கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2013
00:00

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி ப்ரோ என் கம்ப்யூட்டரில் உள்ளது. விண்டோஸ் 7 ப்ரோ பதிக்க விரும்புகிறேன். என் கம்ப்யூட்டரை இது போல அப்கிரேட் செய்திட, விண் 7 ப்ரோவிற்கான ப்ராடக்ட் கீ தேவைப்படுமா?
ஆர்.நல்லதம்பி, சிவகாசி.
பதில்:
நேரடியாக விண்டோஸ் எக்ஸ்பி யிலிருந்து, விண்டோஸ் 7க்கு மாற முடியாது. அப்கிரேட் செய்வது சாத்தியமில்லை. தனியாகத்தான் இன்ஸ்டால் செய்திட வேண்டும். உங்கள் பெர்சனல் பைல் அனைத்தையும் பேக் அப் செய்து கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் Windows 7 Easy Transfer Utilityஐப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 அப்கிரேட் பதிப்பு, ஏற்கனவே விண்டோஸ் கட்டணம் செலுத்திப் பதிந்தவர்களுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கலாம். விண்டோஸ் 7 ப்ரோ பதியும் போது, அதற்கான ப்ராடக்ட் கீ அவசியம் தேவை.

கேள்வி: நான் ஜிமெயில் பயன்படுத்துகிறேன். இதனைப் பயன்படுத்தி, கூகுள் ப்ளஸ் அக்கவுண்ட் திறந்தேன். ஆனால், பேஸ்புக், ட்விட்டர் போல இந்த சமூக இணையத் தளம் பயனில்லை என்பதாலும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்க மூன்று சேவைத் தளங்கள் தேவை இல்லை என்பதாலும், கூகுள் ப்ளஸ் அக்கவுண்ட்டினை நீக்க விரும்புகிறேன். ஆனால், ஜிமெயில் வேண்டும். இதற்கான வழி என்ன?
என்.ராஜ்குமார், மதுரை.
பதில்:
முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்தி, plus.google.com என்ற தளத்தில் நுழையவும். அடுத்து, உங்களின் சிறிய அளவு போட்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். இது வலது பக்கம் மேலாகக் கிடைக்கும். பின்னர், Account என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின், அந்தப் பக்கத்தின் கீழாகச் செல்லவும். இங்கு Account Management என்ற தலைப்பில் இரண்டு லிங்க் இருக்கும். அவை - "Delete profile and remove related Google+ features,” மற்றும் "Close account and delete all services and information associated with it.”. இதில் முதல் லிங்க், உங்கள் கூகுள் ப்ளஸ் ப்ரபைலை நீக்க உதவுகிறது. இரண்டாவது லிங்க் உங்களுடைய கூகுள் அக்கவுண்ட்டை முழுமையாக நீக்க தரப்பட்டுள்ளது. இரண்டாவதனைத் தேர்ந்தெடுத்தால், கூகுள் சேவைகளான, ஜிமெயில், யு ட்யூப் போன்றவற்றில் உள்ள உங்கள் அக்கவுண்ட்களும் நீக்கப்படும். எனவே, நீங்கள் Delete profile and remove related Google+ features என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்த திரைக் காட்சியில், உங்களிடம் நீங்கள் கூகுள் ப்ளஸ் அக்கவுண்ட்டில் உள்ள தகவல்களையும் நீக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி காட்டப்படும். இதன் வழி நீக்கிவிட்டால், அடுத்து உங்கள் ப்ரபைல் தேவைப்படும் வசதிகள் கிடைக்காது. இது சரி என்றால், இதற்கு சம்மதிக்கவும். சம்மதிக்க, deleting your account can't be reversed என்று உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். தொடர்ந்து Remove selected services என்பதனை அழுத்தவும்.

கேள்வி:நான் பல ஆண்டுகளாக ஜிமெயில் பயன்படுத்தி வருகிறேன். இதில் படங்களை அட்டாச் செய்திட முடிகிறது. ஆனால், மெயில் செய்தியிலேயே ஒட்டி அனுப்ப முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?
சா. முருகேசன், திருப்பரங்குன்றம்.
பதில்:
படங்களை செய்தியுடன் ஒட்டி அனுப்ப, சில செட்டிங்ஸ் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். உங்கள் கம்ப்யூட்டரில் அதனைக் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ளவும். ஜிமெயில் தளத்தைத் திறந்து, ஜிமெயில் அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அங்கு Labs என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு செட் செய்திட டூல்ஸ்கள் நீளக் கட்டங்களில் தரப்பட்டிருக்கும். இதில் "Inserting Images” என்ற டூல் கட்டத்திற்குச் செல்லவும். அருகில் உள்ள இரண்டு ஆப்ஷன்களில் "Enable” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அப்படியே கீழாகச் சென்று, "Save Settings” என்பதில் கிளிக் செய்திடவும். இனி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தால், அதில் போட்டோ மற்றும் படங்களை இணைக்க ஒரு பட்டன் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்து, பட பைல்களை மெயிலின் டெக்ஸ்ட்டுடன் இணைக்கலாம். நீங்கள் தர விரும்பும் குறிப்புகளைக் கீழாக எழுதலாம்.
நீங்கள் படம் ஒன்றைத் தேர்ந்தெடுது, உங்கள் ஜிமெயில் செய்திக் கட்டத்தில், Insert Image என்பதில் கிளிக் செய்தவுடன், உங்கள் ஜிமெயில் செய்தியில், கர்சரை எங்கு வைத்திருக்கிறீர்களோ, அங்கு ஒட்டப்படும். இந்த படத்தின் அளவை நீங்கள் விரும்பும் வகையில் சுருக்கலாம். அதற்கான ஹேண்டில் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது. அல்லது அந்த படம் எப்படி இருக்கலாம் என்பதற்கு ஜிமெயில் தளத்திலேயே Small, Medium, Large, and Original Size என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
சரி, நீங்கள் அனுப்பிய படத்தை உங்கள் நண்பரால் பார்க்க முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவர் இதனைக் காண முடியுமா? பழைய இமெயில் கிளையண்ட் பயன்படுத்தினால், நிச்சயம் படங்களைக் காண இயலாது. படத்திற்குப் பதில் ஒரு எக்ஸ் மார்க் அடையாளம் மட்டுமே கிடைக்கும். அவர் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் எச்.டி.எம்.எல். பார்க்கும் வகை இயக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை அவருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

கேள்வி: பிரவுசரில் ஜிமெயில் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்களைப் பார்த்து முடித்த பின்னர், அக்கவுண்ட்டை மூடாமல், பிரவுசரை மூடிவிட்டால், மற்றவர்கள் அதனைப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இது சாத்தியமா?
ஆர். திவ்யா பிரகாஷ், திருப்பூர்.
பதில்:
ஆம். சாத்தியம் தான். எடுத்துக் காட்டாக, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினை நீங்கள் லாக் அவுட் செய்திடாமல், அதாவது அக்கவுண்ட் குளோஸ் செய்திடாமல், பிரவுசரை மட்டும் மூடிவிட்டால், அடுத்த முறை அதே கம்ப்யூட்டரில் ஜிமெயில் தளம் சென்றவுடன், உங்கள் அக்கவுண்ட் தானாகத் திறக்கப்படும். ஏனென்றால், நீங்கள் பயன்படுத்திய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட், அங்கு நினைவில் வைத்திருக்கப்படும். நீங்கள் பயன்படுத்துகிற கம்ப்யூட்டரை நீங்கள் மட்டுமே, அல்லது உங்களுக்கு நம்பிக்கையான குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் எனில், அக்கவுண்ட்டினை மூடத்தேவை இல்லை. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுக்குத் தெரியாமல், தகவல்களைத் திருடும் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் இருந்தால், அது எளிதாக இதிலிருந்து மெயில்களை அனுப்பலாம் மற்றும் உங்கள் பாஸ்வேர்ட் உட்பட பல தனித் தகவல்களைத் திருடி அனுப்பலாம். எதற்கு பிரச்னை திவ்யா, முறையாக லாக் அவுட் செய்துவிடுங்களேன்.

கேள்வி: சில மாதங்களாக, விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதில் பின் நாளில் பிரச்னை ஏற்பட்டால், பயன்படுத்த ஒரு ரிப்பேர் சிடி ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என படித்தேன். இதனை எப்படித் தயார் செய்வது?
எம். சுப்புராஜ், டி.கல்லுப்பட்டி.
பதில்:
நல்ல முன் எச்சரிக்கை நடவடிக்கை சார்ந்த கேள்வி. பாரட்டுக்கள் சுப்புராஜ். நீங்கள் கட்டணம் செலுத்தி ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்கி இருந்தால், அதனைத் தங்களுக்கு வழங்கிய கடைக்காரர் இதனைத் தந்திருக்க வேண்டும். நீங்கள் இன்டர்நெட் வழியாக, சிஸ்டத் தினை டவுண்ட்லோட் செய்திருந்தால் இதற்கு வாய்ப்பில்லை. எனவே தான், விண்டோஸ் 7 சிஸ்டம் இதற்கான வழிமுறைகளைத் தருகிறது. இதனை எப்படி உருவாக்குவது என்று இங்கு காணலாம்.
Start>> All Programs>> Maintenance>> Create a System Repair Disc எனச் செல்லவும். சிடி ட்ரைவில் உள்ள சிடியைச் செக் செய்த பின்னர், உங்கள் சிஸ்டம், நீங்கள் கேட்டுக் கொண்ட சிடியினைத் தயார் செய்திடும். விண்டோஸ் 7 இயங்காமல் போகும் நிலையில், இதன் மூலம் சிஸ்டம் பூட் அப் செய்து, கம்ப்யூட்டரை இயக்கலாம்.

கேள்வி: நானும் என் மனைவியும் வீட்டு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். என் அலுவலகம் மற்றும் பெர்சனல் பைல்களை நான் வைத்துள்ளேன். என் மனைவி தனக்கான பைல்கள் மற்றும் என் குழந்தைகளுக்கான பைல்களை, போட்டோக்களை வைத்துள்ளார். சில வேளைகளில் இருவரும் ஒரே பைலைப் பல இடங்களில் வைக்கிறோம். இதனால், ட்ரைவ்களில் பைல்கள் குவிந்து கிடக்கின்றன. இவற்றை எப்படி சரி செய்வது?
ஆர். நாகராஜ், பொள்ளாச்சி.
பதில்:
உங்களுக்கு உதவுவதற்காகவே, இணையத்தில், WinDirStat என்ற பைல் கிடைக்கிறது. இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் தள முகவரி http://windirstat.info/. இதனை டவுண்லோட் செய்து,கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இயக்கவும். எந்த பைல்கள் அதிக இடம் பிடித்துள்ளன, தேவை இல்லாமல் தங்கும் ஸிப் பைல்கள், புரோகிராம்களை அழித்த பின்னரும் தங்கும் பைல்கள், பல ட்ரைவ்களில் தங்கும் ஒரே பெயர் கொண்ட பைல்கள் எனச் சீராக இது பட்டியல் இட்டுக் காட்டும். தேவையற்ற பைல்களை ரீ சைக்கிள் பின் தொட்டிக்குப் போகாமலும் அழிக்க வசதி உண்டு. ஒவ்வொரு வகை பைலும் ((MP3, ZIP, EXE, JPEG, etc.) ) ஒவ்வொரு வண்ணத்தில் காட்டப்படும். இதனால், அறிந்து இயக்குவது எளிதாகிறது.

கேள்வி: நாம் இணையத்தில் தேடும் தளங்கள் இல்லை என்று செய்தி வந்தால், அதனை கூகுளின் கேஷ் மெமரியில் இருந்து பெற முயற்சிக்கலாம் என்று சொல்கின்றனர். எப்படி அதனைத் தேடிப் பெறுவது?
ஆர். இஸ்மாயில், காரைக்கால்.
பதில்:
பொதுவாக கூகுள் தான் இன்டெக்ஸ் செய்திடும் இணைய தளங்களைத் தன் கேஷ் மெமரியில் வைத்திருக்கும். எனவே மேலே நீங்கள் தந்திருக்கும் பிழைச் செய்தி கிடைத்தால், கூகுள் சர்ச் பாக்ஸ் பெற்று, அதில் cache: எனக் கொடுத்து பின் உங்களுக்குக் கிடைக்க மறுக்கும் இணையதள முகவரியைத் தரவும். உங்கள் இணைய முகவரியில், அந்த தளத்தின் அடிப்படை முகவரிக்குப் பின், அதன் பக்கங்களுக்கான முகவரி பெயர் இருப்பின், அதனை நீக்கி விட்டு தளத்தின் பெயரை மட்டும் அமைத்துத் தேடிப் பார்க்கவும். தளம் கிடைத்தால் பின் அதில் நீங்கள் தேடும் அந்த குறிப்பிட்ட பக்கத்தைத் தேடலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X