கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2013
00:00

கேள்வி: புதியதாக விண்டோஸ் 8 பதிப்பு கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று எனக்கு அளிக்கப்பட்டது. அதனை விண்டோஸ் 8.1 க்கு அப்டேட் செய்தேன். அப்போது Bing Smart Search box என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டேன். ஆனால், அது ஒரு நல்ல டூல் என இப்போதுதான் உணர்கிறேன். இதனை எப்படித் திரும்பப் பெறுவது? இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்காது என என் நண்பர்கள் கூறுகின்றனர். மைக்ரோசாப்ட் வலைத் தளத்திலும் இது குறித்து எந்த தகவலும் இல்லை.
என். விஸ்வா தினேஷ், சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழகுகையில் இது போன்ற பல சந்தேகங்கள் வரும். சற்று கூடுதலாகவும் இந்த கேள்விக்கான பதிலைத் தருகிறேன். விண்டோஸ் 8.1 பதிப்பில் Smart Search என்ற அருமையான டூல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிமையாகவும், விரைவாகவும் நமக்கு வேண்டிய பைல்களையும், புரோகிராம்களையும் தேடிப் பெறலாம். விண்டோஸ் திரையில், வலது பக்கம் இழுத்தால் அல்லது மவுஸைக் கொண்டு இயக்கினால் கிடைக்கும் Charms Barல் முதலில், Settings என்பதில் கிளிக் செய்திட வேண்டும். தொடர்ந்து Devices, Start, Share and Search எனச் சென்றால் இந்த டூல் கிடைக்கும். இந்த Search charmனை, Bing Ads பிளாட்பார்மில் இணைத்தும் பெறலாம். இது கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, இணையத்திலும் தேடிப் பெறும் வாய்ப்புகளைத் தருகிறது. இது ஒரு சிலருக்கு நல்ல டூலாகவும், மற்ற சிலருக்குத் தேவையற்ற எரிச்சல் தரும் வழியாகவும் உள்ளது.
எனவே, இந்த Bing Ads டூல் குறித்து முடிவெடுத்து செட் செய்திட வழி தரப்பட்டுள்ளது. PC settings கிளிக் செய்து, இடது பக்கமாக, Search & Apps என்பதில் கிளிக் அல்லது டேப் செய்திடவும். இங்கு என்ற பிரிவில் ஒரு ஸ்லைடர் கொடுக்கப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்தி, இந்த டூலை on (இயக்க நிலை) அல்லது off இயக்கமில்லா நிலையில் வைக்கலாம். இது குறித்து மேலும் அறிய www.eightforums.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இந்த இணைய தளத்தில், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்த மேலும் பல தகவல் குறிப்புகளையும், டிப்ஸ்களையும் காணலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பிரிமியம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறேன். என் கம்ப்யூட்டரை ஸ்லீப் நிலையில் வைத்திட, ஏதேனும் ஷார்ட் கட் கீ உருவாக்கி, அதனை டெஸ்க்டாப்பில் வைத்து இயக்க முடியுமா?
என். சர்வேஷ் குமார், சிதம்பரம்.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டரை ஸ்லீப் நிலையில் வைத்திட, டெஸ்க்டாப்பில் ஷார்ட் கட் ஸ்விட்ச் வைப்பது ஓர் அருமையான ஐடியாவாகும். இது மிகவும் எளிமையானதும் கூட. முதலில் நோட்பேடினைத் திறக்கவும். ஸ்டார்ட் மெனு (Start Menu) கிளிக் செய்து, பின்னர் அக்சஸரீஸ், நோட்பேட் (Accessories then Notepad) எனச் செல்லவும். நோட்பேட் கிடைத்தவுடன், அதில் கீழே தரப்பட்டுள்ள வரிகளை டைப் செய்திடவும். powercfg h offrundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0 powercfg h on இதன் பின் பைல் (File) சென்று, கிடைக்கும் விரிமெனுவில் Save As என்பதில் கிளிக் செய்திடவும். "Save as type” என்பதில் கிளிக் செய்து, அதன் கீழ் விரி மெனுவினைப் பெறவும். இங்கு All Files என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் "File name:” என்னும் பாக்ஸில், பைலுக்குப் பெயராக, sleep.cmd எனக் கொடுக்கவும். இப்போது, டெஸ்க்டாப்பில், ஒரு ஐகான் கிடைக்கும். இந்த ஐகானில் டபுள் கிளிக் செய்தால், அது உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் விரும்பும் வகையில், ஸ்லீப் மோடில் வைக்கும். ஸ்லீப் மோடில் வைக்காமல், ஹைபர்னேட் மோடில் வைக்கப்பட்டால், இந்த ஷார்ட் கட் புரோகிராமினை, நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக இயக்க வேண்டும். இதற்கு அந்த புரோகிராம் ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் "Run as Administrator” என்பதனைத் தேர்ந்தெடுத்து, டபுள் கிளிக் செய்திட வேண்டும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரை, பாஸ்வேர்ட் கேட்கும் ஸ்கிரீன் இல்லாமல், பாஸ்வேர்ட் தராமல், நேரடியாகத் திறந்து இயக்க முடியுமா? என் கம்ப்யூட்டரை வேறு யாரும் இயக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த ஏற்பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறேன். அதற்கான செட்டிங்ஸ் வழிகள் என்ன?
கே. செந்தில் ராஜன், திருப்பூர்.
பதில்:
உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை என்னவென்றால், இப்போது இருக்கிறபடியே கம்ப்யூட்டரை விட்டுவைக்கவும். என்னதான், வேறு நபர்கள் உங்கள் கம்ப்யூட்டரைத் தொட மாட்டார்கள் என்றாலும், என்றாவது ஒரு நாள், ஒரு வேளையில், நீங்கள் அறியாமலேயே, யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரை அணுகலாம். அப்போது உங்கள் பைல்கள், இமெயில் செய்திகள் என எதனையும் பார்க்கலாம். ஏன், உங்களுக்கே கூட அதே கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் அனுப்பலாம். எனவே, பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் கம்ப்யூட்டர் இருந்தால், நீங்கள் கம்ப்யூட்டரை மூடிவிட்டு, விரும்பிய வகையில், வெளியே சென்று வரலாம். மேலும், கம்ப்யூட்டருக்கான பாஸ்வேர்டினை எப்போதும் நீக்கலாம் என்ற வசதியும் உள்ளதால், அதனை நாமாக நீக்க வேண்டாம் என்று நான் எண்ணுகிறேன். இருப்பினும், உங்கள் விருப்பத்திற்கான பதிலைத் தருகிறேன்.
லாக் ஆன் ஸ்கிரீன் தேவை இல்லை என்றால், முதலில் Advanced User Accounts என்ற டயலாக் பாக்ஸைப் பெற வேண்டும். இது, நீங்கள் என்ன விண்டோஸ் இயக்கம் பயன்படுத்துகிறீர்கள் என்பதனைப் பொறுத்தது.
விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா எனில், ஸ்டார்ட் தொடங்கவும். பின்னர், netplwiz என டைப் செய்து என்டர் தட்டவும்.
விண்டோஸ் எக்ஸ்பி எனில், Start>Run சென்று, control user passwords2 என டைப் செய்து என்டர் தட்டவும்.
விண்டோஸ் 8 எனில், Search Charm பயன்படுத்தி netplwiz தேடவும். Apps பிரிவில், netplwiz என்பதன் மேல் கிளிக் செய்திடவும்.
டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், நீங்கள் எந்த அக்கவுண்ட் வழியாக பூட் செய்கிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு, Users must enter a user name and password என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்கையில், ஏற்கனவே கொண்டிருந்த பாஸ்வேர்டினை இருமுறை எண்டர் செய்திடக் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அவ்வாறு செய்து, ஸ்கிரீனை மூடிவிடவும். இனிமேல், அடுத்த முறை கம்ப்யூட்டரை பூட் செய்கையில், எந்த பாஸ்வேர்டும் கொடுக்காமல், நேரடியாகக் கம்ப்யூட்டர் இயக்கத்திற்குச் சென்று விடலாம்.
இதன் பின்னரும் உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டால், பொதுவாக அது போல் நடைபெறாது, அது உங்கள் விண்டோஸ் சிஸ்டம் கேட்கும் பாஸ்வேர்ட் அல்ல. உங்கள் ஹார்ட்வேர் கேட்கும் பாஸ்வேர்ட் ஆகும். இதனை நிறுத்த செட் அப் ஸ்கிரீன் செல்ல வேண்டும். இணையத்தில் BIOS password எனப் போட்டு, உங்களுடைய பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரின் மாடல் எண் கொடுத்துப் பெறவும்.

கேள்வி: என் பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு இரட்டை அடுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியுமா? அதனை எப்படி செட் செய்வது? என் அலுவலகக் கம்ப்யூட்டரில் சில வேளைகளில் நான் பேஸ்புக் பயன்படுத்துகையில், இதனை மேற்கொள்ள விரும்புகிறேன்.
எஸ். பூமிநாதன், பொள்ளாச்சி.
பதில்:
கூகுள், வங்கிக் கணக்கு என அனைத்துமே, இரட்டை அடுக்கு பாதுகாப்பு முறைக்கு மாறி வருகின்றன. குறிப்பாக நம் மொபைல் போன்களை இதற்குப் பயன்படுத்துகின்றன. இது நல்ல பயன் தரும். பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கும் இதனை ஏற்படுத்தலாம்.
இரட்டை அடுக்கு பாதுகாப்பு என்பது, உங்கள் பாஸ்வேர்டுடன், கூடுதலாக இன்னொரு தனி நபர் தகவல் ஒன்றை பாஸ்வேர்டாகத் தருவதாகும். இதனால், ஹேக்கர்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படுகிறது.
இதனைப் பெற, முதலில் பேஸ்புக் இணைய தளம் சென்று, உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து, உங்களுக்கான பக்கம் செல்லவும். இனி மீண்டும், மேல் வலது புறம் உள்ள கியர் ஐகானைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும்
மெனுவில், Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் திரையில், இடது பக்கம் Security என்பதனைக் கிளிக் செய்திடவும். அடுத்து Login Approvals என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த Login Approvals பிரிவு விரிவடைகையில், அதில், Require a security code to access my account from unknown browsers என்ற பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இப்போது பேஸ்புக், உங்களை சில செட்டிங்ஸ் வழிகளில் அழைத்துச் செல்லும்.
பெரும்பாலும், உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பும் வகையில் செட்டிங்ஸ் மேற்கொள்ளும். மொபைல் போன் பதியவில்லை எனில், ஒன்றைப் பதியுமாறு கேட்டுக் கொள்ளும். இந்த போன் எண் உங்களுடையதுதானா என்று உறுதி செய்து கொள்ள ஒரு டெக்ஸ்ட் மெசேஜாக ஆறு இலக்க எண் ஒன்றை அனுப்பி உறுதி செய்து கொள்ளும். இதனை டைப் செய்து உறுதிப்படுத்தவும்.
ஏற்கனவே, நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரவுசரைப் பயன்படுத்தி இருந்தால், ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இருந்தால், பேஸ்புக் உங்களிடம் இரண்டாவது அடுக்கு பாதுகாப்பு எண்ணைக் கேட்காது. வேறு ஒரு கம்ப்யூட்டர் வழியாக, பேஸ்புக் சென்றால், குறியீடு எண் அனுப்பி அதனை பதியுமாறு கேட்டு, உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும். இதனைத் தாண்டி எந்த பாதுகாப்பும் உங்களுக்குக் கிடைக்காது. இருந்தாலும், ஒன்றும் இல்லாததற்கு இந்த வகைப் பாதுகாப்பு இருப்பது சரிதானே.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Subbaiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-நவ-201312:47:51 IST Report Abuse
Manikandan Subbaiah கேள்வி பதில் பகுதி நன்றாக உள்ளது.எனக்கு இங்கிலீஷ் வோர்ட்ஸ் பேச எழுத கடினமா உள்ளது.தமிழ் &இங்கிலீஷ் டிக்ஸ்னரி சாப்ட்வேர் வேண்டும்.அதெய் டவுன்லோட் செய்ய எந்த வெப் தளம் செல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X