இந்திய விமானப் படையில் கிரவுண்டு டியூட்டி அதிகாரி பணி வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

இந்திய நாட்டை வான் வெளித் தாக்குதலிலிருந்து காப்பதில் பெயர் பெற்ற இந்திய விமானப் படை உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது. இதில் ஆண் மற்றும் பெண் என்ற இருபாலருக்கும் சேர்த்து 130 கிரவுண்டு டியூட்டி அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி : இந்தியவிமானப் படையின் கிரவுண்டு டியூட்டி அதிகாரிப் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் இள நிலைப் பட்டப்படிப்பு, எம்.எஸ்சி., முது நிலைப் பட்டப் படிப்பை கணிதம், அப்ளைடு மேதமேடிக்ஸ், புள்ளியியல், அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் படித்தவர்கள் மற்றும் எம்.சி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுவிபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
என்னென்ன பிரிவுகள்: இந்திய விமானப் படையின் கிரவுண்டு டியூட்டி அதிகாரி பதவி அட்மினிஸ்ட்ரேஷன் அண்டு லாஜிஸ்டிக்ஸ், அக்கவுன்ட்ஸ், மெட்டியோராலாஜி, எஜூகேஷன் என்ற பிரிவுகளில் நிரப்பப்படவுள்ளது. பிரிவுக்கேற்றபடி கல்வித்தகுதி தேவைப்படும். இந்த விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
உடல் தகுதி : இந்திய விமானப் படையின் கிரவுண்டு ட்யூடி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் ஆண்களுக்கு 157.5 செ.மீ.,ஆகவும், பெண்களுக்கு 152 செ.மீ., ஆகவும், இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : இந்திய விமானப் படையின் கிரவுண்டு டியூட்டி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர் இள நிலைப் பட்டப்படிப்பு முடித்தவராக இருந்தால் 20 வயது முதல் 23 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1998 முதல் 01.07.1991க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
முது நிலைப் பட்டப்படிப்பு அல்லது ஐந்து வருடம் படிக்கக்கூடிய எல்.எல்.பி., படிப்பு முடித்தவராக இருந்தால் 20 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1986 முதல் 01.07.1991க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 3 ஆண்டு படிக்கக் கூடிய எல்.எல்.பி., படிப்பு முடித்தவராக இருந்தால் வயது 20 முதல் 26 க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1985 முதல் 01.07.1991க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். எம்.எட்., பிஎச்.டி., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்தவராக இருந்தால் 20 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1984 முதல் 01.07.1991க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வு எழுதுபவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை : இந்திய விமானப் படையின் கிரவுண்டு டியூட்டி அதிகாரி பதவிக்கு பொது நுழைவுத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பது எப்படி: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி உடையவர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்னப்பத்தை நிரப்பி 11.10.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தமிழ் நாட்டில் கோவை மற்றும் சென்னையில் தேர்வு நடை பெறுவதால் இதற்கு ஏற்ற மையத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மகேஷ் - காஞ்சிபுரம்,இந்தியா
23-செப்-201002:07:07 IST Report Abuse
மகேஷ் live news is very beauty
Rate this:
Share this comment
Cancel
காலிஸ் - திருப்பூர்,இந்தியா
22-செப்-201008:10:51 IST Report Abuse
காலிஸ் i want website address for this job
Rate this:
Share this comment
Cancel
dhanesh - coimbatore,இந்தியா
21-செப்-201023:18:02 IST Report Abuse
dhanesh pls share full details about this job website i cant find related website so anyone can?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X