மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டவர்களுக்கு, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறது. இதனைத் தானாக அப்டேட் செய்திடும் முறையிலும் அமைக்கலாம். இதற்கான காலத்தை இரண்டாண்டுகள் என அறிவித்துள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பல வசதிகளை, சிஸ்டம் 8.1ல், மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இருப்பினும், பலர் விண்டோஸ் 8 சிஸ்டத்திலேயே தொடர விரும்புவார்கள். இவர்களுக்காகவே இந்த கால அவகாசம் அதிக அளவில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான, மைக்ரோசாப்ட் சப்போர்ட் முடியும் வரை, இதன் வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 8.1.க்கு மாறிக் கொள்ளலாம். வரும் 2015 அக்டோபர் 18 அன்று, விண்டோஸ் 8க்கான சப்போர்ட் முடிவடையும்.
விண்டோஸ் 8.1க்கான சப்போர்ட், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 வரை கிடைக்கும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.