குழு விவாதம்-சில தகவல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

எம்.பி.ஏ. போன்ற மேனேஜ்மென்ட் படிப்புகளுக்காக பல கட்டத் தேர்வு முறைகளை புகழ் பெற்ற பி. ஸ்கூல்கள் நடத்துகின்றன. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட குழு விவாதத்தை மிகக் கடுமையாகவே பலர் உணர்கிறார்கள். நிர்வாகம் என்பது ஒரு குழுவோடு தொடர்புடையதாக இருப்பதால் குழு விவாதத்திறன் மிக அவசியமாகக் கருதப்படுகிறது. குழு விவாத வகைகள் எவை?
உங்களது ஆழ்ந்த அறிவு சம்பந்தப்பட்ட தலைப்புகள் தரப்பட்டு இவற்றை விவாதிப்பது ஒரு வகை. உதாரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி தரலாமா போன்ற பொதுவான தலைப்பாகத் தரப்பட்டால் மற்றவர் பேசுவதிலிருந்தே நாம் கருத்துக்களைத் தொகுத்துப் பேச முடியும்.  வினோதமான சிந்தனைகளும் தலைப்புகளாத் தரப்படுவதுண்டு. சந்திரன் இல்லை என்றால் என்ன என்பது ஒரு தலைப்பு. இதில் நாம் நமது பகுத்தாராயும் திறன் மற்றும் கிரியேட்டிவ் எண்ணங்களைக் கொண்டு பேச முடியும்.
ஒரு தலைப்பு தரப்பட்டு குழு விவாதத்தில் கலந்து கொள்ள வந்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பதவியின் பெயர் தரப்பட்டு அதற்கேற்ப அந்தத் தலைப்பை விவாதிக்க வேண்டும். இதை கேஸ் ஸ்டடி என்று கூறுகிறார்கள். "ரோல் பிளே" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது போன்ற விவாதங்கள் உங்களது மேலாண்மைத் திறன் மற்றும் அடிப்படையில் புதுமையாக சிந்திக்கும் திறன் ஆகியவற்றை எளிதாக பரிசோதித்து விடும்.  குழுத் திறனறியும் தலைப்புகள் தரப்பட்டு ஒவ்வொருவரும் விவாதித்து இதை ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்துக்கு வர முடிகிறதா என்று சோதிக்கும் வகைக் குழு விவாதங்களும் உண்டு.  குழு விவாதங்களில் கடைப்பிடிக்கப்படும் பொதுவான அம்சங்கள் சில.. 
குழு விவாதம் என்பது பொதுவாக 10 முதல் 15 நிமிடங்களுக்கு நீடிப்பதாகவே பி ஸ்கூல்களால் நடத்தப்படுகிறது பொதுவாக ஒரு விவாதத்தில் 8 முதல் 10 பேர் கலந்து கொள்ளும் படி அமைக்கப்படு கிறது. அரிதாக 16 பேர் வரையிலும் இடம் பெறும் விவாதங்களும் உள்ளன.  தொடக்கத்தில் 2 முதல் 3 நிமிடங்கள் யோசிக்கும் அவகாசமும் தரப்படுகிறது. என்றாலும் அப்படியே விவாதத்தை உடனடியாகத் தொடங்குவதற்கு ஏதுவாக பயிற்சி செய்து கொள்வது முக்கியம். உங்களது செயல்பாடும் திறனும் விவாதத் திறனும் ஒன்று அல்லது 2 பி ஸ்கூல் ஆசியர்களால் கண்காணிக்கப்பட்டு கணிக்கப்படுகிறது. காச் மூச்சென்று கத்திக் கொண்டே இருக்கும் விவாதத்தில் கூட ஒவ்வொருவன் திறனையும் சரியாகக் கணிக்கும் திறன்களை இவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை கட்டாயம் மனதில் கொள்ளவும். வட்ட வடிவமாகவோ செவ்வக வடிவமாகவோ இருக்கைகள் போடப்படுகின்றன. இன்னார் இந்த இடத்தில் தான் அமர வேண்டும் என்ற வரையறைகள் இருப்பதில்லை.  குறிப்பிட்ட கால அளவுக்குள் இவை முடிக்கப்படுவது மிக அவசியம். ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அது அந்த குழுவுக்கே சிறப்பானதாக அமைகிறது. இறுதியில் எழுத்து வடிவமாகவும் தலைப்பு பற்றிய உங்களது கருத்துக்கள் பெறப்படுகின்றன.  தயாராவது குறித்து சில குறிப்புகள் நடப்புச் செய்திகளிலும் பொது அறிவிலும் நீங்கள் மிகச் சிறந்த திறன் பெற்றிருக்கவேண்டும். இது சில நாட்களில் பெறக்கூடியதல்ல. பிசினஸ் செய்திகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். இப்படி தயாராகத் தொடங்கினாலே தலைப்புகளை நீங்கள் மிகச் சரியாக கணித்து அதற்கேற்ப பயிற்சியை மேற்கொள்ளலாம். பாயின்டுகளை மனப்பாடம் செய்தால் எந்த காலத்திலும் இவற்றில் வெற்றி பெற முடியாது. இது போல பி ஸ்கூல் அட்மிஷனுக்காக ஆசைப்படும் நபர்களோடு சேர்ந்து பயிற்சி மேற்கொள்வது தான் உங்களுக்கான வெற்றியை உறுதி செய்யும்.  பி ஸ்கூல் குழு விவாதங்களில் நீங்கள் பமளிக்க உங்களிடம் எதிர்பார்க்கப்படும் குணங்கள் என்ன: தனியாக ஒரு காரியத்தை முடிக்க விரும்புவராக நீங்கள் இருக்கவே கூடாது. நிர்வாகம் என்பது கூட்டு முயற்சி. இதில் நீங்கள் குழு உறுப்பினராக செயலாற்றத் தொடங்கி பின் குழுவை வழிநடத்துபவராக மாறக் கூடியவராக இருக்க வேண்டும்.  எதையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அதே நேரம் தீர்க்கமாகவும் சொல்லத் தெரிய கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு சிறப்பான பகுத்தாராயும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எமோஷனல் பேர்வழியாக நீங்கள் இருக்கவே கூடாது. மற்றவர்களை வழி நடத்தக் கூடிய, எளிதாக சமாதானம் செய்யக் கூடிய மற்றும் சிறந்த ஊக்கப்படுத்துபவராக நீங்கள் இருக்க வேண்டும்.  மற்றவரின் கருத்தைக் கேட்கக் கூடியவராக இருப்பதும் முக்கியம். உங்களது கருத்திலிருந்து வழுவாதராகவும் இருக்க வேண்டும்.  சொந்தமாக யோசித்து கருத்துக்களை வெளிப்படுத்துவது உங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X