வெண்மையாக இருக்கும் மேகங்கள் மழை பெய்யும் போது மட்டும் ஏன் கறுத்துப் போகிறது?
காற்று சூடாக இருக்கும் போது, அதற்கு அதிக அளவு ஈரப் பதத்தைத் தனக்குள் ஏற்றிக் கொள்ளும் பண்பு உண்டாகிறது. காற்று இரவில் குளிர்ந்து விடும் போது, பகலில் ஏற்றிக் கொண்ட ஈரத்தை தனக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் வெளியே கக்குகிறது. இதையே பனிப் பொழிவு என்கிறோம். மழைப் பொழிவும் அப்படித்தான். மேகம் சூடாக இருக்கும் போது நீர் அதில் ஆவி ரூபமாக இருக்கிறது. சூரிய ஒளியைப் பிரதிபலித்து அதனால் வெண்மையாகக் காட்சி தருகிறது. மழைக் காலங்களில் மேகம் குளிர்வதால், அதில் உள்ள ஈரம் ஆவி நிலையை விட்டு திரவரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது. மேகத்தில் உள்ள தூசிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு நீர் திவளையாக ரூபமெடுக்க ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் அதற்குச் சூரிய ஒளியை உறிஞ்சிக் கொள்ளும் பண்பு ஏற்படுவதால் கறுப்பாக நமக்குக் காட்சி தருகிறது.