரதி பாடல்கள் அடங்கிய எல்லா புத்தகங்களையும் நீங்கள் பறிமுதல் செய்து விடலாம். எழுத்தில் பொறிக்கப்படாத வேதங்கள் கர்ணபரம்பரையாக தென்று தொட்டு தலைமுறை தலைமுறையாக வழங்கி வருவதை போல தமிழ் உள்ள வரையிலும் தமிழன் என்று ஒருவன் உள்ளவரையிலும் பாரதியின் பாடல்கள் தமிழ் மக்களின் மதிப்பிற்குரிய சொத்தாக நிலைத்து நிற்கும் என்று முழங்கினார்.
1933 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது பாரதி தேசபக்தி பாடல்கள் மட்டுமே பாடினார் என்று நினைப்பது தவறு. அவருடைய பாடல்களில் வரலாறு பொருளியல், சமூகவியல் மற்றும் எல்லாத்துறைகளையும் பற்றிய விளக்கங்கள் உள்ளன. அவரது படைப்புகளில் காணப்படும் கருத்து செறிவு வியக்கத்தக்கது. அத்தகயை அவரது பாடல்கள் அவற்றின் பொருளமைதிக்கேற்ப இசையுடன் பாடப்பட வேண்டும். தெளிவாக பொருளுணர்ந்து பாடினால் அவை தேசிய உணர்வை விழி“பபுறசö செய்வதுடன் குழம்பிய உள்ளத்துக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அமையும் என்று சொல்லியிருக்கிறார்.
இன்னொரு சமயம் 1939 ஆம் ஆண்டு பாரதி பிறந்த நாள் விழா ஒன்றில் சத்தியமூர்த்தி உரையாற்றும்போது, தமிழகத்தில் தேசிய விழிப்புணர்வு தோன்றியதற்கு முக்கிய காரணமே பாரதியார் பாட்டுகள் தானம் என்றார். மற்றொரு நிகழ்ச்சியில் காந்தி யுகத்திற்கு நெடுங்காலம் முன்பே வாழ்ந்த பாரதி தொலைநோக்குடன் பாடி வைத்த பாடல்கள் மக்களுக்கு எக்காலத்துக்கும் ஊக்கமூட்டும் ஆற்றல் திறனுடன் உருவெடுத்துள்ளன. விடுதலை போராட்டத்தில் எவருக்கேனும் ஐயங்கள் தோன்றுமாயின் அவர் பாரதியின் பாடல்களை பயின்று தெளிவு பெற வேண்டும். அவ்வாறு பயில்வோருக்கு புதிய தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஊற்றெடுக்கும் என்று பேசினார். தம்முடைய பல பேச்சுக்களில் தம் கருத்துக்கு வலுவூட்டும் பொருட்டு மகாகவியில் பாடல் வரிககள் பலவற்றைமேற்கொள்களாகவும் சத்தியமூர்த்தி எடுத்து காட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தை சார்ந்த திருமயம் என்னும் ஊரில் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சுந்தர சாஸ்திரிகளுக்கும் சுப்புலட்சுமி அம்மாளுக்கு மைந்தராய் உதித்தவர் சத்தியமூர்த்தி.
1882 டிசம்பர் 12 ஆம் தேதிபிறந்த பாரதியாருக்கு அப்போது ஐந்து வயதுக்கு சற்றுக் குறைவாகவே இருந்தது.இருவரும் சமகாலத்தவர்களாக தூய்மையான தேசபக்தியுடன் நாட்டு விடுதலை போரில் தத்தம் பங்கை செம்மையாக ஆற்றினார். ஆனால் பாரதியாரின் நேரடித் தொண்டு அவரது அகால மறைவினால் 1921 செப்டம்பர் 11ஆம் தேதியோடு முற்றுப்பெற்று விட்டது. எனவே பல தலைவர்களை பற்றிய பாடியிருக்கும் பாரதி சத்தியமூர்த்தியை பற்றி பாடாததற்கு , சத்தியமூர்த்தியின் அரசியல் பிரவேசம் பாரதியின் மறைவுக்கு மூன்றாண்டுகள் முன்னர் தான் நிகழ்ந்திருப்பது காரணமாயிருக்க கூடும்.
சத்தியமூர்த்தி பாரதியின் மறைவுக்கு பின்னும் 22 ஆண்டுகள் வாழ்ந்து 1943 மார்ச் 28 ஆம் தேதி தமது 56 ஆவது வயதில் காலமானார். சத்தியமூர்த்தி தமது அரசியல் பணி முழுவதிலும் பாரதி பாடல்களை பொருத்தமுற பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதையும், பாரதி பாடல்களுக்கு காலங்கடந்து நிற்கும் பேராற்றல் இருப்பதைஅவர் நன்கறிந்திருந்தார் என்பதையும், பாரதியின் தத்துவங்களை பரப்புவதில் தம்மால் இயன்ற அளவு அவர் முயன்றிருக்கிறார் என்பதையும் அவரது வாழ்க்கை வரலாறு எடுத்து காட்டுகிறது.
-ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X