கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

கேள்வி: என்னுடைய பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் என்ன என்று தெரிந்து கொள்ள வழி உள்ளதா? ஒரு வழி காட்டவும்.  -எஸ். பியூலா ஜோசப், கோவை
பதில்: ஒன்றென்ன, பல வழிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினைத் திறந்து Broadband internet speed test   என்று கொடுத்தால், இணையத்தில் இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் தரப்படும். இணைய தொடர்பில் இருக்கையில், இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் திறக்கப்பட்டு, உங்கள் இன்டர்நெட் வேகம் குறித்த சோதனையை மேற்கொள்ளவா என உங்களிடம் கேட்டு, விடை பெற்றபின், சோதனையிடப்பட்டு, பைல் அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம் என்னவென்று காட்டப்படும். அதில் உள்ள மற்ற விளம்பரங்கள் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, இந்த வகையில் தீங்கில்லாத  தளங்கள் இரண்டைக் கூறுகிறேன். அவற்றின் முகவரிகள்: www.speedtest.net/   மற்றும் http://testinternetspeed.org

கேள்வி: நான் சிறந்த முறையில் ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு தொகுப்பினை நிறுவி இயக்கி வருகிறேன். அதனை அவ்வப்போது அப்டேட் செய்கிறேன். இருப்பினும் சென்ற வாரம் வைரஸ் பாதித்து, ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடும் அளவிற்குப் போய்விட்டது. இது எதனால்? –டி. எஸ். ஆறுமுக ராஜன், சென்னை
பதில்: மிகச் சிறந்த பாதுகாப்பு என்று கம்ப்யூட்டரில் எதனையும் கூற முடியாது. மிகச் சிறந்த பயர்வால், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு, அவ்வப்போது அப்டேட் என இருந்தாலும், ஏதேனும் ஒரு வழியில் வைரஸ் புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் வாய்ப்பு உண்டு.  முதலில், நீங்கள் சிறந்த பாதுகாப்பு என்று எதனைச் சொல்கிறீர்கள்? விண்டோஸ் பயர்வால் மிகச் சிறந்தது இல்லை. மற்ற நிறுவனங்கள் விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் மிகச் சிறந்த பயர்வால்களைத் தருகின்றன. கொமடோ (Comodo)  தரும் பயர்வால், விண்டோஸ் பதிந்து தரும் பயர்வாலைக் காட்டிலும் சிறந்ததாகவே உள்ளது. அவ்வப்போது, இது உள்ளே வருகிறது, அனுப்பவா? என்று கேட்பது எரிச்சலாக இருந்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். இது போலவே தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். மிகச் சிறந்தது என்று எதனையும் கூற முடியவில்லை. ஏனென்றால், வைரஸ் புரோகிராம் பரப்புபவர் கள், இந்த பாதுகாப்பு வழிகளை எல்லாம் மீறிச் செல்லும் புரோகிராம்களை எழுதும் வல்லமை படைத்தவர்களாக இருக்கின்றனர். அதற்காக, எந்த பாதுகாப்பு புரோகிராமும் இல்லாமல் இருக்கக் கூடாது. நீங்கள் குறிப்பிடும் பாதுகாப்பு புரோகிராம்கள் அனைத்துமே நன்றாகச் செயல்படுபவையே. தொடருங்கள்.

கேள்வி: சில நேரங்களில் சில இணைய தளங்களைப் பெற முடியாமல் போய்விடுகிறது. அவற்றை இதற்கு முன் மிக எளிதாகப் பெற்று இயக்கி இருக்கிறேன். என்ன காரணமாக இருக்கும்? – எஸ். பிரதீப் குமார், கம்பம்
பதில்: இணையத்தில் இருக்கையில், ஒரு தளம் கிடைக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. உங்களுடைய ரௌட்டர், கம்ப்யூட்டர், பிரவுசர் என எது வேண்டுமானாலும், பிரச்னையைக் கொண்டிருக்கலாம். எனவே முதல் சோதனையாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வது இன்னொரு நல்ல வழி. கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தி, மோடம், ரௌட்டர் இணைப்புகளை நீக்கி, மீண்டும் இணைத்துப் பயன்படுத்திப் பார்க்கவும். அந்த தளத்தின் வழக்கமான முகவரி இல்லாமல், அதன் ஐ.பி. முகவரியினை எண்களில் தந்து பார்க்கவும்.  தளத்தின் முகவரியினை அதன் எண்களில் பெற,  http://www.selfseo.com/ find_ip_address_of_a_website.php   என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.  இதற்குப் பின்னரும் அந்த தளம் கிடைக்கவில்லை என்றால், சற்று ரிலாக்ஸ் செய்திடவும். அந்த தளத்தில் தான் பிரச்னை. எனவே சில மணி நேரம் கழித்து முயற்சிக்கவும். இப்போதும் கிடைக்கவில்லை என்றால், இன்னொரு  கம்ப்யூட்டர் மூலமாக முயற்சிக்கவும்.

கேள்வி: பைல் ஒன்றை டெலீட் செய்திட கட்டளை கொடுத்தேன். எப்போதும் இதை அழித்து ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பவா என்ற கேள்வி கேட்கப்படும். ஆனால் அந்த கேள்வி இல்லாமலேயே பைல் அழிக்கப்பட்டது. இது ஏன்? –எஸ். ஆகாஷ், மதுரை
பதில்: எனக்கும் இது போல ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம் ரீசைக்கிள் பின் அமைப்பில் சின்ன மாற்றம் எப்போதாவது நம்மை அறியாமலேயே ஏற்பட்டிருக்கலாம். டெஸ்க் டாப் சென்று, ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸ் எழுந்து வரும். இதில் பல டேப்கள் இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ் ஒவ்வொன்றுக்கும் ஒரு டேப் இருப்பதோடு, குளோபல் என்று ஒரு டேப் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.  இந்த பாக்ஸில் கீழாக டிஸ்பிளே டெலீட் கன்பர்மேஷன் டயலாக் என ஒரு வரி இருக்கும். அதில் உள்ள சிறிய கட்டத்தில், டிக் அடையாளம் ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து மூடவும். அவ்வளவுதான். அடுத்த முறை நீங்கள் கோப்பினை அழிக்க கட்டளை கொடுத்தாலும், என்ன அழித்து குப்பைத் தொட்டிக்கு அனுப்பட்டுமா? எனக் கேட்டு உங்களிடம் ஓகே கிடைத்த பிறகே, கோப்பு அழிக்கப்படும். என்ன ஓகேயா!

கேள்வி: என் கம்ப்யூட்டரில் டாஸ்க் பாரில், இன்டர்நெட் இணைப்பைக் காட்டும் ஐகான் இப்போது தெரிவதில்லை. இதனால், சிஸ்டம் இன்டர்நெட்டுடன் கனெக்ட் ஆகி உள்ளதா, எவ்வளவு டேட்டா அனுப்பப்பட்டது, அதன் வேகம் போன்ற விபரங்களைக் காண இயலவில்லை. பழையபடி எப்படி மாற்றலாம்?  –க. திருமாறன், விருதுநகர்
பதில்: தகவல்களைத் தேடித் தரும் இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் நமக்குக் காட்டப்படவில்லை என்றால், சிக்கல்தான். ஆனால் இதனை எளிதாகத் தீர்த்துவிடலாம். நீங்கள் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் என்று கூறவில்லை. அனைத்திற்கும் தீர்வினைப் பார்ப்போம்.
விண்டோஸ் எக்ஸ்பியில், ஸ்டார்ட் (Start)  ஐகான் கிளிக் செய்திடுங்கள். இதில் செட்டிங்ஸ் (Settings) பிரிவு செல்லுங்கள். அதில் கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் காட்டப்படும் ஐகான்களில், Network Connections  என்று உலக உருண்டை படத்துடன் உள்ள ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் செட் செய்த,   இன்டர்நெட் உட்பட அனைத்து நெட்வொர்க் இணைப்புகளுக்கான ஐகான்கள் காட்டப்படும். உங்களின் இன்டர்நெட் இணைப்பு ஐகானைத் தேர்ந்தெடுங்கள். இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் General டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.  இதில் “Show icon in notification area when connected” என்ற வரியில் உள்ள சிறிய பாக்ஸில், டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நோட்டிபிகேஷன் ஏரியாவில், ஐகான் காட்டப்படும்.
உங்கள் சிஸ்டம் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 எனில்:
விண்டோஸ் டாஸ்க்பாரில் ரைட் மவுஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்  Properties   தேர்ந்தெடுக்கவும். இதில்  Notification Area டேபில் கிளிக் செய்திடவும். இதில் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் show or hide Clock, Volume, Network and Power  என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இதில்  Network   பாக்ஸில் டிக் அமைக்கவும்.  இதில் காட்டப்பட்டுள்ள மற்ற விஷயங்களைப் படித்துப் பார்த்து, நீங்கள் விரும்பினால், மேலும் சில மாற்றங்களை அமைக்கலாம். அடுத்து அப்ளை  (Apply)  கிளிக் செய்து, பின்  OK   கிளிக் செய்து வெளியேறவும்.  இன்டர்நெட் ஐகான் காட்டப்படாததனால், இணைய இணைப்பு கிடைக்காது என்று எண்ண வேண்டாம். அதே போல இணைய இணைப்பின் வேகம் அறிய,Free Internet Speed Test என்று ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் கொடுத்துக் கிடைக்கும் தளங்களின் மூலம், இணைய இணைப்பு வேகத்தை அறியலாம்.

கேள்வி: என் நண்பர்கள் சிலர், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், குயிக் லாஞ்ச் பார் மூலம் அதிக பயன் பெறலாம் என்று கூறுகின்றனர். இது உண்மையா? இது குறித்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.  –ஆர். கே. விசுவாசம், காரைக்கால்
பதில்: வேகமாக செயல்பட என்று தான் குயிக் லாஞ்ச் பார் (Quick Launch Bar)  என்று பெயரிட்டு விண்டோஸ் இதனை நமக்குத் தந்துள்ளது.  நீங்கள் கம்ப்யூட்டரில் அதிக நேரம், பலவகையான பணிகளை மேற்கொள்வது தெரிகிறது. அதனால்தான் இந்தக் கேள்வி என்று நினைக்கிறேன்.  புரோகிராம், அப்ளிகேஷன், பைல் போன்றவற்றை, குறைவான நேரத்தில் இயக்கத்திற்குக் கொண்டு வர இந்த குயிக் லாஞ்ச் பார் பயன்படுகிறது.  டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனு, ஆல் புரோகிராம்ஸ் செல்லாமல், மேலே குறிப்பிட்டவற்றை இயக்க இது வழி தருகிறது. திரையின் கீழாக உள்ள, ஸ்டார்ட் பட்டைக்கு வலதுபுறமாக உள்ள, டாஸ்க் பாரில் இடது பக்கம் இந்த பார் அமைக்கப்படுகிறது. அது இல்லை என்றால், உடனே அமைத்துவிடலாம். முதலில், டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஆப்ஷன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள ஆப்ஷன்களில் ஒன்றாக,  Quick Launch Bar  இருக்கும். இதில் கிளிக் செய்தால், ஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தப்படும். இப்போது குயிக் லாஞ்ச் பார் கிடைக்கும். இதில் நாம் அதிகம் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஐகானை, டெஸ்க் டாப்பிலிருந்து இழுத்து இதில் விட்டுவிடலாம். இரண்டு இடங்களிலும் அந்த ஐகான் இருக்கும். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகானில் ஒரு கிளிக் செய்தாலே, அந்த புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan - AbuDhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-201012:05:00 IST Report Abuse
Balamurugan I would like to learn VB programs in MS Excel. This may through online. Can you suggest someone or portal for this? Thanks
Rate this:
Cancel
priya - chennai,இந்தியா
25-செப்-201011:38:34 IST Report Abuse
priya மிகவும் பயனுள்ள குறிப்புகள் .நன்றி.
Rate this:
Cancel
M.கார்த்திக் - MADURAI,இந்தியா
24-செப்-201016:48:20 IST Report Abuse
M.கார்த்திக் OS INTALL எப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X