குருபார்வை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

அனந்தலட்சுமி, கோயம்புத்தூர் :  சமூகவியல் படிப்பைப் படிப்பதால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா?
தொடக்கத்தில் வெறும் சமூக சேவையோடு தொடர்புடைய படிப்பாக கருதப்பட்டது சமூகவியல். ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப் பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு போன்றவற்றுக்கு இன்று பெரும் பங்காற்றும் துறையாக விளங்கஉதவுவது சமூகவியல் தான். இதில் பங்காற்றும் ஒருவருக்குக் கிடைக்கும் திருப்தியானது மிக அதிகமாக இருக்கிறது. மனிதர்களை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை மேற்கொள்ளலாம். பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும் என்பதை நாம் அறியும் போது அது எவ்வளவு பெரிய திருப்தியைத் தரும்? சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளை களைய முயற்சிப்பதே சமூகவியலாளர்களின் முக்கியப் பணியாக இருக்கிறது. இதற்கு கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, உடல்நல திட்டங்களை செயல்படுத்துவது என இவர்களின் பணி எப்போதும் உயரிய நோக்கங்களைக் கொண்டதாக இருப்பதை நாம் காணலாம்.  சமூகவியல் பணிகளில் கிளினிகல் சமூகப் பணி, பள்ளி சமூகப் பணி, உளவியல் சமூகப் பணி, மறு சீரமைப்பு மற்றும் குற்றங்களை களையும் பணி, மருத்துவ சமூகப் பணி, சமுதாயப் பணி என பல்வேறு பிரிவுகள் உள்ளன. தொழிற்சாலை சமுதாயப் பணியும் இருக்கிறது. அரசுத் துறைகளிலும் தன்னார்வ நிறுவனங்களிலும் இதைப் படித்த வருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எம்.எஸ்.டபிள்யூ. அல்லது எம்.ஏ. படிப்பாக இதைப் படிக்கலாம். யுனெஸ்கோ, யுனிசெப், லேபர் பீரோ போன்றவற்றில் இதைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அரிஸ்டாடில், திருமோகூர் : மனித உரிமைகள் தொடர்பான படிப்பு நல்ல படிப்புதானா? இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா?
மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது. இப் பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத் துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள்.  எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலை தூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டுபட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net.
இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.
விண்ணப்பம் பெறும் முகவரி
ndian Institute of Human Rights,
A16, Paryavaran Complex, (HT), SaketMaidangarhi Marg,
New Delhi – 110 030.

தண்டபாணி, பெரியகுளம்  : நிதிச் செய்திப் பிரிவில் சிறப்புப் பயிற்சி எங்கு பெறலாம்?
கோல்கட்டா ஐ.ஐ.எம். பன்னாட்டு ஆடிட் நிறுவனமான பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்சுடன் இணைந்து நிதிச் செய்தியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சியை நடத்துகிறது. பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளில் நமது இளைஞர்கள் பயிற்சி பெற்று இன்றைய பொருளாதார யுகத்தில் சிறப்பான வேலை பெற இது உதவும்.இந்தியாவிலும் பன்னாட்டு அள விலும் நிதிச் செய்தியாளர்களுக்கான பணி வாய்ப்புகள் ஏராளமாகஉள்ளன. இந்தப் பயிற்சியானது அடிப்படை மற்றும் மேம்பட்ட அடுத்த நிலை என 2 நிலைகளில் தரப்படும். துவக்கத்தில் நேரடி முறையில் இது நடத்தப்படும். எனினும் விரைவில் தொலை தூரக் கல்வி முறையிலும் இது நாடெங்கும் இப் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்குத் தரப்படும். நவீன தொழில்நுட்ப பயன்பாடு அதிகம் இருக்கக்கூடிய பயிற்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என நிதிச் சேவையோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி மேலாண்மை மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளின் படியே தர வேண்டும் என இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X