கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2010
00:00

கேள்வி: ஆர்.ஏ.ஆர் (RAR) ) என்ற துணைப்பெயருடன் கொடுக்கப்படும் சுருக்கப்பட்ட பைல்களை ஏன் விண்டோஸ் அல்லது விண் ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை? இவற்றைத் திறக்க எந்த சாப்ட்வேர் தேவை?  --டி.முருகேசன், திண்டுக்கல்
பதில்: RAR  துணைப்பெயருடன் உள்ள பைல்களும் ஸிப் பைல்களைப் போலச் சுருக்கித் தரப்படும் பைல்கள் தான். ஆனால் பைல்களைச் சுருக்குவதற்கு, விண்ஸிப் சாப்ட்வேர் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஆர் ஏ ஆர் பைல்களில் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் தான் அவற்றை விண்டோஸ் அல்லது விண்ஸிப் கொண்டு திறக்க முடியவில்லை. இவற்றைத் திறக்க விண் ஆர்.ஏ.ஆர். சாப்ட்வேர் வேண்டும். இதனை http://www.rarlab.com/ என்ற இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி கிடைத்தாலும், தொடர்ந்து இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம்.  அல்லது  7Zip என்ற சாப்ட்வேர் மூலமாகவும் இந்த பைல்களை விரிக்கலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை http://downloads. sourceforge.net/ sevenzip/7z457-x64.msi என்ற தளத்திலிருந்து இறக்கிப் பதிந்து கொள்ளுங்கள். அல்லது இணையத்தில் உள்ள சில தளங்களுக்கு, (எ.கா.  http://www.wobzip .org/)   சுருக்கப்பட்ட பைல்களை அனுப்பி, விரித்துப் பெறும் வசதியைத் தரும் தளங்களின் முகவரிகளுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால், சில வேளைகளில், நான் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில், யாரோ ஒருவர் என் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிப்பதாகக் காட்டி, சில எண்களின் தொகுப்பினைக் காட்டுகிறது. இது யாருடைய இணைய அடையாள எண் என எப்படிக் கண்டறிவது? நான் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். –கா. நமசிவாய கார்த்திக், கூடலூர்
பதில்: Start அழுத்திப் பின் Run  பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் cmd  என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டாஸ் திரை கிடைக்கும். இதில் உங்கள் கட்டளைக்காக ஒரு புள்ளி அல்லது சிறு கோடு துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம். அங்கு   nslookup என்று டைப் செய்து தொடர்ந்து ஒரே ஒரு இடைவெளியிட்டு, உங்கள் பயர்வால் கொடுத்த எண்ணை டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது அதற்கான தளத்தின் பெயர் கிடைக்கும்.  பின் இந்த தளம் சென்று, நீங்கள் அனுமதிக்கக் கூடிய தளம்தானா என உறுதி செய்து கொள்ளலாம்.
கூடுதலாக ஒரு செய்தி சொல்லட்டுமா! இப்போது செய்ததைபின் நோக்கியும் செய்து பார்க்கலாம். nslookup  என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் இடைவெளியிட்டு, உங்களுக்குத் தெரிந்த ஓர் இணைய தள முகவரியை அமைத்து என்டர் தட்டவும். இப்போது அந்த இணைய முகவரிக்கான டிஜிட்டல் எண் கிடைக்கும்.  விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், “Command”  (மேற்கோள் குறிகள் இல்லாமல்)என சர்ச் பாக்ஸில் டைப் செய்தால், டாஸ் பக்கம் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து, பிரவுஸிங் செய்கையில், இன்டர்நெட் பக்கங்களின் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பிரவுசராகப் பயன்படுத்துகிறேன். வெப்சைட் காட்டப்படும் எழுத்தின் அளவி நிரந்தரமாக மாற்ற என்ன வழி? -கா. சி. முருகானந்தம், மதுரை
பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, இணையப் பக்கங்களை ஸூம் செய்து, பெரிய எழுத்துக்களில் பக்க எழுத்துக்களை அமைக்க வழி தருகிறது. இது நாமாக பக்க எழுத்துக்களை பெரிதாகவும் சிறிதாகவும், அவ்வப்போது அமைக்கும் வழி. இதனுடனாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, நீங்கள் கேட்டுள்ளபடி, தானாகவே பெரிய எழுத்தாகக் காட்டச் செய்யும்படி அமைக்கவும் முடியும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறந்து இயக்கவும். Tools  கிளிக் செய்து அதில் Internet Options  என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.  Appearance  என்ற டேப்பின் கீழ் Fonts என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் அளவில் பாண்ட் அளவைக் கிளிக் செய்து ஓகே தட்டி வெளியே வரவும். இனி நீங்கள் அமைத்த பெரிய அளவிலான எழுத்துடன், இணையப் பக்கங்கள் காட்டப்படும்.  ஸூம் செய்திடும் முறை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே, மவுஸின் வீலை முன் புறமாக உருட்டினால், பக்க எழுத்துக்கள் பெரிதாகும். கீழாக உருட்டினால், சிறிதாகும்.

கேள்வி: என்னுடைய பேவரைட் தளப்பட்டியல் பெரிதாக உள்ளது. இதில் குறிப்பிட்ட தளத்தினை எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில், அகரவரிசைப்படுத்த முடியுமா? –சி.மாணிக்க வேல்,  மதுரை
பதில்: கம்ப்யூட்டரில் எந்தப் பட்டியலையும் அகரவரிசைப் படுத்த முடியும். நீங்கள் உங்கள் பிரவுசர் எது என்று கூறாததால், பெரும்பான்மையோர் பயன்படுத்தும் பிரவுசர்களில் இதனை எப்படி மேற்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம். இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். பேவரைட்ஸ் என்பதில் கிளிக் செய்தால், அந்த மெனு விரிந்து கொடுக்கும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது லிங்க்கில், ரைட் கிளிக் செய்திடவும். இதில் விரியும் மெனுவில் பல செயல்பாடுகளுக்கான பிரிவுகள் கிடைக்கும். இவற்றில்  Sort by Name  என்பதில் கிளிக் செய்திடுங்கள். உங்களுடைய Favourites  தளங்கள் அனைத்தும் அகரவரிசைப்படுத்தப்படும்.
உங்களுடைய பிரவுசர் மொஸில்லா பயர்பாக்ஸ் என்றால், அதனை இயக்கி, View என்பதில் இடது கிளிக் செய்திடவும். அதன் பின் Sidebar, Bookmarks    எனச் செல்லவும். Sidebar ஐக் கிளிக் செய்தால் Bookmarks  மெனு கிடைக்கும். அதில் ரைட் கிளிக் செய்தால், மீண்டும் ஒரு மெனு கிடைக்கும். இதில் Sort by Name  என ஒரு பிரிவு இருக்கும். இதில் லெப்ட் கிளிக் செய்திடவும். Bookmarks மெனுவினை விரித்து, அதன் இடது பக்கத்தில் உள்ள + அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரினைப் பயன் படுத்துகிறீர்களா! இங்கு சற்று வித்தியாசமான முறையில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பிரவுசரை  இயக்கிக் கொள்ளவும்.  வலது மூலையில் குழாய் ரிப்பேர் செய்திடும் சாதனப் படம் ஒன்று காட்டப்படும். அதனை லெப்ட்  கிளிக் செய்திடவும். பின்னர், Bookmark Manager  என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு புதிய டேப் திறக்கப்படும். இந்த டேப்பின் இடது பக்கம் சைட் பார் ஒன்று கிடைக்கும். இதில் உள்ள   Bookmark Manager –ல் ரைட் கிளிக் செய்தால், Reorder Items என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்தால், புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப் படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: phishing  என்று அடிக்கடி கேள்விப் படுவதன் சரியான பொருள் என்ன? எடுத்துக் காட்டுடன் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.   – ஆர். சின்னப்பராஜ் சேவியர்,  புதுச்சேரி
 பதில்: நல்ல கேள்வி. பலருக்கு இந்த பதில் பயன்படும்.  கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க சிலர் செய்திடும் சில்மிஷத்திற்கு இந்த பெயர் வைத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக உங்களுக்கு மின்னஞ்சல் கடிதம் ஒன்று வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர்களை நாங்கள் இலவசமாகச் சோதனை செய்து எடுத்துத் தருகிறோம். அதுவும் இலவசம் என்று பிரபலமான மைக்ரோசாப்ட் அல்லது நார்டன் ஆண்டி வைரஸ் தளத்திலிருந்து செய்தி போன்று வரும். குறிக்கப்பட்டிருக்கும் இணைய தளத்தின் முகவரியும் அதே நிறுவனங்கள் முகவரிகளாகத் தெரியும். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் அதில் கிளிக் செய்திடுகையில் நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப் படுவீர்கள். அங்கு சென்றவுடன் உங்கள் கம்ப்யூட்டரை உங்களுக்குத் தெரியாமலேயே  அவர்கள் அடிமைப்படுத்துவார்கள். உங்கள் மானிட்டரை கருப்பாக்கி மகிழ்வார்கள்.  இதற்குப் பல வழிகளைக் கையாளுவார்கள். இதற்குத்தான்   phishing என்று பெயர்.  Fishing  என்றால் மீன் பிடித்தல்; தூண்டில் போட்டு மீனைச் சிக்க வைப்போம். இங்கு கம்ப்யூட்டரில் உங்களுக்கு ஆசை காட்டி, உங்கள் கம்ப்யூட்டரைப் பிடிப்பதற்கு பெயர் phishing.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விவேகப்ரியன் - UAE,இந்தியா
16-செப்-201011:46:03 IST Report Abuse
விவேகப்ரியன் நவாஸ் அவர்களுக்கு வணக்கம். கேள்வி : எனது கணினியில் conflict வித் தி அதர் சிஸ்டம் ip on தி நெட்வொர்க் என்று வருகிறது பதில்: 1) Go to Start and click on Control Panel. 2) Control Panel window will appear. Double click on Network Connections. 3) Network Connections window will appear. Right click correct Local Area Connection by identifying correct network card and click Properties. 4) Select Internet Protocol (TCP/IP). Click on Properties. 5) Obtain an IP address automatically and Obtain DNS server address automatically.
Rate this:
Share this comment
Cancel
Rangasami - chennai,இந்தியா
14-செப்-201010:02:14 IST Report Abuse
Rangasami உங்கள் நெடு நாளைய வாசகன் பல கட்டுரைகளில் நீங்கள் எழுதும் ஆங்கில சொற்கள் தமிழ் எழுத்துகள் மேல் அமைந்து வருகிறது. படிக்க முடிவதில்லை. கரணம் என்ன.
Rate this:
Share this comment
Cancel
ஷா நவாஸ் - madurai,இந்தியா
14-செப்-201009:09:21 IST Report Abuse
ஷா நவாஸ் எனது கணினியில் conflict வித் தி அதர் சிஸ்டம் ip on தி நெட்வொர்க் என்று வருகிறது .உதவவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X