கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2013
00:00

கேள்வி: நான் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதில் ஹைபர்னேட் பிரிவு மறைந்துவிட்டது. ஆனால், என் நண்பர், ஹைபர்னேட் மற்றும் ஸ்டேண்ட் பை என இரண்டிற்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை என்றும், ஹைபர்னேட் இல்லாதது குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் கூறுகிறார். இது சரியா?
என். கந்தஸ்வாமி, தென்காசி.
பதில்:
விண்டோஸ் எக்ஸ்பிக்கான ஹைபர்னேட் ஆப்ஷன், சர்வீஸ் பேக் 2 வந்த பின்னர் மறைந்துவிட்டது. அதனால், அது இனிமேல் கிடைக்காது என்பதல்ல. விரும்பினால், அமைத்துக் கொள்ளலாம். இதனைத் திரும்பப்பெற, ஸ்டார்ட் மெனுவில், "Turn Off Computer” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது ஷட் டவுண் ஆப்ஷன்ஸ் அனைத்தும் காட்டப்படும். இப்போது மூன்று ஆப்ஷன் கிடைக்கும். இந்த சமயத்தில், ஷிப்ட் கீயை அழுத்தவும். இது ஸ்டேண்ட் பை ("Standby”) என்பதனை ஹைபர்னேட் ("Hibernate”) என மாற்றும்.
ஷிப்ட் கீ அழுத்துகையில் ஹைபர்னேட் பட்டன் தெரியவில்லை என்றால், கேன்சல் கிளிக் செய்து, பின்னர் கண்ட்ரோல் பேனலைப் பெறவும்.இதில் "Power Options” ஐகானில், டபுள் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் பவர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், ஹைபர்னேட் டேப்பிற்குச் செல்லவும். இங்கு "Enable Hibernation” என்பதன் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். அடுத்து "Apply” பட்டன் அழுத்தவும். இனி, முன்பு போல சென்று, ஷிப்ட் கீயை அழுத்தி ஹைபர்னேட் ஆப்ஷன் பெறலாம். ஹைபர்னேட் மற்றும் ஸ்டேண்ட் பை ஆப்ஷன்களுக்கிடையே, பெரிய அளவில் வேறுபாடு இல்லை. இந்த நிலைகளை மேற்கொள்கையில், எங்கு டேட்டா எழுதப்படுகிறது என்பதுவும், எவ்வளவு மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது என்பதுவுமே வேறுபாடாகும்.

கேள்வி: ஸ்மார்ட் (SMART) என்பது என்ன அளவையைக் குறிக்கிறது? கம்ப்யூட்டர் ப்ராசசர் இயங்கும் வேகம் குறித்ததா?
என். சாந்தகுமார், தேவாரம்.
பதில்
: நல்ல கேள்வி. தப்பான அனுமானங்கள் பல கொண்டுள்ளீர்கள். ஸ்மார்ட் என்பது, Self Monitoring, Analysis, and Reporting Technology என்பதன் சுருக்கமாகும். புதிய ஹார்ட் ட்ரைவ்களில் இணைந்தே கிடைக்கும் ஒரு மானிட்டரிங் சிஸ்டமாகும். ஹார்ட் ட்ரைவின் தன்மை குறித்த பல விஷயங்களைக் கண்காணித்து, அவற்றின் தன்மை நிலை குறித்து அறிவிக்கும் சிஸ்டம் இது. பொதுவாக ட்ரைவ் தன் செயல் தன்மையை இழக்கும் பொழுது, எந்த விஷயத்தில் பிழை ஏற்படுகிறது என்று காட்டும். ட்ரைவில் உள்ள டேட்டாவினைப் படிப்பதில், சுழலும் வேகம் குறைதல், திருத்த முடியாத பழுதுள்ள செக்டார் ஏற்படுதல் போன்ற பல விஷயங்களை இந்த மானிட்டர் சிஸ்டம் கண்டறிந்து, ட்ரைவ் செயல் இழக்கப் போவதனை முன் கூட்டியே சொல்லும். பலர் இந்த சிஸ்டம் செயல்படும் தன்மை குறித்து நம்பிக்கை இழந்தனர். ஆனால், கூகுள் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ட்ரைவ்களில் இந்த மானிட்டரிங் சிஸ்டத்தின் செயல் தன்மையை சோதனை செய்து, இது நம்பிக்கை தரும் நல்ல சிஸ்டம் தான் என்று கூறியுள்ளது.

கேள்வி: அடோப் போட்டோஷாப் இன்ஸ்டால் செய்தேன். அதன் பின்னர், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், நியூ என்பதைத் தேர்ந்தெடுத்தால், புதிய விண்டோஸ் பிட் மேப் இமேஜ் அமைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கவில்லை. இது ஏன்? இதனை மீண்டும் பெற முடியுமா?
என். நிஷாந்த், கோவை.
பதில்:
அடோப் போட்டோஷாப் பதிந்த பின்னர் ஏற்படும் இந்த பிரச்னை குறித்துப் பல வாசகர்கள் நமக்கு எழுதி உள்ளனர். அதிர்ஷ்ட வசமாக, இதற்கான தீர்வு மிக எளிதான ஒன்றுதான். முதலில் இந்த பிரச்னையின் வேரை ஆய்வு செய்திடலாம். நாம் அடோப் போட்டோ ஷாப் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கையில், மாறா நிலையில், அது சில பைல்களைத் தான் மட்டுமே திறக்கும் வகையில் செட் செய்கிறது. அவற்றில் பி.எம்.பி. பைல் வகையும் ஒன்று. எனவே, அடோப் போட்டோ ஷாப் பதிக்கப்படும் முன்னர், மைக்ரோசாப்ட் வழங்கும் பெயிண்ட் புரோகிராமில் பி.எம்.பி. பைல்கள் திறக்கப்பட்டு வந்தன. அடோப் போட்டோ ஷாப் புரோகிராம் அந்த வகை பைலைத் தன் வசம் எடுத்துக் கொண்டதனால், அதற்கான ஆப்ஷன், 'new BMP file' டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் மெனுவில் கிடைக்கவில்லை. இதனை மீண்டும் பெற வேண்டும் எனில், போட்டோ ஷாப் புரோகிராமினை. பி.எம்.பி. வகை பைல் தொடர்பில் இருந்து நீக்க வேண்டும். மீண்டும் அதனை எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராமுடன் இணைக்க வேண்டும்.
இதனை மேற்கொள்ள, அடோப் போட்டோ ஷாப் புரோகிராமுடன் வரும் Adobe Bridge என்னும் அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேண்டும். இதனை இயக்கி, Edit > Preference செல்லவும். இப்போது காணப்படும் டயலாக் பாக்ஸில் 'File Type Associations' என்ற ஆப்ஷனைத் தேடிக் காணவும். இப்போது வலது புறம் காணப்படும் பிரிவில், பல பைல் வகைகள் காட்டப்படும். இங்கு 'Bitmap' என்னும் ஆப்ஷனைக் காணவும். இதன் அருகே காணப்படும் கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி, பிட்மேப் பைலினை, மீண்டும் எம்.எஸ். பெயிண்ட் புரோகிராமுடன் இணைக்கவும். இதனைச் செய்து முடித்துவிட்டால், திரையில் ரைட் கிளிக் செய்து, மெனு பெற்று, அதில் நியூ என்ற பிரிவில் பி.எம்.பி. பைல் வகையில் கிளிக் செய்து, பைலை உருவாக்கலாம்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்க இருக்கிறேன். விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1, இவற்றில் எது எளிதாக இருக்கும். டச் ஸ்கிரீன் இல்லாமல், மவுஸ் கீ போர்ட் பயன்படுத்தும் வகையில் வாங்குவது என்றால், வாங்கலாமா?
ஆ. நீதிராஜன், ஆண்டிபட்டி.
பதில்
: உங்களின் நீண்ட கடிதத்தில், பிரச்னை எந்த அளவிற்கு மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று உணர்கிறேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு, விண்டோஸ் 8 சிஸ்டத்தினைக் காட்டிலும், விண்டோஸ் 7 மிகவும் பழக்கப்பட்டதாக இருக்கும். இப்போது வந்திருக்கும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் எளிதாக உணரும் வகையில் ஒரு சில அம்சங்கள் கொடுக்கப்பட்டுளன. இருப்பினும், டைல்ஸ் வகை இயக்கம், அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை என்பதால், நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை மேற்கொள்ளலாம். ஆனால், புதிய சிஸ்டத்தை சிறிது நாளில் பழகிக் கொள்வேன் என்ற உற்சாகமும் ஆர்வமும் இருந்தால், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினையே வாங்கலாம். ஏனென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான மைக்ரோசாப்ட் சப்போர்ட், விண்டோஸ் 7க்கான காலத்தைக் காட்டிலும் மூன்று ஆண்டுகள் கூடுதலாகக் கிடைக்கும்.
நீங்கள் புதிய கம்ப்யூட்டர் வாங்கப் போவதாகக் கூறிவிட்டு, இறுதியில் உங்கள் கடிதத்தில், பழைய கம்ப்யூட்டரிலேயே, புதிய விண்டோஸ் அமைக்கலாமா என்று கேட்டுள்ளீர்கள். ஆனால், இப்போதைய கம்ப்யூட்டரின் திறன் குறித்த தகவல்களைத் தரவில்லை. இருப்பினும், மைக்ரோசாப்ட் இதற்கான டூல்களைத் தந்துள்ளது.
விண்டோஸ் 7 அமைக்க சோதனை செய்வதாக இருந்தால், உங்களின் இன்றைய கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, http://www.microsoft.com/enus/download/details.aspx?id=20 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். அதுவே உங்களின் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பதிக்க முடியுமா என்று கூறிவிடும். இதுவே, விண்டோஸ் 8.1 எனில், http://windows.microsoft.com/ enUS/windows8/upgradetowindows8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
எந்த சிஸ்டம் என்றாலும், கீ போர்ட் மற்றும் மவுஸினைக் கொண்டு இயக்கலாம். கூடுதலாகச் சற்றுப் பணம் செலவழிக்க முடியும் எனில், டச் ஸ்கிரீன் வாங்கவும். இதிலும் கீ போர்ட் மற்றும் மவுஸ் பயன்படுத்தலாம்.

கேள்வி: புதிய விண்டோஸ் சிஸ்டங்களில் தேடல் சொற்களை சேவ் செய்து வைத்துப் பயன்படுத்த முடியுமா? இதனால், நமக்கு நேரம் மிச்சம் ஆகுமே!
எஸ். கமாலுதீன், திருச்செந்தூர்.
பதில்:
பலருக்கான கேள்வி இது. புதிய சிஸ்டம் என விண்டோஸ் 7 சிஸ்டத்தைத் தானே குறிப்பிடுகிறீர்கள். இதில் நாம் பயன்படுத்தும் எந்த தேடல் சொற்களையும் (search string) சேவ் செய்து, பின்னர் மீண்டும் பயன்படுத்தலாம். எனவே ஒரே தேடல் சொற்களை மீண்டும் மீண்டும் டைப் செய்து உள்ளீடு செய்ய வேண்டியதில்லை. கீழ்க்கண்டபடி இதற்கு செயல்பட வேண்டும். முதலில் Windows Explorer திறக்கவும். இதற்கு Start>Computer பயன்படுத்தலாம். அல்லது Windows Explorer என ஸ்டார்ட் பட்டன் மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் டைப் செய்திடலாம். இப்போது கிடைக்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவின் மேல் வலது மூலைப் பகுதியில் ஒரு சிறிய தேடல் கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் டைப் செய்வதற்கான வசதி கிடைக்கும். இதில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக, என் கம்ப்யூட்டர் ட்ரைவில் உள்ள ஜேபெக் பட பைல்களைத் தேடி அறிய jpeg என டைப் செய்தேன். இதற்கான முடிவுகள் பாப் ஆகி எழுந்து வந்த பின்னர், Save search பட்டனில் கிளிக் செய்திடவும். இது விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இடதுபுறம் இருக்கும். இப்போது இன்னொரு விண்டோ எழுந்து உங்கள் தேடலை எந்த பெயரில் சேவ் செய்திட என்று கேட்கும். பெயரினைக் கொடுத்து Save பட்டனை கிளிக் செய்திட்டால், இது சேவ் செய்யப்படும்.
நீங்கள் இது போல சேவ் செய்தவை எல்லாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இடது புறமாக உள்ள Favorites பிரிவில் இருக்கும். அதில் கிளிக் செய்து, முன்பு சேவ் செய்த சொற்களைக் காணலாம். அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், தானாகவே தேடல் வேலை தொடங்கி உங்களுக்கு முடிவுகள் காட்டப்படும்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Subbaiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-நவ-201312:52:23 IST Report Abuse
Manikandan Subbaiah நன் புதிய விண்டோஸ் 7 லெப் டேப் வைத்துள்ளேன்.கன்னினியல் உள்ள கீ போர்டு பற்றி இதன் உபயோகம் எப்படி செய்வது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X