பாம்பே கண்ணனின் பகீரத முயற்சி....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2013
00:00

கலை உலகில் சில சாதனைகள் சத்தம் இன்றி நடைபெறுகின்றன... பின் அதுவே சரித்திர நிகழ்வுகளாய் மாறுகின்றன... அப்படி ஒரு மகத்தான பணி, பதிவு செய்ய வேண்டிய ஒரு சம்பவம் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது...
வாசிக்கும் பழக்கம் உள்ளோர்கள் சுவாசிக்கும் ஒரு பெயர், நமது நூற்றாண்டில் வாழ்ந்து இன்றும் வாசகர் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவர் அமரர் கல்கி அவர்கள். கல்கி என்றதும் அனைவர் மனதிலும் தோன்றும் ஓர் அமரகாவியம் பொன்னியின் செல்வன். படித்தவர்களை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஒரு நாவல் பொன்னியின் செல்வன் என்றால் அது மிகையல்ல. புத்தக வடிவிலே பலர் மனதில் நீங்கா இடம் பெற்ற அந்தப் புதினத்தை நாடகமாக்க, திரைப்படமாக்க, சின்னத்திரையில் கொண்டு வர பலர் மிக பிரபலமானவர்கள் உட்பட முயற்சி எடுத்தார்கள். ஏனோ அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனது. இன்று வரை அது மிகப் பெரிய கனவாகவே இருந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் புதினத்தை ஒலி நாடாவாக கொண்டு வர முடியுமா? அப்படி என்றால் அதை எப்படி கொண்டு வருவது? வந்திய தேவனும், குந்தவையும், ராஜராஜ சோழனும் பழவேட்டரையரையும், நந்தினியும் நம் கண் முன் நடமாட வைக்க முடியுமா? கேட்போரை கவர செய்ய முடியுமா? இந்தச் சிந்தனை உதித்தது திரு பாம்பே கண்ணன் அவர்கள் மனதில், விளைவு முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு அவர் களம் இறங்கினார் அதில் வெற்றியும் கண்டார்.
அந்த வரலாற்றுச் சாதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் அதை சாதித்துக் காட்டிய திரு பாம்பே கண்ணன் அவர்களை தெரிந்து கொள்வது அவசியம்...
பம்பாய் மும்பை என் மாறிய போதும் தன் பெயரோடு ஒட்டிக்கொண்ட பாம்பே என்ற பெயரை மாற்றாமல் வைத்துக் கொண்டு நாடக உலகில் தனக்கென்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர்தான் பாம்பே கண்ணன். இவர் படித்தது விஞ்ஞானம். பணி புரிந்தது வங்கியில்.
சிறிய வயது முதலே இவருக்கு மேடை நாடகம் மேல் ஒரு தீவிரக் காதல் இருந்து வந்தது. அந்தக் கலைக்காதல் வெறியாக மாறியது. 1969ல் பிரபல நாடக மேதையாக திரு. ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்களின் குழுவின் ஒரு நடிகராக நுழைந்தார். மோதிர கையால் குட்டு பட்டார். மும்பை நாடக மேடை தந்த அனுபவம் இவரை வெகு விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. ஆம் சுமார் நாற்பது ஆண்டு காலமாக இவர் நாடக மேடையை ஆக்கிரமித்தார் என்று சொல்வதுதான் சரியா இருக்கும்.
கிட்டத்தட்ட மூவாயிரம் முறை இவர் தனது அபார நடிப்பு திறமையால் மேடையில் வலம் வந்தார்.
நடிப்புத் திறமை மட்டுமே இருந்து இருந்தால் வெறும் நடிகராக மட்டுமே இவர் வலம் வந்திருப்பார். தன்னுள் ஒரு படைப்பாளியும் இருக்கிறார் என்பதை வெகு சீக்கிரத்தில் கண்டு கொண்டார். நாடகக்காரன் என்ற குழுவை ஆரம்பித்தார். மும்பையிலும் சென்னையிலும் இவர் எழுதி தயாரித்து நடித்து இயக்கிய நாடகங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று இவருக்கு என்று தனி முத்திரையை கொடுத்தன.
வானொலி, தொலைக்காட்சி இரண்டிலும், இவரது நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பானது. நாடகத்துக்காக வழங்கப்படும் பல்வேறு விருதுகளை பெற்றார்.
நாடக மேடையிலிருந்து மெல்ல மெல்ல தனது திறமைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார். கோமல் சுவாமிநாதன், சுஜாதா போன்ற ஜாம்பவான்களின் படைப்புகளை டெலிபிலிம் ஆக்கி அதிலும் வெற்றி கண்டார். இவருடைய பல நாடகங்கள் புத்தக வடிவில் வெளி வந்துள்ளது.
இன்று படிக்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.. இன்றைய தலைமுறையினர் வாசித்து தெரிந்து கொள்வதை விட கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உடையவர்களாக இருப்பதை உணர்ந்த திரு பாம்பே கண்ணன் ஒலி நாடாக்கள் மூலமாக நல்ல கதைகளை புதினங்களை, திறமையான கலைஞர்கள், நல்ல குரல் வளம் உடையவர்கள் இவர்கள் மூலமாக ஒலி வடிவம் செய்யும் முயற்சியில் இறங்கினார். திரு. பூரம் சத்யமூர்த்தி அவர்களின் சிறுகதைகள், திரு பாக்கியம் ராமசாமி அவர்களின் புகழ் பெற்ற படைப்பான சீதாப்பாட்டி அப்புசாமி கதைகள் இவைகளை ஆடியோ புத்தகங்களாக கொண்டு வந்தார்.
இவர் சிறிய வயதிலேயே கல்கியின் மீதும் அவரது படைப்புகள் மீதும் அசைக்க முடியாத ஆர்வம் உடையவராக இருந்ததால் கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் புதினத்தை ஆடியோ புத்தகமாக கொண்டு வந்து வெற்றி கண்டார்.
அனுபவம் கை கொடுக்க, இவர் மனதில் அந்த ஆசை வந்தது. அதுதான் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தை ஒலிப் புத்தகமாக்கக் கொண்டு வரும் அந்த பகீரத முயற்சியில் இறங்கினார்.
இது வெறும் உழைப்பு அல்ல ஒரு தவம் என்கிறார் கண்ணன் அவர்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் உழைப்பு. இவரது அசாத்திய உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கண்ட திரு சி.கே. வெங்கட்ராமன் அவர்கள் பொன்னியின் செல்வம் புதினத்தை ஒலிப் புத்தகமாக தயாரிக்க முன் வந்தார். அறுபதுக்கும் மேற்பட்ட நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் பங்கேற்று நடித்து திரு கல்கி அவர்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டினார்கள். திரு பாம்பே கண்ணன் அவர்கள் இயக்கத்தில்.
அமரர் கல்கி அவர்களின் வார்த்தைகளும் வரிகளும் மாறாமல் அப்படியே வடிவம் பெற்று இருப்பதுதான் இந்த ஒலிப் புத்தகத்தின் சிறப்பு என்ற பெருமைப்படுகிறார் திரு கண்ணன. திரு. சத்யசீலன் என்ற இளைஞர் மிகச் சிறப்பாக இசை அமைக்க, நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருமே கதாபாத்திரங்களாக மாறி வலு சேர்த்துள்ளார்கள்.
இந்த ஒலிப்புத்தகம் பிரம்ம கான சபா சார்பாக, சென்னை நாரத கான சபாவில் பிரபல தொழில் அதிபர் டாக்டர் நல்ல அவர்கள் தலைமை வகிக்க, அமரர் கல்கி அவர்களின் பேத்தி திருமதி சீதா ரவி, எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் திரைப்பட நடிகை சுகாசினி மணிரத்தினம் அகியோர் கலந்து கொண்ட பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய அனைவருமே திரு. பாம்பே கண்ணன் அவர்களின் இந்த சீரிய முயற்சியை மனதார பாராட்டினார்கள். திரு. பாம்பே கண்ணன் அவர்கள் தனத உரையில் இந்த வெற்றி கூட்டு முயற்சி என்று அடக்கத்துடன் தெரிவித்தது மட்டும் அல்லாமல் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி பாராட்டியது அவரின் பெருந்தன்மையை உயர்த்தியது...
திரு பாம்பே கண்ணன் அவர்களின் இந்த முயற்சி தொடர வேண்டும் அவர் மேலும் இதுபோன்ற மிகச் சிறந்த இலக்கியங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கலைமகள் வாழ்த்துகிறது... இது முடிவல்ல ஆரம்பம்.

- சி.வி. சந்திரமோகன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X