கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 அக்
2013
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இதில் தேதி காட்டப்படும் இடத்தில், அதற்கான கிழமையும் காட்டப்பட விரும்புகிறேன். இதற்கான செட்டிங் என்ன என்பதனை விளக்கவும். எங்கு இருக்கிறது என்பதனையும் கூறவும்.
இ.ராமகிருஷ்ணன், திண்டுக்கல்.
பதில்:
விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் பாரில், தேதியை மாற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன. இதனுடன் கிழமையும் காட்டப்பட, கீழாக, டாஸ்க் பாரில் வலது மூலையில், நேரம் காட்டப்படும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் "Change date and time என்பதிலும் இடது புறம் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் "Change calendar settings” என்பதில் இடது கிளிக் செய்திடவும். அடுத்துள்ள Short Date பாக்ஸில் உள்ள டெக்ஸ்ட்டை dddd M/d/yyyy என மாற்றவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து திறந்த அனைத்து விண்டோக்களையும் மூடவும்.
இங்கு dddd என்பதை அமைத்தால், கிழமை முழுமையாகக் (Monday) காட்டப்படும். அதனை ddd என அமைத்தால், கிழமை சுருக்கமாகக் (Mon) காட்டப்படும்.

கேள்வி: என் ஜிமெயில் அக்கவுண்ட்டில், பலரின் அஞ்சல் முகவரிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்துவது இல்லை. இவை இருப்பது தேவையற்ற ஒன்றாகும். இவற்றை எப்படி நீக்குவது?
ச. முகேஷ் ராஜ், தாம்பரம்.
பதில்
: ஜிமெயில் அட்ரஸ் புக்கிலிருந்து மின் அஞ்சல் முகவரிகளை நீக்குவது மிக எளிது, முகேஷ். முதலில், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் பக்கத்தில், இன்பாக்ஸிலிருந்து, காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு மாறவும். இதற்கு, உங்கள் திரையின் இடது பக்கம் உள்ள GMAIL என்பதன் அருகே உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு மாறியவுடன், முகவரிக்கான பெயர்கள் அருகே, செக் பாக்ஸ் ஒன்று தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். எவற்றையெல்லாம் நீக்க வேண்டுமோ, அவற்றின் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். அடுத்து, காண்டாக்ஸ் பட்டியலின் மேலாகப் பார்த்தால், அங்கு சில ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதில் DELETE CONTACT என்கிற ஆப்ஷன் இருப்பதையும் காணலாம். இதில் கிளிக் செய்தால், டிக் செய்த அனைத்து முகவரிகளும் நீக்கப்படும்.

கேள்வி: டிஸ்க் பார்மட்டிங் என்பது அவ்வளவு முக்கியமான ஒன்றா? டிஸ்க்கில் உள்ள டேட்டாவினை அழிப்பதற்கு, இந்த பார்மட்டிங் வேலையைப் பயன்படுத்தலாமா?
எஸ். ஜூலியா சந்திரா, சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. இந்தக் கேள்வி மூலம் பலரின் மனச் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கலாம். டிஸ்க் பார்மட்டிங் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்த, ஒரு டிஸ்க் அல்லது ஏதேனும் ஒரு ஸ்டோரேஜ் மீடியத்தினைத் தயார் செய்வதாகும். இதில் மூன்று வகை செயல்பாடுகள் உள்ளன. முதலாவதாக, லோ லெவல் பார்மட்டிங் (lowlevel format). இது மீடியாவைப் பயன்படுத்தத் தயார் செய்கிறது. அடுத்த நிலையில், அந்த மீடியா அல்லது டிஸ்க், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாக அமைக்கப்படுகிறது. மூன்றாவதாக, ஹை லெவல் பார்மட் மேற் கொள்ளப்படுகிறது.இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பைல் வகை சிஸ்டம் (FAT32 அல்லது NTSF) இந்த மீடியாவிற்கென தரப்படுகிறது.
பொதுவாக, டிஸ்க் ஒன்றினை பார்மட் செய்தால், அதில் உள்ள பைல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்று நாம் எல்லாரும் எண்ணுகிறோம். அது தவறு. பார்மட் செய்யப்படுகையில், ஏற்கனவே உள்ள பைல்களின் பைல் ஹெடர்கள் மற்றும் பிற குறியீடுகள் மட்டுமே நீக்கப்படுகின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம், இந்த நீக்குதல் நடவடிக்கை, இங்கே பைல்களை எழுத இடம் உள்ளது என அறிவிக்கிறது. மேலும் இதில் பைல்கள் எழுதப்படாத வரையில், ஏற்கனவே இருந்த பைல்களை அதற்கான பாதுகாப்பான டூல்கள் கொண்டு மீட்டுவிடலாம்.

கேள்வி: நான் என் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் விண்டோ விஸ்டா பயன்படுத்துகிறேன். இதனைக் கட்டாயமாக விண்டோஸ் 7 அல்லது 8க்கு மாற்ற வேண்டுமா? அதில் என்ன கூடுதல் பயன் கிடைக்கும்? என்னால், இனிமேல், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்படுத்துவது குறித்து தனியே கற்றுக் கொள்ள முடியாது.
என். சுகவனம், திருத்தங்கல்.
பதில்:
பலர் விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தினை வெறுத்தாலும், உங்களைப் போன்ற சிலர் இன்னும் அதனையே விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர். உங்களைப் போலவே தான் நானும். இந்த சிஸ்டம் நன்றாகவே இயங்குகிறது. அனைத்து பயன்களும் கிடைக்கின்றன. விண்டோஸ் விஸ்டா, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை, உங்கள் திருப்திக்கேற்ற வகையில் செயல்படுத்துகிறது என்றால், மற்றவற்றிற்கு மாற வேண்டியதே இல்லை. ஆனால், உலக அளவில் 4 சதவீத கம்ப்யூட்டர்களே, இதனைப் பயன்படுத்தி வருகின்றன என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த சிஸ்டத்திற்கு, வரும் 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் வரை சப்போர்ட் வழங்கும். விண்டோஸ்7 சிஸ்டத்திற்கு, ஜனவரி 2020 வரை சப்போர்ட் கிடைக்கும்.
ஆனால், நான் பயன்படுத்தும் மற்ற கம்ப்யூட்டர்களுடன் ஒப்பிடுகையில், விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டாவினைக் காட்டிலும் வேகமாக இயங்குகிறது என்பதை இங்கே கூறியாக வேண்டும். விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்த, தனியே எதனையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அதுவும் ஏறத்தாழ விண்டோஸ் விஸ்டா போலவே தான். விண்டோஸ் 8 கூட, புதிய இண்டர்பேஸ் கொண்டிருந்தாலும், விண்டோஸ் 7 போல செயல்படுத்த முடியும். எனவே, புதியதாகக் கற்றுக் கொள்ள வேண்டுமே என்ற பயத்திற்காகத்தான், விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 பக்கம் போகவில்லை என்று நீங்கள் முடிவெடுத்திருந்தால், மாற்றிக் கொண்டு சிஸ்டத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்.
வழக்கம் போல, இன்னொன்றையும் இங்கு கூற விரும்புகிறேன். மைக்ரோசாப்ட் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான தன் சப்போர்ட்டினை வரும் ஏப்ரல் 2014 உடன் நிறுத்திக் கொள்ள இருக்கிறது. எனவே, நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை என்னதான் விரும்பினாலும், அதனை மாற்றிக் கொள்வதே நல்லது.

கேள்வி: ஹார்ட் டிஸ்க்கில், மிகவும் ரகசியமாக ஓர் இடம் அமைத்து அதனை Host Protected Area என அழைப்பதாகவும், இதில் தகவல்களை மிக ரகசியமாக பதிந்து வைக்கலாம் எனவும் படித்தேன். இது உண்மையா?
எஸ். புனிதா, மதுரை.
பதில்:
படித்த நூலிலேயே இதனை உறுதி செய்திருக்கலாமே. இருப்பினும், அனைவரும் அறிய இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி.
ஹார்ட் டிஸ்க்கில், ஸ்பெஷலாகப் பார்மட் செய்யப்பட்டு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழி சென்றால், தெரியாத வகையில் அமைக்கப்படும் இடமே Host Protected Area ஆகும். இந்த இடத்தினை, பயாஸ் (BIOS) மெனு மூலமே அணுக முடியும். இந்த இடத்தைப் பல செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம். நீங்கள் கூறுவது போல, ரகசியத் தகவல்களைப் பதிந்து வைக்கலாம். திருடப்படும் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கண்டறிய தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதிந்து வைக்கலாம். கம்ப்யூட்டர்களைத் தயாரிப்பவர்கள், அவர்கள் பயன்படுத்தத் தேவையான புரோகிராம்களை இதில் அமைத்துக் கொடுக்கலாம். ஆனால், பெரும்பாலும், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முடங்கிப் போகையில், தேவைப்படும் ரெகவரி சாப்ட்வேர் புரோகிராம்களே இதில் பதியப்படுகின்றன.
இப்போது கம்ப்யூட்டர் விற்பனை செய்பவர்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் இன்ஸ்டால் செய்வதற்கான சிடிக்களை எல்லாம் தருவதில்லை. அதற்குப் பதிலாக, இந்த இடத்தில் தேவையான ரெகவரி சாப்ட்வேர் புரோகிராம்களை அமைத்துத் தருகின்றனர். இந்த புரோகிராம்களை, பயாஸ் மெனு மூலம் பெற்று பயன்படுத்தலாம்.

கேள்வி: ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். இதில் Sneak Peek என்று ஒரு வசதி உள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தி, மெசேஜை, மெயில் திறக்காமல் பார்க்கலாம் என்றும் படித்தேன். இதனை என்னால் பெற முடியவில்லை. இதற்கான வழி என்ன?
தே. முத்துவேல், புதுச்சேரி.
பதில்:
ஜிமெயில் Message Sneak Peek என ஒரு வசதியைத் தருகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டு, மெசேஜ் மீது ரைட் கிளிக் செய்திட வேண்டும். அப்போது மெசேஜ் காட்டப்படும். அத்துடன் மெனு ஒன்று கிடைக்கும். இதன் மூலம், அந்த இமெயில் செய்தியை ஆர்க்கிவ் அனுப்பலாம்; அழிக்கலாம்; படித்துவிட்டதாக குறிக்கலாம். எவ்வளவு வசதி! சரி, இதனை எப்படி அமைப்பது என்பதுதானே உங்கள் கேள்வி. ஜிமெயில் தளத்தில், மேல் வலது பக்கத்தில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர், Mail settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Labs என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு காட்டப்படும் கட்டங்களில், கீழாகச் செல்லவும். இதில் Message Sneak Peek என்று இருப்பதைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும். இங்கு Enable என்ற கட்டத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர், இறுதி வரை சென்று Save Changes என்பதில் கிளிக் செய்திடவும். இனி, மீண்டும் இன்பாக்ஸ் சென்று, ஏதேனும் ஒரு மெசேஜ் மீது, ரைட் கிளிக் செய்து நீங்கள் விரும்பியபடி, செய்தியின் முன்னோட்டத்தினைக் காணவும். இதுதான் நீங்கள் குறிப்பிடும் வசதி.

கேள்வி: டாகுமெண்ட் ஒன்றை வேர்டில் தயாரிக்கையில், அது உருவான நாளை எப்படி நாம் என்றும் காணும்படி அமைக்க முடியும். தானாக அது அமைக்கப்பட வேண்டும்.
கா. திண்ணப்பன், சிவகங்கை.
பதில்:
இது பலரின் தேவை என எண்ணுகிறேன். ஏனென்றால், எப்போது ஒரு டாகுமெண்ட் உருவானது என்று அறிந்தால், அதற்கேற்ப, அதில் அடங்கிய தகவல்களை எடுத்துக் கொள்ளலாம்; அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்த வசதியை ஏற்படுத்த, குறிப்பிட்ட டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் Insert மெனு கிளிக் செய்து அதில் Field என்பதைத் தேர்ந்தெடுங்கள். இப்போது Field டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Field Names என்று ஒரு பெட்டி இருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லுங்கள். அங்கு Create a Date என்று ஒரு பீல்டு காட்டப்படும். இதனைத் தேர்வு செய்தால் உடன் எந்த பார்மட்டில் தேதி காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்திட பல பார்மட்கள் வரிசையாகக் காட்டப்படும். இதில் கிழமையுடன் கூடிய தேதி பார்மட்டும் இருக்கும். நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், அந்த டாகுமெண்ட் உருவாக்கபப்ட்ட முதல் நாள், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் சேர்க்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X