டுவிட்டரால் வந்த சோதனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2013
00:00

மெலிசா பெச்மென் என்ற பெண், அமெரிக்காவில், மிகவும் பிரபலம். 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளாராக பணியாற்றுகிறார். இவருக்கு, மற்றொரு முகமும் உண்டு. மிருகங்களை வேட்டையாடுவதை, பொழுது போக்காக வைத்துள்ளார். சமீபத்தில், தென் ஆப்ரிக்கா சென்ற இவர், அங்கு, அடர்ந்த வனப் பகுதிக்குள், துப்பாக்கியுடன் களமிறங்கினார்.
மெலிசாவின் கழுகு பார்வையில், அங்கு, சுற்றிக் கொண்டிருந்த, பெரிய சிங்கம் ஒன்று, சிக்கியது. அடுத்த நொடியே, தன் துப்பாக்கி குண்டுகளுக்கு, அந்த சிங்கத்தை இரையாக்கி விட்டார். அத்துடன், பேசாமல் இருந்திருந்தால், பிரச்னை வந்திருக்காது. இறந்து போன சிங்கத்தின் உடல் அருகே அமர்ந்து, துப்பாக்கியுடன் கம்பீரமாக போஸ் கொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளமான, 'டுவிட்டர்'ல், வெளியிட்டு, 'என்னுடைய வீரத்தை பார்த்தீர்களா' என, தன், புஜ பல பராக்கிரமத்தை, வெட்ட வெளிச்சமாக்கியிருந்தார். இத்துடன், இதுவரை, அவர், வேட்டையாடிய, பல மிருகங்களின் உடல்கள் அருகே அமர்ந்து, எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம், தென் ஆப்ரிக்காவில், தற்போது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல், மெலிசாவை, தென் ஆப்ரிக்காவுக்குள், அனுமதிக்க கூடாது என்றும், அவர் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனால், கலங்கி போயிருக்கிறார், மெலிசா.
- ஜோல்னா பையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mangisanghi - chennai,இந்தியா
11-டிச-201317:38:19 IST Report Abuse
mangisanghi இந்த படங்களை பாக்குரப்ப, எந்த மிருகமும் துப்பாக்கி குண்டு பட்டு செத்த மாதிரி தெரியல்லையே? எல்லாம் வொக்காந்து தூங்குற மாதிரியே இருக்கு. செத்த வரிக்குதுற தலய தூக்கி வச்சிருக்கா? ஓவர்ல..
Rate this:
Share this comment
Cancel
Mr.Zero - Tirunelveli,இந்தியா
09-டிச-201313:03:36 IST Report Abuse
Mr.Zero தூரத்துள்ள உள்ள மிருகத்த துப்பாக்கி யால சுடுறது என்ன வீரமா, நேருக்கு நேரா சண்டை போட்டு பிடிச்சா அது வீரம், அதுவாட்டுக்கு காட்டுல சுத்தி வந்தது அத போய் கொல்ற
Rate this:
Share this comment
Cancel
vel - muscat,ஓமன்
09-டிச-201311:29:09 IST Report Abuse
vel துப்பாகின் துணை இல்லாமல் சண்டை போட்டு கொன்று இருந்தால் வீர பெண்மணி என்று சொல்லிருக்கலாம்.தொலைநோக்கு துப்பாக்கி மூலம் வேட்டை ஆடிட்டு என்ன பெரும வேண்டி கிடக்குது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X