அமெரிக்கா போல, வசதிகளைத் தருவதில், மொபைல் போன் நிறுவனங்களிடையே போட்டி இருந்தால் தான், வாடிக்கையாளர்களாகிய நமக்கு நல்லது. தங்கள் பத்திரிக்கை செயல்படுவது போல அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த இலக்கினை நோக்கி எழுத வேண்டும் என்பதே என் அவா.
வள்ளிராஜன், நியு ஜெர்ஸி.
சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான இணைய தளங்கள் குறித்து அடிக்கடி டிப்ஸ் அல்லது கட்டுரை தரவும். இது வளரும் சந்ததிக்கு தங்களின் உதவியாக இருக்கும்.
எஸ். ஆசீர்வாதம், ஆசிரியர், பழனி.
ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இவ்வளவு வேலைகள் செய்கிறது என்று தங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே அறிந்துகொண்டேன். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் செயல்பாட்டினைக் காட்டிலும் அதிக உதவி தருவது இந்த புரோகிராம்களே என்பதனையும் நன்றாக விளக்கி உள்ளீர்கள். நன்றி.
எம்.சியாமளா, சென்னை.
வைரஸ் எதிர்ப்பில், சாண்ட் பாக்ஸ் தொழில் நுட்பம் என்னவென்று எளிமையாகப் புரிய வைத்தது, கட்டுரையின் சிறப்பான அம்சமாகும்.
எஸ். கண்ணபிரான், மதுரை.
இணையத்தில் இலவச வர்த்தகம் என்ற தலைப்பின் கீழ் கொடுத்துள்ள தகவலின்படி, கூகுள் குஜராத் மாநிலம் மட்டுமின்றி, நம் மாநிலத்தவருக்கும் உதவும் என்று எதிர்பார்க்கிறேன். இணையம் வழி வர்த்தகம் தான் இனி அதிக லாபம் தரும் என்பதனை கூடுதல் தகவல்கள் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பேரா. ஆர். கே. மூர்த்தி, விருதுநகர்.
ஒரு டாகுமெண்ட்டில் சதவீதப் பகுதி அடிப்படையிலும் செல்ல முடியும் என்பதனை எடுத்துத் தந்த டிப்ஸ் புதுமையாக இருந்தது.
ஆர். ராபர்ட் விமல்ராஜ், புதுச்சேரி.
ஷிப்ட் கீ +மவுஸ் கிளிக் கட்டுரை மிகவும் விஸ்தாரமாக, அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கி அமைந்துள்ளது. இது போல எளிய தமிழில் தாங்கள் தான் தர முடியும். பல டிப்ஸ்கள் முதல் முதலாக நாங்கள் படிக்கிறோம். ஆசிரியர் குழுவிற்கு ஒரு சபாஷ்!
டாக்டர் எம். முத்து கிருஷ்ணன், மதுரை.
பக்க வாட்டு பட்டன்களுடன் கூடிய மவுஸ் செயல்பாடு குறித்து எழுதிய தாங்கள், அதன் படம் ஒன்றினைப் போட்டிருந்தால், இன்னும் சற்று விளக்கமாக இருந்திருக்கும். அடுத்த முறை போடவும். விலையும் குறிப்பிடவும்.
எம்.கௌசிக், சிவகாசி.
டேட்டாக்களை எக்ஸெல் ஒர்க்புக்கில் வரிசைப்படுத்த கொடுத்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாகவும், எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அமைந்துள்ளது. நன்றி.
எஸ். முத்துக்குமார், திருச்சி.
வெப் கேமரா பயன்படுத்துவதனை, ஏதோ சினிமா ஷீட்டிங் அளவிற்கு விரித்து எழுதி யுள்ளீர்கள். அபாரம் சார். மிக அருமை.
என். லதா செல்வி, அய்யம்பாளையம்.
மொபைல் போன் பண்பாடு என நாம் கரடியாகக் கத்தினாலும், மக்கள் திருந்த மறுக்கின்றனரே. இருந்தாலும், தொடர்ந்து இவற்றை அடிக்கடி பிரசுரிக்கவும். சிலராவது திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.
ஆ. லஷ்மி நரசிம்மன், தேனி.
வைரஸ் புரோகிராம் தயாரிப்பவர்கள் ஆண்ட்ராய்ட் போனையும் விட்டு வைக்கவில்லையா? சரியான பாதுகாப்பு வழிகளை, இன்னும் தெளிவாக விவரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். மூர்த்தி, தாம்பரம்.
விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்து தாங்கள் தரும் டிப்ஸ் மிகக் குறைவாகவே உள்ளது. இப்போது அந்த சிஸ்டத்திற்குப் பலரும் தங்கள் கம்ப்யூட்டர்களை மாற்றிக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர் என்று நீங்களே எழுதி உள்ளீர்கள். எனவே, ஷார்ட்கட் கீ தொகுப்பு மற்றும் சிஸ்டம் டிப்ஸ் என அதிகமாக உதவிக் குறிப்புகள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நா. ஜெனிபர், விழுப்புரம்.