பகைவருக்கும் பதவி கொடுத்த எம்.ஜி.ஆர்.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2013
00:00

எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, தனி கட்சி துவங்கிய நேரம். அந்த சூழ்நிலையில், அரசியலை யும் பார்த்துக் கொண்டு, தன் சினிமா தயாரிப்பான, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை உருவாக்க, மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது.
கடந்த, 1972ல், தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை நீக்கினார் கருணாநிதி. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., மன்றத்தினர், எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆரிடம், தனி கட்சி துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதில், மதுரை எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர்கள், தங்கம் மற்றும் பால்ராஜ் முக்கியப் பங்கு வகித்தனர். கே.எஸ். ராஜேந்திரன் என்பவர், எம்.ஜி.ஆர்., கட்சிக் கொடி என்று, தாமரைக் கொடியை, பல ஊர்களில் ஏற்றி வைத்து, பரபரப்பாக்கினார்.
ஆனால், இதையெல்லாம் கண்டும், காணாமலும் அமைதி காத்தார் எம்.ஜி.ஆர்., இந்த பிரச்னை, கட்சியினர், மன்றத்தினர் ஆகியோரை தவிர, மாணவர்கள் மத்தியிலும், விஸ்வரூபம் எடுத்தது. பள்ளி மாணவர்களும், எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்து, 'ஸ்டிரைக்' செய்ய ஆரம்பித்தனர். அப்போதைய அரசால், அதை சமாளிக்க முடியாமல், நவ.,15, 1972 முதல் ஜன., 8, 1973 வரை, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இது, ஒரு வரலாற்று சம்பவமாக ஆகிவிட்டது.
தமிழக, தென் மாவட்டங்களில், எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ஆதரவு மகத்தானது. எனினும், அதை முறியடிக்க, மதுரை மாவட்ட தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பு வகித்த, அப்போதைய மேயர், மதுரை முத்து, (நாடோடி மன்னன் பட வெற்றி விழாவின் போது, எம்.ஜி.ஆரை அலங்கார சாரட் வண்டியில் அமர வைத்து, மிக பெரிய ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் பரிசு அளித்தவர்) தி.மு.க., தலைமையின் தூண்டுதலால், எம்.ஜி.ஆரை, முழு மூச்சாக எதிர்த்து செயல்பட்டார்.
'எம்.ஜி.ஆர்., எடுக்கும், உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிவராது; வரவும் விடமாட்டேன். அப்படி, படம் ரிலீசானால், நான் சேலை கட்டிக் கொள்கிறேன்...' என்று, பொதுக் கூட்டங்களில் பேசி, பதட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார். அவரை சமாளிக்க, மதுரை அ.தி.மு.க.,வில் காளிமுத்து, பட்டுராஜன், பொ.அன்பழகன் ஆகியோர் களமிறங்கினர்.
எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தியால், படத்தின், பிராசசிங் வேலை, வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, பிரின்ட் போடப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றது. அதே சமயம், சவால் விட்ட மதுரை முத்துவுக்கு, மதுரை மட்டுமல்லாமல், தமிழகமெங்கும், சேலை கடை வைக்குமளவிற்கு, சேலைகள் குவிந்தன. அது, முத்துவின் மனதை மாற்றியது. அதே நேரம், கருணாநிதி, மேயர் முத்துவுக்கு எதிராக செயல்பட்டார். மேயர் போடும் எந்த உத்தரவும் செயல்படாதவாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய ஆணையிட்டார். இதனால், மனம் உடைந்த முத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியை, மேடைகளில், கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற முடிவுக்கு வந்த முத்துவிற்கு, எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து பேச வழி தெரியவில்லை.
அ.தி.மு.க., பிரமுகர் பட்டுராஜனிடம், எம்.ஜி.ஆரை சந்திக்க ஆலோசனை கேட்டார். ஆனால், அவரை அழைத்து செல்ல பட்டுராஜனுக்கு இஷ்டமில்லை. காளிமுத்து மற்றும் பொ.அன்பழகன் ஆகியோர், வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எல்லாம் மீறி, மும்பையில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை, சில பிரமுகர்களுடன், முத்து சந்தித்து, தன் ஆதரவை அளித்து, கட்சியில் சேருவதாக கூறினார். 'மதுரையில் முறைப்படி வந்து சந்தியுங்கள்...' என, கூறி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.,.
சில நாட்களுக்கு பின், மதுரை பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை, பத்திரிகை யாளர்கள் முன்னிலையில், ஆள் உயர மாலை அணிவித்து, பெரிய பூச்செண்டு கொடுத்து, முறைப்படி அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார் முத்து. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், கருணாநிதியை கடுமையாக தாக்கிப் பேசினார். அந்த கூட்ட முடிவில் எம்.ஜி.ஆர்., பேசும் போது, 'வருங்கால மேயர், அண்ணன் முத்து அவர்களே...' என்று சொல்லி, ஆரம்பித்தார். பொதுக்கூட்டத்தில், சொல்லியபடி, மேயர் பதவியை வழங்கி, கவுரவித்தார் எம்.ஜி.ஆர்., தன் கட்சியினரின் எதிர்ப்புகளையும் பொருட் படுத்தாது, பகைவனுக்கும் பதவி கொடுத்த, அந்த உயர்ந்த உள்ளம், எம்.ஜி.ஆரைத், தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்.

மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthurajan - Coimbatore,இந்தியா
27-டிச-201322:23:48 IST Report Abuse
Muthurajan உண்மையில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை சீக்கிரம் வரச்செய்ததே மதுரை முத்தண்ணன் தான் எம்ஜியாரின் திரைப்படம் எப்பொழுதுமே தாமதமாகத்தான் வெளிவரும். இது எல்லோருக்கும் நன்றாக தெரியும். எம்ஜியாரை வைத்து படத்தை தயாரிக்கும், தயாரிப்பாளரும்,விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளரும் நல்ல லாபம் ஈட்டுவார். ஆனால் படத்தயாரிப்பில் ஏற்படும் தாமதத்தால் தயாரிப்பாளரும்,விநியோகஸ்தரும் தவித்து நிற்பர். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எம்ஜியாரின் அரசியல் பிரவேசம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம் தாமதமாகியது. இப்படம் எம்ஜியாரின் சொந்த படம் என்றாலும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இந்த கால தாமதத்தால் பெரிதும் கவலை கொண்டனர்.எம்ஜியாரிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து நின்றனர். இதில் ஒரு சில விநியோகஸ்தர்கள் மற்றும் திரையங்கு உரிமையாளர்கள் மதுரை முத்தண்ணனிடம் பட தாமதத்தை பற்றியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் பேசினர். இதனால் தான் மதுரை முத்தண்ணன் படம் வெளி வராது என்று மேடையில் பேசினார்.நன்றாக கவனியுங்கள்.. படம் வெளி வராது என்றுதான் பேசினார். படத்தை வெளிவர விடமாட்டேன் என்று பேசவில்லை..."படம் வெளிவரதுய்யா..படத்தை வாங்கியவர்கள் எல்லோரும் காவி வேட்டி கட்டி சந்யாசியா போகவேண்டியதுதான்.. உங்க பணம் திரும்பிவராது..அப்படி படம் வந்தால் நான் சேலை கூட கட்டிக்கொள்கிறேன்" என்றுதான் பேசினார்.பத்திரிக்கைகள் தான் அதனை பரபரப்பாக்கின. மதுரை முத்தண்ணனின் இந்த பேச்சு எம்ஜியாரை உசுப்பேத்தியது. தாமதமாக நடந்து வந்த படப்பிடிப்பு மதுரை முத்தண்ணனின் பேச்சால் அசுர வேகம் எடுத்தது. சீக்கிரமே படம் எடுத்து முடிக்கப்பட்டு திரையிடப்பட்டது. பல விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் மதுரை முத்தண்ணனுக்கு மனதார நன்றி சொன்னார்கள். இந்த உண்மை பலருக்கு தெரியாது. பா.முத்து ராஜன், கோவை.
Rate this:
Cancel
Jegadeesan Balu - Erode,இந்தியா
27-டிச-201306:48:21 IST Report Abuse
Jegadeesan Balu முத்து ஒரு மானஸ்தர். சபலங்களுக்கு அப்பாற்பட்டவர்.நேர்மையானவர். அண்ணாவின் சொல்லை வேதவாக்காக எண்ணியவர்.தமிழின உணர்வு அவர் ரத்தத்தில் ஊறியது.அவரது வாரிசுகளும் இலங்கை தமிழர்களுக்கும் புலிகளுக்கும் துணை நின்றவர்கள். திண்டுக்கல் இடைத்தேர்தலில் தோற்றுவிட்டு பழியை முத்துவின் மேல் கலைஞர் சுமத்த, தி.மு.க.வில் இருந்து அவர் வெளியேறினார். MGR எப்போதும் அவர் எதிரியல்ல. மதுரை மாநகராட்சி தேர்தலில் உடன் இருந்து செயல்பட்ட எனக்கு தெரியும். இது நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
Chandru K - Paris,பிரான்ஸ்
24-டிச-201304:09:46 IST Report Abuse
Chandru K திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது. தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர் 25 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு……… எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
Rate this:
S. MURUGAN - Nagercoil,இந்தியா
25-டிச-201311:30:23 IST Report Abuse
S. MURUGANஅப்படியா....... தீர்க்க தரிசன்ம்ன்னா...என்னங்க....?...
Rate this:
S. MURUGAN - Nagercoil,இந்தியா
25-டிச-201311:39:04 IST Report Abuse
S. MURUGANஎம். ஜி . ஆர் தமிழ் நாட்டுக்குன்னு உருப்படியா என்னங்க செய்திருக்கார். ஒன்பது வருஷம் முதல் மந்த்ரியா இருந்திருக்காரே என்ன சாதனை பண்ணிருக்கர்ன்னு சொல்ல முடியுமா பெரிய நடிகர்ன்னா சரிதான் வேற நாட்டுக்கு என்ன சாதிசார்ங்க? இல்ல தெரியாமதான் கேக்றேன் சொல்லுங்க . " வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது" இதெல்லாமே சரிங்க நம்ம தமிழர்கள் பெருமை பட என்ன சாதிchசார்? ஒன்னும் வெளங்கல...
Rate this:
S. MURUGAN - Nagercoil,இந்தியா
25-டிச-201311:40:52 IST Report Abuse
S. MURUGANஎன்னை பொறுத்தவரை தமிழனை பிச்சை காரனாகினார் அவளவ்தான் அவரோட சாதனை...
Rate this:
Chandru K - Paris,பிரான்ஸ்
27-டிச-201302:07:23 IST Report Abuse
Chandru K..... (தொடர்ச்சி) "பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம் கருணை நதியிலே குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம் தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் – தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்"... தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்’ என்று வெறுமனே வாய் அசைக்காமல் தமிழ் மொழி காக்க ஆட்சிக்கு வந்தவுடன் அவர்தான், தஞ்சைத் தரணியிலே "தமிழ்ப் பல்கலைக்கழகம்" அமைத்தார். தமிழ் அறிஞர்கள் 100 ஏக்கர் தேவை என்றனர் ஆனால் எம்.ஜி.ஆர். தந்தது 1000 ஏக்கர் நிலம். "உலக தமிழ் சங்கம்" கண்டார், உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது "உலகத்தமிழ் மாநாட்டை" மகத்தான முறையில் நடத்திக் காட்டினார். பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தத்தை அரசு பள்ளிகூடங்கள் வழியாக நடைமுறைக்கு கொண்டு வந்தார்.......
Rate this:
jacob Martin - chennai,இந்தியா
28-டிச-201316:20:44 IST Report Abuse
jacob Martinதமிழகத்தில் மூலைமுடுக்குகளில் எல்லாம் கடா மார்க் சாராயம் கொண்டுவந்தாரே...அதன் மூலம் பல கோடி ருபாய் வருமானம் வந்ததே..இந்த பெருமையை ஏன் யாருமே சொல்லமாட்டேன் என்கிறீர்கள் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X