தீர்ப்பு (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2013
00:00

முன்னொரு காலத்தில் சிவந்தபுரி என்றொரு சிற்றூர் இருந்தது. அச்சிற்றூரிலே மது, கோபி, வசந்தன், ரவி என்னும் நண்பர்கள் நால்வர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நால்வரும் எங்கும் எப்போதும் ஒன்றாகவே கூடிப் பேசி மகிழ்ந்து வந்தனர். இவர்களின் கூட்டுறவைக் கண்டு அவ்வூரில் மக்கள் வியந்தனர்.
நால்வரில் மது என்பவன், கற்றறிந்த பண்டிதர் ஒருவரின் புதல்வன்; கோபி என்பவன் தச்சு வேலை செய்யும் ஒரு தொழிலாளி மகன்; வசந்தன் என்பவன், பொன் வேலை செய்யும் பொற்கொல்லரின் மகன்; ரவி என்பவன் ஒரு நெசவாளியின் மகன்.
நண்பர்கள் நால்வரும் உண்பதும், விளையாடுவதும், வீண் வம்பு பேசுவதுமாகக் காலத்தைப் போக்கினர். இவற்றையே தங்கள் அன்றாட வேலைகளாகக் கொண்டிருந்தனர்.
இவர்களின் தந்தையர் இவர்களைக் கல்வி கற்குமாறு தூண்டினர்; தங்கள் புதல்வர்களின் எதிர்கால வாழ்வு குறித்துக் கவலை கொண்ட னர்; பலமுறை அச்சுறுத்தியும் பார்த்தனர்.
அவர்கள் தங்கள் தந்தைகளின் பேச்சை கண்டுக் கொள்ளவே இல்லை. இதனால், தந்தைமார்கள் புதல்வர்களை மிகவும் கோபமாக திட்டினர். இதனால் வெறுப்படைந்த அவர்கள் ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்தனர்.
குறித்த நாளில் நள்ளிரவு நேரத்தில் நண்பர்கள் நால்வரும் திட்டமிட்டப்படியே அவ்வூரிலிருந்து புறப்பட்டனர்.
இரவு முழுவதும் நடந்து, மறுநாள் காலை ஒரு பெரிய நகருக்குள் நுழைந்தனர். அந்நகரின் அழகையும், உயரமான கட்டடங்களையும் கண்டு மகிழ்ந்தவாறே சென்றனர்.
நெடுந்தொலைவு நடந்து சென்றதால் ஓரிடத்தில் தங்கினர். அப்போது வசந்தனை அனுப்பி உணவு வாங்கி வருமாறு கூறினர்.
வசந்தனும் சென்று அந்த ஊரில் சுற்றித் திரிந்தான். கடைசியில் தங்க நகைகள் செய்யும் ஒரு பொற்கொல்லரைக் கண்டு விவரங்களைக் கூறினான்.
வசந்தனின் அழகிய முகம் அவரை மிகவும் கவர்ந்தது. அவர் வசந்தனை இங்கேயே தங்கியிருந்தால், தொழில் கற்றுத் தருவதாக கூறினார். அதன் பின்னர், அவனுடைய நண்பர்களை உணவருந்த அழைத்து வருமாறு கூறினார்.
வசந்தன் தன் நண்பர் களிடம் சென்று, தனக்கு வேலை கிடைத்துள்ளது பற்றிக் கூறி, அவர்களை உணவருந்த வருமாறு அழைத்துக் கொண்டு பொற்கொல்லர் இல்லத்திற்குச் சென்றான். பொற்கொல்லர் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, சுவையான உணவு படைத்தார். நண்பர்கள் நால்வரும் வயிறார உணவு உண்டு, களைப்பு நீங்கினர்.
பொற்கொல்லர் இல்லத்தில் உணவு உண்டுகளித்த நால்வரின் வசந்தனை தொழிலின் நிமித்தமாக அப்பொற்கொல்லரிடம் விட்டு, விட்டு ஏனைய மூவரும் வசந்தனிடம் பிரியா விடைபெற்றுச் சென்றனர்.
மூவரும் நெடுந்தொலைவு நடந்து சென்று, முல்லை என்னும் நகரத்தை அடைந்தனர். அந்நகரத்தின் கடைத் தெரு வழியே சென்றனர்.
அக்கடைத் தெருவில், மரத்தினால் செய்யப்பட்ட பலவிதமான அழகிய சிறிய பதுமைகளும், சிறந்த வேலைப்பாடுகளும் உடைய பெரிய மரச் சிற்பங்களும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கண்டு மகிழ்ந்தனர்.
மூவரில் கோபி என்பவன் இந்த வேலைப்பாடுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டான். "தன் தந்தையும் இவை போன்று மிகச் சிறந்த முறையில் மரச் சிற்பங்கள் செய்ய வல்லவர்' என்பதனை நினைத்து, சிறிது மனம் கலங்கினான். தான் இக்கலையை விரும்பிக் கற்காததை எண்ணி வெட்கமடைந்தான்.
அக்கலையைக் கற்க விரும்புவதாகவும், அந்நகரிலேயே தங்கி எவரிடமாவது தொழிற் பயிற்சி பெறப் போவதாகவும் தன் நண்பர்களிடத்தில் கூறினான். அவர்களும் அவன் விருப்பத்திற்கு இணங்கினர்.
அவர்களோ, விரைவில் ஒரு நல்ல தச்சுத் தொழில் கலைஞரைத் தேடி, அவரிடம் கோபியை தொழில் பயிலுவதற்காகத் தங்கச் செய்தனர்.
கோபி தச்சுத் தொழிற்சாலை பயிலுவதற்காக முல்லை நகரில் தங்கிவிடவே, இரண்டு நண்பர்கள் மட்டுமே மேற்கொண்டு அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் விரைந்து சென்று மற்றொரு நகரை அடைந்தனர்.
அந்நகரிலே நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்கியது. ரவி நெசவுத் தொழில் குடும்பத்தில் பிறந்தவனாதலால், அவ்வூரில் நெசவுத் தொழில் உயர்ந்து சிறந்து விளங்கியதைக் கண்டான். "இத்தகைய சிறந்த தொழிலைத் தான் கற்றுக் கொள்ளவில்லையே...' என்று எண்ணி வருந்தினான்.
அவ்வாறு வருந்திய ரவி அவ்வூரில் அத்தொழிலைக் கற்க விரும்பினான். அவனது தொழில் ஆர்வத்தைக் கண்ட முதியவர் ஒருவர், அவனைத் தம்மிடத்தில், வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.
ரவி நெசவுத் தொழிலைக் கற்கத் தங்கி விட்டதால், மது அவனிடம் விடை பெற்றுத் தனியாக பயணத்தைத் தொடர்ந்தான். தான் தனியே விடப்பட்டதைக் கண்டு மது சிறிது மனம் கலங்கினான்.
ஆயினும் தன் பயணத்தைத் தொடர்ந்து செய்தான். பல நாட்கள் நடந்து சென்றான். பல இன்னல்களுக்கிடையே ஒருநாள் காவிரியாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான்.
காவிரியாற்றங்கரையில் உள்ள ஓர் ஆலமரத்தில் மாணவர்கள் சிலர் உட்கார்ந் திருந்தனர். முனிவர் ஒருவர் அம்மாணவர் களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். மாணவர்கள் பணிவாகவும், அமைதியாகவும், கவனமாகவும் அம்முனிவரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மது அதைக் கண்டான். அக்காட்சியைக் கண்டதும் அவனுடைய ஊரிலே அவன் தந்தையார் பாடம் சொல்லித் தரும் காட்சி, அவன் மனதிலே சிறிது நேரம் தோற்றம் அளித்தது. அந்நினைவால் அவன் சிறிது நேரம் வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக அம்முனிவர், மது நின்று கொண்டிருந்த திசை பக்கம் திரும்பிப் பார்த்தார். அவன் நிற்பதைக் கண்டு அவனைத் தம் அருகில் அழைத்தார்.
மது சிறிது அச்சத்தோடும், மிக்க பணிவோடும் அம்முனிவர் அருகில் வந்து வணங்கி நின்றான்.
மது நடந்த விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறி, தனக்குக் கல்வி கற்றுத் தருமாறு அவரை மிகத் தாழ்மையுடன் வணங்கி வேண்டினான். அவனது வரலாற்றைக் கேட்டறிந்த அம்முனிவர், மிகவும் மனம் இரங்கினார். அவனுடைய பணிவான வேண்டுகோள் முனிவரின் உள்ளத்தை நெகிழச் செய்தது.
அதனால் அம்முனிவர், அவனைத் தம் மாணவனாக ஏற்றுக் கொண்டு கல்வி கற்பிக்கத் தொடங்கினார்; முறையாகக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்.
பனிரெண்டாண்டுகள் சென்றன- மது, தன் ஆசிரியராகிய அம்முனிவரிடத்தில் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். அம்முனிவர் அவனுடைய தேர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொண்டார். பிறகு அவனுக்குக் குருகுலத்தி லிருந்து விடுதலை அளித்து வாழ்த்துக் கூறி அனுப்பினார். மதுவும் அவரிடத்தில் பிரியா விடைபெற்றுத் தன் பெற்றோரைக் காண விரும்பித் திரும்பிப் புறப்பட்டார்.
மது புறப்பட்டு வரும் வழியில் தன் நண்பன் ரவியை காண விரும்பினான். அவனை ஏற்றுக் கொண்ட அம்முதியவர் இல்லத்துக்குச் சென்றான். அங்கு ரவியை கண்டு உரையாடினான். நண்பர்கள் இருவரும் தங்கள் அனுபவங்களையும், கற்ற கலைகளையும் பற்றிக் கலந்து உரையாடிக் களிப்புற்றனர்.
அந்நிலையில் ரவியும், மதுவும் சேர்ந்து தன் ஊருக்குத் திரும்ப விரும்பினர். தன் விருப்பத்தைத் தன்னை ஆதரித்த அந்நெசவாளியிடம் தெரிவித்து, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
விரைந்து சென்று கோபி இருந்த முல்லை மாநகரை அடைந்தனர். அங்கு கோபியைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தனர். கோபியும் தன் பெற்றோரைக் காண ஆவல் கொண்டு, அங்கிருந்து தன் நண்பர்களுடன் புறப்பட்டான். நண்பர்கள் மூவரும் சேர்ந்து புறப்பட்டுச் சென்று வசந்தன் இருந்த நகரை அடைந்தனர். வசந்தன் தன் நண்பர்கள் மூவரையும் கண்டு, அளவற்ற மகிழ்ச்சி கொண்டான்.
நண்பர்கள் நால்வரும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஒன்று சேர்ந்ததை எண்ணி மிகவும் மகிழ்ந்தனர். பின்னர் நால்வரும் தங்கள் ஊரை நோக்கி நடந்தனர். நண்பர்கள் நால்வரும் நடந்து சென்ற பொழுது வழியில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் தாங்கள் கற்ற கலையின் பெருமைகள் பற்றியும் பேசிக் கொண்டே சென்றனர்.
இரவு நெருங்கிய போது அவர்கள் ஒரு காட்டின் நடுவில் இருந்தனர். இனி தொடர்ந்து நடந்தால், காட்டு விலங்குகளால் தீங்கு நேரும் என்று எண்ணி, ஓர் அச்சமற்ற அமைதியான இடத்தில் தங்கிச் செல்லலாம் என்று முடிவு செய்தனர். அவ்வாறு தேடிய நால்வரும், ஓர் இடத்தைக் கண்டனர். காட்டு விலங்குகளின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள விரும்பி, "தீ' மூட்டினர்.
- தொடரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X