மிளகாய் சாகுபடியில் சில ரகங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 நவ
2013
00:00

ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ரகம் நவம்பர் மாதத்தில் சாகுபடியைத் துவங்கி ஏப்ரல் மாதம் வரை சாகுபடி செய்யலாம். இந்த ரகத்தின் செடி 75-80 செ.மீ. வரை உயரமாக வளரக்கூடியது. இதன் காய்கள் 15செ.மீ. - 16செ.மீ. நீளமும் 3 செ.மீ. கனமும் உடையது. காய்கள் மெழுகால் செய்தது போல் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும். காய்களின் காரம் குறைவாக இருக்கும்.
ஸ்வீட் பனானா என்று அழைக்கப்படும் இந்த ரகமும் பாப்ரிக்கா இனத்தைச் சேர்ந்தது. செடிகளின் உயரம் 75-80 செ.மீ. இருக்கும். காய்கள் நீளமாகவும் சாதாரண ரகங்களைப் போல் நுனி பாகம் பூமியை நோக்கி இருக்கும்படி காய்க்கும். இந்த ரகங்களின் தோல் மெல்லியதாகவும், காரம் குறைந்ததாகவும் இருக்கும். ஒவ்வொரு ரகங்களையும் 10 சென்ட்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நன்கு கவனித்து ரசாயன உரம், மக்கிய உரம் இவைகள் தாராளமாக இடப்பட்டன. செடிகள் பூச்சி வியாதியால் பாதிக்கப்படவில்லை. ஹங்கேரியன் செடிகளில் காய்ப்பு சரியில்லை. ஸ்வீட் பனானா நன்கு காய்த்தது. வியாபாரிகள் நல்ல விலை கொடுத்து வாங்கினார்கள். சாகுபடி குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சாகுபடி குறிப்புகள் - ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ், ஸ்வீட் பனானா
10 சென்ட் பரப்பு: விதை அளவு-10 கிராம்; நாற்றங்கால்-நீளம் 2 அடி, அகலம் 1 அடி, உயரம் 10 செ.மீ.,; நாற்றின் வயது -45 நாட்கள்; தொழு உரம்-600 கிலோ; அடி உரம் - காம்ப்ளக்ஸ் - 25 கிலோ. மேலுரம் - முதல் அறுவடைக்குப் பின் யூரியா 10 கிலோ போதுமான அளவு பாசனம் தர வேண்டும். அறுவடை நட்ட 75-80 நாட்களில் முதல் அறுவடை 10 சென்ட் சாகுபடி செலவு - ரூ.2,425.00.
ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ்: 10 சென்ட்டில் கிடைத்த 450 கிலோவின் மதிப்பு ரூ.3,150.00; நிகர லாபம் - ரூ.725.00.
ஸ்வீட் பனானா: 10 சென்ட்டில் கிடைத்தது 700 கிலோவின் மதிப்பு ரூ.4,900.00, நிகர லாபம் - ரூ.2,475.00
மேலே கொடுக்கப்பட்டுள்ள 10 சென்ட்டில் கிடைத்த அனுபவம் உற்சாகம் அளிக்கின்றது. இந்த விவரம் உற்சாகம் தருவதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்து லாபம் எடுக்கலாம்.
இந்த ரகங்களுக்கு அதிக அளவில் கிராக்கி இருப்பதால் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இந்த மிளகாய் ரகங்களை விரும்பி வாங்குகிறார்கள். ஓசூரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காய்கறி சாகுபடி திறமையாக செய்யப்படுகின்றது.
விவசாயிகள் காய்கறிகளை நல்ல விலைக்கு விற்றுவிட்டு தங்கள் சாகுபடியில் தயாரித்த விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். கட்டுரையைப் படிக்கும் விவசாயிகள் மேலே கூறப்பட்டுள்ள ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ் மற்றும் ஸ்வீட் பனானா மிளகாய் ரகங்களை சாகுபடி செய்து நல்ல பலன் அடையலாம்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X