கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 நவ
2013
00:00

கேள்வி: ஜி.பி.ஆர்.எஸ். என்பது ரேடியோ அலைகள் சம்பந்தப்பட்டதா? கம்ப்யூட்டரில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது?
எஸ். சிக்கந்தர், சென்னை.
பதில்:
ஜி.பி.ஆர்.எஸ். (GPRS General packet radio service) என்பது ரேடியோ அலைகள் சம்பந்தப்பட்டதுதான். மொபைல் போன் பயன்பாடு அனைத்துமே, ரேடியோ அலைவரிசை களைப் பயன்படுத்தியே இயங்குகின்றன. ஜி.எஸ்.எம் வகை (GSM global system for mobile communications) மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்கான 2ஜி மற்றும் 3ஜி சிஸ்டங்களில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஜி.பி.ஆர்.எஸ். மூலம் நொடிக்கு 56 முதல் 114 கிலோ பிட் வரையிலான டேட்டாவினை அனுப்பவும் பெறவும் முடியும். இந்த வகை டேட்டா பரிமாற்றத்தினை, மெகா பைட் அளவிலேயே கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள். 2ஜி செல்லுலர் சிஸ்டம், ஜி.பி.ஆர்.எஸ். சிஸ்டத்துடன் இணைந்து செயல்படுகையில், அதனை 2.5ஜி என அழைக்கின்றனர். மொபைல் தொழில் நுட்பத்தில், 2ஜி மற்றும் 3ஜி பயன்பாட்டிற்கு இடையே இது கருதப்படுகிறது. இந்த சிஸ்டங்களில் மட்டுமே ஜி.பி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுகிறது.

கேள்வி: மிகப் பெரிய பைல்களை அனுப்ப ஜிமெயில் உதவுகிறது. ஆனால், 25 எம்.பி. என்ற அளவுக்கு மேல் எனில், எந்த சேவையைப் பயன்படுத்தலாம்?
கா. ஸ்வாமிநாதன், திருச்சி.
பதில்:
நீங்கள் சொல்வது சரியே. ஜிமெயில் மெசேஜுடன் இணைக்கப்படும் பைல் அல்லது பைல்களின் அளவு 25 எம்.பி.யைத் தாண்டுகையில், நாம் வேறு சேவையையே நாட வேண்டியுள்ளது. முதலாவதாக, கூகுளின் ஜிமெயிலி லேயே அத்தகைய ஒரு சேவை உள்ளது. 'Attach files' என்னும் ஐகானை அடுத்து கூகுள் ட்ரைவ் ஐகான் என ஒன்று உண்டு. அதனைக் கிளிக் செய்து, 10 ஜிபி வரையில் பைல்களை அனுப்பலாம். ஏற்கனவே அனுப்பிய பைல்கள் உங்கள் ஜிமெயில் ட்ரைவில் இருக்கும். அனுப்பும் பைல்களை யார் யார் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டால், அவர்களுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டு, தகவல் தரப்படும்.
அடுத்ததாக, wetransfer.com என்னும் தளத்திற்குச் செல்லவும். இங்கு எந்தவிதமான அக்கவுண்ட்டும் தொடங்க வேண்டியதில்லை. நேராக பைலைஅனுப்பலாம். பெறுபவரின் மின் அஞ்சல் முகவரியினைக் கொடுத்து, அவருக்கான சிறிய அளவிலான செய்தியையும் கொடுத்து, 2 ஜிபி வரையிலான பைலைஅனுப்பலாம். மிகவும் பாதுகாப்பான முறையில் அனுப்ப உங்களுக்கு உதவுவது Dropsend. பாதுகாப்பான முறையில் சுருக்கப்பட்டு அனுப்பப்படுவதுடன், இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையும் கையாளப்படும். Dropbox மூலம், 2 ஜிபி வரையிலான பைலை அனுப்பலாம். அக்கவுண்ட் ஒன்று திறக்க வேண்டும். இதுவும் மேலே குறிப்பிட்ட பாதுகாப்பான முறைகளைக் கையாள்கிறது.
மைக்ரோசாப்ட் அனைவருக்கும் வழங்கும் Skydrive சாப்ட்வேர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, மொத்தம் 7 ஜிபி வரை இதில் சேமிக்கலாம். ஒவ்வொரு முறையும் அனுப்பும் பைலின் அளவு 2 ஜிபி தாண்டக் கூடாது. இதே போல் செயல்படும் இன்னொரு சேவை Amazon Cloud Drive. 5 ஜிபி வரையிலான டேட்டாவினை அனுப்பி சேவ் செய்து, குறிப்பிட்ட சிலருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். தற்போது ஜிமெயில் பயன்படுத்துகிறேன். அலுவலகத்தில் அவுட்லுக் பயன்படுத்து கிறேன். இதில் என் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் மெயில்களைப் பெற்றுப் பயன்படுத்த முடியுமா?
சி.கே. ராஜா கோவிந்தராஜ், மதுரை.
பதில்:
தாராளமாகப் பெறலாம். சிறிது மாற்றங்களை ஜிமெயில் அக்கவுண்ட்டில் மேற்கொள்ள வேண்டும். முதலில், ஜிமெயில் அக்கவுண்ட் பக்கம் சென்று, இன்பாக்ஸ் பெறவும். இதில் வலது புறம் மேலாக, உங்கள் பெயருக்குக் கீழாக உள்ள Settings ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Forwarding and POP/IMAPஅக என்பதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் ஆப்ஷன்களில், Enable POP for all mail அல்லது Enable POP for mail that arrives from now on என்பதைக் கிளிக் செய்திடவும். பின்னர் அதே பக்கத்தின் கீழாகத் தோன்றும் Save Changes என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது உங்கள் மின் அஞ்சல்களுக்கு, POP வழியை அமைத்துவிட்டீர்கள். அடுத்து அவுட்லுக் இமெயில் புரோகிராமினை செட் செய்திட வேண்டும். அதற்கான வழிகள்: அவுட்லுக் திறந்து, கிடைக்கும் மெனுவில் Tools என்பதில் கிளிக் செய்து Account Settings பிரிவு செல்லவும். புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். அடுத்து Email டேப் சென்று, New என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில், Microsoft Exchange, POP3, IMAP அல்லது HTTP ரேடியோ பட்டன் எனத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான். இனி உங்கள் ஜிமெயில் மெயில்களை, அவுட்லுக் அக்கவுண்ட்டில் பெற்றுப் படிக்கலாம்.

கேள்வி: என் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள மெசேஜ்களை என் ஐபேடில் அழிக்க விரும்புகிறேன். அதற்கான வழி என்ன?
கா. இளமதி, விருதுநகர்.
பதில்:
உங்களுடைய மொபைல் சாதனத்தில், பேஸ்புக் திறந்து, உங்கள் அக்கவுண்ட் பக்கம் செல்லவும். நீங்கள் அழிக்க விரும்பும் உரையாடலை அழுத்தியவாறு தேர்ந்தெடுக்கவும். அப்போது Archive, Delete or Mark as Spam என ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் டெலீட் தேர்ந்தெடுத்தால், அனைத்து உரையாடல்களும் நீக்கப்படும். ஒரே ஒரு உரையாடலை மட்டும் நீக்க முடியாது. அதற்குப் பதிலாக Archive தேர்ந்தெடுக்கலாம். இது, குறிப்பிட்ட உரையாடலை மட்டும் உங்கள் பார்வையிலிருந்து நீக்கிவிடும். ஆனால், அது ஸ்பேம் மெசேஜாக இருந்தால், நீக்கிவிடவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்திட ஏதேனும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளனவா? டாகுமெண்ட்களைப் படிக்க பல அப்ளிகேஷன்கள் உள்ளன. ஆனால், எடிட் செய்திட ஏதும் இல்லையே?
எஸ்.கிருஷ்ணராஜ், கோவை.
பதில்:
கேள்விக்கு நன்றி. பலர் இதனைத் தேடி வருகின்றனர். எடிட் செய்வதற்கும் ஓர் அருமையான அப்ளிகேஷன் உள்ளது. Kingsoft Office for Android (2.1 and above) என்ற அப்ளிகேஷன், இந்த வகையில் பல வசதிகளைத் தருகிறது. இதில், டாகுமெண்ட்களைப் பார்க்கலாம், எடிட் செய்திடலாம் மற்றும் உருவாக்கலாம். http://www.kingsoftstore.com/kingsoftofficeandroid.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று தேவையான அப்ளிகேஷனுக்கான பைலை தரவிறக்கம் செய்து கொள்ளவும். அல்லது https://play.google.com/store/apps/details?id=cn.wps.moffice_eng&feature=apps_ topsell ing_free#?t=W2 51bGwsMSwxLG51bGwsImNuLndwcy5t b2ZmaWNlX2VuZyJd என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களை Dropbox, Google Drive, and BOX.NET ஆகிய க்ளவுட் ஸ்டோரேஜ் தளங்களில் பதிந்து வைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இயங்கத் தொடங்கி செயல்படாமல் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து, மீண்டும் ஸ்டார்ட் ஸ்கிரீன் சென்று பாஸ்வேர்ட் கேட்கிறது. இதனை எப்படி நிறுத்துவது?
ஆர். ஜோஸப்பைன், புதுச்சேரி.
பதில்:
ஆம், இது உங்களுக்கு எரிச்சலைத் தரும் நிகழ்வாகவே இருக்கும். முதலில் Search Charm திறக்கவும். பின்னர், இங்கு Settings தேர்ந்தெடுக்கவும். அடுத்து "lock the computer” என டைப் செய்திடவும். கிடைக்கும் முடிவுகளில் Lock the computer when I leave it alone for a period of time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஒரு விண்டோ கிடைக்கும். இதில் கிடைக்கும் Wait பாக்ஸில், காணப்படும் நேரத்தினை, நீங்கள் விரும்பும் வகையில் கூடுதலாக அமைக்கலாம். இதிலேயே, நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துத்தான், மீள இயக்க வேண்டுமா என்பதனையும் நிர்ணயிக்கலாம். இதே விண்டோவில், திரை அமைப்பை மாற்றலாம். பவர் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி அமைக்கலாம். மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்திய பின்னர், Apply என்பதில் கிளிக் செய்து விண்டோவினை மூடவும்.

கேள்வி: நான் ஆண்ட்ராய்ட் 4.2 உள்ள சாம்சங் ஸ்மார்ட் போன் எஸ் 3 பயன்படுத்துகிறேன். இதில் தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்து அஞ்சல் அனுப்ப என்ன அப்ளிகேஷன் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும்?
என். சக்திராஜ், திருப்பூர்.
பதில்
: உங்கள் ஆர்வத்திற்கு சபாஷ். கம்ப்யூட்டர் மலரில் இது குறித்து முன்பு விபரமாக எழுதப்பட்டுள்ளது. https://play.google.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு என டைப் செய்து, அந்த அப்ளிகேஷன் டைப் செய்து பெறவும். தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. நேரடியாக இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுத்தால், மொபைல் போனில் இது இன்ஸ்டால் செய்யப்படும். இது இலவசமாகவே கிடைக்கிறது. ஓரிரு நிமிடங்களில் இது பதியப்படும். பின்னர், அதன் செட்டிங்ஸ் சென்று மாற்றலாம். அதே போல, போன் செட்டிங்ஸ் சென்று, அப்ளிகேஷன் கீ போர்ட் என்ன தேவை என்றும் தேர்ந்தெடுக்கலாம். பின் எளிதாகத் தமிழில் டைப் செய்து, அஞ்சல் அனுப்பலாம். இதே போல ஆப்பிள் போன்களுக்கும், ஆப்பிள் ஸ்டோரில் இதற்கான அப்ளிகேஷன் கிடைக்கிறது.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைக்கையில், அழகான கோடு மற்றும் வண்ணங்களை எப்படி அதில் அமைத்து வடிவங்களையும் மாற்றுவது?
டி.கலா ராணி, மதுரை.
பதில்:
இதற்கான வசதியினை வேர்ட் புரோகிராம் கொண்டுள்ளது. டேபிள் ஒன்றை அமைத்த பின்னர், கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table AutoFormat என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல வகையான டேபிள் தோற்றங்கள் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar S - மதுரை,இந்தியா
18-நவ-201320:12:15 IST Report Abuse
Kumar S //இங்கு என டைப் செய்து// என்ன டைப் செய்வது?? பெரும்பாலும் இதில் வரும் செய்திகள் அனைத்தும் சரியான முறையில் வருவதில்லை சிலசமயம் 'க்க்லீநேர்' என்றெல்லாம் வருகிறது... சரியான முறையில் தணிக்கை செய்யவும்... நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X