கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2014
00:00

கேள்வி: இதழுக்கு இதழ் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறவர்களுக்கு எச்சரிக்கையை வழங்கி, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறச் சொல்கிறீர்களே! மைக்ரோசாப்ட் தனியாக உங்களிடம் ஏதேனும் கடிதம் அனுப்பியுள்ளதா? அல்லது நீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் 7 /8 விற்பனை செய்கிறவரா?
ஆர். கௌதமி, சென்னை.
பதில்:
கோபம் புரிகிறது. ஒவ்வொரு இதழிலும் விண்டோஸ் எக்ஸ்பியின் பாதுகாப்பான காலம் முடிய இருப்பதைப் படிக்கையில் ஏற்படும் எரிச்சல் தான் இது. பரவாயில்லை. உங்கள் கோபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பாதுகாப்பினை இழக்கப்போகும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்தும், அதனால் பின்னர் நாம் சந்திக்கப்போகும் விளைவுகள் என்ன என்பது சார்ந்தும் எழுதித்தானே ஆக வேண்டும். ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர், எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்தினேன், வைரஸ்களின் பிடியில் என் சிஸ்டம் உள்ளது என்று எழுதப்போகிறவர்களுக்கு, ஒன்றும் வழி இல்லை என்று கூறுவதைக் காட்டிலும், ஒவ்வொரு இதழிலும் இது குறித்து எச்சரிப்பது நல்லதுதானே! நீங்கள் என்ன ஏற்கனவே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மாற்றிவிட்டீர்களா!
நான் மட்டுமே இப்படி எழுதுகிறேன் என்று என்னை நம்பாதவர்கள் தயவு செய்து, இந்தப் பிரச்னை குறித்து வந்துள்ள பல கட்டுரைகளில், கீழே உள்ள இணைய தளங்களில் உள்ள இரண்டு கட்டுரைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
http://blogs.avg.com/lifestyle/upgradewindowsxp/
http://www.pcworld.com/article/2068300/windo wsxpholdouts3reasonsyoumustupgradenowyesn ow.html
மேலும், நீங்கள் கூறியது போல விண்7/8 விற்பனை செய்பவர்களுக்குக் கட்டாயம் அனுகூலமாய் இந்த எச்சரிக்கை இருக்காது. ஏனென்றால், அந்த சிஸ்டங்களுக்குத்தான் மாற வேண்டும் என்பதில்லை. மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களுக்கும் மாற்றிக் கொள்ளலாம்.
தொடர்ந்து விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துவது என்பது, வீட்டின் கதவைத் திறந்து வைத்து வசிப்பது போல. திறந்திருக்கும் வாசல் வழியாக வேண்டாதவர்கள் வரலாம், வராமலும் இருக்கலாம். ஆனால், சொல்ல வேண்டியது எங்கள் கடமை.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துகிறேன். சென்ற சில வாரங்களாகவே, ஜிமெயில் செயல்பாடு மிக மிக மெதுவாக இருப்பதாக உணர்கிறேன்.சில வேளைகளில் அதில் உள்ள இணைப்புகளைப் பார்க்க இயலவில்லை. என்ன காரணமாக இருக்கும்?
ஆர். தேன்மொழி, சிவகாசி.
பதில்:
ஆண்ட்டி வைரஸ் அல்லது பாதுகாப்பு தரும் சில புரோகிராம்கள், ஜிமெயில் புரோகிராமுடன் குறுக்கிட்டு, அதன் செயல்பாட்டினை மந்தப்படுத்தலாம். ஆனால், வெகுநாட்களாகவே இதே ஆண்ட்டி வைரஸ் மற்றும் செக்யூரிட்டி சாப்ட்வேர் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அது காரணமாக இருக்காது. நீங்கள் புதியதாக ஏதேனும் செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பினைப் பதிந்திருந்தால், அதனை குளோஸ் செய்து, ஜிமெயில் செயல்பாட்டினைக் கவனிக்கவும். அப்படி இருந்தால், குறிப்பிட்ட செக்யூரிட்டி சாப்ட்வேர் நிறுவனத்தின் இணைய தளத்தில் ஜிமெயில் சார்ந்த தகவல்கள் ஏதேனும் உள்ளனவா என்று பார்க்கவும்.
பிரவுசர் எக்ஸ்டன்ஷன் மற்றும் ஆட் ஆன் புரோகிராம்களும், ஜிமெயில் இயங்கும் வேகத்தைக் குறைக்கலாம். எனவே, அண்மைக் காலத்தில் ஏதேனும் ஆட் ஆன் புரோகிராம்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றை நீக்கி, ஜிமெயில் செயல்படும் வேகத்தினைக் காணவும்.
பிரவுசர் கேஷ் மெமரியினை அவ்வப்போது காலி செய்வதுவும் ஜிமெயிலின் செயல் வேகத்தினை அதிகரிக்கச் செய்திடும். இது குறித்த மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் கேஷ் மெமரி தகவல்களை http://mzl.la/MyNb9w என்ற இணைய முகவரியில் காணவும்.

கேள்வி: இமெயில் பயன்பாட்டில், எப்போது ரிப்ளை மற்றும் ரிப்ளை ஆல் பயன்படுத்த வேண்டும்? இதற்கான குறியீடுகள் எங்கு இருக்கும்? அல்லது பொதுவான ஷார்ட்கட் கீகள் உண்டா?
ஜே. ராதாகிருஷ்ணன், மதுரை.
பதில்:
நல்ல கேள்வி. Reply என்பது, நீங்கள் ஒரே ஒருவருக்கு மின் அஞ்சலுக்கான பதில் அனுப்பப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இமெயிலில் பல பங்காளர்கள் இருந்தால், நீங்கள் அனுப்பும் பதில் மெயில், இறுதியாக அதனை அனுப்பியவருக்குச் செல்லும். எடுத்துக்காட்டாக, குமார் என்பவர் மாலதி என்பவருக்கு மெயில் ஒன்றை அனுப்புகையில், அதனை இன்னொரு தோழி சுமதிக்கும் அனுப்புகிறார். மாலதி பார்க்கும் முன்னரே, சுமதி அந்த செய்தி குறித்து 'reply all' என்பதன் மூலம் ஒரு பதில் அனுப்புகிறார். மாலதி Reply என்பதில் தட்டி, இதற்குப் பதில் அனுப்பினால், அந்தப் பதில், சுமதிக்கு மட்டுமே செல்லும்.
Reply All என்பதனை ஒரு மெயிலில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுப்ப விரும்பினால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட வகை பதிலில், ஒருவரைப் பற்றிய பெர்சனல் குறிப்புகள் இருப்பது நல்லதல்ல.
என்ன கீ அல்லது எங்கு அழுத்தி இந்த இருவகை பதில்களை அனுப்பலாம் என்பதற்கு, ஒவ்வொரு இமெயில் கிளையண்ட் புரோகிராமும் ஒரு வகையில் இவற்றைக் கொண்டிருக்கின்றன என்றுதான் கூறுவேன். நீங்களே, நீங்கள் பயன்படுத்தும் மெயில் புரோகிராமினைப் பார்த்து இதனை அறிந்து கொள்ளலாம்.

கேள்வி: எனக்கு புதியதாக ஒரு பிரச்னை வந்துள்ளது. தினமலர் செய்தித் தளத்தினை புக்மார்க் செய்து வைத்தேன். அதனை புக்மார்க் வழியாகச் செல்கையில், சில நாட்களாக, Bad Request என வருகிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், யு.ஆர்.எல். நானே டைப் செய்தால் பிரச்னை இல்லை. எப்படி சரி செய்திடலாம்?
சி. வரலட்சுமி, பொள்ளாச்சி.
பதில்:
உங்களுக்கு மற்ற இணைய தளங்களைப் பெறுவதில் பிரச்னை இல்லை என்றால், உங்கள் புக்மார்க்கில் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று பொருள். யு.ஆர்.எல். சேவ் செய்திடுகையில் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். எனவே, அந்த புக்மார்க்கினை நீக்கிவிட்டுப் புதியதாக புக்மார்க் ஒன்றை அமைத்து இயக்கிப் பார்க்கவும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறேன். எனக்கு சார்ம் பார் தேவையில்லை. குறிப்பாக திடீர் திடீர் என எழுந்து வரும் "Clock” அறவே பிடிக்கவில்லை. வெறுப்பாக இருக்கிறது. திரையின் கீழாக கடிகாரம் இருக்கையில் இது எதற்கு? இதனை முழுவதுமாகக் கிடைக்காமல் செய்திட என்ன செய்ய வேண்டும்? கடந்த ஏழு மாதமாக விண் 8 பயன்படுத்தியும், இது போன்றவற்றால் வெறுப்பு ஏற்படுகிறது. இதனால், மற்றவர்களை விண் 8க்கு மாற வேண்டாம் எனச் சொல்லி வருகிறேன்.
சி.மாறன், சென்னை.
பதில்:
ஏன் மாறன் சின்ன விஷயத்திற்கு இவ்வளவு வெறுப்பும் கோபமும்? கூல் டவுண். சார்ம் பார் என்பது, நீங்களாக விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்தால் மட்டுமே காட்டும் வகையில் விண் 8.1 அமைத்துள்ளது. எனவே, அதன் மீது கிளிக் செய்தால் அல்லது டேப் செய்தால், உடனே அது மறைந்துவிடும். இதனை இயக்க இரு வழிகள் உள்ளன. வலது பக்கத் திரையில் ஸ்வைப் செய்தால் கிடைக்கும். அல்லது உங்கள் மவுஸ் அல்லது டச்பேட்பாய்ண்ட்டரை மேல் அல்லது கீழ் வலது மூலையில் இழுத்தால் கிடைக்கும்.
எனவே, விண் 8.1 பயன்படுத்தினால், இந்த வலது மூலைகளிலிருந்து தள்ளியே இருக்கவும். நீங்கள், உங்களை அறியாமலேயே இதனை இயக்குகிறீர்கள் என்பது தெரியவருகிறது. இந்த பிரச்னை எல்லாருக்கும் இல்லை. சில கம்ப்யூட்டர்களின் டச் பேட் இந்த வகையில் உள்ளதால், இது ஏற்படலாம். கவலைப்பட வேண்டாம். இதனை நிறுத்துவது எளிது. சார்ம் பாருடன் தொடங்கவும். பின்னர் Mouse and touchpad settings என டைப் செய்திடவும். பின்னர் கிடைக்கும் தேடல் முடிவுகளில் டேப் செய்திடவும். PC and devices என்னும் திரை திறக்கப்படும். Corners and edges என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த திரையில் App switching and Corner navigation என்ற ஆப்ஷன்கள் கிடைப்பதைக் காணலாம். இதில் Corner navigation ஐ நீங்கள் இயக்காமல் இருக்க விரும்புகிறீர்கள். அருகே இருக்கும் ஸ்லைடரை மெல்ல இழுத்து Off என்பதில் விடவும். அவ்வளவுதான், கோபப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இனி விண் 8 சிஸ்டத்தின் இயக்கமும் மனதிற்கு இதமாக இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் விஸ்டா எனது ஓ.எஸ். அண்மையில் என்னிடம் உள்ள இண்டர்நெட் எக்ஸ்புளோரரை மேம்படுத்த அப்டேட் செய்திட முயற்சித்தேன். மேம்படுத்த இயலாது என்ற செய்தி வருகிறது. ஏன்?
கா.மாதவி, புதுச்சேரி.
பதில்:
நீங்கள் விஸ்டா பயன்படுத்திக் கொண்டு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11க்கு மேம்படுத்த முயற்சி செய்திருப்பீர்கள். விஸ்டாவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 வரை மட்டுமே இயங்கும். பதிப்பு 11, விண்டோஸ் 8.1ல் மட்டுமே இயங்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் எந்த பதிப்பு, எந்த விண்டோஸ் ஓ.எஸ்.ஸில் இயங்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
1. விண்டொஸ் 8.1,விண்டோஸ் ஆர்.டி. 8.1,விண்டோஸ் 8,விண்டோஸ் ஆர்.டி., விண்டோஸ் 7 -- இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11.
2.விண்டோஸ் 8, விண்டோஸ் ஆர்.டி., விண்டோஸ் 7 -இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10.
3. விண்டோஸ் விஸ்டா - இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9.
4.விண்டோஸ் எக்ஸ்பி - இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rangrajan - chennai,இந்தியா
14-ஜன-201412:10:02 IST Report Abuse
s.rangrajan என் பையன் விண்டோஸ் இன்டெர்னெட் எக்ப்ளோரர் 11 ஐ காட்டிலும் கூகுள் க்ரோம் நன்றாக வேகமாக வேலை செய்கிறது, ஏன் எக்ஸ்ப்ளோரர் 11 என்று கேட்கிறான் ஆனால் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஏதாவது இருக்கிறதா சொல்லவும். இரண்டையும் உபயோகிக்கலாமா? ஸ்ரீ. ரங்ராஜன்
Rate this:
Share this comment
Cancel
s.rangrajan - chennai,இந்தியா
14-ஜன-201411:54:42 IST Report Abuse
s.rangrajan ஆர். கௌதமி, சென்னை. எழுதியது போல் கோபம்தான். எப்பொழுது பார்த்தாலும் விண்டோஸ் புராணம் தானா? லினக்ஸ் பற்றி சற்று விலா வாரியாக வாரா வாரம் எழுதுங்களேன் ஆபரேட்டிங்க் ஸிஸ்டம் முதல் ஓப்பென் ஆஃபீஸ் ஆர்கனிசேசிங்க் வரை அட்டை க்ளாஸ் முதல் இப்பொழுதே ஆரம்பிக்களாமே தவரில்லையே ஒன்றும் காகிதம் வீனாக போய்விடாது. ஸ்ரீ. ரங்ராஜன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X