கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 செப்
2013
00:00

கேள்வி: அண்மையில், என் கம்ப்யூட்டரில் பிரிண்டர் ஒன்றை என் நண்பர் இணைத்து செட் செய்து கொடுத்தார். அவர் சென்ற பின்னர், என் கம்ப்யூட்டரை இயக்கிய போது, என் டாஸ்க் பார் பின்னணியும், ஸ்டார்ட் மெனுவும், வெளிறிய கிரே கலரில் உள்ளன. இது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதனை எப்படி மாற்றலாம்?
என்.சாகுல் ஹமீது, புதுச்சேரி.
பதில்:
நீங்கள் விண்டோஸ் சிஸ்டத்தின் எந்த பதிப்பு பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்லவில்லை. விண்டோஸ் 7 என எடுத்துக் கொண்டு இங்கு பதில் தருகிறேன். ஸ்டார்ட் மெனு சென்று கண்ட்ரோல் பேனல் செல்லவும். இதில் Appearance and Person என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Personali zation என்ற இன்னொரு விண்டோ திறக்கப்படும். அடுத்து உங்கள் விண்டோஸ் சிஸ்டத்தின் அடிப்படையில், Change Window Glass Colors/Change the color of your taskbar and window borders என ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது கலர் grey and opaque ஆக இருக்கும். இங்கு உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். சில சிஸ்டம் பதிப்புகளில் transparent என்றும் ஒரு ஆப்ஷன் தரப்படலாம். வண்ணம் எந்த அளவிற்கு ஆழமாக (intensity) இருக்க வேண்டும் என்பதனையும் இதில் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து இந்த மாற்றங்களை சேவ் செய்துவிட்டு வெளியேறவும். இதே போல டாஸ்க் பாருக்கும் வண்ணம் அமைக்கலாம். இவற்றை அமைத்து சேவ் செய்த பின்னர், நீங்கள் தேர்ந்தெடுத்தபடி, வண்ணங்கள் அமையும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8 பயன்படுத்தி வருகிறேன். குறிப்பிட்ட கால நேரத்திற்குப் பின்னர், சிஸ்டம் தானாக, மூடப்படும் வகையில் செட் செய்திட, இங்கு எங்கு செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
பேரா. சி.நஸ்ரீன், மதுரை.
பதில்:
நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் சென்ற பின்னர்,சிறிது நேரம் கழித்து, கம்ப்யூட்டர் தானாகத் தூங்கும் நிலைக்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறீர்கள். இதனை விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மிக எளிதாக அமைக்கலாம். சார்ம்ஸ் (Charms) பாரில், சர்ச் பாக்ஸ் பெறவும். இங்கு Settings என்பதனைத் தேர்ந்தேடுத்து, அங்கு Sleep என டைப் செய்திடவும். இனி, Change when the computer sleeps எனக் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். இப்போது விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் when to dim the display, turn off the display அல்லது put the computer to sleep என ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் தேவைக்கேற்றவற்றைத் தேர்ந்தெடுத்து, Save Changes என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை நீக்கி மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ளுமாறு, மைக்ரோசாப்ட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீங்களும் எழுதுகிறீர்கள். எக்ஸ்பி சிஸ்டம் பாதுகாப்பிற்கான பேட்ச் பைல்களை மைக்ரோசாப்ட் இனி தராது என்றும், இதனால், ஹேக்கர்கள், வைரஸ் புரோகிராம்கள், எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில் எளிதாக நுழைவார்கள் என்றும் கூறப்படுகிறது. எனக்கு ஏ.வி.ஜி.போன்ற தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் நம்பிக்கை உள்ளது. இவற்றைக் கொண்டு என் சிஸ்டத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதா?
சி.அறிவரசு, திண்டுக்கல்.
பதில்:
மிகச் சிறந்த கேள்வி. அதனால் தான் அப்படியே தரப்பட்டுள்ளது. இந்த எண்ணம் உங்கள் மனதில் மட்டுமல்ல; எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்தும் பலரிடம் உள்ளது. தெளிவான பதில் ஒன்றை இங்கு அனைவருக்கும் தர விரும்புகிறேன்.
நீங்கள் குறிப்பிடும் தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அனைத்தும், பாதுகாப்பினைத் தருவதற்கு, மைக்ரோசாப்ட் தரும் பேட்ச் பைல்களை நம்பியுள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே அவை இயங்குகின்றன. நார்டன் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைத் தரும் செமாண்டெக் நிறுவனம் அண்மையில் இதனைத் தெளிவு படுத்தியுள்ளது. ""மைக்ரோசாப்ட் நிறுவனம், எக்ஸ்பி சிஸ்டத்திற்கான தன் சப்போர்ட்டினை நிறுத்திய பின்னர், அதன் பாதுகாப்பு தரும் பேட்ச் பைல்கள் கிடைக்காததால், செமாண்டெக், எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பினைத் தர இயலாது'' என்று அறிவித்துள்ளது. இதே போல கூற்று ஒன்றை, ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் மெக் அபி நிறுவனம் தன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
ஏன், இந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களால், மைக்ரோசாப்ட் தரும் சப்போர்ட் பேட்ச் பைல்கள் இல்லாமல் பாதுகாப்பு தர முடியாதா? எனக் கேட்கலாம். தரலாம். ஆனால், மீண்டும் முதலில் இருந்து அனைத்தையும் தொடங்க வேண்டும். இதற்கு ஆகும் காலம் மற்றும் பணச் செலவு அதிகம் மட்டுமின்றி, வீணாகவும் போக வாய்ப்புண்டு. எனவே தான், இந்நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் நிறுவனம் பேட்ச் பைல்கள் தருவதை நிறுத்திவிட்டால், தங்களால் முழுமையான பாதுகாப்பினைத் தர முடியாது என அறிவித்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் இரண்டு விஷயத்தில் மிகத் தெளிவாக உள்ளது. எக்ஸ்பி, கம்ப்யூட்டிங் இயக்கத்தில் வேண்டுமானால், மிக அருமையாக இருக்கலாம். ஆனால், தற்போது தரப்படும் வைரஸ் மற்றும் மால்வேர் பயமுறுத்தல் களைச் சமாளிக்கும் வகையில், அதன் கட்டமைப்பு இல்லை. இரண்டாவதாக, எக்ஸ்பி சிஸ்டம், தற்போதைய கம்ப்யூட்டிங் பணியில் உள்ள எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் வகையில் இல்லை. எனவே தான், வரும் ஏப்ரல் முதல் எக்ஸ்பிக்கான சப்போர்ட் தருவதை நிறுத்த உள்ளது.

கேள்வி: என் ஆபீஸ் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில், படிவங்களை நான் நிரப்புகையில், என் இமெயில் ஐ.டி. தொலைபேசி எண் போன்றவை தானாகவே அமைகின்றன. என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் இது தெரிய வருகிறது. இதனை எப்படி தடுக்கலாம். எங்கள் ஆபீஸ் கம்ப்யூட்டரில், சிஸ்டத்துடன் வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்துகிறோம்.
சா. மேரி ஜெபராஜ், திருப்பூர்.
பதில்:
இது நமக்குத் தரப்பட்டுள்ள வசதிதான். ஒவ்வொரு முறையும், நாம் முழுமையாக அனைத்துத் தகவல்களையும் டைப் செய்திடாமல் இருக்க இந்த வசதி தரப்பட்டுள்ளது. இதற்கு Autocomplete என்று பெயர். இதனை வேண்டாம் என்று நீங்கள் கருதினால், அதற்கேற்ற முறையில் அதனை செட் செய்து கொள்ளலாம். இன்டர்நெட் பிரவுசரில் Tools>Internet Options >Content> Autocomplete என்றபடி சென்று, நீங்கள் விரும்பும் ஆப்ஷனைத் தேர்வு செய்து அமைக்கலாம்.

கேள்வி: நான் மாணவர்களுக்கென பாடக் குறிப்புகளை, டாகுமெண்ட் ஆக வேர்டில் தயாரித்து வழங்குகிறேன். இதில் முக்கிய பகுதிகளை ஹைலைட் செய்திட வேண்டும் எனில், எப்படி செட்டிங்ஸ் அமைப்பத்து?
டி.தனஞ்செயன், சிவகாசி.
பதில்:
மாணவர்களிடம் லேப்டாப் இருப்பதால், நீங்கள் கற்றுக் கொடுக்க மேற்கொள்ளும் வழி மிக அருமையான ஒன்றாகும். இனி ஹைலைட்டிங் குறித்துப் பார்க்கலாம். இதற்கென செட்டிங்ஸ் தனியே இல்லை. வேர்ட் கொண்டுள்ள மெனு பாரில் இவை தரப்பட்டுள்ளன.
முதலில், நீங்கள் தயாரித்துள்ள வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். திரையின் மேலாக உள்ள மெனு பாரில், ச்ஞ என்ற சிறிய எழுத்துக்களுடன் உள்ள ஒரு பகுதியைப் பார்க்கலாம். நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்தினால், இது ஹோம் டேப்பில் கிடைக்கும். இதுதான் ஹைலைட்டிங் டூல். இதன் ஒரு பக்கத்தில் அம்புக் குறி ஒன்று தலைகீழாகக் காணப்படும். இதில் கிளிக் செய்தால், ஹைலைட் செய்வதற்குரிய வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் கிளிக் செய்தவுடன் ஹைலைட்டர் பேனா போல ஒரு கர்சர் கிடைக்கும். இது கூடுதல் கர்சராகும்.
வழக்கமான கர்சரும் அதன் இடத்தில் இருக்கும். இப்போது ஹைலைட் கர்சரைக் கொண்டு, எந்த சொற்களை ஹைலைட் செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அவை ஹைலைட் செய்யப்படும். இந்த ஹைலைட் டூலை ஆப் செய்திட, எஸ்கேப் கீ அழுத்தலாம். அல்லது ச்ஞ கட்டத்தில் மீண்டும் கிளிக் செய்திடலாம்.
ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் திரையில் தோன்றும் காட்சியில் மட்டும் இருக்காது. இந்த டாகுமெண்ட்டை அச்சடிக்கக் கொடுத்தால், உங்களிடம் கலர் பிரிண்டர் இருந்தால், இதே கலரில் சொற்கள் ஹைலைட் செய்யப்பட்டு அச்சாகும். கருப்பு வண்ண பிரிண்டர் எனில், ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் கிரே கலரில் வெளிறிப் போய் இருக்கும். எனவே நீங்கள் கருப்பு வெள்ளை பிரிண்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த ஹைலைட் செய்த பகுதிகளை நீக்கிவிடுவது நல்லது. இதற்கு ஹைலைட் செய்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, முன்பு சொல்லப்பட்ட அந்த ச்ஞ கட்டத்தில் கிளிக் செய்தால் போதும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், பக்க எண்களை நம் இஷ்டப்படி பார்மட் செய்திட முடியுமா? அதற்கான செட்டிங்ஸ் அமைக்கும் முறையை விளக்கவும். நான் வேர்ட் 2003 பயன்படுத்தி வருகிறேன்.
சா. உலகநாதன், அரியலூர்.
பதில்:
முதலில் டாகுமெண்ட்டைத் திறக்கவும். பக்க எண்களின் பார்மட் மாற்ற வேண்டிய இடத்திற்குக் கர்சரைக் கொண்டு சென்று அமைக்கவும். இதனை அடுத்து வியு மெனு சென்று, ஹெடர் அண்ட் புட்டர் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும். இதில் பார்மட் பேஜ் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-செப்-201306:13:22 IST Report Abuse
Mohamed Rafi வணக்கம்..எனது விண்டோஸ் xp யில்,image save,aplication download செய்தால் comdlg32dll என்று வருகிறது. this application has பைலெட் to start because comdlg32dll was not found Re-installing theapplication may fix this problem.என்று வருகிற்து ஓகே கொடுத்தால் gooly cut ஆகிறது.எப்படி சரி செய்வது?நன்றி...பா.முகமதுரஃபி.இரா.புதுப்பட்டி.
Rate this:
Share this comment
Cancel
Sriram Rajanbabu - Chennai,இந்தியா
16-செப்-201314:46:43 IST Report Abuse
Sriram Rajanbabu நாம் சிஸ்டம் தூங்கும் நேரத்தினை விண்டோஸ் 7 லும் கூட மேற் சொன்ன பதில் மூலம் செயல் படுத்தலாம். start> Run> type sleep> சென்றால் நமக்கு வேண்டிய பவர் செயல் பாடுகளை இதில் மாற்றலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X