கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2013
00:00

கேள்வி: ஆட் ஆன் புரோகிராம் என்பது போல ஆட் இன் என்று புரோகிராம் உள்ளதா? இரண்டும் ஒன்றுதானா? அல்லது வேறு வேறா? தயவு செய்து விளக்கவும். வேறு எங்கும் விளக்கம் கிடைக்கவில்லை.
சி.என். காமாட்சி நாதன், பொள்ளாச்சி.

பதில்: நல்ல கேள்வி. Addon புரோகிராம் என்பது, டூல் பார் அல்லது மீடியா பிளேயர் போன்றவை. இவற்றை உங்கள் இன்டர்நெட் பிரவுசருடன் இணைத்து கூடுதல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். Add in என்பவை கிராபிக்ஸ் கார்ட் அல்லது கூடுதல் மெமரிக்காக நாம் கம்ப்யூட்டரில் இணைப்பவை ஆகும். இதனால், கம்ப்யூட்டரின் திறனை, கொள்ளளவை நாம் அதிகப்படுத்தி, கூடுதலான வசதிகளைப் பெற பயன்படுத்துகிறோம். விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: இணைய தளம் ஒன்றில் நேரடியாகப் பல கட்டுரைகளை எழுதி உள்ளேன். தளம் என் நண்பருடையது. அதனை அவர் மூடப் போகிறேன் என்கிறார். நான் எழுதியதை எப்படி என் கம்ப்யூட்டரில் சேவ் செய்வது? அவசரமாகப் பதில் தேவை.
க. புகழேந்தி, சென்னை.
பதில்:
அனைத்து பிரவுசர்களும், இணையப் பக்கங்களை, நம் கம்ப்யூட்டரில் சேவ் செய்திடும் வசதியை அளிக்கின்றன. எடுத்துக் காட்டாக, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்துவதாக இருந்தால், சேவ் செய்திட விரும்பும் இணையப் பக்கத்தில் இருந்தவாறு, Ctrl + S கொடுக்கவும். இப்போது, "Save Webpage” என்ற பாக்ஸ் கிடைக்கும். இங்கு, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் சேவ் செய்திடக் கட்டளை கொடுக்கலாம். பைல் வகையாக "Webpage, complete” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டர் போல்டரில் இணையதளத்தினை ஒரு பைலாக சேவ் செய்திடும். இதனுடன் சார்ந்த இமேஜ், ஸ்கிரிப்ட் பைல்களை ஒரு சிறிய போல்டரில் போட்டு வைக்கும். இந்த பைல்கள் இணைய தளத்தின் பின்னணி சமாச்சாரங்களைக் கொண்டிருக்கும். இந்த பைலைக் கிளிக் செய்து, அந்த தளத்தினை எப்போதும், ஒரு பிரவுசரில் இயக்கிப் பெறலாம். இந்த போல்டர்களை எப்போதும், ஒரே பிரிவில் வைத்திருக்க வேண்டும்.
இன்னொரு வழியும் உள்ளது. pagenest.com என்ற தளத்தில் உள்ள Pagenest என்னும் அப்ளிகேஷனைப் பயன்படுத்தவும். இதன் மூலம் முழு இணைய தளத்தையும், உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கலாம்.
இறுதியாக, உங்களிடம் ஒரு கேள்வி. உங்கள் நண்பரின் இணைய தளம் தானே. அவரிடம் எப்படியும் அனைத்து டேட்டாவிற்குமான பைல்கள் இருக்கும். உங்கள் பைல்களைத் தரும்படி கேட்டு வாங்கிக் கொள்ளலாமே.

கேள்வி: என் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் அப்ளிகேஷனில், குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை எப்படி தடுத்து வைப்பது? அதற்கான செட்டிங் என்ன?
என். தங்கராஜ், மதுரை.
பதில்
: நல்ல கேள்வி. பரவலாகப் பயன்படுத்தப்படு வரும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை வைத்திருப்போர் பலர் எதிர்கொள்ளும் விஷயம் இது. இதற்கானத் தீர்வினைக் கீழே தருகிறேன்.
1. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில், எந்த அக்கவுண்ட்டைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. திரையில் மேலாக வலது புறத்தில், மூன்று நெட்டு புள்ளிகள் கொண்டதன் மீது (Settings menu) கிளிக் செய்திடுங்கள். அடுத்து More என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இனி, Block என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே கொடுத்து, உங்கள் நீங்கள் தடை செய்திட விரும்பும் நண்பரின் தேர்வை உறுதி செய்திடவும்.
மீண்டும் அவரின் தொடர்பு தேவை எனில், மேலே சொன்னபடி சென்று, புதுப்பித்துக் கொள்ளலாம்.
அடுத்து, ஐபோனுக்கான கேள்வியை யாரும் அனுப்பும் முன்னர், நானே, அது சார்ந்த செட்டிங்ஸ் அமைப்பினையும் தந்துவிடுகிறேன்.
1. வாட்ஸ் அப் திறந்து Setting மற்றும் Chat Settings செல்லவும்.
2. அடுத்து Blocked பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Add New என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு நீங்கள் தடை செய்திட விரும்புபவரின் பெயரை டைப் செய்திடவும். இந்த நபரின் அக்கவுண்ட் தடை செய்யப்பட்டவரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும்.
இந்த நபருடன் மீண்டும் தொடர்பு கொள்ள விரும்பினால், இந்த பட்டியலில் இருந்து அவர் பெயரை நீக்கிவிடலாம்.

கேள்வி: என் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8, அலுவலகத்தில் விண்டோஸ் 7 வைத்து இயக்குகிறேன். இவற்றில் பயன்படுத்த, எந்த இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயனுள்ளதாக இருக்கும்?
சி.ஆர்.ஜீவராஜ், காரைக்கால்.
பதில்:
அது ஏன், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மட்டும் இலவசமாக வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாக (விண்டோஸ் 7 மற்றும் 8) இருந்தால், என்றும் பிரச்னைதான். சரி, உங்கள் கேள்விக்கு வருவோம். அதிக பயனுள்ளதாக நான் கருதுவதனை வரிசையாகத் தருகிறேன். அனைத்தும், அவற்றின் இணைய தளங்களில் இலவச பதிப்பாகக் கிடைக்கிறது. முதலாவதாக, மிகப் பயனுள்ளதாக இருப்பது Avast Antivirus Home Edition. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இதுவே பயன் தரும் வகையில், பிரச்னை எதுவும் இல்லாமல் இயங்குகிறது.
இரண்டாவதாக, நான் கருதுவது AVG AntiVirus FREE 2013. வேகம் மற்றும் கம்ப்யூட்டரின் திறனைப் பயன்படுத்தி, அதனைப் பாதுகாப்பதில் சிறப்பாய் செயல்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைக் காட்டிலும், வைரஸைக் கண்டுபிடிப்பதில், இது இரண்டாம் இடத்தில் தான் உள்ளது.
அடுத்தது மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் டிபண்டர் (Microsoft Windows Defender). இது முதலில் ஆண்ட்டி ஸ்பைவேர் டூலாகத்தான் செயல்பட்டது. விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த பின்னர், இது முழுமையான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகச் செயல்படுகிறது.
மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே, சிறப்பாகச் செயல்படுகின்றன. இணையத்தில் உலாவும் மால்வேர் புரோகிராம்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. ஆனால், இன்னும் சில ஆண்ட்டி வைரஸ் இலவச புரோகிராம்களும், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றின் பட்டியலை உங்களுக்கு அளிக்கிறேன்.
Avira Free Antivirus
Comodo Free Antivirus
Bitdefender
Panda Cloud Antivirus

கேள்வி: பிரவுசர் ஹிஸ்டரி என்பது சரியாக என்ன என்று விளக்கவும். சிலர் இது தேவை என்றும், சிலர் இதனை வைத்துக் கொள்வது ஆபத்தானது என்றும் கூறுகின்றனர். எது உண்மை?
எஸ்.கே. சேஷாத்ரி நாதன், சோழவந்தான்.
பதில்
: உங்கள் கம்ப்யூட்டரில், குறிப்பிட்ட பிரவுசரைப் பயன்படுத்தி, நீங்கள் பார்த்த இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பட்டியலே, பிரவுசர் ஹிஸ்டரி என அழைக்கப்படுகிறது. இதனை நீங்கள் எப்போதும் பார்த்துக் கொள்ளலாம். இந்த பட்டியல் இருப்பதால், நீங்கள் ஏற்கனவே சென்று வந்த இணைய தளத்திற்கு இன்னொரு முறை செல்வது எளிதாகிறது. தேவை இல்லை எனில், நீங்களே இதனை உங்கள் பிரவுசரிலிருந்து நீக்கிவிடலாம். எத்தனை காலம், ஒரு பிரவுசர் ஹிஸ்டரி இருக்க வேண்டும் என்பதனையும் நீங்கள் தீர்மானித்து அமைக்கலாம். அல்லது மொத்தமாக பிரவுசர் ஹிஸ்டரியே வேண்டாம் எனவும் முடிவெடுத்து, மொத்தமாகப் பதிய இயலாதவகையில் பார்த்துக் கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் 2007 பயன்படுத்துகிறேன். என் டாஸ்க் மானேஜர் கட்டத்தில் வழக்கமான அட்ரஸ் பார் இல்லை. File/Options/ View/Help தரும் மெனு பார் இல்லை. Processes/ Services/Performance/Networking/Users என்ற டேப்களும் இல்லை. விநோதமாக உள்ளது. இதனை எப்படி சரி செய்வது?
என்.கே. உஷா ரவி, சென்னை.
பதில்
: நல்ல கேள்வி. எப்போதோ, ஒருமுறை டாஸ்க் மானேஜர் பார்த்த போது, பார்த்தவர், மவுஸால், கிளிக் செய்யக் கூடாத இடத்தில் டபுள் கிளிக் செய்துவிட்டார். அதனால் இப்படி காட்சி அளிக்கிறது. மீண்டும் அதே இடத்தில் டபுள் கிளிக் செய்தால், அனைத்து டேப்களும், மெனுவும் கிடைக்கும். டபுள் கிளிக் செய்ய வேண்டிய இடம், End Task பட்டன் உள்ள இடத்தில், சற்று கீழாக உள்ள காலியான இடத்தில், டபுள் கிளிக் செய்திடவும். அருகே உள்ள படத்தில், அந்த இடம் சிகப்பு வண்ணத்தில் சிறிய கட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சரியா!

கேள்வி: எனக்கு இணைய சேவை வழங்கும் தளம் உட்பட, பல இணைய தளங்களில், உங்கள் யூசர் ஐ.டி.யை நினைவு வைத்துக் கொள்ளவா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. நானும் தாராளமாக, வைத்துக் கொள் என்று யெஸ் பட்டனில் கிளிக் செய்கிறேன். ஆனால், எந்த தளமும் நினைவில் வைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? எங்கு பிரச்னை?
எஸ். பியுலா மார்கரெட் , புதுச்சேரி.
பதில்:
பியுலா, பிரச்னை உங்கள் பிரவுசரில் உள்ளது. அதனைச் சரி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதாக இருந்தால், கியர் ஐகான் அல்லது பைல் மெனுவில் கிளிக் செய்திடவும். பின்னர், Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Internet Options விண்டோ திறக்கப்படுகையில், Content டேப் தேர்ந்தெடுக்கவும். அடுத்து AutoComplete என்பதற்கு அருகே உள்ள செட்டிங்ஸ் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், User names and Passwords on forms என்று உள்ளதற்கு அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், குரோம் பிரவுசரில், மேலாக வலதுமூலையில் மெனு தேர்ந்தெடுக்கவும். பின்னர், கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து கிடைக்கும் பக்கத்தில், கீழாகச் செல்லவும். அங்கு Show advanced settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இன்னொரு பக்கம் திறக்கப்படும். Passwords and forms என்று உள்ள இடத்திற்குச் செல்லவும். Autofill என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பாஸ்வேர்ட்களை சேவ் செய்திடவா என்று கேட்டுள்ள இடத்தில், உங்கள் ஆப்ஷனை அமைக்கவும். பின் உங்கள் மாற்றங்களை சேவ் செய்து வெளியேறவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kasiviswanathan - Ramanathapuram,இந்தியா
24-டிச-201315:28:40 IST Report Abuse
kasiviswanathan என் கம்ப்யூட்டர் விண்டோஸ் விஸ்டா கூகுளே ச்ரோமே ஓபன் செய்தால் மட்டும் ஸ்க்ரீன் எர்ர்ரொர் வருகிறது ஏன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X