முத்தையா பாகவதரின் இசைக்கு உருவாக்கப்பட்ட சிறந்த நடனம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2013
00:00

ஹரிகேசாஞ்சலி டிரஸ்ட் மற்றும் நாரதகான சபா இணைந்து, பார்வதி ரவி கண்டசாலாவின் கலாபிரியதர்ஷிணி நடனக்குழு மூலம், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின், முத்தான கீர்த்தனைகளை நடன வடிவத்தில் அளித்தனர். பாரத நாட்டின் தலைசிறந்த கலையான, கர்நாடக சங்கீதத்திற்கும், அதை, இத்தலைமுறையினர் இன்று கற்று, கேட்டு, பார்த்து, ரசிக்க அடித்தளமிட்டவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். குருகுலமுறையில், இசை கற்கும் காலமான, 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இசைப்பள்ளியை உருவாக்கி, அதன் மூலம், இசையை பலர் கற்க வழிவகுத்தவர்.
இவரது, தியாகராஜ சரித்திரம், வள்ளி பரிணயம் புகழ் பெற்றவை. தமிழ், தெலுங்கு, வடமொழி, கன்னட மொழிகளில் பாடல்களை இயற்றியுள்ளார். மைசூர் சமஸ்தானம்' காயகசிகாமணி' பட்டத்தை வழங்கியது. மைசூர் சாமுண்டீஸ்வரி மீது, 108 பாடல்களும், சுவாதி திருநாள் கிருதிகளையும் பாடியவர். வர்ணங்கள், ராகமாலிகைகள், தருக்கள், தில்லானாக்கள் பல இயற்றியுள்ளார்.
இவரது பாடல்களில் காணப்படும் எளிய பாவமும், இசையமைப்பும் அனைவரையும் கவரும் படி உள்ளது. இந்த அடிப்படையிலேயே, பார்வதி ரவி, தன் நடனக்குழுவுடன் (திவ்யா, ப்ரீதி, ரமரியா, வல்லபி, யுவஸ்ரீ ப்ரீதி) நடனக்கலைஞர் தனஞ்ஜெயனின் மாணக்கருமான நரேந்திரனுடன் இணைந்து, நடன அமைப்பு செய்து ஆடினார். தலைப்புக்கு ஏற்றவாறு, முத்தான பாடல்களை தேர்வு செய்திருந்தனர். பார்வதி ரவியின் நடன அமைப்பு சற்றே அலாதியானது. முதல் காட்சியில், முத்தையா பாகவதர் கீர்த்தனைகள் இயற்றுவது போலவும், அதை சிஷ்யர்கள் கேட்டு கற்றுக் கொள்ளும்படி, அமைத்திருந்தார். கணபதியை கைத்தொழுது கொடுத்த ஜனரஞ்சனி ராக பாடலுக்கு, தங்கள் குழுவினருடன் ஆடினார். அதில் மல்லாரியைப் போல் அமைத்தும், மேலும் ஒரு சின்ன புதுமையையும் செய்திருந்தார். அதன் சிறப்பு மதுரை மணி ஐயர் குரலில் மேற்கத்திய நோட் பாணியில், ஒரு அமைப்பு மிகப் பிரபலம்.
நாகமரிகஸா என்று துவங்கும், அந்த நோட்டு அமைப்பு பாமர மக்களிடம் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் மூலம், சிவாஜி கணேசன் நாதஸ்வர வித்வானாக நடித்து, வானளவு ரசிகர்கள் மனதில் நின்றார். இதில், மற்றொரு ஆச்சரியமான விஷயம், மதுரை மணி ஐயர் பாடிப் பிரபலமான, அந்த நோட்டை எழுதியவர் முத்தய்யா பாகவதர். அதை பார்வதி உணர்ந்து, அழகாக நடன வடிவம் கொடுத்து அமைத்து இருந்தது, மனதுக்கு நிறைவாக இருந்தது.
அடுத்து, மிக அபூர்வராக பசுபதி ப்ரியாவில் அமைந்த, சரவணபவ, இதில் அனுபல்லவியின் வரிகளுக்கு, முருகா உனையே நினைந்துருகி உனக்கு காவடிச் எடுத்து வருகிறோம் என்றும் சஷ்டியின் பெருமை, காவடி சிந்து போல அமைத்து காவடிகளை குழுவினருடன் சுமந்து, முருகனின் நாமத்தை சொல்லி, ரசிகர்களை பக்தி மலையில் ஏற்றி விட்டனர்.
கர்ண ரஞ்சனி ராக வாஞ்ச தோணுநா, பாடலுக்கு நரேந்திரன் மிக அழகாக நடனமாடினார்.. வர்ணத்தில் அமைந்த நடனதத்தி பின்பகுதிக்கு மகிஷாசுரவதம் கதையைக் கொடுத்தனர்.
ஹம்ஸானந்தி தில்லானாவுடன் நிறைவு செய்தனர். மிக வித்தியாசமாக கிடைத்த இந்நிகழ்ச்சியை, ஒரு கதை போல கல்யாணி ராஜா ராமன் தொகுத்து வழங்கினார். நடன அமைப்பு பார்வதி ரவி மற்றும் நரேந்திரன் குரலில் ஹரிப்ரசாத், கேசவன் மிருதங்கம், குழலில் அதுல் சிவகுமார் வயலின், நட்டுவாங்கம் சசி, கலாபிரியதர்ஷிணியின் சிந்த வித்தியாசமான நடன நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.
- ரசிகப்பிரியா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X