நலம் தரும் நவராத்திரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2013
00:00

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூ பிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா
- சரஸ்வதி துதி

பெண் என்பவள் தாயாக, தாரமாக, சகோதரியாக, மகளாக, உற்ற தோழியாகப் பல பரிமாணங்களைக் கொண்டிருக்கும் சக்தியின் வடிவமானவள். öப் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அன்பு அரவணைப்பதில், வழி நடத்துதலில், ஒரு மந்திரியாய் இருந்து ஆலோசனைகள் வழங்குவதில், இன்பதுன்பவங்களில் பங்கெடுப்பதில், குடும்பத்தை விழுதாய் இருந்து தாங்கிப் பிடிப்பதில், நிர்வகிப்பதில், அதே சமயம் தவறு எனத் தெரிந்துவிட்டால், திருத்தி நல்வழிப்படுத்துவதும், மறுத்தால், வெகுண்டெழுவதும் அவளே. அதனால்தான் பெண்களைத் தெய்வமாக வணங்கி மரியாதை செய்யும் கலாசாரம் நம்நாட்டில் உள்ளது.

எத்தனையோ திருவிழாக்கள் வந்தபோதும் பெண்களுக்கே உரித்தான பண்டிகை, சக்தியை, அம்பிகையை விசேஷப் பூஜைகள் நடத்தி வழிபடும் ஒரு மாபெரும் பண்டிகை "நவராத்திரி' என்றால் அது மிகையில்லை.
புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி. அதன் இறுதியில் வருவது தசமி. அந்நாள் "விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் "ராம்லீலா' என்றும் வங்காளத்தில் தசரா என்றும் கொண்டாடப்படுகிறது.
மொழிகள் இடங்கள், மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும், அனைவரின் நோக்கமும் அன்னை பராசக்தியைப் பக்தி சிரத்தையுடன் வணங்கி, அவளருள் பெறுவது ஒன்றே ஆகும்.
அம்பிகையை முதல் 3 நாள்களில் வெற்றிதரும் துர்க்கையாகவும், இரண்டாவது 3 நாட்கள் செலவ சக்தி தரும் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாள்களில் சரஸ்வதியாகவும் (கல்விக்கடவுள்) பூஜை செய்கிறோம்.
நவராத்திரி தினங்களில் முறையே மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, ப்ராஹ்மி, நரசிம்மஹி, சாமுண்டி என்ற அவதாரங்களாக விளங்கித் தேவியவள் அருள்பாலிக்கிறாள். ஒன்பது நாட்கள் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், இறுதி மூன்று நாட்கள் அதாவது சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களில் வழிபாடு செய்யலாம்.
துர்க்கையானவள் (துன்பங்களைப் போக்குபவள்) எட்டு சக்தி ரூபங்களையும் அனுப்பி அசுரனை அழிக்க முயன்று தோல்வியடையவே, ஒன்பதாம் நாள் சாமுண்டீஸ்வரி ரூபத்தில் மகிஷாசுரனை வதம் செய்தவள் எனக் கூறப்படுகிறது. அந்த வெற்றி நாள் தான் "விஜய தசமி' எனவும் மகிஷாசுரனைக் கொன்றதால் "மகிஷாசுரமர்த்தினி' என்ற பெயருக்கு உரியவளாகிறாள்.
இத்தினங்களில் "கொலு' வைக்கும் வழக்கம் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. நிறைந்த அமாவாசை நாளன்று மாலையில் கொலு வைக்க வேண்டும். வீட்டில் பெரிய அறையாகத் தேர்ந்தெடுத்து நீரால் அலம்பிச் சுத்தம் செய்து செம்மண் கோலமிட்டு அதன்மேல் கொலுப்படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். 3, 5, 7, 9 என்ற ஒற்றைப் படை வரிசையில் படிகள் அமைக்க வேண்டும். அதன்மேல் அவரவர் ரசனைக்கு ஏற்றாற்போல் வெள்ளைத்துணி அல்லது வண்ணத்துணியை விரித்தோ அல்லது வண்ணத்தாள்களை ஒட்டியோ அலங்கரிக்கலாம். (வண்ணத்துணியாக இருந்தால், அடர்நிறமாக இல்லாமல், இளமஞ்சள், இளம் பச்சை, இளம்சிவப்பு போன்ற நிறங்களில் துணிகளை விரித்தால் கொலு பொம்மைகள் எடுப்பாக, அழகாகத் தெரியும்.)
முதல்படியில் வண்ண நூல் சுற்றிய சிறு குடம் அல்லது செம்பினை வைத்து, அதனுள் பச்சரிசியை இடலாம் அல்லது வாசனைத் திரவிய நீரை ஊற்றலாம். அதன்மேல் தேங்காயை வைக்க வேண்டும். குடம், தேங்காய் இரண்டிற்கும் சந்தன குங்குமப் பொட்டுவைத்து, மலர்மாலை அல்லது நகைகள் போன்றவற்றையும் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வரலட்சுமி முகம் இருந்தால், அதைக் கும்பத்தின்மேல் வைத்தால் இன்னும் சிறப்பு.
கொலுப்படிகளில் ஆண் பெண் உருவங்கள், தசாவதார பொம்மைகள், தெய்வ உருவப் பொம்மைகள், புராணக் கதைகளை விளக்கும் பொம்மைகள் போன்ற பலவிதமான, கலாசாரத்தையும், கலையார்வத்தையும் பொம்மைகளாக வைக்கலாம். அலங்கார வண்ணச்சர விளக்குகளையும் சிலர் பொருத்துவர்.
வண்ணப் பொடிகளால் கோலமிடுவர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான சுண்டல், பயறு வகைகள், பாயாசம் போன்றவை தயார் செய்து அன்னைக்குப் படைப்பர். 9 நாள்களும் பெண்கள், குழந்தைகளை அழைத்து வெற்றிலை பாக்கு, பூ, பழம், சுண்டல், வளையல், சந்தனம், குங்குமம், ரவிக்கைத்துண்டு ஆகியவற்றை வழங்கி மகிழ்வர். வீட்டுக்கு வருவோரைத் தெய்வப்பாடல்கள் பாடச் செய்தும், சிறுமிகளை நாட்டியமாடச் செய்தும் கண்டுகளிப்பர். காலை மாலை இரு வேளைகளிலும் கொலுவிற்கு ஆரத்தி எடுத்து பூஜை செய்தல் வேண்டும்.
கொலுவின் நோக்கமே, பூஜை செய்வதோடு நம்மிடம் உள்ள திறமைகளும், கலையார்வமும் வெளிப்படுவதோடு, ஒருவருக்கொருவர் அளவளாவி, அன்பைப் பரிமாறிக் கொள்வதால், ஆரோக்கியமான மனநலனும், உறவும் ஏற்படும்.
ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை. சரஸ்வதி படம் அல்லது சிலையை வைத்த மலர்மாலைகளால் அலங்கரித்துப் பொரிகடலை, சுண்டல், பழவகைகள் ஆகியவற்றைப் படையலிடுவர். கலைகளுக்கும் கல்விக்கும், கல்வி பெற்று நாம் செய்யும் தொழிலுக்கும் தாயானவள் வீணை சுமந்து வீற்றிருக்கு" கலைவாணி என்பதால், புத்தகங்கள், அலுவலகக் கோப்புகள், பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவற்றிற்குப் பொட்டிட்டு தெய்வத்தின் முன் வைத்த, செய்யும் தொழில் வளரவும், கற்கும் கலைகள் தழைக்கவும் வேண்டிப் பூஜை செய்வர்.
அடுத்த நாளான விஜயதசமி அன்று முதல் நாள் பூஜையில் வைத்த பொருள்களெல்லாம் திரும்பவும் ஆரத்தி எடுத்து புத்தகம் மற்று பொருட்களை, எடுத்து உபயோகப்படுத்துவார்கள்.
புதிதாகச் சங்கீதம், நடனம் கற்றுக் கொள்வோர் அதற்குரிய குருவிற்குத் தேங்காய், தட்சிணை, பூ, பழவகைகள் தந்து வகுப்புகளில் சேர்ந்து கொள்வர். கொலு வைத்திருப்பவர்கள் விஜயதசமி நாளன்று, ஆரத்தி பூஜை செய்து பொம்மைகளை உறங்கச் செய்வர்.
வடமாநிங்களில் பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களை அம்பிகையாகப் பாவித்து, அவர்களைப் பூஜித்து பூரி, கேசரி, தட்சணை ஆகியவற்றை வழங்குவர்.
ராவணனை ராமர் வதம் செய்யும் ராமலீலா என்ற நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெறும். கோபம், குரோதம், ஆணவம் ஆகிய தீய எண்ணங்களை அழிக்கும் விதமாக ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் மிக உயர்ந்த உருவப் பொம்மைகளை, ராமர் வேடமிட்டவர் மூலம் அம்பிடச் செய்து, கொளுத்தி அழிப்பர். பெருந்திரளான மக்கள் "ராம்லீலா'வையும், வாண வேடிக்கைகளை கண்டு மகிழ்ந்து இல்லம் திரும்புவர்.

- ஜோதி பெருமாள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X