தெலுங்கானா ஓர் அரசியல் விளையாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2013
00:00

வரும் ஆனா வராது என்று அரசியல் பரமபதம் விளையாடி கொண்டிருந்த தெலுங்கானா விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் தெலுங்கானா பகுதியை தனியே பிரித்து தனித் மாநிலமாக உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இனிமேலும் தாக்குபிடிக்க முடியாதுனெற நிலையில் ஒப்புதல் வழங்கி விட்டது. தெலுங்கானா பகுதி தனி மாநிலமாகவும், கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகள் தனி மாநிலமாகவும் விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக விளங்கும்.
தற்போதைய ஆந்திர மாநிலத்திலிருந்து ஹைதாராபாத், நிஜாமாபாத், அடிலாபாத், கரீம்நகர், வாரங்கல், கம்மம், நால்கொண்டா, மேடக், ரங்கா ரெட்டி மற்றும் மகபூப் நகர் ஆகிய பத்து மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைகண்கபட உள்ளது. ஹைதாராபாத் இரு மாநிலங்களுக்கும் தலைநகரமாக அடத்து பத்து ஆண்டுகளுக்கும் விளங்கும் எனஜ்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி தெலுங்கானா எனும் கோரிக்கை சுமார் 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. 1948ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்த ஹைதாராபாத், தனி மாநிலமாகவே விளங்கியது. 1953 ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட சில பகுதிகளுடன் ஆந்திரா மாநிலம் உதயமானது. 1956ஆம் ஆண்டில் ஹைதாராபாத் மாநிலமும் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. அதற்கு தெலுங்கானா பகுதியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. தெலுங்கானாவில் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று அரசின் சார்பில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. தெலுங்கானா இணைநதற்கு முன்பு ஆந்திராவின் தலைநவகரா கர்னூல் விளங்கியது. தெலுங்கானா இணைப்பிற்கு பிறகு ஒன்றுபட்ட ஆந்திரத்தின் தலைநகராக ஹைதாராபாத் மாற்றப்பட்டது.
ஒப்பந்தபடி தெலுங்கானா பகுதிக்கு உரிய அங்கீகாரம் வழங்கபட்வில்லை. பல்வேறு வதங்களில் புறக்கணிக்கபட்டு வருகிறது. தெலுங்கனா பகுதி தனியேவளர்ச்சி பெறவில்லை. தெலுங்கானா பகுதி பக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை. என்ற காரணங்களுக்காக 1969 முதலே தனித்தெலுங்கானா வேண்டி போராட்டங்கள், கிளர்ச்சிகள் நடைபெற தொடங்கிவிட்டன.
தெலுங்கானா பகுதிக்கு எனச் சுயாட்சி அதிகாரம் கொண்ட வளர்ச்சி கவுன்சில் ஏற்படுத்தப்டும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அரசின் சார்பில் 1969ல் அறய பிரதமர் இந்திராகாந்தி, தெலுங்கானா பகுதித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலால் வளர்ச்சி கவுன்சில் உறுவாக்கப்படவில்லை. அந்த நேரத்தில் தான் மாவோஸிஸ்ட்கள் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்தது.
1977ஆம் ஆண்டில் மீண்டும் தனித் தெலுங்கானா பிரச்சினை எழுந்தபோது தெலுங்கானாப் பகுதி மக்களுக்கு அரசு வேலையில் தனி இடஒதுக்கீடு என்று கூறிப் பிரச்சினையைக் கொஞ்சம் ஆறப்போட்டது இந்திய அரசு. ஆனால் எதுவும் முறையாகப் பின்பற்றப்படவில்லை.
இப்படியாகத் தெலுங்கானாப் பிரச்சினை பூதாகரமாக எழும்போதெல்லாம் ஏதாவது சலுகையினை அறிவித்துப் போராட்டத்தின் வீரியத்தினைக் குறைத்து வந்துள்ளதே தவிர தீர்மானமான ஒரு முடிவினை இந்திய அரசு அறிவிக்கவில்லை.
அவ்வப்போது போராட்டங்கள் வெடிக்கும் வாக்குறுதிகள் கிடைத்தவுடன் அடங்கும். இப்படியாகத் தனித் தெலுங்கானா கோரிக்கை கனன்று கொண்டே இருந்தது. சந்திரசேகரராவ் அரசியலில் காலெடுத்து வைத்த பின்னர் இப்பிரச்சினை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. தெலுங்கு தேசம் கட்சியின் மூலம் அரசியல் பிரவேசம் செய்த இவர் தெலுங்கானாப் பகுதியைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற எண்ணம் உடையவர். தனித் தெலுங்கானாவிற்குத் தெலுங்க தேசம்கட்சி ஆதரவு அளிக்கவில்லை என்ற காரணத்தினாலும் தனக்கு மந்திரிப் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலும், தெலுங்கு தேசம் கடசியிலிருந்து வெளியேறித் தெலுங்கானா ராஷ்டிர சமிதி எனும் கடசியை 2001ஆம் ஆண்டு தொடங்கினார். 2004ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி இவரது கட்சியுடன் கூட்டணி வைத்தது. தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற முழக்கத்துடன் அமோக வெற்றி பெற்றது அக்கூட்டணி. அதன்மூலம் மத்திய மந்திரியானார் சந்திரசேகரராவ். ஆனால் கொடுத்த வாக்குறுதியைக் காங்கிரஸ் அரசு காப்பாற்றவில்லை என்று கூறி 2006ஆம் ஆண்டு மத்திய மந்திரிப் பதவியை ராஜினாமா செய்தார்.
தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் பிரச்சினைகள் தொடங்கின. 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சந்திரசேகரராவ். வழக்கம்போல் தெலுங்கானா கோரிக்கை ஏற்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. உண்ணாவிரதத்தையும் 10 நாள்கிளல் முடித்துக் கொண்டார் ராவ். மீண்டும் பிரச்சினை ஆறப்போடப்பட்டது.
ஆந்திராவைப் பிரித்துத் தனித் தெலுங்கானா உருவாக்க வேண்டும் என்று எப்படிப் போராட்டங்கள் நடைபெற்று வந்தனவோ அதுபோலவே தெலுங்கானாவைப் பிரிக்கக்கூடாது என்று ஒரு பிரிவினர், ராயல்சீமா கடலோர ஆந்திர மக்கள், தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
மத்திய அரசு தெலுங்கானா சிக்கலிலிருந்து வெளிவர 2010ஆம் ஆண்டு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்களின் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து ஆய்வு செய்தது. அக்குழு கொடுத்த அறிக்கையில் “தனித்தெலுங்கானா அமைப்பது அப்பகுதி மக்களுக்குத் திருப்தியைத் தரும். ஆனால், இதன் காரணமாக வேறு பல பிரச்சினைகளும் உருவாகலாம்’ என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
பல்வேறு காலகட்டங்களில் எழுந்த தெலுங்கானா போராட்டங்களுக்கெல்லாம் அசைந்து கொடுக்காத காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இப்போது திடீரென தெலுங்கானா தனி மாநில அறிவிப்பை வெளியிடுவதற்கான காரணம், அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்றத் தேர்தல்கள் தான்.
தெலுங்கானா கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்துவதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள், மற்ற கட்சிகளுக்குத் தாவினர். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்து விட்டது. தெலுங்கானா அமைக்காவிட்டால் அடுத்த தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற முடியாது என்று அரசியல் விமர்சகர்களும் கூறினர். எல்லாவற்றிற்கும் மேலாக, தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்துவரும் பா.ஜ.க. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் உடனே தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்று அறிவித்ததும் தான் காங்கிரஸ் இத்தகைய முடிவை உடனே அறிவிக்கக் காரணமாக அமைந்தது.
“ஆந்திராவை பிரிப்பது மக்களின் நலனுக்காகத்தானே தவிர, வேறு எந்த அரசியல் கட்டாயங்களுக்காகவும் அல்ல’ என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தாலும் உண்மை அதுவல்ல. வரும் தேர்தலில் தெலுங்கானக ராஷ்ட்ர சமிதியுடன் கூடடணி வைத்தோ அல்லது டிஆர்எஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டோ (காங்கிரஸ் கட்சியுடன் டிஆர்எஸ் கட்சியை இணைப்பதற்காகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன) பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்ற காங்கிரஸ் திட்டம் தீட்டியுள்ளது.
அதேபோல், ஜகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸின் செல்வாக்கு மிகுந்த ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தப்பூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களைத் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கவும் காங்கிரஸ் திட்டங்கள் தீட்டி வருகின்றது. அவ்வாறு செய்யும் போது டிஆர்எஸ் உதவியுடன் அதிக இடங்களைப் பிடிக்க முடியும் அதே நேரத்தில் எதிர்கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த முடியும் என்று கணக்கு போடுகிறது காங்கிரஸ்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜகன்மோகன் ரெட்டி சிறையில் இருந்தாலும், சீமாந்தரா எனப்படும் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இக்கட்சி அசுர வளர்ச்சி அடைந்துவருகிறது. காரணம், ஒன்றுபட்ட ஆந்திரத்தை ஆதரிப்பதுதான். அதுமட்டுமல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டியின் பணியைத் திறம்படச் செய்து வருகின்றனர் அவருடைய தாயார் விஜயலட்சுமி ரெட்டி, மனைவி பாரதி ரெட்டி மற்றும் சகோதரி ஷர்மிளா ரெட்டி ஆகியோர். தாயார் கட்சியின் அன்றாடப் பணிகளைக் கவனித்துக் கொள்கிறார். மனைவி எதிர்கட்சியினருக்கு ஊடகங்கள் வாயிலாகப் பதிலளிக்கிறார். சகோதரியோ மாநிலம் முழுவதும் 3000 கி.மீட்டருக்கும் மேல் பாதயாத்திரை மேற்கொண்டு சாதாரண பொதுமக்களையும், கட்சியினரையும் நேரடியாகச் சந்தித்து ஆதரவைப் பெருக்குகிறார். இதனால் நாளுக்குநாள் ஒய்.எம்.ஆர். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதனால் கலக்கமுற்ற காங்கிரஸ், அதனைத் தடுத்து நிறுத்த செய்த குறுக்கு வழித்தந்திரமே இந்தத் தனித் தெலங்கானா அறிவிப்பு.
ஆந்திரா பிரிக்கப்பட்டுத் தெலுங்கானா உருவாகும் பட்சத்தில், அம்மாநிலக் கட்சிகளின் வெற்றிவாய்ப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். டிஆர்எஸ் கட்சிக்கு தெலுங்கானாவில் மட்டுமே செல்வாக்கு கூடும். மற்ற பகுதியில் காணாமல் போனாலும் போகும். தெலுங்கு தேசம் கட்சி தனித் தெலுங்கானா விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காததால் பின்னடைவைச் சந்திக்கும். தெலுங்கானா பிரிவை எதிர்த்துவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் காணாமல் போகும். அதே வேளையில் அதே காரணத்திற்காக, பிற பகுதிகயில் அக்கட்சி சிறப்பான வெற்றியைப் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
தெலுங்கானா ஆதரவு, எதிர்ப்பு அலைகளில் அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்ளப்போகும் கட்சிகள் பாரதியஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தெலுங்கானா பகுதியில் உயரலாம். ஆனால் பிற பகுதிகளில் பேரும் பின்னடைவை எதிர்கொள்ள வேண்டிவரும். ஏனென்றால், அக்கட்சியின் மூத்த தலைவர்களே பிரிவினையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருங்கிணைந்த மாநிலமே தொடரவேண்டும் என்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர். இவர்களில் முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் அடங்குவார். பல்லம் ராஜு, புரந்தரேஸ்வரி, பனபகா லட்சுமி போன்ற மத்திய அமைச்சர்களும், 13 மாநில அமைச்சர்களும் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் 10 மேல்சபை உறுப்பினர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்புதான் வந்துள்ளது. செயல்வடிவம் பெற, குறைந்தது ஆறு மாதங்களுக்குமேல் ஆகும். ஆனால் இப்போதே ஆட்சியில் அமர்ந்துவிட்டதாக எண்ணி, “தெலுங்கானா பகுதியில் உள்ள அரசு அலுவலங்களில் பணியாற்றும் ஆந்திராக்காரர்கள் தங்கள் பகுதிக்கு ஓடிவிட வேண்டும்’ என்று சந்திரசேகரராவ் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தி வருகினறனர். அவரது பேச்சு சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தனித் தெலுங்கானா அறிவிப்பு வந்த நாளிலிருந்து அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திர பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள், வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றுபட்ட ஆந்திராவை ஆதரித்துப் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தனித் தெலுங்கானா உருவானால், நீர்வளம், விவசாய உற்பத்தி, தொழில்வளம், மின்சாரம் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய தலைநகரை உருவாக்க பெருமளவில் பணம் தேவைப்படும். அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இப்படியே போனால் பல்வேறு மாநிலங்களிலிருந்து தனிமாநிலக் கோரிக்கை எழும். இப்போதே ஒன்பது புதிய மாநிலக் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு கோரி“கையும் ஏற்கப்படுமாயின் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டும். இது நமது நாட்டினைப் பலவீனப்படுத்தும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குருநில மன்னர்கள் தோன்றுவார்கள். இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. “ஊர் இரண்டு பட்டால்’ என்று ஒரு சொற்றொடர் சொல்லப்படுவதுண்டு, இங்கே மாநிலத்தை இரண்டாக்கி அரசியல் கட்சிகள் கொண்டாடி மகிழ்கின்றன.

- கௌசிக் ராஜா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X