ட்ரைவர் பைல் என்று சொல்கிறோம். இது விண்டோஸ் சிஸ்டத்தைச் சேர்ந்ததா? அல்லது நாம் கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் (பிரிண்டர் போல) சாதனத்தைச் சேர்ந்ததா?
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் தரப்படும். எனவே ட்ரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்.