இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2013
00:00

விழிப்புணர்வை ஏற்படுத்திய கண்ணீர் அஞ்சலி!
திடீரென, உறவினர் ஒருவர் இறந்து விட்டதாக தகவல் வரவே, துக்கம் அனுசரிக்க, குடும்பத்துடன் புதுச்சேரி சென்றிருந்தோம். அப்போது, இறந்தவருக்காக, 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரில், இருந்த வாசகம் வழக்கத்துக்கு மாறாக அச்சிடப்பட்டிருந்ததை பார்த்து, வியப்படைந்தேன். அதில், 'மொபைல் போனில்' பேசிக்கொண்டே கார் ஓட்டியதால் ஏற்பட்ட கவனக்குறைவால், காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், அண்ணன் இன்று மதியம், 2:00 மணி அளவில், அகால மரணமடைந்தார் என்பதையும், அண்ணாரின் இறுதி சடங்கு, நாளை, 10:00 மணி அளவில் நடக்கும் என்பதை, ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...' என்று குறிப்பிட்டு, பிரிவால் வாடும் மனைவி, குழந்தைகளின் படமும் அதில் அச்சிடப்பட்டிருந்தது. மேலும், விபத்து நடக்கும் போது, எடுத்த படங்களும் கூடவே அச்சிடப்பபட்டிருந்தது. 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரை, கண்டு கொள்ளாமல் செல்பவர்கள் கூட இந்த போஸ்டரை பார்த்ததும், கூட்டம் கூட்டமாக நின்று, பார்த்து, படித்து விட்டு சென்றனர்.
இது, பொதுமக்களுக்கும், துக்கம் அனுசரிக்க வந்தவர்களுக்கும், நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது. உள்ளதை உள்ளவாறு எடுத்துரைத்தால், பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது உண்மை.
- உ.அரசு, புதுச்சேரி.

தலைசுற்றல்!
கடந்த, 25 ஆண்டுகளாக, அமெரிக்காவில் வாழ்க்கை நடத்தும் எனக்கு, அவ்வப்போது மனதிற்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டு, குழந்தைகளை இந்தியாவில் வளர்த்திருக்க வேண்டுமோ என தோன்றும். நான் விளையாடிய இடங்கள், கொண்டாடிய பண்டிகைகள் என, எதுவுமே என் மகன்கள் அனுபவிக்கவில்லையே என, என் மனம் ஏங்கியதுண்டு.
சமீபத்தில், என் இரு மகன்களுடன் (19 மற்றும் 16வயது) சென்னை வந்தேன். என் முதல் மகன் உடைந்த தமிழ் பேசுவான். சென்னை வந்ததும், மற்றவர்வர்களுடன் பேசிப் பேசி, தமிழ் கற்றுக் கொள்வான் என, மகிழ்ந்தேன். விமானத்திலிருந்து இறங்கி, வெளியே வந்து, பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. என் மகன்கள் தமிழ் பேச தெரியாமல் விழிப்பதை பார்த்து, 'ஒண்ணும் கவலைப்படாதீங்க, நாங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவோம்...' என்று, என் குடும்பத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் கூறியதைக் கேட்டதும், இருவர் முகமும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசித்தது. நானோ தமிழில் பேசச் சொல்ல, 'சீ பாவம் குழந்தைகள்... அவர்களை கட்டாயப்படுத்தாதீங்க...' என்றனர். மொழி, என்னை ஏமாற்றியது.
என் குழந்தைகள் இட்லி, தோசை, எல்லாம் விரும்பி சாப்பிடுவர். இந்தியா சென்றவுடன், வாரம் இரு முறை ஓட்டல் அழைத்து செல்வதாக கூறியிருந்தேன். ஆனால், இங்குள்ளவர்களோ, 'எப்போதும் இந்தியன் புட் தானா, பீட்சா, பாஸ்தா, பர்கர் சாப்பிடலாம்...' என்றதும், இவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. ஆக, உணவு முறையும் மாறி வருவதை உணர்ந்தேன்.
அமெரிக்காவில் குழந்தைகளை வளர்க்க பயப்படுவதற்கு முக்கிய காரணம் திருமணம். இந்தியா சென்று, அங்குள்ள பெண்களின் நடவடிக்கை, கலாசாரம் பார்த்து, எதிர்காலத்தில், என் பையன்கள் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பலாம் என்ற நப்பாசையும் இருந்தது.
புடவை, தாவணி எல்லாம் எப்போதோ போய் விட்டதென்று தெரிந்தாலும், அரைகுறை டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்த பெண்களைப் பார்த்து, அதிருப்தி ஏற்பட்டது என்னமோ நிஜம். இதில், தப்பொன்றுமில்லை என்றாலும், நமக்கே உரிய பாரம்பரிய உடை மறைந்தது கண்டு, மனம் லேசாக வலித்தது.
மேலும், 'பப்பு'களில் எல்லாரும் தண்ணியடிப்பதையும், டான்ஸ் ஆடுவதையும் பார்த்த என் மகன், 'அம்மா, இந்தியா ஒண்ணும், நீ சொன்னது போல் இல்லையே... யு.எஸ்., மாதிரி தான் இருக்கு. ஆனால் சுத்தம்தான் எங்குமே இல்லை...' என்றான்.
நான் பிறந்து வளர்ந்த இந்தியா எங்கே போனது... நம் தமிழ் மொழி வளம் எங்கே, நம் உணவு, கலாசாரம் என்னவாயிற்று... இது எல்லாம் இல்லை என்ற பட்சத்தில், நான் குழந்தைகளை அமெரிக்காவில் வளர்ப்பதில், குற்ற உணர்வு வேண்டாமோ? தமிழகத்தில் பிறந்த நான், நம் ஊரின் வாசனையையும் விட முடியாமல், அதே சமயம், அமெரிக்க பழக்க வழக்கங்களுக்கும் ஒத்துப்போக முடியாமல் தவிக்கிறேன்.
- ராஜி கோவிந்தராஜன், பிட்ஸ்பர்க்.

நல்ல ஐடியா!
சமீபத்தில், என் தோழியை, அஞ்சல் அலுவலகத்தில் சந்தித்தேன். அவளுக்கு, இரண்டு மாதத்துக்கு முன், நிச்சயதார்த்தம் நடந்தது. அவளின் வருங்கால கணவருடன் வந்திருந்தாள். கடந்த மாதமும், அவர்களை பேங்கில் பார்த்த ஞாபகம். கூட்டத்தில் பேச முடியவில்லை. 'என்னடி... உங்களை போல் திருமணம் நிச்சயித்த ஆட்கள், பீச், சினிமா என்று சுற்றும் போது, உங்களுக்கு மட்டும் பேங்க், போஸ்ட் ஆபீசில் என்ன வேலை?' என கேட்டேன்.
அதற்கு அவள், 'எங்க கல்யாணத்துக்கு, இவருக்கு, ஒரு வாரம் தான் லீவ் கிடைச்சிருக்கு. நானும், சென்னைக்கு புதுசு. அதான், என் மாமியார், வீட்டுக்கு அருகில் உள்ள பேங்க், போஸ்ட் ஆபீஸ், பால் பூத், இ.பி., ஆபீஸ் என, எல்லாவற்றையும் பார்த்து வச்சுக்கன்னு சொன்னார். அதனால் தான் இவர் எல்லா இடத்தையும் சுற்றி காட்டுகிறார்...' என்றாள்.
அதற்கு அவளது வருங்கால கணவர், 'ஆமாம் சிஸ்டர்... கல்யாணத்துக்கு பின், இவள் இடம் தெரியாமல், அவஸ்தை படக்கூடாது இல்லையா... அதான், இப்பவே சுற்றி காட்டுகிறேன்...' என்றார். நான், அவள் வருங்கால கணவரை பாராட்டினேன். இன்றைய இளைஞர்கள் நன்றாகவே யோசிக்கின்றனர்.
- சுகாசினி கணேஷ், திருவள்ளூர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
- southington,யூ.எஸ்.ஏ
12-டிச-201322:43:52 IST Report Abuse
 அமெரிக்காவில் ஒவ்வொரு பகுதியிலும் தமிழ் சங்கங்கள் வெகு சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் சார்பில் பல்வேறு இடங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் நடத்தப் படுகின்றன. அது மட்டுமில்லாமல் நம் தமிழர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் அனைத்தும் பண்டிகைகளையும் உறவினர்களைப் போல் இணைந்து மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தமிழ் நாட்டில் வளரும் குழந்தைகளைவிட இங்கே வளரும் குழந்தைகள் நமது கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் மிக நன்றாகவே அறிந்துள்ளனர் என்பது நிஜம். எடுத்துக்காட்டாக பொங்கல். பண்டிகையின் போது இந்தியாவில் மிகப் பெரும்பாலானோர் புதிதாக வெளியான படத்திற்கோ அல்லது தொலை காட்சி முன்பு அமர்ந்தோதான் பொழுதைக் கழிக்கின்றனர். ஆனால் இங்கோ பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளைக் கொண்டு ஏராளமான கலை நிகழ்ச்சிகள் எல்லாம் (தமிழில்) நடத்தி பரிசுகள் வழங்கப் பட்டு குழந்தைகள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். உங்கள் பிள்ளைகளை இந்தியாவிற்கு அழைத்துச் சென்றால் மாமல்லபுரம் தஞ்சை பெரிய கோயில் என்று நமது பாரம்பரிய பெருமைகளைப் பறை சாற்றும் இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பப்புக்கா அழைத்துச் செல்வார்கள்? நல்லவேளை டாஸ் மாக்குக்கு அழைத்துச் செல்லாமல் விட்டீரகளே..... உங்கள் குழந்தைகள் தமிழ் பேசவில்லை என்றால். தவறு உங்களுடையதுதான். சிறு வயது முதலே அவர்களுடன் தமிழில் பேசி பழக்கியிருக்க வேண்டும். தமிழில் பேசுவதை கௌரவக் குறைவாக எண்ணி ஜம்பமாக ஆங்கிலத்தில் பேசியிருப்பீர்கள். அதன் விளைவுதான் உங்களுடைய இந்தப் புலம்பல். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. உங்களுக்கு அவ்வளவு ஆர்வமிருந்தால் திரு. ஶ்ரீராமா கண்ணன் சொல்லியுள்ளது போல் அதிகாலையில் எழச் செய்து தமிழ் படிக்கச் செய்யுங்கள். அல்லது உங்கள் பகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளியில் சேர்த்து தமிழைக் கற்றுக் கொடுங்கள்.
Rate this:
Share this comment
Manik Krsna - Muenchen,ஜெர்மனி
13-டிச-201318:40:46 IST Report Abuse
Manik Krsnaபொங்கலுக்கும் "Thanks giving day"க்கும் என்ன வேறுபாடு? பண்டிகை என்பது கொண்டாடுவதற்காக கலை நிகழ்ச்சி நடத்துவது மட்டும் பண்டிகை அல்ல...
Rate this:
Share this comment
- southington,யூ.எஸ்.ஏ
13-டிச-201322:22:36 IST Report Abuse
 கலை நிகழ்ச்சி என்றால் நீங்கள் நினைப்பது போல் சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக ஆடுவதில்லை நண்பரே. எங்கள் கனெக்டிகட் தமிழ் சங்க நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகு வந்து கருத்து எழுதுங்கள். சிறு குழந்தைகளெல்லாம் திருக்குறள் மற்றும் பல தமிழ்ப்பாடல்கள் பாடிவதாகட்டும் எல்லாம் காண கண் கோடி வேண்டும்....
Rate this:
Share this comment
- southington,யூ.எஸ்.ஏ
14-டிச-201300:57:28 IST Report Abuse
 கொண்டாடுவது என்றால் என்ன? பலகாரம் சாப்பிட்டுவிட்டு டிவி முன் செட்டில் ஆவதா? பெரும் பாலானோர் அதைத்தவிர வேறு என்ன செய்கிறார்கள் என்பதை சற்று தெளிவாகத் தெரிவிக்கவும்...
Rate this:
Share this comment
Manik Krsna - Muenchen,ஜெர்மனி
14-டிச-201305:37:44 IST Report Abuse
Manik Krsnaசகோதரியே, ஏன் முதல் கேள்வியைத் தவிர்த்து விட்டீர்கள்...
Rate this:
Share this comment
Amal Anandan - chennai,இந்தியா
15-டிச-201305:28:48 IST Report Abuse
Amal AnandanManik krsna நீங்களே சொல்லுங்கள், thanks giving day எப்படி நன்றி சொல்கிறார்கள். ஓரளவு ஒற்றுமை உண்டே தவிர, ஒன்று இல்லை. ,...
Rate this:
Share this comment
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
12-டிச-201306:30:26 IST Report Abuse
Uma என்னோட பணி செய்யுற தோழி ஒருவரின் புலம்பல், அவங்க தமிழ் தான், பிள்ளைங்களுக்கு பாட்டு எல்லாமே கத்து தந்து வீட்டுல எல்லாமே பண்பாடோட வளர்த்திருக்காங்க. எல்லாமே வீட்டுக்குள்ள சரி. நாளாக பிள்ளைங்க வளர்ந்து காலேஜ் போனதும் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பிள்ளைங்க வீட்டுக்கே வர்றதில்லை. அப்படியே வந்தாலும் மூணு நாளு தான் சகிக்கிறாங்க, திரும்ப ஹாஸ்டலுக்கு போக விரும்பறாங்க. அப்பா, அம்மாவோட நேரம் செலவழிக்கணும்னு அவங்க விரும்பினாலும் நண்பர்கள், தோழியர்னு ஒரு வட்டத்தை தாண்டி வர முடியல. அதான் உண்மை. இந்தியாவிலும் இல்லாம அமெரிக்காவிலும் இல்லாம பிள்ளைங்களுக்காக பனியில எல்லாம் பணி செய்து களைத்த ஆம்பிளைங்களும் பொண்ணுங்களும் தாங்க ஜாஸ்தி. ஒரு சிலர் பாட்டு, தமிழ் எல்லாம் சொல்லி குடுக்கிறாங்க. வாஸ்தவம். காலேஜ் போற பெண்/பிள்ளை வச்சுருக்கிறவங்க நிலைமைய கேட்டு பாருங்க. தெரியும் கதை. பாரீன் வாழ்க்கைய பத்தி லெக்சர் தரும் ஆட்கள் எல்லாருமே இங்க இருக்கிற கஷ்டத்தை புரிஞ்சிருக்காங்களானு தெரியல. இதுக்கு பயந்து தான் எல்லாரும் பிள்ளைங்களை அஞ்சாங்கிளோஸோட இங்க போதும்னு இந்தியா போயிடறாங்க. ராஜி ரொம்ப நல்லா சொல்லிருக்காங்க. அவங்களோட பால்ய காலத்துல கிராமத்துக்கு லீவுக்கு போறது, தட்டாமாலை, விளையாடறது இப்படி நிறைய அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைங்க இழக்கறாங்கானு சொல்லறாங்க. அடுத்தவங்களை குறை சொல்லனா நிறைய பேருக்கு அல்வா. சொல்ல வற்றதை புரிஞ்சிக்கிறதில்லை. நக்கீரர் போல அவங்க சொன்னதுல ஒரு வரிய உருவி அவங்களை ஏன்டாப்பா கேட்டோம்னு ஓட விட்டுருவாங்க. உண்மையில ராஜி நீங்க பாவம்ங்க. அமெரிக்கா வாழ்க்கைக்கும் ஒத்துப் போக முடியாம இந்தியாவுக்கும் போனால் ஒத்துப் போக முடியாம திரிசங்கு சொர்க்கம் தான். ஆனா ஒரே ஒரு கேள்வி, சென்னையில எதுக்கு பிள்ளைங்க பப்புக்கெல்லாம் போனாங்க? நீங்க கச்சேரி, கோவில் இப்படி எல்லாம் கூட்டிட்டு போயி நம்ம பண்பாட்டை தூக்கி நிறுத்திருக்கலாமே.
Rate this:
Share this comment
Manik Krsna - Muenchen,ஜெர்மனி
13-டிச-201318:36:16 IST Report Abuse
Manik Krsnaஐந்து வயது குழந்தைக்காகத் திரும்பவும் அமெரிக்காவில் குடியேறிய தம்பதியரை எனக்குத் தெரியும். ஐந்து வயது சிறுமியால் இந்திய பள்ளி சூழ்நிலையை அனுசரித்துப் போக முடியவில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்தியா திரும்ப விருப்பம் இருந்தால் குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்பே திரும்பி விடுவது நல்லது...
Rate this:
Share this comment
Cancel
Vijayalakshmi Thiagarajan - Chennai,இந்தியா
11-டிச-201319:17:46 IST Report Abuse
Vijayalakshmi Thiagarajan திருமதி.ராஜி அவர்களே பண்பாடு எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. A place for everything and everything in its place.மாறி வரும் உலகம் ஆயினும் கர்நாடக இசை கச்சேரிகள்,சொற்பொழிவுகள் இன்றும் தாங்கள் பிறந்து வளர்ந்த இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிள்ளைகைளை கோயில்களுக்கும் இது போன்ற இடங்களுக்கும் அழைத்து சென்றிருக்க வேண்டும், அதை விடுத்து பப்புகளுக்கு அழைத்து சென்று புலம்புவதில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இட்லி, தோசைகாக ஹோடெல் சென்றதே பெரும் கொடுமை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X