கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
00:00

கேள்வி: யு ட்யூப் தளத்தில் பதிந்துள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திடச் செல்கையில், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்களில் பிரச்னை ஏற்படுகிறது. ஒரு புரோகிராம் ஜாவா இன்ஸ்டால் செய்திடச் சொல்கிறது. அதனால், சிக்கல் வரும் என்ற எண்ணத்தில் இன்ஸ்டால் செய்யவில்லை. வேறு வழி உண்டா?
எஸ்.பிரகாஷ், சின்னாளபட்டி.
பதில்:
தர்ட் பார்ட்டி புரோகிராம் இல்லாமல், யு ட்யூப் தளத்தில் இருந்தவாறே தரவிறக்கம் செய்திடலாம். முதலில் நீங்கள் தரவிறக்கம் செய்திடும் யு ட்யூப் வீடியோ உள்ள பக்கத்தைத் திறக்கவும். பின்னர் அதன் முகவரியைக் கவனிக்கவும். அதில் www.youtube.com/watch ?v=xxxxxxx என இருக்கும். இனி, youtube என்பதன் முன்னால் ssஎனச் சேர்க்கவும். முகவரியில் youtube என்பது ssyoutube என மாறி இருக்கும். இப்போது என்டர் பட்டனை அழுத்தவும். இப்போது புதியதாக http://en.savefrom.net/ என்ற முகவரியில் உள்ள தளம் திறக்கப்படும். இதில் நீங்கள் விரும்பும் வீடியோ பைல் எந்த பார்மட்டில் பதியப்பட வேண்டும் என்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப் பட்டிருக்கும். உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து டவுண்லோட் செய்திட கட்டளை கொடுத்தால், உடன் வீடியோ பைல் பதிவு செய்யப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் அடிப்படையில், பதியும் நேரம் வேறுபடலாம். இந்த இடத்தில் யு ட்யூப் தளத்தில் இருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட உதவும், ஆன்லைன் தளங்களின் பெயர்களையும் தருகிறேன். விருப்பப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே. அவை
http://www.keepvid.com
http://www.videodownloadx.com
http://www.vdownloader.es
http://boomvid.com
http://www.zilltube.com
http://www.tubeg.com
மேலே சொல்லியவாறு, நீங்கள் டவுண்லோட் செய்ய வேண்டிய வீடீயோ பைல் உள்ள யு-ட்யூப் தளப் பக்கம் செல்லவும். அதன் யு.ஆர்.எல், முகவரியை காப்பி செய்து கொண்டு, பின் மேலே குறிப்பிட்டுள்ள தளங்களில் ஒன்றுக்குச் சென்று, அங்கு தரப்பட்டுள்ள கட்டத்தில், முகவரியை பேஸ்ட் செய்திடவும். அடுத்து, உங்கள் வீடியோ பைலை நீங்கள் எந்த பார்மட்டில் பெற விரும்புகிறீர்கள் என்ற ஆப்ஷனைத் தேர்வுச் செய்து எண்டர் தட்டவும். நீங்கள் தேர்ந்தெடுத்த டைரக்டரி அல்லது போல்டரில், வீடியோ பைல் டவுண்லோட் ஆகும்.

கேள்வி: சில நாட்களாக, என் பெயரிலிருந்தே எனக்கு மின் அஞ்சல்கள் வருகின்றன. இது எப்படி சாத்தியமாகும்? என் கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்குமா? நான் முழுமை யாகச் சோதித்துப் பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் இது எப்படி ஏற்படுகிறது? நான் அவுட்லுக் டாட் காம் பயன்படுத்துகிறேன்.
எஸ். ராஜமோகன், காரைக்குடி.
பதில்:
உங்கள் மெயில் தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கலாம். அது, உங்கள் மின் அஞ்சல் முகவரியினைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து காண்டாக்ட் முகவரிகள் அனைத்திற்கும் இது போன்ற அஞ்சலை அனுப்பலாம். அப்போது உங்களுக்கும் ஒன்று வருகிறது. இந்த அஞ்சலுடன் இணைப்பாக ஏதேனும் மால்வேர் புரோகிராமும் இருக்கலாம். வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் இந்த அஞ்சல் காரணமாக வைரஸ் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் ஆக வைத்துக் கொள்ளவும். அதே நேரத்தில், உங்கள் அவுட்லுக் டாட் காம் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டையும் மாற்றிவிடவும். இதுவும் ஹைஜாக் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதால், இந்த பாதுகாப்பு ஏற்பாடு.

கேள்வி: பைல்களைச் சேர்த்து சுருக்கி அமைக்கும் வசதியினை விண்டோஸ் சிஸ்டம் தருகிறதா? அதனை எப்படிப் பெறலாம்? எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? விரிப்பதற்கான கட்டளை என்ன? தர்ட் பார்ட்டி புரோகிராம் கொண்டு விரிக்க முடியுமா?
கா. சித்திர சேனன், திண்டுக்கல்.
பதில்:
பைல்களைச் சுருக்கும் வித்தை அறிய விரிவாய் எத்தனை கேள்விகள்! பரவாயில்லை, மிகத் தெளிவாக இருக்கிறீர்கள். விண்டோஸ் சிஸ்டத்திலேயே பைல்களைச் சுருக்கும் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் சுருக்க வேண்டிய பைல்களை, ஷிப்ட் கீ அழுத்தியோ, அல்லது கண்ட்ரோல் கீ அழுத்தியோ மொத்தமாகத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், தேர்வின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Send To என்றிருப்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் மெனுவில் Compressed (Zipped Folder) என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்கள் அனைத்தும் ஸிப் செய்யப்பட்டு ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கும். இதற்கு விண்டோஸ் ஒரு பெயர் கொடுத்திருக்கும். நீங்கள் வேறு ஒரு பெயர் வைத்தால், அடையாளம் கண்டு கொள்வது எளிது எனில், அதனை மாற்றிக் கொள்ளலாம். இந்த ஸிப் பைலை விரித்து, பைல்களைப் பெற, விண்டோஸ் அல்லது தர்ட் பார்ட்டி புரோகிராம் என எதனையும் பயன்படுத்தலாம்.

கேள்வி: என் மகனுக்கு (11) கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதி கொடுத்தேன். அதில் அவன், டாஸ்க்பாரில் கர்சரை வைத்து இழுத்து, மானிட்டரின் வலது அல்லது மேலாக விட்டுவிடுகிறான். நாம் மீண்டும் சரி செய்வது சிரமமாக உள்ளது. இதனைத் தடுக்க வழி உள்ளதா?
கா. மகராஜன், மேலூர்.
பதில்:
நம் பிள்ளைகளிடம் தோற்றுப் போவது கூட நமக்குச் சந்தோஷம் தான், இல்லையா மகராஜன். ஓ.கே. இனி உங்களுக்கான தீர்வினைப் பார்ப்போம். இழுத்துவிடப்பட்ட டாஸ்க் பாரை, மீண்டும் கீழாக அமைப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறுகிறீர்கள். தேவையே இல்லை. ஸ்டார்ட் மெனு சென்று, மவுஸால் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, கீழாக விடவும். மீண்டும் உங்கள் மகன் மாற்றாமல் இருக்க, டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Lock the Taskbar என்பதில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: மாஸ்டர் பூட் ரெகார்ட் கம்ப்யூட்டரில் மிக முக்கியமான இடம் என்றும், இதில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கமே நின்றுவிடும் என்றும் படித்தேன். உண்மையா? முன்பு மாஸ்டர் பூட் ரெகார்ட் வைரஸ் என்றும் ஒன்று பற்றிய குறிப்பு படித்த நினைவு. இவற்றை விளக்கவும்.
கா.அன்பரசி, கோவை.
பதில்:
என்ன வகையான சங்கிலித் தொடர் கேள்வி. நல்ல தகவல்களை வாங்கும் கேள்விகள். இதோ தகவல்கள்.
MBR மாஸ்டர் பூட் ரெகார்ட்: கம்ப்யூட்டர் பூட் செய்யப் படுகையில், இயக்கப்படும் முதல் புரோகிராம். எனவே ஹார்ட் டிஸ்க்கின் முதல் செக்டாரில் இது தங்கிச் செயல்படும். பூட் செயல்பாட்டினை இது தொடங்கி வைக்கும். இதற்கு பார்ட்டிஷன் டேபிள் என்ற அமைப்பைப் பார்த்து, எந்த பிரிவில் இயக்கத் தொடக்கத்தினை மேற்கொள்ளலாம் என்று கணித்து மேற்கொள்ளும். பின்னர், புரோகிராமைக் கட்டுப்படுத்துவதனை, அந்த பிரிவில் உள்ள பூட் செக்டாருக்கு மாற்றிவிடும். பூட் செயல்பாட்டினை அது தொடர்ந்து எடுத்துக் கொள்ளும். டாஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், FDISK/MBR என்ற கட்டளையுடன், MBR புரோகிராமினை நீங்கள் உருவாக்கலாம்.
இது குறித்து படிக்கையில், உங்கள் மனதில் MBR virus என்று படித்தது நினைவிற்கு வரலாம். இந்த வைரஸ் ஒரு பொதுவான அபாயகரமான வைரஸ். மாஸ்டர் பூட் ரெகார்ட் புரோகிராமிற்குப் பதிலாக, தன் குறியீடுகள் அடங்கிய புரோகிராமினைப் பதிந்து வைக்கும். ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர் தொடங்கும்போதும் MBR செயல்படுத்தப்படுவதால், இது மிகவும் ஆபத்தான விளைவுகளைத் தரும். முன்பு இந்த வகை வைரஸ் மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக பிளாப்பி டிஸ்க் வழியாக இவை பரவின. இப்போது இது செயல்படுவதாகத் தகவல் இல்லை. கவலைப்பட வேண்டாம்.

கேள்வி: மின்னஞ்சல் செய்திகளுடன் வரும் பைலில் வைரஸ் இருக்குமோ என்ற பயம் உள்ளது. என் கம்ப்யூட்டரில் இருக்கும் ஆண்ட்டி வைரஸ் மூலம் சோதனை செய்கையில், வைரஸ் பரவிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் உள்ளது. என்ன செய்திடலாம்?
என். கோகிலா, திருப்பூர்.
பதில்
: நல்ல கேள்வி. என்னதான், ஆண்ட்டி வைரஸ் இருந்தாலும், இணைப்பாக வந்த பைலில் உள்ள வைரஸ், சோதனையின் போது, கம்ப்யூட்டரில் நுழைந்துவிட்டால் என்ன செய்வது? என்பது தான் உங்கள் அச்சம். உங்கள் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் ஆக இருந்தால், அது உடனே வைரஸைக் கண்டறிந்து, நீக்கும் முயற்சியில் இறங்கும். இருந்தாலும், புதிய வைரஸ் எனில், சிக்கல் தான். இதற்கான தீர்வைப் பார்ப்போம்.
பயப்படும் பைலைத் திறக்காமல், அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal .com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும். இப்போது வைரஸ் இல்லை என செய்தி வந்தால், பைலைத் திறக்கவும். ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்தவும் பயமாக இருந்தால், அனுப்பிய நண்பருக்கு விபரத்தைக் கூறி, வைரஸ் இல்லாத பைல் அனுப்புமாறு கூறவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X