மாட்டு பொங்கல் ஸ்பெஷல்: கோமாதா குலமாதா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2014
00:00

காமதேனு-பெயர் விளக்கம் தேவலோக பசுவை 'காமதேனு' என்பர். "காமம்' என்றால் விருப்பம். "தேனு' என்றால் "இளங்கன்றுடன் கூடிய பசு'. விரும்பியதைத் தரும் இளங்கன்றுடன் கூடிய பசு என்று அர்த்தம். காமதேனுவின் கன்றிற்கு நந்தினி என்று பெயர்.

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் ஏன்?

வாயில்லா ஜீவன் என்று பசுவைச் சொல்கிறோம். ஆனாலும், விலங்கினங்களில் பசு இனம் மட்டுமே அடிவயிற்றிலிருந்து "அம்மா' என்று அழைத்து, அன்பை வெளிப்படுத்துகிறது. "அம்மா' என்ற சொல்லுக்கு, "அன்பால் தன் குழந்தைக்கு பாலூட்டி சீராட்டுபவள்' என்று பொருள். ஆனால், பெற்றவள் இளம் வயதில் மட்டுமே பால் தருவாள். பசுவோ, இளம் வயது முதல் முதுமை வரை நமக்கு பால் தருகிறது. நம்மோடு என்றும் பிரிக்க முடியாத உறவாக இருப்பதால் பசுவைக் "கோமாதா' என்று போற்றி வழிபாடு செய்கிறோம். காளை நம் வயல்களை உழுகிறது, அறுவடைப் பணியில் உதவுகிறது. வண்டி இழுக்கிறது. உழைப்பின் சின்னமாய் விளங்குகிறது. அவற்றுக்கு நன்றி செலுத்தும் நாளே மாட்டுப்பொங்கல்.

"கோ' : பாலகிருஷ்ணர் பசுவைப் போல, பூமியும் தாயாக நமக்கு தேவையான தண்ணீர், தானியங்கள், உணவுவகைகளைக் கொடுக்கிறாள். அவளும் கூட ஒருமுறை பசுவாக வடிவம் கொண்டாள். துவாபரயுகத்தில், அசுர சக்திகளின் ஆதிக்கம் பூமியில் அதிகரித்தது. அவர்கள் செய்த பாவத்தை பூமித்தாயால் சுமக்க முடியவில்லை. அப்போது விஷ்ணு, அவளது பாரம் தீர்க்க கிருஷ்ணராக கோகுலத்திற்கு வந்தார். அப்போது பசு வடிவெடுத்து பூமிதேவியும் அவருடன் வந்தாள். கிருஷ்ணவதாரம் முழுவதும் அவர் பசுக்களிடம் அன்பு காட்டி வந்தார். இதனால் அவரை "கோ'பால கிருஷ்ணர் என்றனர். "கோ" என்றால் "பசு'. யமுனை ஆற்றங்கரையில் பிருந்தாவனத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் பசுக்களை ஒன்று சேர்க்க, புல்லாங்குழல் இசைப்பார். காற்றினிலே கீதம் கலந்ததும், பசுக்கள் தங்களை மறந்து கிருஷ்ணரைத் தேடி ஓடி வரும். குழல் இசைக்கும் வேணு கோபாலன் தன் இடக்காலை பூமியில் ஊன்றியபடி செங்குத்தாக வைத்திருப்பார். தாமரை போன்ற அவரின் திருவடியைப் பசுக்கள் நாவினால் சுவைக்கும். எப்போதும் கடவுளின் திருவடியை நினைத்துக் கொண்டிருப்பவனே தன்னோடு ஐக்கியமாக
முடியும் என்பதையே வேணுகோபாலனின் திருவடியை சுவைக்கும் பசு உலகுக்கு உணர்த்துகிறது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
15-ஜன-201414:53:10 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எங்கள் ஊரில் அந்த காலத்துலே எங்க்கவீட்லெ ரெண்டு பசுக்கள் உண்டு , தினம் என் அம்மா ஆர் பாட்டிகோபூஜை செய்துட்டு பிறகுதான் பால் கறப்பார்கள் ( எங்கள் வீஇட்டுக்கு தனியாக வாயக்காட்டுலெந்து ஒரு பெரியவர்) கவுண்டர் தாத்தா என்போம் பெரிய சொம்புலே ரெண்டு சோம்பு பால் கறக்கும் அவை ஒஎன்ரின் பெயர் வள்ளி மற்றவள் லஷ்மி வள்ளி ரொம்பவே குறும்பு லஷ்மி ரொம்பவே சாது கிட்டபோனால் கழுத்தை நீவினாள் ஆசையா நிக்கும் வள்ளி கிட்டபொனாலெ முட்டவருவா.முட்டாது பாவ்லா காட்டும் . ரொம்பவே பாசம் அதிகம் நான் ஒரு தரம் கூட இவற்றின் பல் அருந்தியதே இல்லே ,காரணம் பால் அலேர்ஜி என்ற நோய் தாக்கம் . தாய்ப்பாலும் இன்றி பசும்பாலும் இல்லாம வேறு புழுங்கரிசி ஆர் ராகிகஞ்சின்னெ வளந்தேன் பால் ருசியே தெரியாது வளந்தேன் , திருமணம் முடிந்து டெல்லிவாஅசம் அங்கே எருமை பால்தான் திக்கா இருக்கும் ,பலவித மில்க் ச்வீட்சம் கிடைக்கும் , அப்போ காமாலை வந்துட்டுது மருத்துவர் மோர் சாதமே பத்தியம் நுட்டாரு , என் 25வாயதுலெ தான் மோர் ருசியே அறிந்தேன் ஆஹா அமுதமா இருந்தது . காமாலை சரியானாதும் சிறிதுசிறிதாக பால் சேர்த்தார் , இப்போ நன்னா வே இருக்கேன் ஆனாலும் எங்கள் வீட்டு பசுக்களின் பால் சாப்பிட்டதே இல்லேன்னு ஏக்கம் இருக்கு . இங்கே இப்போ பால் என்ற பெயரில் வெள்ளைநிறம் கொண்ட லிக்விட் குடிக்கிறேன் பிகாஸ் காப் தேநீர் பிடிக்காது குடிச்சதே இல்லே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X