நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2013
00:00

நெற்பயிர் தற்போது அனைத்து பருவங்களிலும் உள்ளது. முதல் போகம் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை பருவத்திலும் ஒருபோக சாகுபடி நெல் நாற்றாங்கால் நடவுப்பருவத்திலும் உள்ளன. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலையில் நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை தடுத்து நெல் மகசூல் பெற விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்.
இலை சுருட்டுப்புழு: இப்புழுக்கள் இலைகளின் பச்சையத்தை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். இலைகள் நீள்வாக்கில் சுருண்டு புழுக்கள் அதனுள் இருக்கும். இதனை தடுத்திட வரப்புகளை சீராக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வேப்பங்கொட்டை சாறு (5 சதவீதம்) அல்லது வேப்பெண்ணெய் (3 சதவீதம்) ஆகியவற்றை தெளிக்க வேண்டும். பொருளாதார சேத நிலையை பொறுத்து ஒரு ஏக்கருக்கு 400 மில்லி "மோனோ குரோட்டோபாஸ்' அல்லது "டைக்குலோரோபாஸ்' 100 மில்லி தெளிக்கலாம்.
கதிர் நாவாய்ப்பூச்சி: இப்பூச்சிகள் பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிகளிலிருந்து சாறு உறிஞ்சும். தீவிர பூச்சி தாக்குதலின் போது முழு தானியம் கதிரும் தாக்கப்பட்டு நெல் மணிகள் முதிர்ச்சியடையாமல் போய் விடும். இதைத்தடுக்க வசம்பு பொடியை (அக்கோரஸ் காலமஸ்), ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் 90 கிலோ சாம்பல் கலந்து தூவலாம். பொருளாதார சேதநிலையில் ஏக்கருக்கு "மாலத்தியான்' (50 இசி) 200 மில்லி அல்லது "பென்தியான்' (100 இசி) 200 மில்லி என்ற அளவில் காலை 9 மணிக்கு முன்னர் அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.
புகையான்: புகையான் தாக்கப்பட்ட பயிர்கள் தீய்ந்து மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக காணப்படும். முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாக காணப்படும். பயிர்களும் சாய்ந்து விடும். நீர்மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். புகையான் தாக்குதலைத் தவிர்த்திட தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலை தவிர்த்தல் வேண்டும். வெள்ளைத்தன்மையுடைய விளக்கு பொறிகளை 1 முதல் 2 மீட்டர் உயரத்தில் பொருத்தி பூச்சிகளின் தொகையை கண்காணிக்க வேண்டும். வயலில் உள்ள தண்ணீரினை வடித்த பின், ஏக்கருக்கு "இமிடாகுளோபிரிட்' 50 மில்லி அல்லது "பாஸ்லோன்' 600 மில்லி என்ற அளவில் மருந்துகளை கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிக்க வேண்டும்.
குலைநோய்: குலைநோய் பூசணத் தாக்குதலால் ஏற்படுகிறது. பயிரின் அனைத்து பகுதிகளும் தாக்க வாய்ப்புள்ளது. தீவிர தாக்குதலின் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். இந்நோய் தாக்குதலை வரும்முன் தவிர்த்தல் நல்லது. "குடோமோனாஸ்' துகள் கலவையினை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அளவில் 400 மில்லி தண்ணீரில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நாற்றாங்காலில் இரண்டரை கிலோ சூடோமோனாஸ் பொடியை நன்கு கலக்க வேண்டும். சூடோமோனாஸ் கலந்த நீரில் நாற்றுக்களை 30 நிமிடங்கள் ஊறவைத்து நடவு செய்ய வேண்டும். நட வுக்கு 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளிகளில் 0.5 சதவீதம் சூடோமோனாஸ் கரைசலை மூன்று முறை தெளிக்க வேண்டும். ஏக்கர் ஒன்றிற்கு "எடிபன்பாஸ்' 200 மில்லி அல்லது "மேன்கோசெப்' 400 கிராம் அல்லது "கிட்டாச்சின்' 100 கிராம் அல்லது "டிரைசைக்ளோசெல்' 150 கிராம் தெளிக்கலாம்.
பூச்சி, நோய் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும். விவரங்களுக்கு மதுரை மெற்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
- கட்டுரையாளர்:
உதவி இயக்குனர் வடிவேல்குமார்,
மேற்கு வட்டார வேளாண் துறை, மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X