கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2013
00:00

கேள்வி: மைக்ரோசாப்ட் அல்லாத வேறு ஒரு நிறுவனம், எக்ஸ்பி சிஸ்டத்தை எடுத்துக் கொண்டு, நம்மை எல்லாம் காப்பாற்றும் சாத்தியக் கூறு உள்ளதா? கட்டாயம் எக்ஸ்பியை விட்டு விட்டு வேறு ஒரு சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமா?
என். சிவக்கொழுந்து, விருதுநகர்.
பதில்
: இதற்கு ஒரே ஒரு சொல்லில், உரக்க "இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். சற்று விளக்கமாகவே, மீண்டும் இதனைக் கூறுகிறேன். ஏனென்றால், பல இதழ்களில் விண்டோஸ் எக்ஸ்பி விட்டுவிடுவது குறித்து எழுதி உள்ளேன். எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முழு உரிமையும் மைக்ரோசாப்ட் வசம் மட்டுமே உள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும், அதனை மற்ற நிறுவனங்களுக்கு உரிமையை விட்டுக் கொடுக்காது. அது கேட்கும் விலையைத் தரும் அளவிற்கு நிறுவனங்களும் இல்லை. மேலும் அது லாபம் தராது. லாபம் தருவதாக இருந்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து தன் சப்போர்ட்டினைத் தருமே.
மைக்ரோசாப்ட் எக்ஸ்பியின் மதிப்பை உணராமல் இல்லை. பத்தாண்டுகளுக்கு மேல், ஒரு சிஸ்டம் தொடர்ந்து இயங்குவது சரியல்ல என்று மைக்ரோசாப்ட் நினைக்கிறது. அதுவே எதார்த்தமான நிலையும் கூட. எக்ஸ்பிக்குப் பின்னர், விஸ்டா, விண்7 மற்றும் விண்8 என மூன்று சிஸ்டங்கள் வந்துள்ளன. பல்வேறு புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள், எக்ஸ்பியுடன் இணைந்து செயல்படுவதில்லை. மேலும் பாதுகாப்பும் இல்லை. எக்ஸ்பி சிஸ்டத்தில் உள்ள பாதுகாப்பு விஷயங்கள், இன்றைய மால்வேர் தாக்குதல்களைச் சமாளிக்கும் விதத்தில் இல்லை. பாதிக்கக் கூடிய அபாயம் என்ற கோணத்தில் பார்க்கையில், விண்டோஸ் எக்ஸ்பி மிக மிக மோசமான இடத்தில் உள்ளது. விண் 7 மற்றும் விண் 8, பாதுகாப்பான நிலையிலேயே உள்ளன.
இப்போதைய டிஜிட்டல் மிரட்டல்களுக்கு முன்னால், 12 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட ஒரு சிஸ்டத்தால், தாக்குப் பிடிக்க முடியாது என்று மைக்ரோசாப்ட் கருதுகிறது. அதுவே உண்மையும் கூட. உங்களிடம் எக்ஸ்பி கொண்ட கம்ப்யூட்டர் இருந்தால், உடனடியாக, அதனை மாற்றிவிடும் நடவடிக்கைகளை இப்போதே எடுக்கவும்.

கேள்வி: அண்மையில் கம்ப்யூட்டர்களைப் பற்றி ஒரு நூலில் படிக்கையில், ஹேஸ்வெல் சிப் என்பதைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. ஆனால், அது என்ன என்று விளக்கம் தரவில்லை. இது எந்த நிறுவனத்தைச் சேர்ந்தது? இப்போது புழக்கத்தில் உள்ளதா?
எஸ். திலகவதி, திருப்பூர்.
பதில்
: Haswell என்பது இண்டெல் நிறுவனம் அண்மையில் தயாரித்து வழங்கியுள்ள கம்ப்யூட்டர் சிப்களில் உள்ள புதிய மைக்ரோ ஆர்க்கிடெக்சர் ஆகும். 2013 ஆம் ஆண்டு, முதல் காலாண்டில் இது அறிமுகம் செய்யப்பட்டது. இது இதற்கு முந்தைய ஐவி பிரிட்ஜ் கட்டமைப்பிலான சிப்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதல் திறன் கொண்டது. பயன்படுத்தும் மின் சக்தியும் குறைவாகும். விண்டோஸ் 8 டேப்ளட் பி.சி., லேப்டாப் ஆகியவற்றிற்கு ஹேஸ்வல் சிப் மிகச் சிறந்தது என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹேஸ்வெல் தரும் கிராபிக் திறனும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் 4 கே வீடியோ இயக்கம் மிக அருமையாக உள்ளதாகவும் தெரிகிறது. மிகக் குறைந்த சீதோஷ்ண நிலையிலும், இந்த சிப் நன்றாகச் செயல்படுகிறது. இதனால், லேப்டாப் கம்ப்யூட்டர்களை இன்னும் தடிமன் குறைவானதாக அமைக்கலாம். ஆனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை, ஹேஸ்வெல், ஐவி பிரிட்ஜ் கட்டமைப்பிலான சிப்களைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவு திறனே கூடுதலாகக் கொண்டுள்ளது என்று கூறுகின்றனர். ஆனால், ஹேஸ்வெல் சிப், முந்தைய சிப்களைக் காட்டிலும் 100 டாலர் விலை அதிகம் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி: ஜங்க் போல்டர் (junk folder) என எதனைக் கூறுகிறோம். இது சிஸ்டம் பைல்ஸ் இருக்கும் ரகசிய டைரக்டரியில் இருக்குமா?
ஆ. சிவராஜ், கிருஷ்ணன் கோவில்.
பதில்
: ஜங்க் போல்டர் என்பது, இன்றைக்கு மின் அஞ்சல் சேவையினை வழங்கும் பல தளங்களில் உள்ள ஸ்பேம் போல்டர் (spam folder) தான். வர்த்தக ரீதியாகத் தேவையின்றி, அல்லது சேருபவரின் விருப்பமின்றி அனுப்பப்படும் மெயில்கள், இமெயில் சேவை நிறுவனத்தால், ஜங்க் போல்டரில் தள்ளப்பட்டிருக்கும். பெறுபவரின் அட்ரஸ் புக்கில், இத்தகைய மெயில்களின் அனுப்புநர் விலாசம் இல்லையேல், முதல் சந்தேகத்திற்கு இவை ஆளாகும். அல்லது விற்பனை, தொடர் அஞ்சல்களுக்கான லிங்க்குகள் இருக்கையில், அவை சந்தேகத்திற்கு ஆளாகி, இந்த போல்டரில் வைக்கப்படும். இவற்றைப் பெறுபவர், இந்த அஞ்சல்களைப் பின் ஒரு நாளில் நிதானமாகப் படித்துப் பார்த்து, இவை தேவைதானா என முடிவெடுக்கலாம். அல்லது அனுப்புபவரின் முகவரியைக் கொண்டே முடிவெடுக்கலாம். அந்த நிலையிலேயே, திறந்து பார்க்காமல் அழித்துவிடலாம். புதிய நிறுவனங்களிடமிருந்து அஞ்சல் வரும்போது, அவை உண்மையானவையாக இருந்தாலும், இந்த போல்டருக்கு அனுப்பப்பட்டு விடும். எனவே தான், அத்தகைய நிறுவனங்கள், நமக்கு அஞ்சல்களை அனுப்புகையில், வேறு கடிதத் தொடர்பின் போது, இன்பாக்ஸில் அஞ்சல் இல்லை எனில், ஸ்பேம் மெயில் பாக்ஸில் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

கேள்வி: என் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில் எனக்கு ஒரு அறிவிப்பு வந்தது. விண்டோஸ் 8.1. இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளும்படி. ஸ்டார்ட் பேனலில், விண்டோஸ் ஸ்டோருக்குச் செல்லும்படியும் அது கூறியது. ஆனால், எனக்கு அங்கே 8.1 சிஸ்டம் அப்டேட் கிடைக்கவில்லை. நான் வைத்திருக்கும் லேப்டாப், அதனை ஏற்றுக் கொள்ள உகந்தது தான். பின் ஏன் 8.1 கிடைக்கவில்லை? இதனை எப்படிப் பெறுவது?
சா. கிருஷ்ண சங்கர், மேட்டுப்பாளையம்.
பதில்:
இதற்கு ஒரே காரணம், உங்களிடம் உள்ள விண்டோஸ் 8 அதற்கான அண்மைக் காலத்திய அப்டேட்களைப் பெறவில்லை என்பதுதான். என்ன, குழப்பமாக உள்ளதா? விண்டோஸ் 8 ஐப் பொறுத்தவரை, அப்ளிகேஷன் களுக்கான அப்டேட் விண்டோஸ் ஸ்டோரில் உள்ளது. மற்றவை வழக்கம்போல அப்டேட் பைல்களாகத் தரப்படுகின்றன. இந்த வழக்கமான அப்டேட் பைல்களை நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கவில்லை என்றால், விண்டோஸ் 8.1. அப்டேட்டினை விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெற முடியாது. கீழ்க்காணும் வழியைப் பின்பற்றவும். சர்ச் சார்ம் சென்று, அதில் Check for updates என டைப் செய்திடவும். அங்குள்ள Check for updates என்னும் ஐகானத் தேர்ந்தெடுக்கவும். இப்போது update and recovery screen என்ற திரை காட்டப்படும். இனி Check now என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அப்டேட் பைல்கள் இருப்பின், அவற்றை இன்ஸ்டால் செய்திடவும். அடுத்து கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது விண்டோஸ் ஸ்டோரில், விண்டோஸ் 8.1 கிடைக்கிறதா எனப் பார்க்கவும். நிச்சயம் கிடைக்கும்.

கேள்வி: இமெயில் மெசேஜ்களில் பவுன்ஸ் மெசேஜ் என்று எதனைக் குறிப்பிடுகிறோம். நான் அனுப்பியதை ஏற்றுக் கொள்வது என்ற நிலை இல்லாத போது, பவுன்ஸ் மெசேஜ் எப்படி ஏற்படுகிறது?
சா. உலகராஜ், புதுச்சேரி.
பதில்:
மின் அஞ்சல் அனுப்பிய ஒருவருக்கு, அவர் யாருக்கு அனுப்பினாரோ, அவருக்கு அந்த மெயில் அனுப்ப இயலவில்லை என்ற செய்தியைக் குறிப்பிட்ட சர்வரால், தானாக அனுப்பப்படும் தகவல் அடங்கிய மெசேஜ், பவுன்ஸ் மெசேஜ் (bounce message) எனப்படும். இதனை நாம் பேச்சு வழக்கில் பவுன்ஸ் மெசேஜ் என்றாலும், தொழில் நுட்ப ரீதியாக, இதனை என அழைக்கின்றனர். இதில், அனுப்பப்பட்ட மெசேஜ், எப்போது, என்று பவுன்ஸ் ஆனது என்ற விபரம் இருக்கும். பவுன்ஸ் ஆன மெயில் சர்வரின் அடையாளம் இருக்கும். பவுன்ஸ் ஆனதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டிருக்கும். மெயில் சர்வரில், குறிப்பிட்ட மெயிலைப் பெற இடம் இல்லாமல் இருக்கலாம்; பெறுபவரின் அடையாளம் சரியாக இல்லாமல் இருக்கலாம். இவை திருப்பி அனுப்பப்படும் இந்த மெசேஜின் ஹெடரில் இடம் பெற்றிருக்கும். ஏற்கனவே அனுப்பப்பட்ட மெயில் செய்தி முழுமையாகவோ அல்லது பாதியாகவோ காட்டப்படும்.

கேள்வி: என்னுடைய ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களையும் மொத்தமாக அழித்துவிட்டு, புதியதாக பைல்களை எழுத வேண்டும் எனில், என்ன செய்திட வேண்டும்?
கே.எஸ். பார்கவி, தாம்பரம்.
பதில்:
மிக எளிது. மொத்தமாக அழிப்பது எப்போதுமே மிக எளிமையான செயல்பாடாகும். ப்ளாஷ் ட்ரைவினை பார்மட் செய்தால் போதும். ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரில் இணைக்கவும். பின்னர், கம்ப்யூட்டர் (Computer (Windows 7)) அல்லது மை கம்ப்யூட்டரில் (My Computer (Windows XP)) ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பார்மட் (format) என்பதில் கிளிக் செய்திடவும். இந்த பார்மட் ட்ரைவ் விண்டோவில், ட்ரைவின் கொள்ளளவு, பயன்படுத்தப்படுள்ள இடம், மீத இடம் போன்ற தகவல்கள் கிடைக்கும். இதில் உள்ள Volume Label என்பதில் கிளிக் செய்து, ட்ரைவின் பெயரை மாற்ற விரும்பினால் மாற்றலாம். Quick Format என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும். இதன் மூலம் மெதுவான, முழுமையான பார்மட் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இதன் பின்னர் Start என்பதில் கிளிக் செய்து ப்ளாஷ் ட்ரைவினை பார்மட் செய்திடலாம்.
பார்மட்டிங் செயல்பாடு சில நிமிடங்கள் மேற்கொள்ளப்படும். அது மேற்கொள்ளப்படுவதனைச் சிறிய பச்சை நிறத்திலான நீள் பட்டை ஒன்றில் பார்க்கலாம். இது முடிந்தவுடன், உங்கள் ப்ளாஷ் ட்ரைவ் எழுதப்படாத ஸ்லேட் மாதிரி இருக்கும். புதிய பைல்களை இதில் இனி எழுதலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanasamy Jayaram - Cuddalore,இந்தியா
06-டிச-201320:19:18 IST Report Abuse
Narayanasamy Jayaram நான் INSPIRON N 5110 மடிகணி பயன்படுத்துகிறேன். விண்டோஸ் 7 ultimate -operating tem மடிகணினி வாங்கும்பொழுதே பதிவுசெய்யப்பட்டிருந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வின்டோஸ் 7 அல்டிமேட் (built 9607) 'copy of windows is not genuine' என்று திரையில் செய்தி காணபடுகிறது. அனுப்பியவர் விபரம் குறிப்பிடப்படவில்லை.இதை எடுத்துகொள்வதா? அல்லது புறகனிப்பதா? தயவுசெய்து அறிவுரை வழங்கவும்.ஜெ.நாராயணசாமி.கடலூர்.(jnsacto@gmail.com.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X