ஆற்றல் இருந்தால் மட்டும் போதுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2014
00:00

எல்லாருக்கும், ஒரு சக்தியை, கொடுத்திருக்கிறான் இறைவன். எந்த ஓர் ஆற்றலும் இல்லாமல், யாரையும், அவன் படைக்கவில்லை. நம்மிடம் உள்ள சக்தியை, நாம் உணர வேண்டும். உணர்ந்த பின், அந்த சக்தியை நல்ல வழியில் உபயோகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, சுயநலமாக, 'நான் மட்டும் வாழ வேண்டும், மற்றவர்கள் முன்னேறக் கூடாது...' என்று செயல்பட்டால், பெரும் தீங்கு விளையும் என்பதற்கு, இறைவனுடன், சலந்தரன் மோதிய கதையே உதாரணம்.
சலந்தரன் என்பவன், மிகுந்த சக்தி வாய்ந்தவன். அவனை எதிர்த்து நிற்க யாருமில்லை. அதற்காக, அவன் அமைதியாக இருந்துவிட வில்லை. யாருடனாவது மோதிக் கொண்டும், அவர்களை கொன்று விட வேண்டும் என்ற வெறி கொண்டவனாக இருந்தான். ஒருமுறை, 'சக்தியற்ற தேவர்கள், என் பேரைக்கேட்டாலே, ஓடி ஒளிகின்றனர். அதனால் தேவேந்திரனுடன் நேருக்கு நேராக மோதப் போகிறேன்...' என்று, சொல்லி, தேவலோகத்தை நோக்கிப் படை எடுத்துச் சென்றான் சலந்தரன்.
சலந்தரன் வரும் தகவலறிந்து, தேவேந்திரன், கைலாய மலைக்கு சென்று மறைந்து கொண்டான். அதனால், கோபம் அதிகமான சலந்தரன், ' கைலாச மலைக்கு ஓடினால், விட்டு விடுவேனா... இந்திரனுக்கு ஆதரவு கொடுத்தால், அந்த சிவனையும் ஒரு கை பார்ப்பேன்...' என்று, ஆணவத்தால் கூவினான்.
அப்போது, சிவபெருமான் ஒரு முதிய துறவி வடிவத்தில் வந்து, 'அப்பா, சலந்தரா... சிவபெருமானுடன், அப்புறம் சண்டை போடலாம். அதற்கு முன், நான் தரையில் போடும், இந்த வட்டத்தை எடுத்துத், தலையில் வைத்துக் கொள் பார்க்கலாம்...' என்று சொல்லி, தன் காலால், தரையில் ஒரு வட்டம் வரைந்தார்.
சலந்தரனோ, 'கிழவரே, உமக்கு என் பலம் தெரியாது. இப்போது பாருங்கள்...' என்று சொல்லி, தரையில் போடப்பட்டிருந்த வட்டத்தை, அப்படியே பெயர்த்து எடுத்து, தலையில் வைத்துக் கொண்டான்.
அது, சக்கராயுதமாக மாறி, சலந்தரனின் உடலை பிளந்து, அவனைக் கொன்றது. பின், அது சிவபெருமானின் திருக்கரத்தை அடைந்தது. இந்திரன் முதலான தேவர்கள் துயரம் நீங்கினர். படிப்போ, பதவியோ, அறிவோ, ஆற்றலோ எதுவாக இருந்தாலும், அதைக் கொண்டு, அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு, ஆணவம் கொண்டால், அது, மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கி விடும்.

பி.என்.பரசுராமன்

விதுர நீதி!
வில்லாளி அம்பு விடுகிறான். அது, எதிரியைக் கொல்லக் கூடும் அல்லது குறி தவறியும் போகலாம். ஆனால், ஒரு அறிவாளி, தன் அறிவை, அழிவு நோக்குடன் பயன்படுத்தினால், அரசன் உட்பட, ஒரு நாடு முழுவதுமே நாசமாகி விடும்.
— என்.ஸ்ரீதரன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
23-ஜன-201403:08:52 IST Report Abuse
தமிழ்நிலா வட்டம் சக்கராயுதமாக மாறி, சலந்தரனின் உடலை பிளந்து, அவனைக்கொன்றதாம். சிவா சிவா...இது மாதிரி கதைகளை இன்னுமா உலகம் நம்பூது.
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
25-ஜன-201410:15:26 IST Report Abuse
Umaஏன் தமிழ் நிலா? நீங்க தமிழ்ப்பெண் தானே? உங்கம்மா நிலாவ கொண்டு வருவேன்னு நிலாவை காட்டி சோறூட்டிருப்பாங்க இல்லிங்களா? கற்பனையையே நிஜமா நினைச்சுக்கும் போது நிஜமா நடந்த புராணக் கதைகளை ஏன் இகழ்ச்சியா பேசறீங்க?...
Rate this:
Share this comment
Satish - யாதும் ஊரே யாவரும் கேளிர்.,இந்தியா
06-பிப்-201406:56:52 IST Report Abuse
Satishஉமா..உங்களுக்கு தமிழ்நிலா பத்தி தெரியாது போல..அவர் இதை சார்ந்தவர் அன்று.. அதுதான் இப்படி ஒரு கமெண்ட்...அது தவிர அவருடைய கருத்துக்ககளை படித்தீர்களானால் வயிறு வலிக்கும் நகைச்சுவை உத்திரவாதம்.. அது மட்டுமன்றி நம் நாடு ஏன் இப்படி குட்டிசுவரா இருக்குங்கறதுக்கும் விடை கிடைக்கும்.....
Rate this:
Share this comment
Cancel
shanmugaraj - salem  ( Posted via: Dinamalar Android App )
19-ஜன-201418:35:10 IST Report Abuse
shanmugaraj நற்றுணை ஆவது நமசிவாயமே
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
19-ஜன-201412:48:49 IST Report Abuse
N.Purushothaman ஒம் நமோ ஹிரன்ய பாகவே ஹிரன்ய வருனாயா ஹிரன்ய ரூபாய ஹிரன்ய பதயே அம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோ நமஹ ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X