கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2013
00:00

கேள்வி: என் விண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டரில், பைல் மெனுவில், Send To ஆப்ஷனில் Page by email & Link by email ஆகியவை இயக்கப்படாமல், கிரேயாகக் காட்சி அளிக்கிறது. இந்த வசதி என்னுடைய பழைய விஸ்டா சிஸ்டத்தில் இருந்தது. விண்டோஸ் 8ல் இதனைப் பெறுவது எப்படி?
ஆ. கார்த்திகேயன், மதுரை.
பதில்:
உங்களுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இமெயில் கிளையண்ட்டாக எதுவும் மாறா நிலையில் அமைக்கப் படவில்லை என்று தெரிகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இணைத்து அமைந்துள்ள மெயில் புரோகிராமினை, அஞ்சல்கள் அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பயன்படுத்தலாம். ஆனால், மெயில் புரோகிராம் ஒன்றை செட் செய்து, அது செண்ட் டூ மெனுவில் காட்டப்படாமல் இருந்தால், அதனை மாறா நிலையில் இயங்கும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக நீங்கள் செட் செய்திட வேண்டும். சார்ம்ஸ் பாரில் (Charms Bar) கிளிக் செய்து இயக்கவும். இது, திரையில், கீழ் வலது மூலையில் கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கும். பின்னர் "settings,” மற்றும் "Control Panel” கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில், "Programs” என்பதில் கிளிக் செய்து பின்னர் "Default Programs” என்பதன் மீது கிளிக் செய்திடவும். இங்கு, "Set your default programs” என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு காட்டப்படும் புரோகிராம்களில், உங்களின் இமெயில் கிளையண்ட் புரோகிராமினைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின்னர் "Set this program as default” என்பதில் கிளிக் செய்து, அதன் பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி send to option மெனுவில், இமெயில் புரோகிராம் இயக்கப்படும் வகையில் காட்டப்படும்.

கேள்வி: என் சகோதரர் எனக்கு அடுத்த வீட்டில் வசிக்கிறார். என்னுடைய வை-பி நெட்வொர்க் இணைப்பை, அவரின் ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி.யில், அவரால் பயன்படுத்த இயலவிலை. அவரின் எண்ணை என் ரௌட்டரில் போட்டும் பயனில்லை. இதனை எப்படி சரி செய்திடலாம்?
என். பிரகாஷ், சென்னை.
பதில்:
உங்கள் சகோதரரின் வீட்டினை, உங்கள் வை-பி நெட்வொர்க் சிக்னல் அடையாமல் இருக்கலாம். உங்கள் இருவரின் இல்லங்களுக்கு நடுவே எவ்வளவு தொலைவு உள்ளதென நீங்கள் குறிப்பிடவில்லையே. பொதுவாக, 200 அடி தூரத்திற்கு மேல், சிக்னல் செல்வது என்பது சிரமமே. சிக்னல் அந்த இடத்தை அடைந்துவிட்டால், அவர் தன் டேப்ளட் பி.சி.யில் நீங்கள் பயன்படுத்தும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை வை-பி நெட்வொர்க் இணைப்பில் பயன்படுத்தினால் போதும். இணைப்பு கிடைத்து அவர் பயன்படுத்தலாம்.
பெரும்பாலான ரௌட்டர்கள் பல திசைச் செயல்பாடு உள்ளவை. அவை ரௌட்டரிலிருந்து அனைத்து திசைகளிலும் சிக்னல்களை அனுப்பும். எனவே, நிச்சயம் உங்கள் சகோதரரின் வீடு இருக்கும் இடத்தில் வை-பி சிக்னல்களைப் பெற முதல் பத்தியில் கூறியுள்ளபடி முயற்சிக்கலாம்.
சில இடங்களில், மிகப் பெரிய தடைகள், சிக்னல்கள் எளிதாகச் செல்ல முடியாதபடி இருக்கலாம். அல்லது, வீடுகளின் அருகே உள்ள வீடுகளில் உள்ள ரௌட்டர்களில் இருந்து கிடைக்கும் சிக்னல்கள், உங்கள் ரௌட்டர் சிக்னல்களைக் குறுக்கிட்டுத் தடுக்கலாம். உங்கள் சகோதரர் வீடு, உங்களுடைய வீட்டிற்கு அடுத்தபடியாக இருந்தால், பக்கமாக உள்ள ஜன்னல் அருகே, உங்கள் ரௌட்டரை அமைத்து, இடையே தடை இல்லாமல் வழி விட்டு, சிக்னல்களைப் பெற முயற்சிக்கவும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8 உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன். இணையத்தில் நான் நுழையும் போதெல்லாம், ப்ளாஷ் ப்ளேயர் (Flash Player) ஒன்றினைக் கட்டாயம் டவுண்லோட் செய்திடுமாறு ஒரு செய்திக் கட்டம் கிடைக்கிறது. இருமுறை அதனை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், வழக்கத்திற்கு மாறான ப்ளாஷ் ப்ளேயர் மற்றும் அதனுடன் இணைந்து பல தேவையற்ற புரோகிராம்கள் இறங்குகின்றன. இதனைக் கொண்டு என் ப்ளாஷ் ப்ளேயரை அப்டேட் செய்திடலாமா?
என். சுமா தேவி, கடலூர்.
பதில்:
இது போன்ற எச்சரிக்கை செய்திகள் எல்லாம், உங்கள் கம்ப்யூட்டரில் தேவையற்ற டூல்பார்களையும், ஆட் ஆன் தொகுப்புகளையும் பதிந்து வைக்க மேற்கொள்ளும் முயற்சியாகும். இவை நிச்சயமாய் ப்ளாஷ் ப்ளேயரைத் தரும். ஆனால், அவற்றுடன் தேவையற்ற பல புரோகிராம்களும் உடன் இறங்கி, உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொள்ளும். இது போன்ற செய்தியுடன் வரும் ப்ளாஷ் ப்ளேயர் அப்டேட்டினப் பயன்படுத்த வேண்டாம். நிஜமாகவே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ப்ளாஷ் பிளேயருக்கு, அப்டேட் தேவை எனில், அடோப் நிறுவனத்தின் அதிகார பூர்வ இணைய தளம் (get.adobe.com/flashplayer/) சென்று, அப்டேட் செய்து கொள்ளவும். கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்குப் பல வாசகர்கள், இதே போல அப்டேட் செய்து, வைரஸ் பெற்று டிஜிட்டல் சித்திரவதை அனுபவித்ததை எழுதி உள்ளனர். பலரும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்திடும் அளவிற்குச் சென்றனர் என்றும் கூறி உள்ளனர்.
அடோப் இணைய தளத்தில், automatic updates for FlashPlayer என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், அதிகார பூர்வமாக தானாக, ப்ளாஷ் ப்ளேயர் அப்டேட் செய்யப்படும். இங்கு இலவசமாக McAfee Security ஸ்கேன் செய்யப்படும் எனவும் அறிவிப்பு இருக்கும். அதனைத் தவிர்த்துவிடவும்.

கேள்வி: ஏன் சர்க்யூட் போர்டை பிரிண்டட் சர்க்யூட் போர்ட் என்று கூறுகிறார்கள். இது கம்ப்யூட்டரில் உள்ள சர்க்யூட் போர்ட் தானா? அல்லது வேறு ஏதேனும் போர்டா? தயவு செய்து விளக்கவும்.
கே. கந்தசாமி கிருஷ்ணன், வத்றாப்.
பதில்:
பிரிண்டட் சர்க்யூட் போர்ட் (Printed circuit boards (PCBs)) என்பவை பிளாஸ்டிக்கினால் ஆன போர்ட் ஆகும். இவை இந்த போர்டில் மவுண்ட் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் உறுப்புகளை, மின் ஓட்டம் மூலம் இணைக்கின்றன. அவற்றை மெக்கானிக்கல் முறையில் சப்போர்ட் செய்கின்றன. நவீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டிங் பிரிவில் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வரும் புரட்சிகரமான மாற்றங்களின் அடிப்படைக் கட்டமைப்பை இவைதான் தருகின்றன. உங்களின் சிறிய, மிகச் சிறிய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவிலும், கம்ப்யூட்டரின் உள்ளாகவும், இந்த பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உள்ளன.

கேள்வி: என்னுடைய அபார்ட்மெண்ட் வீட்டில், வை-பி சிக்னல்கள் மிகவும் ஸ்ட்ராங்காகக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கையில் பாஸ்வேர்ட் கேட்கிறது. இதனை எப்படிப் பெறுவது?
எஸ். சிவரஞ்சனி, சென்னை.
பதில்:
சிவரஞ்சனி, இதில் பல விஷயங்களைத் தெளிவு செய்திட விரும்புகிறேன். உங்களின் அபார்ட்மெண்ட் அமைந்துள்ள வளாகம் முழுமையும் வை-பி இணைப்பில் அமைக்கப்பட்டிருந்தால், வளாக வீடுகளில் உள்ளவர்களுக்கு, இலவச அல்லது கட்டணம் செலுத்திப் பெறும் வை- பி இணைப்பு தரப்படுவதாக இருந்தால், அதற்கான நிர்வாகிகளிடம் பாஸ்வேர்ட் கேட்டுப் பெற்றுப் பயன்படுத்தவும். அப்படி இல்லை என்றால், அந்த சிக்னல்கள், வேறு ஒருவர் தன் இல்லத்தில், அலுவலகத்தில், கட்டணம் செலுத்திப் பெற்றுவரும் வை-பி இணைப்பிலிருந்து கிடைக்கும் சிக்னல்களாக இருக்கலாம். நீங்கள் அது யாருடைய வை-பி இணைப்பிலிருந்து வருகிறது என்பதனை அதன் யூசர் நேம் கொண்டு கண்டறிந்து, அவரிடமே பாஸ்வேர்ட் கேட்டுப் பெற்று, அவர் அளித்தால், பயன்படுத்தலாம். பொதுவாக, அது போல பங்கிட்டுப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் வீட்டு மின்சாரம் தரும் ப்ளக் பாய்ண்ட்டில், இன்னொருவர் தன் சாதனத்திற்கான இணைப்பு ப்ளக்கினைச் செருகிப் பயன்படுத்த அனுமதி தருவீர்களா என்ன? அது போல் தான் இதுவும்.
பொது இடங்களில் வை-பி இலவசமாகக் கிடைத்தாலும், அதற்கென ஒருவர் பணம் செலுத்தித்தான் அது கிடைக்கும். யாராவது ஒருவர் தன் வை-பி இணைப்பை பாஸ்வேர்ட் கொண்டு கட்டுப்படுத்தாத நிலையில், இன்னொருவருக்கு சிக்னல் கிடைக்கும் நிலையில், அவர் அதனைப் பயன்படுத்த முடியும். ஆனால், அது தவறு. உங்கள் சமையலறையைப் பூட்ட மறந்து போனால், அதில் உள்ள வடையை நான் எடுத்து சாப்பிட அனுமதிப்பீர்களா என்ன? எனவே, அடுத்தவரின் வை-பி சிக்னல்களை, அவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தாமல் இருப்பதே, நல்ல பண்பின் அடையாளம் ஆகும்.

கேள்வி: பல ஆண்டுகளாக, நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். கம்ப்யூட்டர் மலரில் பல கட்டுரைகள் வாயிலாக, எக்ஸ்பி சிஸ்டத்தை விட்டுவிட வேண்டும் என்பதனை உணர்ந்துள்ளேன். என்னிடம் சில ஆண்டுகளுக்கு முன், பணம் செலுத்தி வாங்க்ய விண்டோஸ் விஸ்டா லைசன்ஸ் சிஸ்டம் உள்ளது. இதனை இப்போது என் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியுமா?
என். நீரஜா, கோவை.
பதில்:
ஏன் விஸ்டாவினைப் பயன்படுத்த முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதனை என்னால், புரிந்து கொள்ள இயலவில்லை. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிடி மூலம், விஸ்டா சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திடலாம். அதில் தரப்பட்டுள்ள ப்ராடக்ட் கீயினைப் பயன்படுத்தினால், அது பணம் செலுத்தி வாங்கப்பட்டது என மைக்ரோசாப்ட் உணர்ந்து உங்களுக்கான சப்போர்ட் உதவியைத் தரும். ஆனால், மைக்ரோசாப்ட், விஸ்டாவிற்கான முதன்மையான சப்போர்ட்டினை 2012லேயே நிறுத்திவிட்டது. ஆனால், நீட்டிக்கப் பட்ட சப்போர்ட் உதவி வரும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை தரப்படும். நீங்கள் இதனைப் பதிந்து, உடன் சிறிது பணம் செலுத்தி, விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் கூடப் பதிவு செய்து கொள்ளலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான முதன்மை உதவி வரும் 2015 ஜனவரி வரை கிடைக்கும். நீட்டிக்கப்படும் உதவி வரும் 2010 வரை கிடைக்கும். உங்கள் விருப்பம் போல, ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், எக்ஸ்பியில் இன்னும் தொடர வேண்டாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X