கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 டிச
2013
00:00

கேள்வி: என் அலுவலக எக்ஸெல் ஒர்க்புக்கில், ரிடையர் ஆனவர்கள், கடன் விண்ணப்பித்தவர்கள் பெயர் முன் அடையாளம் காட்ட R மற்றும் L என ஆங்கில எழுத்தைச் சேர்ப்பேன். இப்போது இவற்றை எல்லாம் ஒரே கட்டளையில் மொத்தம் எத்தனை பேர் எனப் பெறுவது எப்படி?
சி.ஆர். கந்தசுவாமி, மதுரை.
பதில்
: உங்கள் நோக்கத்தினை எளிதாக நிறைவேற்ற COUNTIF என்ற பங்ஷன் கட்டளை சரியாக இருக்கும். ஓய்வு பெற்றவர்களின் பெயர்கள் A5 முதல் A52 வரையிலான என்ற செல்களில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த செல்களில் எந்த செல்களில் கீ என்ற எழுத்து முதல் எழுத்தாக உள்ள பெயர்கள் எனத் தெரிந்து கொள்ள =COUNTIF (A5:A52,”R*”) என்ற கட்டளையைப் பயன்படுத்துங்கள்.
இதற்கு மாற்றாக இன்னொரு பார்முலாவினையும் பயன்படுத்தலாம். அது =SUM((LEFT (A5:A52,1) =”R”)*1) என அமைக்கப்பட வேண்டும். இந்த பார்முலாவின் முடிவில் எண்டர் அழுத்தாமல், ஷிப்ட்+ கண்ட்ரோல்+ எண்டர் (Shift+Ctrl+Enter) அழுத்த வேண்டும். இந்த பார்முலா, செல் ஒன்றில் இடது ஓரம் இருக்கும் கேரக்டரைத் தேடுகிறது. அது R ஆக இருந்தால் TRUE என்ற மதிப்பையும், இல்லாமல் வேறாக இருந்தால் FALSE என்ற மதிப்பையும் கொள்கிறது. இதற்கு 1 மற்றும் 0 என்ற மதிப்பு கொடுக்கப்படும். SUM பயன்பாடு, இவை அனைத்தை யும் கூட்டி நமக்குச் சொல்கிறது.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். என் கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்வதற்காக, தங்களின் டிப்ஸ்படி, மைக்ரோசாப்ட் இணைய தளத்தில், 8.1 அப்கிரேட் அசிஸ்டண்ட் பயன்படுத்த கிளிக் செய்தால், அது செயல்பட மறுக்கிறது. என்ன செய்திட வேண்டும்?
என்.கே. பரந்தாமன், திண்டுக்கல்.
பதில்:
எக்ஸ்பி சிஸ்டத்துடன் விண்டோஸ் 8 அப்கிரேட் அசிஸ்டண்ட் (http://windows.microsoft.com/enus/windows8/http:/) தான் செயல்படும். விண்டோஸ் 8.1 அப்கிரேட் அசிஸ்டண்ட் செயல்படாது. இரண்டும், மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் ஒரே பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், உங்கள் கம்ப்யூட்டர் இயங்கும் என்றால், விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலும் இயங்கும். இரண்டிற்குமான தேவைகள் ஏறத்தாழ ஒரே அளவில்தான் உள்ளன.

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். ரன் விண்டோவில் "paint” என்று கட்டளை கொடுத்தால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்கும் பெயிண்ட் புரோகிராம் வர மறுக்கிறது. ஆனால், ஐகானில் கிளிக் செய்தால், அல்லது ஆல் புரோகிராம்ஸ், அக்சசரீஸ் பட்டியலில் கிளிக் செய்தால், பெயிண்ட் புரோகிராம் கிடைக்கிறது. இது ஏன்?
என். ஷீலா பிரியதர்ஷிணி, கோவை.
பதில்:
"paint” என்று கட்டளை கொடுத்தால், விண்டோஸ் 7ல், பெயிண்ட் புரோகிராம் இயங்காது. "mspaint” எனக் கொடுக்க வேண்டும். இதே போல மற்ற அக்சசரீஸ் புரோகிராம்களுக்கும் கட்டளைச் சொற்களைத் தந்துவிடுகிறேன். இவற்றை நீங்கள் ஒரு பேட்ச் பைலில் வைத்தும் பயன்படுத்தலாம்.
Calculator: calc
Character Map: charmap
Control Panel: control
Notepad: notepad
Paint: mspaint
Resource Monitor: perfmon /res
System Configuration: msconfig
Sticky Notes: stikynot
System Information: msinfo32

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். சில பிரச்னைகள் ஏற்படுகையில், என் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தானாக, ரீஸ்டார்ட் ஆகிறது. இதனால், அப்போதைய பிரச்னை குறித்து அறிந்து சரியான தீர்வினைக் கண்டறிய இயலவில்லை. இதற்குக் காரணம் என்ன? எவ்வாறு இதனைத் தவிர்க்கலாம்?
என். குலசேகர பாண்டியன், மதுரை.
பதில்:
நல்ல கேள்வி. எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், அது முடங்கிப் போகும் வேளையில், நாம் எதனால் முடங்குகிறது என அறியவிரும்புவோம். ஆனால், தானாக சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆனால், கிடைக்கும் புளு ஸ்கிரீனில் உள்ள தகவல்களைப் படிக்க இயலாமல் போய்விடும். இது போல ரீஸ்டார்ட் ஆகாமல் இருக்க விரும்புபவர்கள், சில செட்டிங்ஸ் மேற்கொண்டால் சரி ஆகிவிடும். இது நமக்குப் பல விதத்தில் உதவும். கிடைக்கும் தகவல்களை, முடங்கிப் போவதற்கான காரணத்தினை, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கு அனுப்பியோ, அல்லது இணையதளங்களில் தேடல் சாதனம் மூலம் தேடியோ, தீர்வினை அறியலாம்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, "Control Panel” தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் expanded Control Panel பயன்படுத்துபவராக இருந்தால், "System” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இல்லை எனில், "System and Security” என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், "System” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இடது பக்கப் பிரிவில், "Advanced system settings” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு User Account Control டயலாக் பாக்ஸ் கிடைத்தால், அதில் "Yes” என்பதில் கிளிக் செய்திடவும்.
5. இப்போது பல டேப்கள் கொண்ட "System Properties” என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் "Advanced” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
6. இங்கு "Startup and Recovery” என்பதின் கீழாக, "Settings” பட்டனில் கிளிக் செய்திடவும்.
7. இனி "Startup and Recovery” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் "System failure” என்பதன் கீழாக, "Automatically restart” என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
8. பின்னர், ஓகே கிளிக் செய்து அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடி வெளியேறவும். இனி, உங்கள் சிஸ்டம் முடங்கிப் போகையில், புளு ஸ்கிரீன் கிடைக்கையில், அதற்கான காரணங்களாகக் காட்டும் தகவல்களை நீங்கள் பெற முடியும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிஷன் இயங்குகிறது. இதில் செக் டிஸ்க் கட்டளை கொடுத்து இயக்கிய போது, அதில் F parameter தரப்படவில்லை என்ற எச்சரிக்கை செய்தி கிடைத்தது. நான் அப்படியே செயல்படுத்தாமல் விட்டுவிட்டேன். இது எதனைக் குறிக்கிறது?
கா. சுந்தர ராஜன், சென்னை.
பதில்:
chkdsk என்பது, மைக்ரோசாப்ட் டாஸ் இயக்கத்துடன் தரப்படும் ஒரு சிஸ்டம் புரோகிராம்.இதனை இயக்கினால், அது ஹார்ட் டிஸ்க்கினை ஸ்கேன் செய்திடும். பைல் சிஸ்டத்தில் உள்ள குறைகளை, முடிந்தால், நிவர்த்தி செய்து நிலை நிறுத்தும். இந்த புரோகிராமினைப் பெற்று இயக்க, ரன் விண்டோவில், cmd எனக் கொடுத்து எண்டர் தட்டினால் டாஸ் விண்டோ கட்டம் கிடைக்கும். அதில் chkdsk என டைப் செய்து எண்டர் தட்ட வேண்டும்.
இந்தக் கட்டளை வரியுடன், அதன் இயக்கத்தினை வரையறை செய்திடும் வகையில் சில கட்டளைகளைத் தரலாம். இந்தக் வரையறைக் கட்டளைகளை ஆங்கிலத்தில் Parameter என அழைக்கின்றனர். இதனைத் தரவில்லை என்று உங்களிடம் கம்ப்யூட்டர் கேட்கிறது. இந்த வரையறைக் கட்டளைகள் எவை என்றும் அவற்றை அமைக்கும் பார்மட் என்னவென்றும் இங்கு தருகிறேன்.
அதன் பார்மட்: chkdsk [volume:][[Path] FileName] [/f] [/v] [/r] [/x] [/i] [/c] [/l[:size]]
இதில் volume என்பது ட்ரைவ் எழுத்து. Path] FileName என்பது நீங்கள் சோதனை செய்திட விரும்பும் பைல் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைக் குறிக்க, wildcard character எனப்படும் (* மற்றும் ?) கேரக்டர்களை இங்கு அமைக்கலாம். /f என்ற கட்டளை, டிஸ்க்கில் உள்ள பழுதுகளைக் கண்டறிந்து குறிக்கிறது. இயன்றால், அந்த இடத்தினை லாக் செய்திடும்.
/v என்ற கட்டளை, ஒவ்வொரு டைரக்டரியில் உள்ள பைல்கள் சோதனையிடப்பட்டவுடன், அவற்றைக் காட்டுகிறது.
/r என்ற கட்டளை, பழுதான இடங்களைக் கண்டறிந்து, அதில் உள்ள தகவல்களைக் கண்டறிகிறது. இதற்கு அந்த டிஸ்க் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மற்றவை என்.டி.எப்.எஸ். வகை பைல் உள்ள சிஸ்டத்தில் மட்டும் செயல்படும்.

கேள்வி: ஐ.டி.இ. மற்றும் சட்டா வகை (SATA & IDE) ஹார்ட் டிஸ்க்குகளை ஒரே கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தலாமா? ஒன்றை ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பைல்களுக்கும், மற்றொன்றை பேக் அப் பைல்களுக்கும் பயன் படுத்தலாமா? இந்த இரண்டின் வகை மற்றும் செயல்பாடு குறித்தும் சற்று விளக்கமாகக் கூறவும்.
கே. அன்பரசன், திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. வெகு காலமாக, ஐ.டி.இ. வகை ஹார்ட் டிஸ்க்குகளே, நிலையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றை PATA கனக்டர் மற்றும் ரிப்பன் கேபிள் கொண்டு இணைத்து வந்தனர். 2003 ஆம் ஆண்டில், SATA இணைப்பு வகை ஹார்ட் டிஸ்க் அறிமுகமானது. 2008 ஆம் ஆண்டின், பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இந்த வகை ஹார்ட் டிஸ்க் இணைப்புகளே பயன்பட்டு வந்தன. SATA வகை இணைப்பு வேகமான டேட்டா பரிமாற்றத்திற்கு உதவியது.
இரண்டையும் முறையான கேபிள்களால் இணைத்து ஒரே கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். ஆனால், ஓர் எச்சரிக்கை. ஹார்ட் டிஸ்க் மிகப் பழையது எனில், அது முடங்கிப் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். எந்த நேரமும் அதில் உள்ள டேட்டா கிடைக்காத வகையில் கெட்டுப் போகும் வாய்ப்பு உண்டு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gobi - Chennai,இந்தியா
09-டிச-201310:04:02 IST Report Abuse
Gobi என் அலுவலக எக்ஸெல் ஒர்க்புக்கில், ரிடையர் ஆனவர்கள், கடன் விண்ணப்பித்தவர்கள் பெயர் முன் அடையாளம் காட்ட R மற்றும் L என ஆங்கில எழுத்தைச் சேர்ப்பேன். இப்போது இவற்றை எல்லாம் ஒரே கட்டளையில் மொத்தம் எத்தனை பேர் எனப் பெறுவது எப்படி? இதே பிரச்சினை எனக்கும் கொஞ்சம் எடுத்துகாட்டுடன் விளக்குங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X