விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எச்.டி.சி. புதிய போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2013
00:00

ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள், அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை நெருங்கி விட்டதால், புதிய மாடல்களை வடிவமைக்க எச்.டி.சி. திட்டமிடுவதாக, இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் முதன் முதலில் மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டது எச்.டி.சி. நிறுவனம் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் கட்டமைப்பினைப் பயன்படுத்தி, விண்டோஸ் 8 எக்ஸ் மற்றும் விண்டோஸ் 8எஸ் என இரண்டு மாடல்களை, எச்.டி.சி. முதலில் வெளியிட்டது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதிய மாடல்கள் வடிவமைக்கப்படும் எனத் தெரிகிறது.
எச்.டி.சி. 1 என்ற வரிசையில் மூன்று மாடல்களையும், அனைவரும் வாங்கும் நிலையில் டிசையர் என்ற பெயரில் எட்டு மாடல்களையும் எச்.டி.சி. வெளியிட்டது. வரும் டிசம்பருக்குள், டிசையர் வரிசையில், மேலும் இரண்டு அல்லது நான்கு மாடல்களை, இந்நிறுவனம் கொண்டு வரும்.
இவற்றுடன், எச்.டி.சி. 1 மேக்ஸ் என்ற ஸ்மார்ட் போன் ரூ.56,000 என்ற விலையில் வெளியிடப்படும்.
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், எச்.டி.சி. நிறுவனத்திற்கு ஐந்து முதல் ஆறு சதவீத பங்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில், இந்தியாவில், ஒரு கோடியே 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டில் இது 2 கோடியே 60 லட்சமாக உயரும். வரும் 2014ல் இது, 4 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் எனவும் கருதப்படுகிறது.
இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனை 80 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, போன்களின் விலையைப் பொறுத்தவரை பல்வேறு நிலைகளில் உள்ளது. எச்.டி.சி.15 சதவீத சந்தைப் பங்கினைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சித்திக் அறிவித்துள்ளார்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X