எனக்கு நடிக்கப் பிடிக்காது - உலக அழகி மேகன் யங்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2013
00:00

ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டுக்கான உலக அழகியினைத் தேர்ந்தெடுக்கும், உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. 63வது ஆண்டான இந்த ஆண்டு உலக அழகிப் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் நடைபெற்றது.
சுமார் 130 நாடுகளிலிருந்து அழகிகள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர். இந்தியாவின் சார்பில் 2013ஆம் ஆண்டின் இந்திய அழகியான (மிஸ் இந்தியா 2013) அ
நீத் கௌர் கலந்துகொண்டார்.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்தப்போட்டியின் இறுதிப் போட்டியில் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயதான அழகி மேகன் யங், இந்த ஆண்டிற்கான உலக அழகியாகத் (மிஸ் வேர்ல்ட் 2013) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 2012ஆம் ஆண்டின் உலக அழகியான சீனாவைச் சேர்ந்த வென்சியா யு மகுடம் சூட்டினார். தான் தெர்ந்தெடுக்கப்பட்டவுடன், உமற்ற உலக அழகிகள் போலவே, உணர்ச்சிப் பெருக்கால் ஏதேதோ முகபாவங்களைக் காட்டினார் மேகன் யங். ஆனந்த கண்ணீர் அவரது கன்னங்களில் உருண்டோடியது.

"என்னுடைய உணர்சிகளை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. அதற்கு வார்த்தைகளே இல்லை. உலக அழகியாக என்னைத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி' என்று மகுடம் சூட்டிக் கொண்டபின் மேகன் யங் கூறினார்.
இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரின் லார்பேலின் பெற்றார். மூன்றாம் இடத்திற்காகக் கானா நாட்டின் நா ஒகைலி ஷீட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சார்பில் கலந்துகொண்ட இந்திய அழகி நவ்நீத் கௌர், முதல் 20 பேர்களில் ஒருவராகத் தான் இடம்பிடித்தார். அதோடு "மிஸ் மல்டிமீடியா 2013' எனும் பட்டத்தினையும் வென்றார்.
உலக அழகியாக, பிலிப்பின்ஸ் நாட்டினைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவில் பிறந்த மேகன், தனது பத்தாவது வயதில் பிலிப்பின்ஸ் நாட்டில் குடியேறினர். திரைப்படக் கல்லூரியில் "டிஜிட்டல் தொழில்நுட்பம்' படித்து வருகிறார். 2005ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துவரும் இவர், "எனக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை. திரைப்பட இயக்குனராக கேமராவிற்கு பின்னால் இருந்து பணிபுரியவே விரும்புகிறேன்' என்கிறார்.
முதன்முறையாக நாட்டிற்கு உலக அழகிப் பட்டத்தினைப் பெற்றுத்தந்த மேகன் யங்கிற்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பினைக் கொடுத்து வாழ்த்தி வரவேற்றனர் பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள். அதோடு 2015ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியினை நடத்தும் பொறுப்பு பிலிப்பின்ஸ் நாட்டிற்கு கிடைத்திருப்பதில் அந்நாட்டினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

கௌசிக் ராஜா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X