எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர் பதவிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

எச்.எல்.எல்., லைப் கேர் லிமிடெட் என்ற நிறுவனம் ஹெல்த் கேர் துறையில் மத்திய அரசின் ஆரோக்யம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு கார்ப்பரேட் அமைப்பாகும்.
இந்த நிறுவனம் 1966ல் துவங்கப்பட்டது. இயற்கை ரப்பர் வளம் நிறைந்த கேரள மாநிலத்தில் இயங்கும் இந்த நிறுவனம் குடும்பக் கட்டுப்பாட்டிற்காகப்பயன்படுத்தப்படும் காண்டோம் தயாரிப்பில் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தில் கடந்த 5 கல்வியாண்டுகளுக்குள் பட்டப்படிப்பு முடித்தவர்  களுக்கு பட்டதாரி பயிற்சியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக இள நிலைப் பட்டப்படிப்பை இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய ஏதாவது ஒரு புலத்தில் முதல் வகுப்புடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2006-2006 கல்வியாண்டு முதல் 2009-2010 வரையிலான கல்வியாண்டில் இந்தப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே இந்த கிராஜூவேட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது : எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.09.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும்30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
பயன்கள் எவ்வளவு ? : எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்காலத்தில் முதல் ஆண்டில் ரூ.4 ஆயிரமும், 2வது ஆண்டில் ரூ.5 ஆயிரமும், 3வது ஆண்டில் ரூ.6 ஆயிரமும் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை : எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு முறையில் தேர்ச்சி இருக்கும். தகுதி உடையவர் களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணலுக்கான அழைப்பு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர நிபந்தனைகள் : எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர் பதவிக்கு சில நிபந்தனை களுக்குட்பட்டு இட ஒதுக்கீடு உள்ளது.தேர்ச்சி பெறுபவர்கள் மூன்றாண்டு காலப் பயிற்சியை இந்த நிறுவனத்தின் திருவனந்தபுரத்திலுள்ள அலுவலகங்களிலேயே மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த முறையில் ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி: எச்.எல்.எல்., லைப் கேர் நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் இந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ள படிவ மாதிரியில் மட்டுமே அவர்களில் ரெஸ்யூமுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கவரின் மீது தவறாமல் "POST APPLIED FOR:___________ AND CODE NUMBER OF THE POST : ______________" என்று குறிப்பிட வேண்டும். இவற்றுடன் தகுதிக்கான சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், முன் அனுபவம், சாதிச் சான்றிதழ் நகல், சமீபத்திய புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு 25.09.2010க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி
Sr.Manager (HR),
HLL Life Care Limited, eroorkada Factory, Thiruvananthapuram
இணைய தள முகவரி :
" www.lifecarehll.com"

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X