குளவி மண்ணால் கூடு கட்டி அதற்குள் முட்டையிட்டு மூடி விடுகிறது. பிறகு எப்படி அந்தக் கரு வளரும்?
குளவி, முட்டையை அப்படியே தனது பானைக் கூட்டுக்குள் விட்டு விடுவதில்லை. நிறைய ஏற்பாடுகளை செய்து விட்டுத் தான் முட்டையிடுகிறது. பானையை வனைந்து முடித்ததும், ஒரு பச்சை நிற புழுவை எங்கிருந்தோ கொண்டு வந்து பானைக்குள் திணித்து விடுகிறது. பின்னர் பின்பக்கமாகத் திரும்பி மயக்க மருந்து விஷத்தை செலுத்தி, புழுவின் உடலில் தன் முட்டைகளை இடுகிறது. முட்டை பொரிந்து, புழுவைத் தின்று முழுக் குளவியாகி, பானையின் மூடியை அகற்றி விட்டு வெளியேறுகிறது.
சூப்பர் ஐடியா குளவி.